Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராகவே கிளிநொச்சித் தாக்குதல்: இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய

Featured Replies

கிளிநொச்சித் தாக்குதல் - ஜெனிவாவுக்கு பதிலடியாம்

[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 03:37 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] tna_office_-.jpgவடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில், கிளிநொச்சியில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தேசியக்கொடிகளை ஏந்தியவாறு சென்ற சுமார் 50 பேர் வரையிலான குழுவொன்று, நேற்று கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலகம் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், சரவணபவன் ஆகியோர் வடக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் ஏற்பாட்டில், கற்கள், பொல்லுகள் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் கூட்டத்தில் பங்கேற்ற 13 பொதுமக்கள் காயமடைந்தனர். இவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலகம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நான்கு வாகனங்களும் சேதமாக்கப்பட்டன.

தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைப் பொதுமக்கள் பிடித்து சிறிலங்கா காவல்துறையினரிடம் கையளித்த போதும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமக்குப் பாதுகாப்பு அளித்த அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவு காவல்துறையினர், தாக்குதலாளிகள் உள்ளே நுழைவதை தடுக்கத் தவறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

“தமது நலனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறை கொள்வதில்லை என்றும், வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்களின் நலனிலேயே அக்கறை கொண்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

சிறிலங்கா காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்து விட்டனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதிலும், தாக்குதல் நடத்தியவர்கள் காவல்துறையினரின் உத்தரவை அடுத்து கலைந்து சென்று விட்டதால் அவர்கள் நடவடிக்கையில் இறங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை” என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130331108029

 

சிறிலங்கா இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதிலும்,

தாக்குதல் நடத்தியவர்கள் காவல்துறையினரின் உத்தரவை அடுத்து கலைந்து சென்று

விட்டதால் அவர்கள் நடவடிக்கையில் இறங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை”

என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்

 

என்னமா கதை விடுறாங்க...  இதுக்கெல்லாம் பயப்பட்டா எப்பிடி? 

 

 

 

 

வாகனங்கள் உடைமைகள் சேதமாக்கபட்ட நிலைமையில் எப்படி தாக்குதல்களை நடாத்தியவர்களை விடுவிக்க முடியும்!

மூளையற்ற, புத்தியற்ற சுமந்திரன், மாவை, சுரேஷ் போன்றவர்கள் வெறுமனே அறிக்கைகளை விடுவதையும், இந்தியக் காடையர்களிடம் அறிவிப்பதையும் விட்டுவிட்டு, ஒழுங்கான முறைப்பாட்டை போலீசில் கொடுத்து, வழக்கு தாக்குதல் செய்து சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு சிங்கள அரச பயங்கரவாதிகளின் அராஜகங்களை முறைப்படி ஆதாரங்களுடன் சர்வதேசத்துக்கு  கொண்டுசெல்ல வேண்டும். சேதங்களுக்கான நட்ட ஈட்டை தாக்குதல்களில் ஈடுபட்டவர்களிடம் பெறுவதுடன் அவர்களை சிறைகளிலும் அடைக்கும் நடவடிக்கைகளை கூட்டமைப்பு எடுக்க வேண்டும்.

 

இவ்வாறான முறையான செயல்கள் மூலமே சிங்கள அரச பயங்கரவாதிகளின் போலீசிலும், நீதித்துறையிலும் நம்பிக்கை வைக்க முடியாது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அறிவற்ற மடையர்களை விட கேவலமாக  கூட்டமைப்பு உறுப்பினர்கள் செயற்படுவது முடிவுக்கு வரவேண்டும்.


வெறும் அறிக்கைகளையும், படங்களையும் வெளியிட்டு அங்கலாய்ப்பது ஒருபோதும் உதவாது! ஏற்கனவே போட்ட சில வழக்குகளை ஹிந்திய காடையர்களின் சொல்லைக் கேட்டு திரும்பப் பெற்றதும் கூட்டமைப்பு செய்த தமிழினத் துரோகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.