Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று இரவு இந்தியாவுக்கு செல்கிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ranilap203_150.gif

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை இரவு இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருக்கின்றது. இந்தியாவின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது மத்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

  

இந்த சந்திப்புக்களின் போது இலங்கை-இந்திய நட்புறவு தொடர்பிலும் அவர் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய ஆதரவாக வாக்களித்து. அத்துடன், தமிழ்நாட்டில் வைத்து பௌத்த துறவிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும் வடக்கில் நிலைக்கொண்டுள்ள படைகளை குறைக்குமாறும் யுத்தத்தின் இறுதிகட்டத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்று இந்திய கோரிவருகின்ற நிலையிலே ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் ஒன்றைச் செய்யவிருக்கின்றார். இந்தியாவுக்கு இன்றிரவு பயணமாகும் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை நாடு திரும்புவார் என ஐ தே க பிரமுகாகள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=79453&category=TamilNews&language=tamil

இந்த ஆளின் பயணம் மூலம் ஏதாவது சகுனி திட்டங்கள் தமிழர்களுக்கு எதிராக தீட்டப்படும் !

இவர் முன்னரும் பலதடவைகள் இந்தியப் பயணம் போய் வந்தவர். எதோ ஒரு காரணத்துக்காக இவருக்கு காங்கிரசிலிருந்து ஆதரவு வருவது இல்லை. மேலும்,

 

இவரின் கையிற்கு அதிகாரம் வராதவரைக்கும் இவரை காங்கிரஸ் கண்டுகொள்ளாது. காங்கிரசின் பணிந்தால் ஏறி மித்திப்பதும், மிதித்தால் பணிந்து போவதுமான கொள்கைக்கு பதவி இல்லாதவரின் சினேகிதம் சரிப்பட்டு வராது. புலிகள் முள்ளிவாய்காலில் கஸ்டப்பட்ட போதும், கருணாநிதி 2G யில் சிக்கி இருந்த போதும், ஜெயலலித்தாவை சொத்து சேர்ப்பு வழக்குகளினால் விழுத்தாலாம் என்று கனவு கண்ட போதும் இதையேதான் காங்கிரசு செய்தது.

 

எந்த பேச்சு வார்த்தைகளின் போதும் காங்கிரசு தனது அருமை புத்திர பாக்கியமான 13ம் திருத்தத்தை மறக்காது. அது Mr. நரியருக்கு அட்டமத்து சனியன்.

ரணிலுக்கு புதுடெல்லி அவசர அழைப்பு – மட்டக்களப்பு உரையின் எதிரொலி? [ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 03:05 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

Rani_Wickremasinghe_.jpg

 

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசாங்கத்தினால் அவசரமாக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய - சிறிலங்கா உறவுகளில் நெருடல் ஏற்பட்டுள்ள சூழலிலேயே, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லி அழைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடெல்லியின் அழைப்பை ஏற்று, இன்றிரவு இந்தியா செல்லும் ரணில் விக்கிரமசிங்க, வரும் வியாழக்கிழமை கொழும்பு திரும்புவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்த பின்னணியில், இருநாடுகளுக்கும் இடையில் சுமுக உறவுகள் நிலவவில்லை.

நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாது என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

சிறிலங்காவில் நீடித்து நிலைக்கக் கூடிய அமைதியையும், அதிகாரப் பகிர்வையும் கொண்டு வருவதற்கு இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா அவசர அழைப்பு விடுத்துள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20130401108033

Edited by மல்லையூரான்

இவனின் வருகையை எதிர்த்து தமிழ்நாட்டில் பெரிய போராட்டம் நடத்த வேண்டும்

சிங்கள இனவாதிக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு எந்த ஒரு சிங்கள இனவாதிக்கும் இந்தியாவில் இடம் இல்லை என்பதினை தெரியப்படுத்த வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.