Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழர்கள் ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்! - கலைஞர் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்கள் ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்! - கலைஞர் கடிதம்
எழுத்துரு அளவு font_up.gif font_down.gif
 

17.jpg

உடன்பிறப்பே,

அய்.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவுத் தீர்மானம் நான்கு முறை திருத்தப்பட்டு, பெருமளவுக்கு நீர்த்துப் போகவிட்டதாலும்;  திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யாததாலும்; மத்திய அமைச்சரவையிலிருந்தும் அய்க்கிய முற்போக் குக் கூட்டணியிலிருந்தும் தி.மு.கழகம் உடனடி யாக விலகிக் கொள்வதென முடிவு செய்து அறிவிக்கப் பட்டுள்ளது. தி.மு.கழகம் உரிய நேரத்தில் தக்க முடிவை மேற்கொண்டுள்ள தென உன்போன்ற பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புக்களும், பல்வேறு தரப்பினரும் பெருமளவுக்கு வரவேற்றுள்ளனர். 1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடை பெற்ற தி.மு.கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த தீர்மானம் ஒன்றை நான் முன்மொழிந்து பொன்னம் பலனார் வழிமொழிந்த நாள் முதல், இன்று வரை எந்தவிதத் தொய்வும் இல்லாமல், ஈழத் தமிழர் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து நாம் குரல் கொடுத்து வருவதை, ஈழத் தமிழர்களும், ஈழத் தமிழர்களின் தலைவர்களும் அன்றும் இன்றும் நன்றாகவே அறிவர்.

இரண்டு முறை ஆட்சி கவிழ்ப்பு

ஈழத் தமிழர்களுக்காக 1976ஆம் ஆண்டிலும், 1991ஆம் ஆண்டிலும் என இரண்டு முறை ஆட்சி யையே பறிகொடுத்தது மட்டு மல்லாமல், சட்டப் பேரவை உறுப்பினர் பதவி யையும் பேராசிரியரோடு இணைந்து ராஜினாமா செய்தவன் நான். ஈழத்  தமிழர்கள் பாதிப்புக்கு ஆளான போதெல்லாம் பதறியடித்து, முதல் குரல் எழுப்பியது திராவிட முன்னேற்றக் கழகம்.  ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்காக பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மாநாட்டுத் தீர்மானங்கள், மனிதச் சங்கிலிகள், வேலை நிறுத்தம், டெசோ அமைப்பு உருவாக்கம், மீள் உருவாக்கம்  என ஜனநாயகம் அனுமதிக்கும் அத் தனை வகையான அறவழி - அமைதி வழிப் போராட்டங்களையும் நாம் நடத்தி யுள்ளோம். இன்றைய (19-3-2013) செய்தியாளர்கள் கூட்டத்தில்கூட, 2009ஆம் ஆண்டில் இலங்கையில் போர் நடந்தபோது நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?  எனக் கேட்டபோது, 2009ஆம் ஆண்டில் நாங்கள் என்ன செய்ய வில்லை?

அப்போது நாங்கள் ஒன்றும் அமைதி யாக இல்லை என்று பதில் சொன்னேன். 28-3-2009 அன்று இலங்கையிலே உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா உதவிட வேண்டுமென்று கேட்டு, பிரதமருக்கும், திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் நான் கடிதம் எழுதினேன்.  31-3-2009 அன்று திருமதி சோனியா காந்தி அவர்கள் எனக்கு எழுதிய நீண்ட பதிலில், இலங் கையில் முதல்கட்டமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.  நமது அரசு, இலங்கை அரசுடன் போர் நிறுத்தத்தைப் பற்றித் தொடர்பு கொண்டு வருகிறது என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார். போரை நிறுத்துங்கள் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்குப் பிறகும், இலங்கை அதிபர் ராஜபக்சே போரை நிறுத்தவில்லை.  7-4-2009 அன்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியாகாந்தி, வெளி யுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை, இலங்கையில் ஒட்டுமொத்த தமிழின மக்கள் கூண்டோடு அழிக்கப்படுவதிலிருந்து அவர் களைக் காப்பாற்ற வேண்டும்;  போர் நிறுத் தத்தை உறுதி செய்ய வேண்டும் என்று நான் அவசரத் தந்தி மூலம் கேட்டுக் கொண்டேன். இறுதிப் போரிலே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே போன்ற நாடுகளின் சார்பிலும், அய்.நா. சபையின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அவர்களும் ராஜபக்சேவைக் கேட்டுக் கொண்டும்கூட, ராஜபக்சேவின் சிங்களப் பேரின வாதமும், தமிழினத்தை அழித்தொழிக்க வேண்டு மென்ற ஆவேசமுமே பொங்கி வழிந்தது. 9-4-2009 அன்று சென்னையில் என் தலைமையில் இலங்கை அரசே போரை நிறுத்து!  என்று முழக்கமிட்டவாறு மிகப் பிரம்மாண்டமான பேரணி ஒன்று நடத்தப் பட்டது.  இலங்கை அதிபர் ராஜபக்சே இரண்டு நாள் போர் நிறுத்தம் என்று அறிவித்தார். 23-4-2009 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டு மென்ற எனது கோரிக் கையை ஏற்று, வேலைநிறுத்தம் தமிழகத்தில் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடை பெற்றது. 24-4-2009 அன்று  உள்துறை அமைச்சர் திரு.சிதம்பரம் அவர்கள் என்னைச் சந்தித்து விவரங்களை விளக்கினார்.  பிரதமர் அவர்களும் தொலைபேசியில் மத்திய அரசு எடுத்த முயற்சிகளை எல்லாம் என்னிடம் கூறினார்.  25-4-2009 அன்று இலங்கை அரசு, ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

27-4-2009 அன்று  நான் எதிர்பார்த்த எந்தச் செய்தியும் வரவில்லை என்பதோடு, இலங்கை அரசு போரையும் நிறுத்தவில்லை என்பதால்,   விலாப் புறத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையிலும், அதிகாலையில் அண்ணா நினைவிடம் சென்று உண்ணாநோன்பைத் தொடங் கினேன்.  அன்று பகல் 11 மணியளவில் இலங் கைப் பாதுகாப்புக் கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தி 12 மணியளவில் இலங்கை வடக்கில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று இலங்கை அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  அந்த அறிக்கையின் அடிப் படையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் போர் நடவடிக் கைகள் முற்றுப் பெற்றுவிட்டன என்று அறிக்கை வெளியிட்டு அதன் நகலை, நான் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே அனுப்பி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக் கொண்டனர்.  போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ராஜபக்சே அரசு சொன்னதை உலக நாடுகளும் நம்பின; மத்திய அரசும் நம்பியது; மத்திய அரசு எனக்கும் நம்பிக்கையை ஊட்டியது.  அதுமாத்திரமல்ல;  அமெரிக்க அரசே அதை நம்பி, அமெரிக்க அரசின் செய்தித் தொடர் பாளர் ராபர்ட் உட் அவர்கள் இலங்கை அரசின் போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்தார். மத்திய அரசு என்னைக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும் மற்றும் அனைத்துக் கட்சி யைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் வலியுறுத் தியதன் அடிப்படையிலும் நான் உண்ணா விரதத்தை  முடித்துக் கொண்டேன்.

கபட நாடகம்

இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈழத் தமிழர்களைக் காப்பாற்று வதற்கும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் எனது உயிரைப் பணயம் வைத்து, இப்படி எல்லாம் சங்கிலித் தொடர்போல நடவடிக்கைகளை மேற் கொண்ட தற்குப் பிறகும்;  தி.மு.கழகத்தையும் என்னையும் ஆரம்ப காலம் முதலே குற்றம் காண் பவர்களும் - குறை சொல்பவர்களும், ஈழத் தமிழர் களுக்காக எதையுமே இழக்க முன்வராதவர்களும், எத்தனையோ முறை தேவையான விளக்கங் களைக் கொடுத்ததற்குப் பிறகும், அதையே திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுவது நிரந்தர மான விரோதத்தினாலும், திசை திருப்பிடும் தீயநோக்கத்தாலுமே தவிர வேறல்ல.  அது அவர்களால் நடத்தப்படும் கபட நாடகம்!

2001 செப்டம்பர் 11 அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பிறகு, விடுதலைப் போராளி களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை உலக நாடுகள் பல மறந்து போய் விட்டதையும்;  அதனாலேயே பல நாடுகள் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்ததையும், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் மிலி பாண்ட் - பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கூச்சனர் போன்றோர் வல்லரசுகளின் சார்பில், ஈழச் சிக்கலைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொண்டும் முடியாமல் போனதையும்; இங்குள்ள ஒரு சிலர் மறைத்து விட்டாலும்கூட,  வரலாறு மறந்துவிடாது.

ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரண மாகவே ஜெயலலிதா - கழகம் இன்று மேற்கொண்டு அறிவித்துள்ள முடிவைக் கபட நாடகம் என்றும்;  2009ஆம் ஆண்டு இலங்கை யில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது நான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும்;  தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத் தின்மீது நான் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்ட தாகவும்; கடந்த ஆண்டு  அய்.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, நான் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும்;  மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக இந்திய பாராளு மன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென்று நான் சொல்லி யிருப்பதாகவும்;  ஈழத் தமிழர் பிரச்சினையில் நான் எதுவுமே செய்யாததைப் போலவும்,  ஜெயலலிதா அதற்காகத் தனி அவதாரமே எடுத்திருப்பதைப் போலவும் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  ஜெயலலிதாவின் அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ளவை எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானவை என்பதை நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள்.

பிரபாகரனை கைது செய்ய தீர்மானம் போட்டவர்கள் யார்?

ஈழத் தமிழர் பிரச்சினையில் மட்டுமல்லாமல், தமிழர்களின் ஒட்டுமொத்த நலனோடு தொடர் புடைய பல்வேறு பிரச்சினைகளிலும் இரட்டை வேடம் போட்டுக் கபட நாடகம் ஆடி வருபவர் ஜெயலலிதா.  அண்ணாவின் கனவான சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினை யிலும், காவிரிப் பிரச்சினையிலும் முன்னுக்குப் பின் முரணாக, கருத்துக்களைச் சொல்லிக் கபட நாடகம் என்பதற்கு இலக்கணம் வகுத்திருப்பவர் ஜெயலலிதா.  ஈழத் தமிழர் பிரச்சினையில்; 16-4-2002 அன்று அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகச் சட்டப்பேரவையில் - விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை  உடனடி யாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப் பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும் என்றும்; சிறீலங்கா அரசின் அனுமதியோடு, இந்திய இராணுவத்தை சிறீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபா கரனைச் சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் - தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, வேலுப் பிள்ளை பிரபாகரனுக்கும்  விடுதலைப் புலிகளுக்கும் பரம விரோதியைப் போல உலகுக்குக் காட்டிக் கொண்டவர் ஜெயலலிதா.  ராஜபக்சே நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல;  விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான் என்று அபாண்டமாகப் பொய் சொல்லி அகிலத்தையே அதிர்ச்சியுறச் செய்தவர் ஜெயலலிதா!

17-1-2009 அன்று, இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை.  ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான். என்று ராஜபக்சே அரசு கொத்துக் கொத்தாகக் குண்டுகளை வீசி, பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தியும்,  இலங்கை ராணுவத்திற்கு வக்காலத்து வாங்கியும் அறிக்கை வெளியிட்டவர் ஜெய லலிதா.  இப்போது, தமிழகத்தில் மாணவச் செல்வங்களின் தன்னியல்பான பேரெழுச் சியை காவல் துறையைக் கொண்டு, அடக்கியும் ஒடுக்கியும் ஈழத்தமிழர்களுக்கு  எதிரான தனது மனநிலையை ஜெயலலிதா வெளிப்படுத்திடத் தவறவில்லை!  அப்படிப் பட்டவர் ஈழத் தமிழர்களுக்காக வடிக்கும் கண்ணீர் நீலிக்கண்ணீரே அன்றி வேறல்ல;  ஜெய லலிதா போடுவது நாடகம்,  அதுவும் கபட நாடகமே அன்றி வேறல்ல.

சேது சமுத்திரத் திட்டம்

ஈழத் தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா காட்டிய முரண்பாடான அணுகுமுறையைப் போலவே; தென்மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான சேது சமுத்திரத் திட்டத்திலும் முன்னுக்குப் பின் முரணாகக் கருத்துக்களைச் சொல்லிக் கபட நாடகம் ஆடி வருகிறார்.  2001ஆம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை யில்,  ராமேசுவரத் திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் துக்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறை களை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது, சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்றும்;  2004ஆம் ஆண்டு ஜெய லலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்று வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரை யறைக்குள் நிறைவேற்றிட வேண்டுமென்று வலியுறுத்துவோம் என்றும்  குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு, தற்போது ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று ஜெயலலிதா சொல்வது எத்தகைய முரண்பாடு?  எப்படிப்பட்ட கபட நாடகம்?

காவிரிப் பிரச்சினையில்....

டெல்டா மாவட்ட மக்களின் - குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குக் காரண மாகக் கருதப்படும் காவிரிப் பிரச்சினையிலும், வேறுபாடான நிலைகளை மேற்கொண்டவர் ஜெயலலிதா.  இந்தியப் பிரதமராக இருந்த திரு. வாஜ்பய் அவர்கள் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட போது, அதைப் பல் இல்லாத ஆணையம் என்றும்;  செயல் படாத ஆணையம் என்றும் தரக்குறைவாக விமர்சித்ததோடு;  காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் வாஜ்பய் மீதே தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறி,  உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கே ஆளானவர் ஜெயலலிதா.  காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானபோது, 6-2-2007 அன்று கருணாநிதியின் தொடர் துரோகச் செயலால்தான், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்குப் பாதகமாக வந்துள்ளது என்று ஆத்திரங் கொப்பளிக்கச் சொன்னவர்;  அந்தப் பாதகமான தீர்ப்பு தற்போது மத்திய அரசிதழில் வெளியிடப் பட்டதைத்தான், முப்பதாண்டு காலத்தில் தனக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று சொல்லி, பொன்னியின் செல்வி என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டு, ஜெயலலிதா பரவசப்பட்டிருக்கிறார். இப்படி காவிரிப் பிரச்சினையிலும் ஜெயலலிதா ஆடி வருவது கபடி நாடகமே!

டெசோவின் தொடர் பணி

கடந்த ஆண்டு அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த தொடர்ச்சி யான அழுத்தத்தின் காரணமாகத்தான், இந்திய அரசு ஆதரித்தது என்பதையும்;  தற்போது நாம் கேட்கும் திருத்தங் களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி - அமெரிக்கத் தீர்மானத்தோடு அந்தத் திருத்தங் களையும் இணைத்து ஆதரித்திட வேண்டு மென்ற நமது நிலைப்பாட்டையும்;  டெசோ மாநாட்டுக்கும், தீர்மானங்களுக்கும், ஆர்ப் பாட்டங்களுக்கும், வேலை நிறுத்தத்திற்கும் தமிழக மக்கள் மத்தியிலும் - மாணவர்கள் மத்தியிலும் கிடைத்த மிகப் பெரிய வரவேற் பையும்; ஈழத் தமிழர்களின் நலன் காக்க யார், எப்பக்கமிருந்து குரல் கொடுத்தாலும் வரவேற்கக் கூடியதே என்றும் - ஒவ்வொரு வரும் மாறுபாடான குரல் கொடுத்து ஈழத்தமிழர் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் - நமக்கிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை மறந்து ஈழத் தமிழர்களுக்காக நாம் அனைவரும் ஒரே குரலில் எதிரொலித்திட வேண்டும் என்றும் -  நான் ஏற்கனவே விடுத்த வேண்டு கோளையும்; ஜெயலலிதா மறந்துவிட்டாரா? அல்லது திரை போட்டு மறைத்திட முயற்சிக்கிறாரா?  பிரதமர் வாஜ்பய்க்கும், அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி அம்மையாருக்கும் செய்த துரோகத்தையும், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் செய்த துரோகத்தையும், சுயநல அரசியலின் காரணமாகத் தற்போது தமிழக மக்க ளுக்கே தொடர்ந்து செய்து வரும் துரோகத்தையும் மறைப்பதற்காக;  மற்றவர்களைப் பார்த்து, துரோகம், துரோகம் என்று கூக்குரலிடும் உத்தியை, இங்குள்ள தமிழர்களும், ஈழத் தமிழர்களும் ஏற்க மாட்டார்கள்;  உலகத் தமிழர்களும் ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்!

அன்புள்ள,

மு.க.

(நன்றி: முரசொலி, 21.3.2013)

http://www.viduthalai.in/page-7/57011.html

.
  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க முழுமையாக எம்.ஜீ,ஆர் இடம் சென்று பின்பு கோபாலசாமியிடம் வந்திருந்தால்! இன்று தமிழர்கள் ஓரளவுக்கேனும் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வழி ஏற்பட்டிருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது.

தி.மு.க முழுமையாக எம்.ஜீ,ஆர் இடம் சென்று பின்பு கோபாலசாமியிடம் வந்திருந்தால்! இன்று தமிழர்கள் ஓரளவுக்கேனும் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வழி ஏற்பட்டிருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது.

 

இனியாவது செல்லும் வழியை தமிழக மக்கள் சிந்திக்கட்டும்!

 

  • கருத்துக்கள உறவுகள்

கபட நாடகம்

இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈழத் தமிழர்களைக் காப்பாற்று வதற்கும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் எனது உயிரைப் பணயம் வைத்து, இப்படி எல்லாம் சங்கிலித் தொடர்போல நடவடிக்கைகளை மேற் கொண்ட தற்குப் பிறகும்;  தி.மு.கழகத்தையும் என்னையும் ஆரம்ப காலம் முதலே குற்றம் காண் பவர்களும் - குறை சொல்பவர்களும், ஈழத் தமிழர் களுக்காக எதையுமே இழக்க முன்வராதவர்களும், எத்தனையோ முறை தேவையான விளக்கங் களைக் கொடுத்ததற்குப் பிறகும், அதையே திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுவது நிரந்தர மான விரோதத்தினாலும், திசை திருப்பிடும் தீயநோக்கத்தாலுமே தவிர வேறல்ல.  அது அவர்களால் நடத்தப்படும் கபட நாடகம்!

 

பருப்பு நல்லா வெந்து இருக்கு உப்பு மட்டும் கொஞ்சம் காணாது போல இருக்கு .!

டெசோவின் தொடர் பணி

எப்ப ஜயா இந்த சீரியல் முடியும்..?

  • கருத்துக்கள உறவுகள்

6 மாதத்தில் வரும் தேர்த்தலுக்கு  ஞானப்பழம் கலைஞரும்,காங்கிரசும் ஆடும் நாடகத்துக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என நம்புகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.