Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு! (படங்கள்)

சென்னை: விஷவாயு வெளியேறியதையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியி்லுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த 23ம் தேதியன்று தூத்துக்குடியில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டது.

இதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான கந்தக வாயுவே காரணம் என்று கூறிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆலையை மூடக்கோரி முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வெளியான சல்பர் டை ஆக்சைடு காற்றில் கலந்ததால் தான் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்று தூத்துக்குடி கோட்டாட்சியர் தலைமையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

இந்த நிலையில், காற்று மற்றும் நீராதாரங்களை ஸ்டெர்லைட் ஆலை மாசு படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, ஆலையை மூடுவதற்கான அடுத்தக்கட்ட முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷிஸ்குமார் கூறுகையில், ‘‘ஆலையை மூடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. பெரிய கம்பெனிங்கிறதால் பார்மால்டிஸ் நிறைய இருக்கிறது. அந்த வேலை நடந்து வருகிறது’’ என்றார்.

இந்த உத்தரவு குறித்த தகவல் வெளியானதும் தூத்துக்குடி மக்கள் சந்தோச பரபரப்பில் இருக்கிறார்கள்.

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13366

  • கருத்துக்கள உறவுகள்

திரு வைகோ அவர்களின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி......

இதை மூடியதன் மூலம் அம்மா அவர்கள் திரு வைகோ அவர்களை தன்னுடைய கூட்டணியில் இணைக்க காட்டி இருக்கும் மறைமுக சிக்னல் ஆகவே நான் கருதுகின்றேன்.....

பார்போம்....

1996 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக இன்றைக்கு நச்சு ஆலை மூடப் பட்டுள்ளது.

 

 

527619_10151317123707377_1459916911_n.jp

இதற்க்கு மக்கள் போராட்டம் ஒரு காரணம் என்றாலும், அசுர பலம் கொண்ட உலகப் பணக்காரன் அகர்வாலை எதிர்த்து, எவ்வித சமரசமும் இன்றி தன சொந்த செலவில் நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வழக்கை நடத்தியவர் வைகோ. பல சமயங்களில் உச்ச நீதி மன்றத்தில் தானே வாதாடியும் இருக்கிறார்.

 

 

ஒரு ஆதரவாளன் என்கிற முறையில், வைகோ மேற்கொண்ட தனிப்பட்ட முயற்சியின் காரணமாகவும் இன்றைக்கு ஆலை மூடும் அளவிற்கு நிலை எட்டப் பட்டுள்ளது என உறுதியாகச் சொல்வேன். அதற்கு அவர் மேற்கொண்ட சிரமங்களை ஓரளவு அறிவேன். முதல் நாள் குமரியில் ஒரு போராட்டத்தில் இருப்பார், மறுநாள் டெல்லியில் வழக்கில் ஆஜராகி வாதாடுவார். அடுத்த நாள் காலை, கோவையில் போராட்டக் களத்தில் நிர்ப்பார். இதை தூத்துக்குடி வட்டார மக்கள் நன்கு அறிவர். ஆனாலும் தனக்கென இதில் எவ்வித பெருமையும் தேடாது மக்கள் போராட்டத்திற்கு மகத்தான வெற்றி என அறிக்கை தந்துள்ளார். ஆலைக்கு அனுமதி அளித்த அதிமுக அரசையே ஆலையை மூட வைத்தவர் வைகோ. அனுமதித்த போது கண்டித்தார். மூடிய போது பாராட்டுகிறார். அதுதான் ஒரு ஸ்டேட்ஸ்மேன் என்பதற்கு அடையாளம். கூட்டணியோ, மிரட்டலோ, சமரசமோ அவரது நிலைப்பாட்டில் எவ்வித தொய்வும் ஏற்ப்படுத்த வில்லை என்பது தெளிவாகிறது.


இறுதித் தீர்ப்பில் ஆலை நிரந்தரமாக மூடப் படும் பட்சத்தில், அந்த வெற்றியை நாங்கள் உரிமை கொண்டாடப் போவதில்லை. அதை தமிழக மக்களுக்கு, குறிப்பாக தூத்துக்குடி மக்களுக்கு அர்ப்பணிக்கின்றோம்.

 

அறிக்கை:

 

மக்கள் போராட்டத்திற்கு மகத்தான வெற்றி!


நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடிட முடிவு எடுத்த முதல் அமைச்சருக்குப் பாராட்டு!

 

தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை எனும் நாசகார நச்சு ஆலை, நிலம், நிலத்தடி நீர், நிலத்தின் மேல் தேங்கும் நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நஞ்சாக ஆக்கி, மனித உயிர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும், விவசாய விளைநிலங்களுக்கும் பெரும் கேட்டினை, ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றக்கோரி, கடந்த 17 ஆண்டுகளாக போராடி வந்தோம்.


விவசாயிகள், மீனவர்கள், வியாபாரப் பெருமக்கள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் Þடெர்லைட்டை எதிர்த்து வந்தனர்.

 

1994 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள இரத்தினகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, விவசாயிகள் போராடி, ஒரு கட்டத்தில் உடைத்து நொறுங்கினார்கள். அன்றைய மராட்டிய மாநில சரத்பவார் அரசு, லைசென்சை இரத்து செய்தது.

 

 

குஜராத் கோவா மாநிலங்கள், ஆலையை நிறுவ அனுமதிக்காததால், அதன் பின்னர் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்டது.

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்டெர்லைட் ஆலைiயை எதிர்த்து உறுதிமிக்க எண்ணற்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது.


1996 மார்ச் 5 இல் தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம்.

1996 மார்ச் 12 இல் கடையடைப்பு கருப்புக்கொடி போராட்டம்.

1996 ஏப்ரல் 1 இல் Þடெர்லைட் எதிர்ப்புப் பேரணி.

1996 டிசம்பர் 09 இல் தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம்.

1997 பிப்ரவரி 24 இல் மாவட்ட ஆட்சித் துணைத்தலைவர் அலுவலகம் முற்றுகை, மறியல் ஆயிரக்கணக்கானோர் கைது. ஜூன் 2, 3, 4 தேதிகளில் திருவைகுண்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக Þடெர்லைட் எதிர்ப்புப்

 

பிரச்சார நடைப்பயணம்.

1997 ஆகஸ்ட் 30 ஆம் தேதி, பத்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கு ஏற்ற Þடெர்லைட் முற்றுகைப் போராட்டம், கைது என, மறுமலர்ச்சி தி.மு.கழகம் எனது தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தியது. ஆகÞட் 30 முற்றுகைப் போராட்டத்தின்போது, Þடெர்லைட் ஆலையில் இரண்டு தொழிலாளர்கள் விபத்தில் இறந்ததற்கு விடுதலைப்புலிகளின் சதி என்று நிர்வாகம் பொய்யாக பழி சுமத்தியது.


 

உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில், ஏற்கனவே ஸ்டெர்லைட்டை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நீதிமன்றத்தின் மூலம் Þடெர்லைட்டை அகற்றப் போராடுவோம் என முடிவு எடுத்து, நானும் ரிட் மனு தாக்கல் செய்தேன்.

 

1998 நவம்பர் 23 இல் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தது.

1998 டிசம்பர் 9, 10, 11 தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி லிபரான் அவர்கள் அமர்வில், Þடெர்லைட்டை எதிர்த்து நான் வாதாடினேன். வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டதால், டிசம்பர் 14 ஆம் தேதி அன்றும் அங்கும் வாதாடினேன்.

 

1999 பிப்ரவரி 23 இல், ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் போராடி வந்தோம்.

2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் எலிபி தர்மாராவ் அவர்களின் அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச்சொல்லி தீர்ப்பு அளித்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றது.

 

2012 அக்டோபர் வரையில் உச்சநீதிமன்றத்தில் ஏறத்தாழ 20 அமர்வுகள் வாய்தா நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் ஒவ்வொரு வாய்தாவிலும், நான் தவறாமல் பங்கு ஏற்றேன். உச்சநீதிமன்ற ஆணைப்படி, ஸ்டெர்லைட் ஆலையில் நாக்பூர் நீரி நிறுவனம் 2011 ஏப்ரல் 6, 7, 8 தேதிகளிலும், 19, 20, 21, 22 தேதிகளிலும் ஏழு நாட்கள்நடத்திய ஆய்விலும் நான் பங்கு ஏற்றேன். 2012 அக்டோபர் 1 ஆம் தேதியும், 9 ஆம் தேதியும் உச்ச நீதிமன்றத்தில் இருதரப்பின் நிறைவு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.


ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்று நான் மிகவும் முயற்சி எடுத்துத் திரட்டிய பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து, இரண்டரை மணி நேரம் வாதாடினேன். Þடெர்லைட் ஆலை சுற்றுவட்டாரத்தில் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், Þடெர்லைட் கழிவுகளின் மாதிரிகளை, அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செர்னைக் அவர்களின் ஆய்வுக்கு அனுப்பி வைத்து, அவர் தந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.

 

விளைநிலங்கள் அடியோடு நாசம் ஆகும்; கால்நடைகள் நச்சுத் தண்ணீர் குடித்து இறந்துபோகும். மனிதர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், சரும நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு, ஆயுள் காலம் குறையும் என்பது அறிக்கையின் முக்கிய அம்சம் ஆகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஏப்ரல் 2 ஆம் தேதி வர இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்.


இந்நிலையில், மார்ச் 23 ஆம் தேதி அதிகாலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையால், தூத்துக்குடியின் பல பகுதிகளில் மக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சுவாசிக்கச் சிரமப்பட்டு, இன்னலுக்கு ஆளானார்கள். பல இடங்களில் மரங்களின் இலைகள், செடிகள், பூக்கள் நிறம் மாறி கருகிப்போயின.

 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு சார்பில், மார்ச் 28 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தோம். தூத்துக்குடி வியாபாரிகள் சங்கமும், தமிநாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் கடைகளை அடைக்கக் கோரிக்கை விடுத்தன. தூத்துக்குடி மாநகரத்தின் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆயிரக்கணக்கில் 28 ஆம் தேதி Þடெலைட் முற்றுகை போரில் பங்கு ஏற்றனர்.


ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு போராட்டக் களத்தில் கோரிக்கை விடுத்தோம்.

 

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் போட்ட முதலீட்டை விட 40 மடங்கு கொள்ளை இலாபம் அடித்து இருப்பதால், இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.


பொதுமக்கள் நலனைக் காக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, Þடெர்லைட் ஆலையை மூடிட மிகச் சரியான நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு, தூத்துக்குடி மாநகர மக்கள், சுற்றுவட்டாரப் பொதுமக்கள் சார்பிலும், 17 ஆண்டுகளாக Þடெர்லைட்டை எதிர்த்துப் போராடி வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 

734554_586148228070243_524293864_n.jpg



இது தமிழ் நாட்டுக்கு சமீபத்தில் கிடைத்த நான்காவது வெற்றியானாலும் இதன் மூலக்காரணம் வைகோக்குத்தான். இந்தியாவின் இன்னுமொரு நடமாடும் யூனியன் கார்பைடாய் அடிக்கடி விஷவாயுவை கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட முதன் முதலாய் தூத்துகுடி மக்களுடன் கை கோர்த்தவர் தான் இந்த வைகோ. இவரின் பல முயற்ச்சி கேள்வி குறியாய் இருந்த போதிலும் இந்த மக்களின் வாழ்க்கையை செம்மைபடுத்துவதற்க்காக இவர் எடுத்த முயற்ச்சி இன்று மாவட்ட ஆனையாளரின் ஆனைப்படி இந்த ஆலைக்கு மூடுவிழா நடந்தது. இதற்க்கு இன்னுமொரு மூலக்காரணம் ஜி ராமப்பிரியா என்ற வக்கீலும் தான். 2010 ஆம் ஆண்டு சென்னை ஹைகோர்ட் இதை மூட உத்தரவு இட்டும் மேல் முறையிடு சால்ஜாப்பால் இந்த ஆலை செயல்பட்டாளும் மக்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் கதவுக்கு வெளியே ஒலித்து கொண்டே இருந்தது.

 

 

ஒரு முறை சென்னையில் இருந்து டெல்லி மார்க்கமாய் செல்லும் விமானத்தில் வை கோ அம்ர்ந்திருந்தார். விமானம் புறப்பட தயார் ஆன நேரம் அவருக்கு அருகில் ஒரு தொழிலதிபர் வந்து அமர்ந்தார், அவர் தான் இந்த ஸ்டெர்லைட் முதலாளி அகர்வால்.வைகோ நிலமையை புரிந்து கொண்டு வேறு இருக்கைக்கு மாற்றுமாறு கூறின போதிலும் இது ஒரு ஆர்கனைஸ்ட் ஐஸ்பிரேக்கிங் செஷன் என்று விமான கம்பெனிக்கு தெரிந்திருந்தும், சீட்டை மாற்ற மறுத்தனர். கொஞ்சமும் தாமதிக்காமல் விமானத்தை விட்டு இறங்கி வேறு ஒரு விமானத்தில் டெல்லி சென்றடைந்தார். இது தான் அவரின் அப்பளுக்கற்ற அரசியல் தன்மைக்கு ஒரு எடுத்து காட்டு இந்த ஸ்டெர்லிங் இன்டஸ்ட்ரிஸ்ன் மூடு விழாவுக்கு காரணம்.


ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வந்தது ஸ்டெர்லைட் ஆலை. ஆனால் வைகோ அவர்கள் ஆலைக்கு எதிராக நீதிமன்றம் வாயிலாகவும் மக்களை ஒன்று திரட்டியும் நடத்திய தொடர் போராட்டங்களின் பயன் இப்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.