Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காற்றை சுத்திகரிக்கும் ஆறு வீட்டுதாவரங்கள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாமெல்லாம் வெளிநாட்டுக்கு வந்து ப்ளாட்களிலும் நாலு சுவத்துக்குள்ளும் அடைந்துகிடைக்கும் வாழ்க்கை வாழுபவர்கள்..வேலை விட்டு வந்தால் குளிர்,நேரமின்மை மற்றும் காரணங்களால் எங்களின் பெரும்பாலான பொழுதுகளை வீட்டுக்குள்ளேயே செலவழிக்கிறோம்..அந்தவீட்டைக்கூட பலர் குளிர்காலங்களில் திறப்பதில்லை..திறந்தால்போல் சுத்தமான் காற்று வரப்போவதும் இல்லை நகர்ப்புறங்களில்..அதனால் வீட்டுக்குள்ளே வளர்க்ககூடிய காற்றை சுத்தப்படுத்தும் ஆறுவகையான தாவரங்களையும் அவற்றின் பயன்களையும் பார்ப்போம்.. 
 
 
 
 
1. Bamboo Palm: இது காற்றில் உள்ள நச்சுத்தன்மையான எரிவை உண்டாக்கும் மெதனல்(formaldehyde)வாயுவை நீக்குகிரது...அத்துடன் இது இயற்கையான காற்று ஈரப்பதமூட்டியாகும்..
 
2. Snake Plant: இது காற்றில் உள்ள தீய வாயுக்களான நைட்ரஜன் ஒக்சைடையும் மெதனல் வாயுவையும் உறிஞ்சி வீட்டினுள் காற்றை சுத்தப்படுத்துகிறது...
 
3. Areca Palm: பொதுவான காற்று சுத்திகரிப்புக்கு இது காற்றை சுத்தப்படுத்தும் தாவரங்களில் மிகச்சிறந்தது..
 
4. Spider Plant: கார்பன் மொனொக்ஸைட் மற்றும் காற்றில் உள்ள நச்சுக்கள் அசுத்தங்களை அகற்றுவதற்கு இது மிகச்சிறந்த வீட்டினுள் வளர்க்ககூடிய தாவரம்...நாசா இந்த தாவரத்தை காற்றில் உள்ள மெதனலை நீக்கும் மிகச்சிறந்த மூன்று தாவரங்களில் ஒன்றாக வகைப்படுத்தி உள்ளாது..
 
5. Peace Lily: இவை பொதுவாக குளியறைகளிலும் உடுப்புகள் வைக்கும் அறைகளிலும் வைக்கப்படுகின்றன..காரணம் இவை காற்றில் உள்ள பூஞ்சைகளை அகற்றுகின்றன..அத்துடன் இவை காற்றில் உள்ள மெதனலையும் எதிலினையும்(trichloroethylene)அகற்றுகின்றன..
 
6. Gerbera Daisy: இவற்றின் அழகான பூக்கள் பென்சீனை அகற்றுவதுடன் இரவு நேரங்களில் காற்றில் உள்ள காபனீரொக்சைட்டை உறிஞ்சி அதிக ஒட்சிசனை வெளிவிடுவதால் நல்ல தூக்கத்துக்கு துணைபுரிகின்றன..
 
 
 
தாவரங்கள் அவற்றின் இலக்கத்தில் கீழே படத்தில்..
 
483779_439484659470880_812088086_n.jpg
 
 
 
*formaldehyde - a colourless poisonous irritating gas with a pungent characteristic odour, made by the oxidation of methanol and used as formalin and in the manufacture of synthetic resins. Formula: HCHO Systematic name methanal
 
*carbon monoxide - a colourless odourless poisonous flammable gas formed when carbon compounds burn in insufficient air and produced by the action of steam on hot carbon: used as a reducing agent in metallurgy and as a fuel. Formula: CO
 
*trichloroethylene - a volatile nonflammable mobile colourless liquid with an odour resembling that of chloroform. It is a good solvent for certain organic materials and is also an inhalation anaesthetic. Formula CHCl:CCl2
 
(பயனுள்ளதால் மொழி பெயர்த்தேன்..)

Edited by சுபேஸ்

பயனுள்ள தகவல் நன்றி.

Edited by Mayuran

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இப்போது இதைத்தான் அதிகமாக வளர்க்கிறார்கள்..! :D

 

indoor_marijuana.jpg

இசை அண்ணா இதின்ரை நன்மை தீமையைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா இதின்ரை நன்மை தீமையைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே?

 

நன்மை என்று பார்த்தால் இழுக்க இழுக்க சும்மா தூக்கும்..! :D தீமை என்று பார்த்தால் சீக்கிரம் போய்ச் சேரலாம்.. :o

 

blogger-image-1625203153.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இப்போது இதைத்தான் அதிகமாக வளர்க்கிறார்கள்..! :D

 

indoor_marijuana.jpg

இங்கிலாந்து  லிவர்பூலில்  இதை குடிசைக் கைத்தொழிலாக செய்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் கஞ்சாச் செடியா??

இதுதான் கஞ்சாச் செடியா??

 

என்னக்கா  எண்டுஉங்களுக்கத்தான் எல்லாம் தெரியும்  சொல்லினம் நீங்கள் இப்பிடிக் கேக்கிறீங்கள்.?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல் நன்றி.

நன்றி கருத்துக்கு மயூரன் அண்ணா...ஆறு மரத்திலும் ஒவ்வொண்டை வாங்கி வீட்டிலை வையுங்கோ..தண்னி ஊத்த மறந்துபோகதைங்கோ.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இப்போது இதைத்தான் அதிகமாக வளர்க்கிறார்கள்..! :D

 

indoor_marijuana.jpg

இசை அண்ணா..இது உங்கவீட்டில எடுத்தபடமா..? நல்ல விளைச்சல் போல..அறுவடைக்கு ஆள் வேணுமெண்டால் சொல்லுங்கோ..நந்தன் அண்ணையை அனுப்பிவைக்கிறன்.. :D

என்னக்கா  எண்டுஉங்களுக்கத்தான் எல்லாம் தெரியும்  சொல்லினம் நீங்கள் இப்பிடிக் கேக்கிறீங்கள்.?

ஓம்..லண்டனிலை ஒரு ஏரியாவுக்கு சொர்ணாக்காவாம்.. :D

இசை அண்ணா..இது உங்கவீட்டில எடுத்தபடமா..? நல்ல விளைச்சல் போல..அறுவடைக்கு ஆள் வேணுமெண்டால் சொல்லுங்கோ..நந்தன் அண்ணையை அனுப்பிவைக்கிறன்.. :D

ஓம்..லண்டனிலை ஒரு ஏரியாவுக்கு சொர்ணாக்காவாம்.. :D

 

சரியான பெயரைத்தான் தெரிந்துதெடுத்துள்ளீர்கள் :D

 

 இசையின் படமும் கருத்தும் அந்த மாதிரி :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.