Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல்தீர்வுகாண விடு

Featured Replies

பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல் தீர்வுகாண விடுதலைப் புலிகள் முன்வருவார்களா?

[11 - July - 2006] [Font Size - A - A - A]

அரசு கேள்வியெழுப்புகிறது

ஐக்கிய இலங்கைக்குள்ளும், ஒற்றையாட்சியின் கீழும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை எதிர்க்கும் விடுதலைப் புலிகள் `பிரிக்கப்படாத இலங்கைக்குள்' அதிகாரப் பரவலாக்கல் மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருவார்களா எனக் கேள்வியெழுப்பும் கொள்கை திட்டமிடல் அமுல்படுத்தும் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தினக்குரலுக்கு மேலும் தெரிவிக்கையில்;

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வென்ற முன் நிபந்தனையை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும், ஒற்றையாட்சி முறையிலான அரசியலமைப்பின் கீழ் எதுவிதப் பேச்சுவார்த்தையும் இல்லையென்றும் `பூரண சுயாட்சி' முறையிலேயே பிரச்சினைக்கு தீர்வென்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருப்பது அவர்களது நிலைப்பாடாகும்.

இந்தநிலையில், புலிகளிடம் நான் ஒரு கேள்வி கேட்கின்றேன்,

ஐக்கிய இலங்கை ஒற்றையாட்சி என்ற வசனங்களோடு போராடிக் கொண்டிருக்காமல், பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வு காண புலிகள் முன்வருவார்களா?

இக் கேள்விக்கு புலிகள் பதிலளிக்க வேண்டும்.

அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பகிரங்க விவாத மேடையொன்றை அமைத்துள்ளது. அங்கு அனைவரும் தீர்வுகாண தமது நிலைப்பாடுகளை தெரிவிக்கலாம்.

புலிகளும் கருத்துகளை வெளியிடலாம். இதற்காக அரசாங்கத்தின் கதவுகள் எந்த நேரமும் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வைக் காண்பதை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் ஆதரிக்கின்றன. அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசாங்கமும் ஆரம்பிக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றன.

ஆனால், புலிகள் இதனை நிராகரிக்கின்றனர். பேச்சுவார்த்தைகளுக்கு வரமறுக்கின்றனர்.

எனவே, சர்வதேச நாடுகள் புலிகள் மீது அழுத்தத்தை கொடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் நியாயமான தீர்வை காண முன்வருமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல தெரிவித்தார்.

இந்தநிலையில், இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் தேசிய ஆலோசனை குழுக் கூட்டம் இடம் பெறவுள்ளது.

இதில் ஒற்றையாட்சிக்குள் நிர்வாகப் பரவலாக்கம் மூலமே தீர்வு காணப்பட வேண்டுமென்ற யோசனையை ஜே.வி.பி. முன்வைக்கவுள்ளதென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜாதிக ஹெல உறுமயவும் ஒற்றையாட்சி முறையையே வலியுறுத்தி நிற்கின்றது.

இந்தநிலையில், ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஆலோசனைக் குழு இனப்பிரச்சினைத் தீர்வில் பரந்தளவிலான பங்களிப்பைச் செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அத்தோடு, ஐ.தே.கட்சி உறுப்பினர்களை ஜனாதிபதி தம்பக்கம் இழுப்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐ.தே.க., சமாதானத் தீர்வை காண்பதற்காக அரசிற்கு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இவையனைத்தும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வில்லையென்பதையே எடுத்துக் காட்டியுள்ளதென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.thinakkural.com/news/2006/7/11/...ws_page6198.htm

ஐக்கிய இலங்கை' என்று முன்நிபந்தனை

பேச்சுக்கு விதிப்பதை ஏற்கவே முடியாது!

சர்வதேச சமூகத்துக்கு புலிகள் தரப்பில் விளக்கம்

இலங்கைத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு "ஐக்கிய இலங்கைக்குள்' தீர்வு காணப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகம் பேச்சுக்கு முன்னதாக வரையறை விதிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

பேச்சு மூலமான தீர்வு நாட்டின் ஐக்கியத்துக்குள்தான் அடங்க வேண்டும் என்று இவ்விடயத்தில் கட்டுப்பாடு விதிப்பது, இனப்பிரச்சினை நிலவும் ஏனைய நாடுகளில் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகம் வலியுறுத்தும் பொதுவான நடைமுறைகளுக்கு முரணான மாறான போக்காகும்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  • தொடங்கியவர்

பதில் உடனுக்கு உடன் கொடுக்கப்படுகிறது இனி என்ன செய்யாலாம் என்று சொன்ன நல்லது :P

இப்ப வருவினம் சிலர் கோவனம் கட்டி கொண்டு ஊதி போட்டு கட்டாம விட்ட பலூன் மாதிரி :wink: :P

பதில் உடனுக்கு உடன் கொடுக்கப்படுகிறது இனி என்ன செய்யாலாம் என்று சொன்ன நல்லது :P

இப்ப வருவினம் சிலர் கோவனம் கட்டி கொண்டு ஊதி போட்டு கட்டாம விட்ட பலூன் மாதிரி :wink: :P

இதைத்தான் எத்தினை வருசமா மாறிமாறி சொல்லிட்டு இருக்கிறியள்..! ஏதாச்சும் உருப்படியாச் செய்யுங்கோ. அப்புறம் தமிழர் தேசத்தில தமிழர் இருக்க மாட்டினம்..! :P :idea:

கொழும்பு 4 இலட்சம் இந்தியா 1.5 இலட்சம்..கனடா 4 இலட்சம்..பிரித்தானியா 2 இலட்சம்.. பிரான்ஸ் - ஒரு இலட்சம்... ஜேர்மனி - ஒரு இலட்சம்.. அவுஸ்திரேலியா - 50 ஆயிரம்.. இப்படிக் கூட்டிக் கழிச்சா இப்பவே...15 இலட்சம்...நாடு கடந்திட்டு..! இன்னும் ஒரு 15 இலட்சம் தான் மிச்சம்..தமிழர் தேசத்தில..!

உரிமை கேட்ட 60,000 ஆயிரம் மக்களினதும் 19,000 போராளிகளினதும் உயிர் ஊதிவிட்டதுதானோ..??! :roll: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுவீஸ்!!

பறக்கத் தொடங்கினாப் பிறகு, கனக்க எச்சிலிலை எல்லாம் வழித்தடிக்கிறீர் போல் இருக்கிறது!! அளவாக வழித்தடியும்!!! பின் வழிக்கவும் .... இருக்காது!!!

என்ன உண்மையைச் சொன்னா துரோகி ஆக்கிடுவியளோ..! யதார்த்தப் புறநிலைக்கு வெளியில் நின்று போராட்டம் என்ன எதிலும் வெற்றி பெற முடியாது என்பது போராட்டத்தை நடத்திச் செல்லுறவைக்கே தெரியும். அதுதான் அண்மையில் சொல்லப்பட்டது..இனியும் போராட்டத்தை நீட்டிச் செல்ல முடியாது..தீர்வுகள் விரைந்து எட்டப்படனும் என்று..நினைவிருக்கோ..! இருந்தால் சரி..! :P :idea:

இறுதித் தீர்வுக்கு நிபுணர் குழு என்பது ஏமாற்று வேலை: அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு சாடல்

[செவ்வாய்க்கிழமை, 11 யூலை 2006, 17:29 ஈழம்] [ச.விமலராஜா]

இலங்கை இனப்பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காண சிறிலங்கா அரசாங்கமானது நிபுணர் குழுவை அமைத்திருப்பது ஒரு ஏமாற்று வேலை- இழுத்தடிப்பு வேலை என்று தமிழீழத்தின் மூத்த ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு சாடியுள்ளார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (09.07.06) ஒளிபரப்பாகிய நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் தெரிவித்த கருத்துகளின் எழுத்து வடிவம்:

இந்தியாவும் அமெரிக்காவும் ஒரேவிதமான கருத்தோட்டத்தை இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக கொண்டுள்ளன. இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் இனப்பிரச்சனைனயில் ஒருங்கிசைவான திட்டத்தைக் கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளையும் கொழும்பில் உள்ள அரசாங்கத்தையும் ஒரே மாதிரியாக அரவணைப்பதன் மூலம் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பு பற்றி மேற்குலகம், இந்தியாவின் அனுசரணையுடன் சிந்தித்திருக்கிறது. ஆனால் ஐரோப்பியத் தடை மூலம் அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்துவிட்டது.

ஐரோப்பியத் தடையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதும் தமிழ் மக்களின் மீதும் ஒடுக்குமுறைகளை ஏவிவிடுவதற்கு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பமாக மகிந்த ராஜபக்ச கருதுகிறார். இந்நிலைமையில் நிலைமைகளை அடக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவையும் அமெரிக்காவையும் சார்ந்துள்ளன.

அமெரிக்காவினால் கையாளப்பட்ட முறைக்கு பதிலாக இந்தியா மூலம் ராஜபக்ச அரசாங்கத்தை தணிக்க வேண்டிய சிந்தனையோட்டம்தான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ராஜபக்ச அரசாங்கமானது தீவிரமான இராணுவ மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் போது அதற்குப் பதிலாக விடுதலைப் புலிகள் அமைதிகாத்துக் கொண்டிருக்க முடியாது. அதற்கான பிரதிபலிப்புகள் அரசியலில் வெளிப்பட யுத்தத்தின் விளிம்பு நிலைக்கு அது கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் ராஜபக்ச அரசாங்கத்தைத்தான் தணிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேற்குலகின் அழுத்தங்களுக்கு பணியாத ராஜபக்சவை அருகிலிருக்கும் இந்தியாவின் அழுத்தங்களுடாக பணிய வைக்கும் ஒரு இராஜதந்திர அணுகுமுறை கையாளப்படுகிறது.

இப்போது சிறிலங்கா அரசாங்கம் தீர்வுத் திட்டத்துக்கு தயாராக இருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. இலங்கை விடயத்தில் இந்தியா தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்கா அதற்கு அனுசரணையாக நடப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சாதாரண சமஸ்டி முறையை விடவும் அதாவது கொன்படரேசன் என்ற சொற்றொடரை முன்வைக்கின்றனர். கூட்டாட்சியின் உரிமைகள் தமிழ் மக்களுக்கு உண்டு என்கிற கருத்தை அமெரிக்கா இப்போது முன்வைக்கும் அளவுக்கு நிலைமையை தணிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்தியாவின் சமஸ்டியானது அரை சமஸ்டி முறை என்போம். இந்தியாவின் சமஸ்டியை விடவும் அமெரிக்காவின் சமஸ்டியானது கொன்பெடரேசனானது. இந்த வார்த்தையை அரசியல் ரீதியாக சிறிலங்கா அரசாங்கத்தை வெருட்ட மேற்குலகம் பயன்படுத்துகிறது. இந்த நிலையில் இந்தியாவின் வற்புறுத்தலை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்காது. ஏனெனில் இந்தியாவை விட அமெரிக்காவின் வற்புறுத்தல் அதாவது அது முன்வைக்கும் தீர்வு பெரிதாக உள்ளது.

ஆகவே இந்தியாவை அனுசரித்துப் போகவே சிறிலங்கா அரசாங்கம் விரும்பும். இது யுத்தத்தைத் தணிக்கும் நிலைமையை உருவாக்கும். இந்திய- அமெரிக்க அரசாங்கங்களின் பிரதான நோக்கமும் அதுவே.

இலங்கையின் இனப்பிரச்சனையானது சமாதான வழியில் தீர்க்கப்படக் கூடியது என்று ஒரு பைத்தியக்காரனைத் தவிர வேறு எவனும் சொல்லமாட்டார்கள். பேச்சுவார்த்தை மூலமாக இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்பது ஒரு குழந்தைப் பிள்ளைக்கும் கூட தெரியும்.

இப்போது ராஜபக்ச அரசாங்கமானது தீர்வு காண்பதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்திருப்பதாகவும் பல கட்சி அனுசரணைக் குழு ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும் கூறுகிறது. இதில் ஒரு முக்கியமான நாடகம் ஒன்று நிகழ்கிறது. இப்போது இந்தப் பிரச்சனையை ஒரு நிபுணத்துவ பிரச்சனையாக்க பார்க்கிறார்கள். நிபுணர் குழு என்று சுத்த ஏமாற்று வேலை. ஏனெனில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய்வதற்கு நிபுணத்துவ மூளை தேவை இல்லை. இது நிபுணத்துவ பிரச்சனை அல்ல. கொள்கைப் பிரச்சனை.

ராஜபக்ச அரசாங்கமானது ஒற்றையாட்சிக் கோட்பாட்டை முன்வைத்த பின்னர் இப்போது தீர்வைப் பற்றி கதைப்பது என்றால் அது கொள்கை மாற்றத்துக்குத்தான் போக வேண்டும். அவர் தனது கொள்கையை முன்வைக்க வேண்டும். அதாவது தான் ஒற்றையாட்சி அல்லாத ஒரு தீர்வுத் திட்டத்துக்கு வருகிறேன் என்று அதனை முதன்மைப்படுத்த வேண்டும். எனவே இது நிபுணத்துவப் பிரச்சனை அல்ல. கொள்கைப் பிரச்சனை. கொள்கை பிரச்சனையை முன்வைப்பது அரசியல் தலைவர்களின் பணி. நிபுணத்துவ பிரச்சனை என்பது உத்தியோகத்தர்களின் பணி. சாதாரணமான உத்தியோகத்தர்களை கூட்டிக் கொண்டு ஆலாபரணையைக் காட்டிக் கொண்டு- பேச்சுவார்த்தை போன்றதொரு தோரணையை தீர்வுக்குத் தயார் என்ற ஒரு நாடகத்தை அவர்களால் அரங்கேற்ற முடிகிறது.

ஒற்றையாட்சியின் கீழான தீர்வும் இந்தியா அல்லது அமெரிக்கா முன்வைக்கின்ற தீர்வும் எந்த புள்ளியிலும் சந்திக்கவே முடியாது.

நிபுணர்களின் கைக்கு பிரச்சனையை மாற்றிவிட்டால் அவர்கள் நிபுணத்துவ பாணியில் ஆராய்வார்கள். தங்கள் மூளையை அதனுள் செலுத்திவிடுவர். இறுதியில் நிபுணத்துவ பயிற்சி பட்டறையாகவே அது இருக்குமே தவிர தீர்வு என்று ஏதும் வரப்போவதில்லை. நிபுணத்துவ மூளைப் பயிற்சி என்பது ஒருவருடத்துக்கு இழுத்துக் கொண்டுதான் போகும். நிபுணர்கள் களத்துக்கு வந்த உடன் தாங்கள் நிபுணர்கள் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு வந்துவிடுகிறது. ஆகவே தங்களது நிபுணத்துவமான கருத்துகளை எல்லாம்- வார்த்தை ஜாலங்களை எல்லாவற்றையும் மாறி, மாறி பிரயோகிப்பார்கள். இது மூளைப் பயிற்சிக்கான பட்டறையே தவிர இந்தப் பட்டறையிலிருந்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதற்கான வேலையே தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் என்பது அரசியலை கேலி செய்வதாகும். ஒற்றையாட்சியின் கீழ் நிர்வாகப் பரவலாக்கலைத்தான் செய்ய முடியுமே தவிர அரசியல் அதிகாரப் பரவலாக்கலை செய்ய முடியாது. ஒற்றையாட்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செயலும் நிர்வாக அளவிலான செயலே.

தமிழ் மக்களை விடவும் சிறிலங்கா அரசாங்கத்தை அனுசரித்துப் போவதன் மூலமே இலங்கைத் தீவின் நலன்களை அனுபவிக்க வாய்ப்பாக இருக்கும் என்று மேற்குலகம் கருதுகின்றது. அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் நீண்ட பாரம்பரியத்துடனும் நீண்ட கலாச்சார படுக்கையுடனும் ஒருபோதும் எதிரிகளிடம் சரணடையாத பாரம்பரியத்தைக் கொண்ட மக்கள். இதை பண்டாரநாயக்க ஒருமுறை கூறியுள்ளார். தமிழ் மக்களிடம் இருக்கின்ற கலாச்சார தளம் இருக்கிறதே அது பாரதூரமான வலுவைக் கொண்டது. மிகவும் வளர்ச்சியடைந்த மிகவும் உறுதியடைந்த தேசியத் தனித்துவத்திற்கான அடித்தளம் தமிழ் மக்களிடத்தில் இருக்கிறது. அதை ஒருபோதும் கரைக்க முடியாது. அது உணர்ச்சிவசமான தளம் அல்ல. உணர்வுப்பூர்வமான தளம். இதை சிங்கள மேற்கத்திய ஆய்வாளர்களும் ஏன் இந்திய அரசியல் நிபுணர்களும் புரிந்துகொள்ள தவறி விடுகின்றனர். இதனைப் புறக்கணித்துவிட்டு நடைபெறுகிற எந்த ஒரு அரசியல் தீர்மானங்களும் 100 வீதம் தோல்வியைத்தான் தழுவும்.

இந்திய சந்தைக்கான சீனாவின் இராணுவ முகாமாக இலங்கை

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவு என்பது புதிய விடயம் அல்ல. தற்போதைய சீனத் தலைவர் பதவிக்கு வந்தபோது, பூனை கறுப்போ வெள்ளையோ அது எலி பிடித்தால் போதும் என்றார். "சீனாவை உலகின் முதல் தர வல்லரசாக்க வேண்டுமெனில் சீனாவுக்கு இப்போது தேவை சமாதானம். சீனா ஏதாவது ஒன்றுடன் சண்டை பிடிக்குமேயானால் சமாதான திட்டங்கள் இல்லாமல் பொருளாதாரம் சீர்குலைந்து போய்விடும். எனவே சீனா வளர சமாதானம் அடிப்படையானது என்றும் கூறினார்.

அயல் நாடுகளுடன் நல்லுறவு, சமாதானக் கொடியின் கீழ் சீன அரசியல் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி- இராணுவத்தை தொழில்களை நவீனமயாக்குதல் என்று தனது ஆட்சியை அவர் தொடங்கினார். அவர் கூறியதன் அடிப்படையில்தான் இந்தியாவுடனான சமாதான நடவடிக்கைகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

சீனாவுக்கு இந்தியாவுடன் உள்ள வர்த்தகம் பற்றி சில கருத்துகள் கூறப்படுகின்றன. ஆனால் அரசியல் இராணுவ ரீதியாக வினோதமான ஒரு இடத்தில் போய்முடியக் கூடும்.

எப்படி எனில் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் இருதரப்பு வர்த்தகத்தில் இந்தியாவுக்குக் கிடைக்கும் வருமானம்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

சீனாவுக்கு இந்தியா விற்கின்ற பண்டங்கள் எல்லாம் உற்பத்திப் பண்டங்கள் அல்ல. மாறாக முற்றிலும் மூலப் பொருட்கள். இந்தியாவின் பிரதானமான வர்த்தக நடவடிக்கை என்பது முற்றிலும் மூலப் பொருட்களை மையமாகக் கொண்டவை.

சீனாவின் வர்த்தக நடவடிக்கை என்பது முற்றிலுமாக உற்பத்திப் பண்டங்களை மையமாகக் கொண்டவை. இருதரப்பு வர்த்தகத்தை காசால் பார்க்கும் போது பெரிதாகத் தோன்றும். ஆனால் பொருளாதார ரீதியாக சீனாவுக்கு மிகப் பெரிய இலாபம் உண்டு. இதன் மூலம் சீனாவின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க முடியும்.

முன்பு நாடுகளைக் கைப்பற்றி மூலவளங்களைப் பெற்றதைப் போல் அல்லாமல் இப்போது மூலவளங்களைப் பெறுகின்ற தந்திரோபாயத்தில் சீனா முன்னுக்கு நிற்கிறது. இந்திய அரசுக்கு இது விளங்காத விடயம் அல்ல. அரசாங்கத்துக்கு இருக்கின்ற நெருக்கடியில் திறைசேரியை நிரப்ப வேண்டும். மூலப் பொருளையாவது விற்றாவது திறைசேரியை நிரப்ப வேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு உள்ளது. தவிர்க்க முடியாதது. இந்த நிலையில் இந்திய விமானங்களை சீனாவில் பறக்க விடுவதன் மூலம் நற்செய்தி ஒன்று இருப்பதாக இந்திய மக்களுக்கு காட்டப்படுகிறது. சீனா விட்டுக்கொடுப்பதான தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

ஆனால் இது சீனாவின் சந்தையை இந்தியாவில் மிகவும் அகலமாக்கிவிடும். இந்த வகையில்தான் அண்மைய கணவாய் திறப்பும். இது மோசமான இராணுவ விளைவுகளை உருவாக்கி விடும் என்று இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு யுத்தம் நடக்குமாக இருந்தால் இந்தப் பாதைக்கூடாக விரைவாக தனது இராணுவத்தை சீனா நகர்த்திவிடும் என்றும் புற்றீசல்கள் போல் இந்தியாவுக்குள் பரவ முடியும் என்றும் கூறுகின்றனர்.

சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் மூல வளங்களோ சந்தையோ அவர்களுக்கு பிரதானம் அல்ல. மாறாக இலங்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்திய சந்தையைக் கைப்பற்றுவதுதான் பிரதான நோக்கம். பிரம்மாண்டமான இந்தியாவுக்குள் உள்ள சந்தையைப் பிடிக்க இலங்கை ஒரு களமாக உள்ளது.

சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கை ஒரு இராணுவ முகாம். அதற்கு அவர்கள் செலவிடத் தயாராக உள்ளனர். இலங்கையில் சீனா செலவிட்டுள்ள தொகையை விட இந்தியச் சந்தையைக் கைப்பற்றுவதன் மூலம் பல மடங்கு வருமானத்தை இந்தியாவில் பெற முடியும். அப்படியெனில் இலங்கையில் அவர்கள் செய்யும் செலவானது இந்தியாவில் வருமானத்தைப் பெறுவதற்கான முதலீடுதான். எனவே வெறும் அர்த்தத்தில் பார்த்தால் செலவீட்டுத் தொகையாகவும் நட்டமாகவும்கூட தோன்றலாம். ஆனால் அது முதலீடுதான். இப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சனையை வாசிங்டன், புதுடில்லி, சென்னை, கொழும்பு என பார்த்து கிளிநொச்சி என விரிவடைந்துள்ளது. இவற்றுக்கு ஊடாக போடப்படுகிற ஒரு நேர்க்கோட்டின் கீழ் இலங்கையின் அரசியல் நிலைமைகளை நாம் பார்க்க வேண்டும். இதில் ஒரு புள்ளி சென்னையைப் பற்றியது.

சென்னைக்கு என்று தனிப்பட்ட நலன்களும் தேவைகளும் உண்டு. அதேபோல் புதுடில்லிக்கு என்று தனிப்பட்ட நலன்களும் தேவைகளும் உண்டு. இந்த இரண்டும் சிலவேளைகளில் சந்திக்கும். சந்திக்காமலும் விடும். ஆனால் பொதுவாக புதுடில்லி சென்னையுடன் அனுசரித்து ஒரு தீர்வை எடுப்பதையே விரும்புகிறது.

வாசிங்டன், புதுடில்லி, சென்னை மூன்றும் ஒரு பொதுவான முடிவுக்கு வந்துள்ளது. ஒன்றையொன்று பிரித்துப் பார்க்க முடியாது. சென்னையைச் சார்ந்திருக்கிற ஊடகவியலாளர்கள் தூண்டப்படுகிறார்கள். அவர்கள் தூண்டப்படும் போது எல்லைக்கு மீறிச் செயற்படுகின்றனர்.

புலிகளை அமர்த்தி ஒரு தீர்வுக்கு வர வேண்டும் என்று புதுடில்லி நினைக்கிறது.

உதாரணத்துக்கு ஒரு சமஸ்டி ரீதியான தீர்வு ஏற்பட்டு புலிகளிடம் கைகளில் முழு அதிகாரங்கள் போய் அது புலிகளின் அரசாங்கமாக இருந்துவிட்டால் அது நாடைப் பிரிப்பதற்கான இன்னொரு கட்டத்துக்குப் போய்விட முடியும் என்று புதுடில்லி நினைக்கிறது.

அப்படி அல்லாத ஒரு சாம்பாரை உருவாக்குவதில் புதுடில்லிக்கு அக்கறை இருக்கிறது.

இங்கு ஒரு தேசிய சக்தி வந்துவிடக் கூடாது என்பதுதான் புதுடில்லியின் ஆழமான பிரச்சனை.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனை இல்லையெனில் கொழும்பை புதுடில்லி கையாள முடியாது. தமிழ் மக்களின் பிரச்சனையானது புதுடில்லிக்கு ஒரு வரப்பிரசாதம். இதை வைத்துக் கொண்டு அதே நேரத்தில் தமிழ் மக்களின் பிரச்சனையானது ஒரு உறுதியடைந்த தேசியத் தன்மையை அடையக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனர்.

இந்த இரண்டும் கெட்டான் நிலை புதுடில்லியிடம் இருக்கிறது. இந்த நிலையில்தான் எல்லாவற்றையும் துண்டு துண்டாக சாம்பாராகப் பார்க்கிறார்கள்.

ஆனால் இலங்கையின் வரலாறு- தமிழ் மக்களின் வரலாறு எப்போதும் தேசியத்தின் பக்கமே நிற்கிறது. அதற்கான பலமான பண்பாட்டு- கலாசாரத் தனித்துவ தளம் எம்மிடம் உண்டு. அதை ஒருவராலும் கரைத்துவிட முடியாது.

தமிழீழத் தமிழர்களின் சராசரி மனநிலையை உதாரணமாகச் சொல்லலாம். எவரேனும் புத்தி சொன்னால் செவிமடுப்பார்கள். ஆனால் தான் நினைத்ததையே ஒவ்வொரு ஈழத் தமிழரும் செய்வர். அது ஒரு வகையான தனித்துவமானது.

அப்படியே புத்தி கேட்டாலும் அது தனக்கு சாதகமோ பாதகமோ உணர்ந்து தனக்கு ஏற்பானவற்றை சிந்திக்கும் கலாசார வளர்ச்சி தமிழனிடத்தில் உண்டு. இலகுவில் தங்களைக் கூட்டமாகக் கரைத்துக் கொள்ளமாட்டார்கள் என்றார் மு. திருநாவுக்கரசு.

http://www.eelampage.com/?cn=27459

//தமிழ் மக்களின் பிரச்சனை இல்லையெனில் கொழும்பை புதுடில்லி கையாள முடியாது. தமிழ் மக்களின் பிரச்சனையானது புதுடில்லிக்கு ஒரு வரப்பிரசாதம்//

80 களிலிருந்து... இன்று வரை... உதை வைச்சு தானே கண்ணாம்பூச்சி விளையாடி வருகிறது..இந்தியா....... மொத்ததிலை ஒண்ணு தெரியது இந்தியாவுக்கு தமிழரின் பிரச்சனை தீருவது எள்ளவும் விருப்பமில்லை

இந்தியவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களில் பழமைவாத சிந்தனையோடு இருப்பவர்களும் றோ வில் இருப்பவர்களும் ஈழத்தமிழர் பிரச்சனையை இழுத்தடித்து குளப்பி குளிர்காயிறதில் தான் கவனமா இருக்கினம். மண்டபம் அகதி முகாமில் எப்படி பிள்ளைபிடிக்கிறது என்று திட்டம் தீட்டிறது, கருணாவையும் பரந்தன் ராஜன் வரதர் போன்றவர்களை மிண்டு கொடுக்கிறது, புலிகள் வேறு மக்கள் வேறு என்று அங்கலாய்கிறதிலான் அவையின்ரை கவனமும் திறமையும் அங்காலை 7 புகையிரத நிலையத்தில் குண்டு வைக்கிறாங்கள் வடக்கிலை. இனியாவது உவைக்கு உண்மை உறைக்காதா?

எப்பதான் விழித்துக் கொள்ளப்போயினம் இந்தியா எதிர்கொள்கிற நிஜ ஆபத்துக்கள் பற்றி கண்காணித்து இந்தியாவை சீனா மாதிரி வெளிநாட்டு முதலீடுகள் செய்வதற்கு ஒரு பாதுகாப்பான பிரதேசமாக்கப் போயினம்?

// 80 களிலிருந்து... இன்று வரை... உதை வைச்சு தானே கண்ணாம்பூச்சி விளையாடி வருகிறது..இந்தியா....... மொத்ததிலை ஒண்ணு தெரியது இந்தியாவுக்கு தமிழரின் பிரச்சனை தீருவது எள்ளவும் விருப்பமில்லை //

இதுதான் எப்பவும் அடுத்த வீட்டுக்குள்ளே மூக்கை நுழைக்கக் கூடாது என்று சொல்லுறது. இப்ப தன்ரை வீட்டுக்கையே குண்டு வெடிச்சிருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.