Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகலிடம் நோக்கி புதுவையின் யதார்த்தம்..!

Featured Replies

தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! வாருங்கள்: புதுவை இரத்தினதுரை அழைப்பு

தமிழீழத் தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! உங்கள் படைப்புத் தளத்தை விரிவாக்கிக் கொண்டு செயற்படுங்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அழைப்பு விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு அவர் அளித்த நேர்காணலில் விடுத்துள்ள வேண்டுகோள் உரையின் எழுத்து வடிவம்:

உலகின் எல்லாத் தேசங்களும் இனங்களும் வெற்றி பெறுவதற்கு முன்னர் உலகம் எந்த நெருக்குவாரங்களைக் கொடுத்ததோ அந்த நெருக்குவாரங்களை எமக்கு உலகம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நெருக்குவாரங்கள் கொடுக்கப்பட்ட இனங்கள் எல்லாமே இறுதியில் வெற்றி பெற்றிருப்பது எமக்கு ஆறுதலானது. எமக்கும் அந்த நிலைமையே ஏற்படும். நாங்கள் போர்ச் சூழலுக்குள் திரும்பவும் செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கலாம். அதை எதிர்கொள்வதற்கு எங்களுடைய படைப்பாளிகள் பங்களிப்பைக் கேட்டு நிகழ்வு ஒன்றைச் செய்திருந்தோம்.

1990 முதல் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை எங்களுடைய படைப்பாளிகள்தான் தர்மம்சார் எமது போராட்டத்தின் பக்கத்துணையாக இருந்து மக்களை இணைத்தவர்கள். உலகுக்குச் சொன்னவர்கள். இந்த அமைதிக்காலத்தில் நாங்கள் ஏன் கரைய வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்ப எமது பயணத்தை மீளத் தொடங்கியுள்ளோம். மொத்தம் 150 பேர் பங்கேற்றனர்.

எமது போராட்டம் வேறு ஒரு வடிவம் எடுத்தது. இராஜதந்திர நகர்வுகள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் ஈழத் தமிழனுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லையாம். அழுகைதான் பரிசாம். அடங்கிப் போவதுதான் விதி என்று சிறிலங்காத் தரப்பு எச்சரிக்கை வைத்திருக்கிறது. நாங்கள் அடங்கிப் போக முடியாது. இதுவரை போராட்டத்துக்கான பணிகளைச் செய்த எமது படைப்பாளிகள் இப்போது போருக்கான பணிகளைச் செய்கிறோம்.

புலத்தில் இருக்கும் படைப்பாளிகளுக்குத்தான் இரட்டைச் சுமை. 1995 ஆம் ஆண்டு காலம் முதல் 2000 ஆம் ஆண்டு காலம் வரை வன்னியிலே நாங்கள் வெற்றிகளைச் சந்தித்த போதும் அது சிறையாக இருந்தோம். எமது அழுகையின் குரல் பெரிதாக வெளிவரவில்லை. எமது கண்ணீர் பெரிதாக வெளியில் தெரியவில்லை.

இன்று உலகம் முழுமைக்கும் நாம் அறிந்தவரையில் 40 ஊடகங்கள் ஈழத் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. இதைத்தவிர பல்லாயிரக்கணக்கான படைப்பாளிகள் உள்ளனர்.

நாளை திரும்பவும் வன்னி என்ற வட்டத்துக்குள் அடக்கி- அடக்க முடியாது- ஒடுக்கி- ஒடுக்க முடியாது. அதற்கு எதிரான போராட்டத்தை நடத்தும் போது நாங்கள் எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்க முடியாது. அந்தச் சுமையை உலகம் முழுமைக்கும் பரவிய உறவுகள் கூற வேண்டும். எமது அழுகையையும் கண்ணீரையும் நீங்கள் கூற வேண்டும். எங்களுடைய அழுகையை தாயகத்தின் மொழியில் உங்களால் சொல்ல முடியாது. அது பொய்யாக இருக்கும். புலம்பெயர் தமிழராக இருப்பவர் ஆர்ட்டிலறி அடிப்பது பற்றியோ செல் அடிப்பது பற்றியோ எழுத முடியாது.

எங்களுடைய குரலை உங்களுடைய குரலினூடாக உலகத்துக்குச் சொல்லுங்கள். எங்களுக்குத் திருப்பிச் சொல்லாதீர்கள். நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதையே எங்களுக்குத் திருப்பிச் சொல்வதில் அர்த்தமில்லை. உலகுக்கு உங்கள் மொழியில் சொல்லுங்கள். வேற்று மொழிகளில் சொல்லுங்கள். அதை நாங்கள் செய்வது மிகக்குறைவு. பிரெஞ்ச், டொச் மொழியில் எழுதக் கூடிய தமிழர்கள் இன்று வந்துவிட்டார்கள். தமிழில் எழுதியாவது அதை வேற்று மொழிக்குக் கொண்டு செல்லுங்கள்.

ஈழத் தமிழினம் படுகிற துயரமும் கண்ணீரும் வதையும் வலியும் உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அது உலகுக்குத் தெரிந்திருந்தால் நமக்கு இடைஞ்சல் இல்லையே... ஆண்டுக்கு இருமுறை கூட்டம் கூடுவது அல்ல புலம்பெயர் தமிழரின் பணி. அதற்கு மேலாக தினசரி அதற்காக இயங்க வேண்டும். படைப்பாளிகள் இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும். தாயகத்து உறவுகளின் வலியை படைப்பாளிகள் தங்களது படைப்புகளின் மூலம் உலகத்துக்குச் சொல்ல வேண்டும்.

பாலஸ்தீன மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. வியட்நாமிய மக்களின் கண்ணீரும் துயரமும் அப்படித்தான் வந்தது. அதுபோல ஈழத் தமிழரின் கண்ணீரையும் துயரையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும். அரசியல் ரீதியாக எப்படி ஒரு இராஜதந்திர நகர்வு மேற்கொள்ளப்படுகிறதோ அப்படி படைப்பு ரீதியாகவும் ஒரு நடவடிக்கை இயங்க வேண்டும். புலம்பெயர் தேசத்தில் கலைஞர்களும் படைப்பாளிகளும் அதிகம். ஒரு தாயின் கடமையைப் போல் செய்ய வேண்டும். இதை செவ்வனே செய்வதே புலம்பெயர் படைப்பாளிகள் ஆக வேண்டும்.

நாங்கள் போராடுவோம் என்பது உண்மை. இறுதி ஆள் இருக்கும் வரை போரிடுவோம். எந்தக் கொம்பன் வந்தாலும் நாம் போரிடுவோம். அது வேறு பிரச்சனை. ஆனால் அதை நமது நியாயப்பாடுகளை உலகத்துக்குச் சொல்வது யார்? புலம்பெயர் தமிழர்களுக்குள் இருக்கிற படைப்பாளிகளும் கலைஞர்களும்தான். அவர்கள் அதைச் செய்ய வேண்டும். சும்மா வெறுமனே அடித்தான்- கொத்தினான் என்று இல்லாமல் படைப்பாளியின் நெஞ்சுக்குள் ஆழப் பதிந்து இறங்குவதுபோல் சொல்ல வேண்டும். படைப்பின் மூலமே போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன. மார்க்ஸிம் கார்க்கிய, மாயவோஸ்கி, பாப்லோ நெரூடா என்றாலும் பாரதி என்றாலும் அவர்கள் போராட்டத்துக்கு பணி செய்தனர்.

ஆகவே எமது புலம்பெயர் உறவுகளே!

அவர்களுக்குள் பூத்துக் கிடக்கும் படைப்பாளிகளே!

இந்தப் பணிகளை அவர்கள் தங்கள் கைகளில் எடுக்கட்டும்!

ஏனெனில் நாம் திரும்பவும் போரிடுவோம். திரும்பவும் அடைபடுவோம். எங்கள் அவலம் உங்களின் கண்களால் தெரியவேண்டும்.

உங்களுக்கு இரட்டை வேலை. நீங்களே வதை பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தாயகமும் வதைபட்டுக் கொண்டிருக்கிறது. உங்களது துன்பத்தை எமக்குத் தெரியப்படுத்துங்கள். எமது துன்பத்தை உலகுக்குத் தெரியப்படுத்துங்கள்.

என் பிரியத்துக்குரிய எமது புலம் பெயர் தமிழ் உறவுகளுக்குள்ளே பூத்துக் கிடக்கிற இளம் படைப்பாளிகளே!

உங்களுக்கு இரட்டை வேலை இருக்கிறது. எங்களுக்கு ஒற்றைச் சுமை.. இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு உங்களது பங்களிப்பு பெரிது என்பதை புரிந்து கொண்டு செயற்படுங்கள்.

இது கவிஞர் புதுவை இரத்தினதுரையின் குரல் அல்ல. உங்களுடைய தாயகத்தின் குரல்.

புலம்பெயர் வாழ் தமிழர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளாதிருந்தால் அவர்களுக்கும் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. நாம் அவர்களைப் பிழையாகக் கருதவில்லை. புலம்பெயர் தமிழர்களுக்கு விடுதலையின் தாற்பரியத்தையும் எமது அழுகையையும் கண்ணீரையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமெனில் அவர்களுக்கும் சொல்லிக் காட்ட வேண்டும்.

எங்களுடைய புலம்பெயர் தமிழர்களில் கொஞ்சம் பேர் இன்னும் உறக்கத்தில்தான் இருப்பார்களாக இருந்தால் புலம்பெயர் படைப்பாளிகளுக்குப் பெரிய பணி இருக்கிறது. இதனுடன் சேர்த்து அவர்களுக்கு மூன்று பணியாகிறது. புலம்பெயர் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் ஊடகத்தாருக்கும் நித்திரையில்லா பணி தங்களது காலடியிலே விழுந்து கிடக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்த விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என்று கூறுகிற படைப்பாளிகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. விடுதலைப் புலிகள் என்பது வெறும் சொல் அல்ல. விடுதலைப் போராட்டத்தின் சொல்தான் விடுதலைப் புலிகள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கட்டும். நானில்லாமல் விடுதலைப் போராட்டமா? வெற்றி பெறுமா? என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்- பழைய போராளிகள் என்ற போர்வையில். அவர்கள் இருக்கட்டும்.

நடுநிலைமைக்காரர்கள்தான் இப்போது பிரச்சனை. அது என்ன நடுநிலைமை?

நீதிக்கும் அநீதிக்கும் இடையே "நடு" என்ற ஒரு வார்த்தை உண்டா?

சுத்தத்துக்கும் அசுத்தத்துக்கும் இடையே "நடு" என்ற ஒருவார்த்தை உண்டோ? அளவான சுத்தம்- அளவான அசுத்தம் என்று உள்ளதோ? அது போக்கிரித்தனம்.

இந்தப் போராட்டத்தை எதிர்க்கிறவர்கள் நேர்மையானவர்கள். நடுநிலைமை என்பதற்கு தமிழிலே வார்த்தைகளே இல்லை. :idea:

தன்னுடைய இயங்கும் தன்மையை வைத்துக்கொண்டே நடுநிலைமையாளன் உருவாகிறான். எவன் தனியே எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் மட்டும்தான் இருப்பேன் என்பவர்கள்தான் நடுநிலை பற்றி பேசுவார்கள். காலாவதியான பொருட்களை கையில் எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் புதிதாகச் செய்வதே காலாவதியான பொருட்களை வைத்திருப்பதுதான்.

அப்படியான படைப்பாளிகள் எங்கும் இருப்பார்கள். நடுநிலைமை என்பது தப்பித்துக் கொள்ளுதல். நடுநிலைமையை மீறி பட்டுப்படாமல் செல்லும் போக்கும் உண்டு. பின்பக்கம் பார்த்தால் கிளிபோலும் முன்பக்கம் பார்த்தால் காகம் போலும் இருக்கும். அப்படியான படைப்பாளிகளும் இருக்கிறார்கள்.

குளத்தோடு கோபித்துக் கொண்டு என்னமோ செய்யக் கூடாது என்று ஒரு பழமொழி உண்டு.

இந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றியான விமர்சனங்கள் உண்டு. இந்த விடுதலைப் போராட்டம் சரிக்கும் பிழைக்கும் இடையேதான் ஓடுகிறது. ஏற்றுக் கொள்கிறோம்.

எல்லோருக்கும் சரியானதான ஒரு போராட்டத்தை- எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்றால் "விடுதலைப் புலிகள்" என்ற பெயரைக் கூட தலைவர் இன்னமும் வைத்திருக்க முடியாது. கதைத்துக் கொண்டே இருந்திருப்போம்.

இந்த விடுதலை என்பது வேண்டுமா இல்லையா? நாய்க்கும் மரத்துக்கும் இருக்கிற விடுதலை ஈழத் தமிழனுக்கும் வேண்டும் அல்லவா?

அந்த விடுதலைப் போராட்டம் இப்போது நடக்கிறது அல்லவா? அதன் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும் இல்லையா? அந்தப் புள்ளியிலிருந்துதான் இந்தப் படைப்பாளிகள் தொடங்க வேண்டும்.

அதைவிடுத்து அவர்கள் அப்படியாம்- இவர்கள் இப்படியாம் என்ற மனோபாவம் இருக்க இயலாது.

முழுமையான விடுதலைக்கான எல்லைகளைத் தொட்டு நிற்கும் தூரத்தில் நிற்கிறோம் நாம்.

உங்களது விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விடுதலைப் போராட்டத்தின் பக்கத்தில் எரிகின்ற நெருப்புக்குப் பக்கத்தில் தயவு செய்து தண்ணீர் ஊற்றிவிடாதீர்கள். தீக்குளித்துக் கொண்டிருக்கிற தேசத்திலிருந்து நாம் இதைக் கேட்கிறோம்.

எமது விடுதலை நாம் நிச்சயம் பெறுவோம். ஆயிரம் தடைகள் வரட்டும். உலகில் ஆயிரம் தடைகள் வந்தபின்னர்தான் மக்கள் வென்றிருக்கிறார்கள். நாடுகள் வென்றிருக்கின்றன. இப்போது எங்களுக்கும் வந்திருக்கிறது. நாங்கள் வெல்லுவோம். தமிழ் மக்களின் சக்தியோடு நாங்கள் இணைந்து நிற்கிறோம்.

மாலை 5 மணிக்கு வந்து பாருங்கள். ஊரெங்கும் அணிவகுப்புகள். நீங்கள் வந்து பார்த்தீர்கள் எனில் மெய்சிலிர்த்துப் போவீர்கள். ஆகையால் இந்த எரிகின்ற நெருப்புக்கு நீர் ஊற்றிவிடாதீர்.

எவனொருவனுக்கு விடுதலை உணர்வு வந்து நெஞ்சுக்குள் சிறகு முளைத்து பறக்காமல் இருக்கிறானோ அவன் படைப்பாளியே இல்லை ஐயா! அவன் கலைஞனே அல்ல- அவனுக்கு முதுகுகளில் இறக்கை முளைக்கும் போதுதான் படைப்புத் தளத்தை செய்ய வெளிக்கிடுகிறான்.

எனவே முதுகில் இறக்கை முளைத்த எனது உறவுப் படைப்பாளிகளே!

சிறகுகளை அகல விரியுங்கள்!

விடுதலையின் வானத்தை நோக்கியதாக அது இருக்கட்டும்!

எல்லோரும் சேர்ந்து வாருங்கள் வடம் பிடிப்போம்! இழுத்து வந்து சரியான இடத்தில் நிறுத்துவோம்!

உங்களிடமிருந்து நம் தேசம் வேண்டுகிறது- உங்கள் படைப்புளம் இன்னும் இன்னும் விரிய வேண்டும் என்று தாயகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் கவிஞர் புதுவை இரத்தினதுரை.

source- puthinam.com

மேற்குறிப்பிட்ட கட்டுரை ஏற்கனவே இரன்டு இடத்தில களத்தில கிடக்கு,குருவிகள் திருப்பி ஒருக்க வடிவா வாசிச்சா நல்லம், சிவப்புக் கோடு போட்டதற்குப் பக்கத்தில எழுதி இருகிறதுகளை.விளங்காமத் தான் உந்த சிவப்புக்கோடுகளைப் போட்டு இருகிறீர்,வடிவா இன்னொருக்க வாசியும், விளங்காட்டிக் கேளும். குறிப்பா நடு நிலமை பற்றியும் போராட்டத்தை விமர்சிக்கிறவர்கள் பற்றியும் தண்ணி ஊற்றுபவர்கள் பற்றியும் எழுதி இருகிறதை, உமக்கு விளக்கம் குறையப் போல.

எனென்றால் உம்மைப் போன்றவர்களை நோக்கித் தான் இந்தக் கட்டுரையே எழுதப் பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

நீங்கள் உருப்படப் போறதில்லை. எப்பதான் தனிநபர்கள் நோக்கி விரியும் உங்கள் கருத்துக் குரோதம் தீருதோ அன்றுதான் இக்களமும் உங்கள் கருத்துக்களும் உருப்படும். கருத்துக்களால் புடப்படும்..! :P :idea:

நீங்கள் உருப்படப் போறதில்லை. எப்பதான் தனிநபர்கள் நோக்கி விரியும் உங்கள் கருத்துக் குரோதம் தீருதோ அன்றுதான் இக்களம் உருப்படும். கருத்துக்களால் புடப்படும்..! :P :idea:

எல்லோருக்கும் சரியானதான ஒரு போராட்டத்தை- எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்றால் "விடுதலைப் புலிகள்" என்ற பெயரைக் கூட தலைவர் இன்னமும் வைத்திருக்க முடியாது. கதைத்துக் கொண்டே இருந்திருப்போம்.

இந்த விடுதலை என்பது வேண்டுமா இல்லையா? நாய்க்கும் மரத்துக்கும் இருக்கிற விடுதலை ஈழத் தமிழனுக்கும் வேண்டும் அல்லவா?

அந்த விடுதலைப் போராட்டம் இப்போது நடக்கிறது அல்லவா? அதன் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும் இல்லையா? அந்தப் புள்ளியிலிருந்துதான் இந்தப் படைப்பாளிகள் தொடங்க வேண்டும்.

அதைவிடுத்து அவர்கள் அப்படியாம்- இவர்கள் இப்படியாம் என்ற மனோபாவம் இருக்க இயலாது.

முழுமையான விடுதலைக்கான எல்லைகளைத் தொட்டு நிற்கும் தூரத்தில் நிற்கிறோம் நாம்.

உங்களது விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விடுதலைப் போராட்டத்தின் பக்கத்தில் எரிகின்ற நெருப்புக்குப் பக்கத்தில் தயவு செய்து தண்ணீர் ஊற்றிவிடாதீர்கள். தீக்குளித்துக் கொண்டிருக்கிற தேசத்திலிருந்து நாம் இதைக் கேட்கிறோம். :idea: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய காலப்பகுதியில் எதிரியின் சவால்களுக்க பதில் அடி கொடுக்கப்பட வேண்டுமே தவிர, தனிவிமர்சனம் அற்றது. அதைத் தான் இரத்தினதுரையும் சொல்கின்றார். யாரும் பிழை அற்றவர்கள் என்று கூற முடியாது. ஆனால் அதையே தூக்கிப் பிடித்து விமர்சித்தால் என்ன அர்த்தம்??

எதிரிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டியதே இப்போது இருக்கின்ற முதல் தேவையாகும்

அங்கே எதிரிக்கு சார்பான நிலை தானே எடுக்கப்படுகின்றது. இதைச் சிலர் உணர வேண்டும். இது உங்கள் பெற்றோர் மீது, உறவுகள் மீது நவைக்கும் விமர்சமாக நினைத்தால் அப்படி வைக்கத் தோன்hது. ஏனென்றால் போராட்டமும் நம்முள் கலந்ததே!

  • தொடங்கியவர்

படைப்பாளிகளின் தார்ப்பரியம் புரிந்த ஒரு படைப்பாளி...தெளிவாகக் குறிப்பிடுகிறான்.. விமர்சனத்தை முன்வை..ஆனால் அது போராட்டத்தின் நெருப்பாற்றில்..அணையிடக் கூடாது...ஆனால் அதன் நியாயத்தை விமர்சனங்களால் தெளிவுறுத்து என்கின்றான்..! ஒரு விமர்சகன்...செய்வது..இரண்டு..ஒன

எதிரிகளை விட துரோகிகளின் நிலைப்பாட்டுக்குள் அவர்கள் காணும் நியாயங்களை..நீக்காத வரை..துரோகிகள் உருவாகிக் கொண்டே இருப்பர். அவர்களின் போக்கில் அவர்களுக்கு போராட்டத்தின் நியாயத்தைக் காட்டுவதையே புதுவையும் கோருகிறார். அவன் படைப்பாளி..யதார்த்தம் பேசவும் கற்றுருக்கிறான்..! நீங்கள் மதித்தாத்தாவை நடத்தும் விதம்...அவருக்கு போராட்டத்தின் மேல் வெறுப்பை உண்டு பண்ணுமே தவிர...நியாயத்தை உணர வற்புறுத்தாது. இவின் அவர் திருந்தவில்லை என்றாலும் கூட...அவரின் மனச்சாட்சி கேட்கும். அதற்குக் கூட சந்தர்ப்பமளிக்காத தனிநபர் வசைபாடல்கள் தான் படைப்பாளிகளின் ஆக்கமோ..??! இவைதான் போராட்டத்தின் கருவூலத்தை உலகறியச் செய்யுமோ...???! :P :idea:

பிரபாகரனைப்பற்றி வக்கிரமான பாசையில் வசை பாடும் ஒருவர் தான் நாம் இங்கு எழுதுவதைப் படித்து தனது கருத்தை மாற்றப் போகிறார் அவரை இங்கு ஒருவர் கருதாளர் என்று அடம்பிடிகிறார்.

துரோகிகள் தமது சுய நலங்களைப்பாதுகாகவே இங்கு முகமூடியோடு எழுதுகிறார்கள்.அவர்களுக்கான பதில் தொடர்ந்து தரப்படும்.

வக்கிரமான எண்ணத்துடன் நக்கல், நளினம் கலந்த சொற்களுடன் இங்கு எழுதுவது எந்த விததிலும் போரட்டத்தை வளர்க்காது.ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம் அதுவல்ல. அதற்கு ஏற்றவாறு பதிலடியும் இங்கு கொடுக்கப் படும்.

புதுவை சொன்னதைத் திரித்து இங்கே நீர் கூறும் வியாக்கியனத்தை பார்த்தால் சிரிப்பாகத் தானிருக்கு.

  • தொடங்கியவர்

விமர்சனத்துக்கு ஆதரவு தேடும் உங்கள் போன்றவர்களின் கருத்துக்களை என்னென்பது. விமர்சனம் என்பது குறித்த கருத்துத் தொடர்பிலான..ஒரு கருத்தாளனின் பார்வை...அவ்வளவே. அதை ஆதரிப்பதும் விடுவதும்..இல்லை மெளனமாக நீங்கள் சொன்ன அதே நடுநிலை காப்பதும் நாமல்ல மற்றவர்கள். இங்கு உணர்ச்சி வசப்பட்டு மதித்தாத்தாவின் கருத்துக்களை நாங்களும் எதிர்க்க வேண்டும் என்றால் அப்புறம் எங்களுக்கும் உங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடில்லை. எம்மைப் பொறுத்தவரை எதிர்க்கருத்து என்றாலும்..அதை வரவேற்று அதற்கு தகுந்த பதிலளிக்க வேண்டும். அது நடக்கவில்லை இங்கு. மாறாக வழமை போல தனிநபர்தாக்குதலே மேற்கொள்ளப்பட்டது.

புலிகள் சொல்லி இருப்பது தங்களை விமர்சிக்க வேண்டாம் என்றல்ல. மக்களின் துன்பத்தைக் கண்ணீரை பகருங்கள்..! போராட்டம் பற்றிய நியாயத்தைச் சொல்லுங்கள் என்றுதானே தவிர...வேறல்ல..! அவர்களே தவறுகளை ஒப்புக்கொள்ளும் போது மதித்தாத்தா போன்றவர்களை இங்கு வேண்டாதவர்கள் போல நோக்கி தனிநபர் தாக்குதலால் விரட்ட நினைப்பது கருத்தியல் உலகுக்கு அவமானம்..! :idea:

  • தொடங்கியவர்

பிரபாகரனைப்பற்றி வக்கிரமான பாசையில் வசை பாடும் ஒருவர் தான் நாம் இங்கு எழுதுவதைப் படித்து தனது கருத்தை மாற்றப் போகிறார் அவரை இங்கு ஒருவர் கருதாளர் என்று அடம்பிடிகிறார்.

துரோகிகள் தமது சுய நலங்களைப்பாதுகாகவே இங்கு முகமூடியோடு எழுதுகிறார்கள்.அவர்களுக்கான பதில் தொடர்ந்து தரப்படும்.

வக்கிரமான எண்ணத்துடன் நக்கல், நளினம் கலந்த சொற்களுடன் இங்கு எழுதுவது எந்த விததிலும் போரட்டத்தை வளர்க்காது.ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம் அதுவல்ல. அதற்கு ஏற்றவாறு பதிலடியும் இங்கு கொடுக்கப் படும்.

புதுவை சொன்னதைத் திரித்து இங்கே நீர் கூறும் வியாக்கியனத்தை பார்த்தால் சிரிப்பாகத் தானிருக்கு.

உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் எங்கள் கருத்துக்கள் வெளிப்படும். அதையும் நினைவிறுத்திக் கொள்ளுங்கள்....! ஆனால் நிச்சயம்..வரையறைக்குள் இருக்கும்..!

புதுவை சொன்னது மேல இருக்கு.அதை வாசிச்சு சனம் திரிபோ...விரிவோ..சுருக்கமோ என்று கண்டறியும்..ஆற்றலோடுதான் இங்கிருக்கிறார்கள்..! அந்தவகையில்...அவர்கள் தீர்மானிக்கட்டும். எங்கள் கருத்துக்களுக்குக்கு கருத்தியல் குரோதத்தை நோக்காகக் கொண்ட பதில்கள் தரப்படின் அது எதிர்க்கப்படும்.காரணம் உங்களை எந்த வடிவத்திலும் புதுவை குறிப்பிட்ட படைப்பாளியாக நாம் இனங்காணத் தயாரில்லை. ஏமாறவும் தயாரில்லை..! :idea:

உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் எங்கள் கருத்துக்கள் வெளிப்படும். அதையும் நினைவிறுத்திக் கொள்ளுங்கள்....! ஆனால் நிச்சயம்..வரையறைக்குள் இருக்கும்..!

புதிவை சொன்னது மேல இருக்கு.அதை வாசிச்சு சனம் திரிபோ...விரிவோ..சுருக்கமோ என்று கண்டறியும்..ஆற்றலோடுதான் இங்கிருக்கிறார்கள்..! அந்தவகையில்...அவர்கள் தீர்மானிக்கட்டும். எங்கள் கருத்துக்களுக்குக்கு கருத்தியல் குரோதத்தை நோக்காகக் கொண்ட பதில்கள் தரப்படின் அது எதிர்க்கப்படும்.காரணம் உங்களை எந்த வடிவத்திலும் புதிவை குறிப்பிட்ட படைப்பாளியாக நாம் இனங்காணத் தயாரில்லை. ஏமாறவும் தயாரில்லை..! :idea:

உதைத் தானே நானும் சொல்லுறன் , நீர் தானே புதுவை இப்படிச் சொன்னார் எண்டு இங்க வியாக்கியானம் செய்து கொண்டிருகிறீர்,மேலும் உம்மைப் போன்றவர் ,என்னைப் படைப்பாளி என்று அங்கீகரிக்க வேண்டும் என்று நான் எங்க எழுதி இருக்கிறன்? உம்மை எல்லாம் ஒரு பிறவியா முதலில அங்கீகரிச்சாத் தானே அப்படி எதிர்பார்க்க முடியும்?சும்மா சொல்லாததையும் இல்லாததையும் எழுதி தொடர்ந்து குழம்பி, மற்றவர்களையும் குழப்ப வேன்டாம்.புதுவை சொன்னதை விளங்கிற சக்தி இங்க எல்லாருக்கும் இருக்கு அதைத் தான் ஆராம்பத்தில இருந்து சொல்லுறன்.உமக்கு அந்தச் சிவப்புக் கோட்டில போட்ட வசனக்களுக்குக்கும் அதன் பின்னால் அவர் சொல்லி இருக்கிறதுக்கும் அர்த்தம் தெரியாம சுழண்டடிக்கிறீர்.

  • தொடங்கியவர்

எம்மைப் பொறுத்த வரையில் அதில சுழல சுருள எதுவும் இல்லை. நாம் தெளிவாத்தான் இருக்கிறம் எப்பவும் போல...! எங்கள் கருத்துக்களை சரியா இனங்காணாட்டி..தலைச் சுற்றலாத்தான் இருக்கும். அதற்கு நாமில்ல பொறுப்பு. உங்கள் கருத்தாடும் தோறணைதான் காரணமாய் இருக்கும்..! :P :idea:

பகிடி என்ன எண்டா இங்க நீர் எழுதிறது மற்ற ஒருத்தருக்கும் விளங்காம , உமக்கு மட்டும் தான் விளங்குது.உமது கருத்தை விளங்கி அதைச் சரி எண்டு எழுதின ஒருவரை இன்னும் நான் காணவில்லை,அதில இருந்து எங்க பிழை இருக்கு எண்டு உமக்கு விளங்க்காட்டியும் மற்றைய எல்லாருக்கும் விளங்கும். :lol: :idea:

  • தொடங்கியவர்

ஏன் நீங்கள் மற்றவையைக் கூப்பிடுறீங்கள். பார்த்தாலே தெரியுது...என்ன நடக்குது என்று. எத்தினை பேர் இவற்றை வாசிக்கினமோ தெரியாது..ஆனா..தேசிய ஆதரவு என்ற போர்வைக்கும்...அதனால் எழும் குருவி விரோதம் என்ற போர்வைக்கும்..ஜால்ரா போட வழமை போல உங்கள் கூட்டாளிகள் மட்டும் நிற்பினம்..! கருத்துத் தெளிவுள்ளவன்...கருத்தியல் போக்கறிபவன் இப்படியான கருத்தாடலில் இருந்து....நிலைமை விளங்கி.. விலகி இருக்கினம்.நாம் ஏன் தொடர்கிறோம்..என்றுதானே கேள்வி..உங்கள் வரவின் முதல் தொடரும் கருத்தியல் குரோத மனப்பான்மைக்குப் பதிலளிக்கப்படுகிறது. அது களையயும் வரை தொடரும்..உங்களுக்கு உங்கள் பாணியில் விடை...! கருத்துக்கு கருத்தெழுதுங்கள். கருத்துக்கு கருத்தியல் குரோதத்தால் பதிலளித்தல் எதிர்க்கப்படும்..தேவையான வடிவங்களில்..! :P :idea:

நான் மற்றவர்களைக் கூப்பிடவில்லை நீர் எதோ உமது கருத்து எனக்கு மட்டும் தான் குழப்பமாக இருப்பதாகவும் உமது கருத்துக்கள் விளக்கமானவை என்றும் எழுதியதால் தான் அவ்வாறு எழுதினேன்.உமது கருத்தாடலே கருத்துத் திரிபின் அடிப்படயில் ஆனது.ஒருவர் சொல்லாததை எழுதி அதற்கு வியாக்கியானம் செய்வது. ஒரு பொழுது சொன்னதை மறு பொழுது மறுதலிப்பது.உமது கருத்தாடல் எந்த வித கருத்தியல் அடிப்படைகளும் இல்லாத சந்தர்ப்பவாதக் கருத்தாடல் என்பதை நீரே ஒப்பும் கொண்டுள்ளீர்,அதில் தேசிய விடுதலைப் போராட்டமும் அடங்கும்.

இங்கே போர்வை போர்த்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, இங்கே இவ்வாறான குரோத எண்ணங்களைக்கொன்டு நீரே கருதாடுகிறீர் அதனாலயே இங்கெ எல்லோராலும் இகழப்பட்டீர்.இங்கே நீர் இடும் கருத்துக்களே உமக்கு விரோததை சம்பாதிதுக் குடுக்கின்றன.இங்கே எழுதும் பலரை எனக்குத் தெரியாது அவர்களை எனது நண்பர்கள் என்பதன் மூலம் தனிப்பட்ட தாக்குதலைத் தான் செய்து கொன்டிருகிறீர்,அவர்கள் இருவரது கருத்து நிலைகளையும் படித்து அதன் அடிப்படயிலயே தமது ஆதரவு நிலைகளைத் தெரிந்து எடுகின்றனர்.அதனையும் தனிப்பட நட்பாக இங்கே திரிகிறீர்.

உமது பாணியே கருத்தியல் வன்முறையானது ஆகவே தொடர்ந்து படிலடிகளை எதிர்பாரும்.

  • தொடங்கியவர்

உங்கள் கற்பனைக்கு ஏற்ப நாம் பதிலளிக்க முடியாது. வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில்தான் நாமும் கருத்து வைக்கிறம். தமிழ் தேசிய ஆதரவு என்ற போர்வைக்குள் நீங்கள் இருக்கும் வரை ஜால்ரா கூட்டம் இருக்கும் என்பதும் தெரியும்..! அனால் அதற்காக நீங்கள் எல்லோரும் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்று நம்ப நாம் தயார் இல்லை. கருத்துக்கு எவர் கருத்தியல் குரோதமனப்பான்மையோடு தனிநபர்தாக்குதல் மேற்கொண்டாலும்..அது மேற்சொன்னது போல அவசியமான வடிவங்களால் எதிர்க்கப்படும். கருத்தாடலை விட கருத்தாளனை மதிப்பது முதற்கடமை..அதை நாம் செய்வோம்..இங்கிருக்கும் வரை..! :P :idea:

வைக்கும் கருதுக்களுக்குத் தான் கருதாடுகிறோம் என்கிறீர் ,அடுத்த வரியில் தமிழ்த் தேசியப் போர்வையின் கீழ் நான் கருதுக்களை முன் வைப்பதாக எழுதி உள்ளீர்.இதற்கானா ஆதாரத்தை உம்மால் காட்ட முடியுமா? நீர் போர்வையில் என்று சொன்னதற்கானா ஆதாரம் என்ன?

உம்மால் இப்படியான கீழ்த்தரமான எதுவித ஆதரமும் அற்ற குரோத நோக்கில் தான் எழுத முடியும்.தமிழ்தேசியத்திற்கு நான் ஆதரவாக எழுதுவதால் தான் எனக்கு பரந்துபட்ட ஆதரவு இருக்கிறது என்பது உண்மை, நீர் தமிழ்த்தேசியதிற்கு எதிராக எழுதுவதால் தான் உமக்கு ஆதரவு இலாமல் போய் விட்டதும் உண்மை.இதனை இப்போதாவது உணர்துள்ளீர்.இதற்கு முந்திய கருத்தில் எனக்கு நட்பின் அடிப்படையில் எழுதுவாதக எழுதினீர் ,இப்போது உமது வாயாலயே உண்மை வந்து விட்டது.

ஒருவரின் கருதுக்களின் அடிப்படையில் தான் இங்குள்ளவர்கள் ஒருவரை இனங்காணுகின்றனர்.உமக்கு அதனால் தான் இருந்த நட்புக்களும் இல்லாமல் போனது.எனக்கு அதனால் தான் இன்னும் இன்னும் இந்தக் களத்தால் நட்புக்கள் உருவாகி உள்ளது.எல்லாம் தமிழ்த் தேசிய விடுதலை என்ற நோக்கில் நாம் தெளிவாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் இயங்கிக் கொண்டிருப்பதால்.

இதனை போர்வை கீர்வை என்று அனாமதேயமான நீர் பொய்களைச் சொல்வதால் ஒருவரும் நம்பி விடப் போவதில்லை. நேரில் சந்திப்போம் அப்போது யார் போர்வை போத்திருகின்றனர் என்பது தெளிவாகும் என்று பல முறை கூறி விட்டேன்.அதற்கு உமக்குப் பதில் கிடயாது.உமது அடயாளத்தை இங்குள்ள உறவுகளிடம் இருந்து நீர் பாதுக்காப்பதில் இருந்து யார் போர்வையை இறுக்கப் போட்டுக் கொன்டுள்ளனர் என்பது தெளிவாகும். அவ்வாறு போர்வை போர்ப்பதற்கானா தேவையும் எனக்கு இல்லை. நான் இங்கு எழுதுவது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவுத் தளத்திலயே அதனை எதிர்க்கும் எவரும் எதிர்க்கப் படுவார்கள் அடயாளப் படுத்தப் படுவார்கள்.அதில் உமது கருத்துகளுக்குள் பொதிந்திருந்த குழப்பத்தை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆயுதப் போராட்டத்திற்கும் எதிராக எழுதப்படிருந்த கருத்துக்களை அடயாளப் படுதியதன் விழைவாக எழுந்த குரோத்தைத் தான் களம் எங்கும் இட்டுச் சென்றிருகிறீர் அதனலேயே எல்லோராலும் வெறுக்கப் பட்டும் இருகிறீர்.

தொடர்ந்து செய்யும், நீர் என்றுமே போர்த்தி இருக்கும் போர்வையை எடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றியான விமர்சனங்கள் உண்டு. இந்த விடுதலைப் போராட்டம் சரிக்கும் பிழைக்கும் இடையேதான் ஓடுகிறது. ஏற்றுக் கொள்கிறோம்.

அது எமக்கும் தெரியும். ஆனால் பிழைகள் தக்க தருணத்தில் சுட்டிக்காட்டப்பட்டும் அவற்றைத்திருத்திக்கொள்ள முனையாமல், "நான் பிடிச்ச முயலுக்கு மூண்டுகால்" என்றவாறு நடந்துகொண்டுவிட்டு, பின்னர் 'சுடலைஞானம்' வந்து என்னபயன்? (அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் "உங்கட மூண்டுகால் முயலைவைச்சு நீங்கள் என்னெண்டாலும் செய்துகொள்ளுங்கோ" எண்டு நாங்கள் ஒதுங்குவதில் தவறேதும் இருப்பதாக எமக்குப்படவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிகளை விட துரோகிகளின் நிலைப்பாட்டுக்குள் அவர்கள் காணும் நியாயங்களை..நீக்காத வரை..துரோகிகள் உருவாகிக் கொண்டே இருப்பர். அவர்களின் போக்கில் அவர்களுக்கு போராட்டத்தின் நியாயத்தைக் காட்டுவதையே புதுவையும் கோருகிறார். அவன் படைப்பாளி..யதார்த்தம் பேசவும் கற்றுருக்கிறான்..! நீங்கள் மதித்தாத்தாவை நடத்தும் விதம்...அவருக்கு போராட்டத்தின் மேல் வெறுப்பை உண்டு பண்ணுமே தவிர...நியாயத்தை உணர வற்புறுத்தாது. இவின் அவர் திருந்தவில்லை என்றாலும் கூட...அவரின் மனச்சாட்சி கேட்கும். அதற்குக் கூட சந்தர்ப்பமளிக்காத தனிநபர் வசைபாடல்கள் தான் படைப்பாளிகளின் ஆக்கமோ..??! இவைதான் போராட்டத்தின் கருவூலத்தை உலகறியச் செய்யுமோ...???! :P :idea:

புதுவை ரத்தினதுரைக்கு தகுதி இருக்கின்றது எனென்றால் அவர் போராட்டத்தில் கலந்திருக்கின்றார். யுத்ததின் விளைவுகளைச் சந்திக்க இருக்கின்றவர். அவருக்கு அது பற்றிச் சொல்ல இயலும். ஆனால்........

இப்போ போராட்டத்தின் சாயலை உலகெங்கும் கொண்டு செல்லுங்கள் என்பதே அவரது செய்தி! அதை விட்டு, விட்டு, பன்னாடை மாதிரி எச்சத்தை மட்டும் தூக்கிப் பிடிக்காதீர்கள்! அவர் அந்தத் தவறுகளைப் பற்றி விமர்சிக்கச் சொல்லியா சொல்லியிருக்கின்றார்? அந்த விமர்சனங்கள் எதிரிக்கு சார்பாகப் போகக் கூடாது என்ற சுயபுத்தி இருப்பின் இந்த மாதிரிப் புலம்பல்கள் தேவையில்லை.

மதி பற்றிச் சொன்னீர். மதியின் கருத்துக்களைப் பார்த்தால் தெரியும். அவர் போராட்டம் வேண்டாம், யாரின் காலையாவது நக்கிக் கொண்டு வாழலாம் என்ற கணக்கில் பதில் உரைப்பார். அல்லது புலிகளுக்கு ஏதும் நடந்தால் அதை பெருமையடிப்பவர். இவரது முகங்களைப் படிக்க படித்த மேதாவித்தனம் ஒன்றும் தேவையில்லை.

துரோகிகளுக்குள் நியாயம் தேடும் தேவை யாருக்குமில்லை. யாழ்பாணத்தில் தங்களின் கடப வேலைக்காக சில நாள் வீட்டுக்காவலில் வைத்ததற்காக ராயகரன் மாதிரி புலிக்காச்சலில் தத்துவம் கதைப்பார்கள். அல்லது சின்னச்சின்ன தனிப்பட்ட மனஸ்தாபங்களுக்காக போராட்டத்தை எதிர்க்கும் இவர்களுக்கு பதில் சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அதை விட முக்கிய பிரச்சனை நிறைய இருக்கினற்து. துரோகிகளுக்கு சம அந்தஸ்து கொடுத்து மதிக்க ஏன் துணிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இணைக்கப்பட்ட புதுவையின் பேட்டி

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11261

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கற்பனைக்கு ஏற்ப நாம் பதிலளிக்க முடியாது. வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில்தான் நாமும் கருத்து வைக்கிறம். தமிழ் தேசிய ஆதரவு என்ற போர்வைக்குள் நீங்கள் இருக்கும் வரை ஜால்ரா கூட்டம் இருக்கும் என்பதும் தெரியும்..! அனால் அதற்காக நீங்கள் எல்லோரும் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்று நம்ப நாம் தயார் இல்லை. கருத்துக்கு எவர் கருத்தியல் குரோதமனப்பான்மையோடு தனிநபர்தாக்குதல் மேற்கொண்டாலும்..அது மேற்சொன்னது போல அவசியமான வடிவங்களால் எதிர்க்கப்படும். கருத்தாடலை விட கருத்தாளனை மதிப்பது முதற்கடமை..அதை நாம் செய்வோம்..இங்கிருக்கும் வரை..! :P :idea:

பித்தின் உச்சம். இவரது கருத்துப்படி ஒருவன் உண்மையான தேசிய ஆதரவாளனாகக் காட்டிக் கொள்ள, போராட்டம் பற்றி நாற விமர்சனம் செய்யவேண்டும் என்றும், அல்லது துரோகக் கும்பல்களுக்கு ஜல்ரா போட்டாலும் தான் தேச ஆதரவாளன். அல்லது வெளிப்படையாக போராடடத்துக்கு மட்டும் ஆதவளித்தால் போர்வை போர்த்த தேசிய ஆதரவாளன் என்பதாம்.

நாம் தேசிய ஆதரவாளராகக் காட்டிக் கொள்வதற்கு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. செய்யப்போவதில்லை. ஆனால் போராட்டத்தை சிதைக்கும் அனைத்து கருத்துக்களுக்கும் ஒன்றிணைந்து பதில் கொடுப்போம். அது தான் உம்மால் பொறுக்கமுடியாமல் இருக்கின்றது!

நீர் உம் வரைவிலக்கணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றால் வன்னி வரை சென்று வரவேண்டும். முடியுமா?

ஜல்ராக் கூட்டம் என்கின்றீர்! துரோக கும்பல்களை ஆதரிப்பவருக்கு ஜல்ரா போட வெளிக்கிட்டது நீர்! எல்லாம் காலமடா சாமி! ஆனால் துரோகிகளுக்கு ஜல்ரா போடும் கூட்டமில்ல இது!

நீர் யாரையும் தூக்கிப் பிடிக்கின்றீர் என்பதற்காக மதிப்பளிக்க வேண்டிய தேவையில்லை. கருத்தாடல் என்ற பெயரில் நஞ்சை விதைக்கும் எவருக்கும் இடமில்லை!

[புதுவை ரத்தினதுரைக்கு தகுதி இருக்கின்றது எனென்றால் அவர் போராட்டத்தில் கலந்திருக்கின்றார். யுத்ததின் விளைவுகளைச் சந்திக்க இருக்கின்றவர். அவருக்கு அது பற்றிச் சொல்ல இயலும். ஆனால்........

இப்போ போராட்டத்தின் சாயலை உலகெங்கும் கொண்டு செல்லுங்கள் என்பதே அவரது செய்தி! அதை விட்டு, விட்டு, பன்னாடை மாதிரி எச்சத்தை மட்டும் தூக்கிப் பிடிக்காதீர்கள்! அவர் அந்தத் தவறுகளைப் பற்றி விமர்சிக்கச் சொல்லியா சொல்லியிருக்கின்றார்? அந்த விமர்சனங்கள் எதிரிக்கு சார்பாகப் போகக் கூடாது என்ற சுயபுத்தி இருப்பின் இந்த மாதிரிப் புலம்பல்கள் தேவையில்லை.

மதி பற்றிச் சொன்னீர். மதியின் கருத்துக்களைப் பார்த்தால் தெரியும். அவர் போராட்டம் வேண்டாம், யாரின் காலையாவது நக்கிக் கொண்டு வாழலாம் என்ற கணக்கில் பதில் உரைப்பார். அல்லது புலிகளுக்கு ஏதும் நடந்தால் அதை பெருமையடிப்பவர். இவரது முகங்களைப் படிக்க படித்த மேதாவித்தனம் ஒன்றும் தேவையில்லை. .

தூரோகத்துக்கும் கபடத்துக்கும் நடுவிலே நிக்கிறோம் எண்ட உணர்வை எங்களுக்கு உவர் குருவிகள் ஊட்டுறார்... அதுக்காய் ஒரு வணக்கம் போடவேணும்...! :wink:

விமர்சனங்களை வைப்பவர் என்பவருக்கான தகுதி நிலை என்ன எண்று முதலில் கேட்க்கவேணும்...! உண்மையிலேயே எதிர் குழுவாய் இருந்து தமிழர்களாய் இண்று அங்கீகரிக்கப் பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரனோ, இல்லை செல்வம் அடைக்கலநாதனோ, விமர்சனம் செய்தால் ஏற்றுக்கொள்ளலாம்... ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை... அவர்களுக்கு தெரியும் அதனால் வரும் பாதகங்கள்...! சிங்கள் ஆதிக்கத்துக்கு அடிவருடிகளாய் இருந்து கொண்டு எங்களை பார்த்து மட்டும் ஒருவர் கையை காட்டி குற்றம் சாட்டுகிறார் எண்டால் அவரின் சார்பு நிலையை நாங்கள் குற்றம் சொல்ல கூடாதா...???

இல்லை இங்கு புலிகள் பற்றி மட்டும் குற்றம் காணும் மதியின் பேரன் குருவிக்கு என்ன தகுதி இருக்கிறது எங்களை குற்றம்காண....! மற்றவருக்கு அறிவுர சொல்லும் தகுதி இருப்பதாய் தன்னைப்பற்றி உயர்வாய் எண்ணிக்கொண்டு இருக்கிறார் அதனால் வந்த மாறாட்டம்தான் அது....

குருவிகளுக்கு தெரியவில்லை உலகிலேயே மிக இலவசமாய் வளங்கக்கூடியது ஒண்று இருக்குமானால் அது ஆலோசனையோ, அறிவுரையோதான் என்பது...! மற்வரிடம் இவர் கேட்டு அறிந்த விடயங்கள் பற்றிய ஆலோசனை புலிகளுக்கோ தமிழர்களுக்கோ தேவையும் இல்லை....!

அந்தப் பலத்தை நசுக்கக் கூடிய பலமும் சர்வதேசத்திடம் உண்டு. அதற்கு ஏற்ற வகையில் தான் செயற்பட வேண்டும்..! திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். போராட்டம் எனியும் வீணடிக்கப்பட முடியாது. உயிர்ப்பலிகளும் சொத்திழப்புகளும் துன்பங்களும் எனியும் மக்களால் தாக்கிக் கொள்ளப்பட முடியுமோ..??! :idea:

அப்ப இப்ப புலிகள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுறீர் ? உதை எதினை தரம் கேட்டாச்சு ? பதிலைத் தான் காணன்?

புலிகளுக்கு ஆலோசனை வழங்க ஆக்கள் இருக்கினம். மக்கள் பக்கம் அவைட நிலையைப் பேசுங்கோ..பயனா இருக்கும்..!

இப்ப ஐ.நாப் படை வாறது நல்லமோ கூடாதோ தமிழ் மக்களுக்கு. அது மக்களைப் பாதுகாக்குமோ.. அவர்களின் அரசியல் அபிலாசைக்களைப் பெற உதவுமோ..! கடந்த கால உலக அனுபவங்கள் கற்றுத் தருவதென்ன...அதைப் பற்றிக் கதையுங்கோ...நல்லம்..மக்களுக்கு

.! :idea: :P

மேலே காட்டியுள்ள மேற்கோள்களில் புலிகளை விமர்சிக்கிறார், போராட்டப் பாதையை விமர்சிக்கிறார் பிறகு உமது தீர்வு தான் என்ன என்று கேட்டால், புலிகளின் ஆலோசகர்களைக் கேளுங்கள் என்கிறார்.

இவரின் விமர்சனம் என்பது புலிகளைக்குறை கூறுவது, ஆனால் அதற்கான மாற்றுத் தீர்வு எதுவும் இவரிடம் இல்லை.அப்படி ஆயின் இவரின் உள் நோக்கம் தான் என்ன?

தமிழ்த் தேசிய விடுதலையை முன் நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கும் புலிகளை விமர்சிப்பதால் இவர் பெறும் பயன் என்ன, இவரின் உள் நோக்கம் என்ன?

எந்த வித மாற்றும் இல்லாத இவரிடம் மக்கள் மேல் உண்மயான கரிசனை இருக்கிறதா?போலி வேடம் தரிப்பதுவே இவரின் சாதனையாக இங்கு இருக்கிறது.

உண்மைகளைப் பேசாமல் பொய்மையில் வாழும் ஒருவர் இவர் என்பது இங்கு தெள்ளத் தெளிவாகிறது.இவ்வாறான மோசமான குணாம்சியங்களை உள்ள ஒருவர் மக்கள் பற்றியும் புலிகளைப் பற்றியும் கதைக்க என்ன அக்கறை இருக்கிறது? என்ன அருகதை இருக்கிறது?

இதைச் சொல்லவும் சொல்லுறவருக்கு ஒரு அருகதை வேணும். பொய்கள் எங்கு இருக்கின்றன..என்பதற்கு.. தேசிய ஆதரவுப் போர்வையால் சப்போட் தேடுவதாகச் சொல்லும்..நீங்கள் தேசியம் பற்றிய நிகழ்வுகள் தொடர்பில் உண்மை பேசக் கூடியவர் என்பது இல்லை என்றாகிவிட்டது. நல்லது இந்த விடயத்திலாவது..ஏன் தேசியம் பேசுறீங்கள் என்று சொன்னதுக்கு. சோ..இவருக்கு சப்போட் கிடைக்கனும் என்றால் அவர் தேசியம் பற்றி யதார்த்ததுக்கு மாறகாவும் எழுதுவார். உண்மையில் அவருக்கு தேசியம் எப்படிப் போனால் என்ன..இதுதான் நிலைப்பாடு...! அதாவது யாழில் தன்னைக் கருத்தாளன் என்று மற்றவை சப்போட் பண்ணனும் என்றதுக்காக தேசியப் போர்வை போத்திடுவார். ஆனால் உண்மையான தேசிய அக்கறை இருவருக்கு இல்லை. அதனால் தான் தேசியம் தொடர்பிலான..தேசிய போராட்டம் தொடர்பிலான விமர்சனங்களை ஏற்க மறுப்பது போல நடிக்கிறார்..! தேசியம் தமிழர்களுக்கு என்றாலும்..அதுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற வேண்டின்..தேசிய போராட்ட சக்திகளையும் அதன் தேவைகளையும் உலகம் அங்கீகரித்தாக வேண்டும். இந்த நிலையில் உலகில் நிலவும் மாறுபட்ட பார்வைகளுக்கு ஏற்ப பலவித விமர்சனங்கள்..தேசியம் மற்றும் தேசிய போராட்டம் தொடர்பில் எழத்தான் செய்யும்..அதுவும் ஜனநாயக உலகில்...! இதை மறைச்சிட்டு...சப்போட்டா பேசனும்..அப்பதான் சப்போட் பெருகுமாம். களத்தில 16 பேர்தான் கொஞ்சம் ஒழுங்கா என்றாலும் கருத்தெழுதிறதே. அதுக்க இவருக்கு ஒரு சப்போட் தேவை..! சோ மொத்தத்தில் நாங்கள் கருதியது சரி என்று கூறிவிட்டீர்கள். நீங்கள் தேசிய ஆதரவுப் போர்வைக்குள் இருந்து சப்போட் தேடும் கூட்டம்..! நன்றி..உங்களின் வரவின் நோக்கம் சொன்னதுக்கு. உங்கள் போன்றவர்களுக்காக எங்கள் நேரத்தைச் செலவு செய்து ஆய்வுரீதியா பதில் வைக்கனும் என்ற நினைப்பது முட்டாள் தனம்..என்றதையும் நினைவில் வைச்சிருங்கோ..! :P :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.