Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா அரசினை அச்சங்கொள்ள வைத்துள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் ! எதிர்பிரச்சாரங்களில் சிங்களக் கைக்கூலிகள் !

Featured Replies

சிறிலங்கா அரசினை அச்சங்கொள்ள வைத்துள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் ! எதிர்பிரச்சாரங்களில் சிங்களக் கைக்கூலிகள் !

http://win.yarl.com/?p=16744

தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துச் செய்த சிங்கள அரசானது முள்ளிவாய்க்கால்

பெருவெளியில் தமிழினத்தை மட்டுமல்ல தமிழீழ இலட்சியத்தினையும் புதைகுழியில்

போட்டுப் புதைத்துவிட்டதாக கனவு கண்டுகொண்டிருக்கும் இவ்வேளை உலகத்

தமிழர்களின் பங்களிப்புடன் உருவாகி வரும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு

எதிரான தீவீர செயற்பாடுகளில்ஈடுபடத் தொடங்கியுள்ளது.

கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள பத்திரிகையொன்றின் சனிக்கிழமைப்

பதிப்பில் தமிழீழ சுதந்திர சாசனத்துக்கு எதிரான கருத்துக்களை விதைத்து

வருவதோடு புலத்து புலிகள் சிங்கள தேசத்துக்கு எதிராக தமிழீழ சுதந்திர

சாசனத்தினை உருவாக்கி வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தனது கட்டுப்பாட்டுக்குள்

வைத்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம் கேபி குழுவினரின் தமிழீழ சுதந்திர

சாசனம் எனும் விசமப்பிரச்சாரங்களை புலம்பெயர் தமிழர்களை நோக்கி தமிழ்த்

தேசியத்தின் பெயரால் விசமப் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளதோடு

சிறிலங்காவின் இறையாண்மைக்கு தமிழீழ சுதந்திர சாசனம் எதிரானதென்ற சர்வதேச

பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான

கருத்துக்களை பரப்புவதற்க என Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் தனது

கைககூலிகளை களமிறக்கியுள்ள சிங்கள அரசானது தற்போது தமிழீழ சுதந்திர

சாசனத்தினை இலக்கு வைத்து விசமத்தனமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு

வருகின்றது.

சிங்கள அரசினது அவர்களது கைக்கூலிகளினதும் இத்தகைய சதிவலைப்பின்னல்களை

தகர்த்தெறிந்து மலர இருக்கும் தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை

உலகத்தமிழர்கள் வரைந்து அதனை உலகின் முன் பெரும் வரலாற்று முரறைவாக

வெளிப்படுத்துவார்கள் என தமிழின உணர்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

May 18 திகதி தமிழீழ சுதந்திர சாசனம் நாடுகடந்த அரசால் பென்சில் வேனியாவில் வைத்து  வெளிவிடப்பட போகிறது.  அப்படி ஒன்றை வெளிநாட்டில் வெளிவிடுவது கருத்து சுதந்திரம். இதில் நாடு கடந்த அரசு தனது ஆலோசகர்களுடந் சேர்ந்துதான் செயல் படுகிறது. 

 

நாடுகடந்த அரசு இந்த ஆண்டு ஆபிரகாம் லிங்கன் "அடிமைகள் விடுதலை சாதனத்தை" வெளியிட்ட 150 ஆண்டு நிறைவு விழா ஆண்டாக பெருமை பேசுகிறது. 1863 ஜனவரி 1 இல் அமெரிக்க கறுப்படிமைகள்  லிங்கனால்  இந்த பட்டயத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார்கள். இரண்டு ஆண்டுகளின் பின்னர் 13ம் திருத்தத்தை கொண்டு வந்து, மானிலங்கள் அடிமைகளை வைத்திருப்பது குற்றம் என்றாக்கப்பட்டது. பின்னர் வந்த 15ம் திருத்தம் கறுப்பு ஆண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. (அண்மைய லிங்கன் படத்தை பார்த்தவர் இதை எளிதில் விளங்கியும் கொள்கிறாரகள்.) எனவே இந்த மே மாதத்தில் இதை எப்படியாவது நிறைவேற்றித்தான் ஆவது என்று கங்கணம் கட்டிகொண்டிருக்கிறார்கள் நடுகடந்த அரசின் அதிகாரிகள்.

 

Thaddeus Stevenச் என்ற குடியரசுக்கட்சியின் மக்கள் அவை பிரதிநிதிதான் இந்த வரைபை தாயாரிக்கவும், 13-15 திருந்தங்களை தாயாரிக்கவும்  காரண கர்த்தாவானவர். இதனால் அவரின் அடையாளமும் இந்த சாசன வெளியீட்டின் போது சேர்த்துக்கொள்ளப்படும்.  எனவே சாசனம் அவரின் நகரில் வைத்து வெளிவிடப்படும்.

 

இதை முதலில் கேள்விப்பட்ட பொழுது, புலம் பெயர் இயக்கங்களாள் இது வரையில் கிழிக்கப்படாதது எதை இந்த புதிய சாசனம் கிழித்துவிடப் போகிறது என்ற கேள்விதான் மனத்தில் எழுந்தது.  ஆனால் இப்போது அவற்றையெல்லாம் பட்டியல் போட்டுவிடமுடியாது என்பது தெளிவாக இருக்கிறது. பல நன்மைகள் வெளிவர இருந்தாலும் அரசியல் ஆராச்சியாளர்கள் அல்லாத எமக்கு  அவை இப்போது தொடக்கமே சுவரசியமானவையாகவும் இருந்து விடப் போகிறது என்று கூறவும் முடியாது. ஆனால் "சுதந்திர சாசன வெளியீடு" என்ற ஒரு சொல்லு மட்டுமே இலங்கையின் அரசர் அரசாங்கத்தில்  கிளறிவிடப்பப்போகிற அவலங்களை நினைக்கும் போது இப்போதே அது சுவையாக இருக்கிறது. 

 

இலங்கை, நிறைவேற்றப்பட்ட  ஐ.நா மனித உரிமைகள் சபையின் கடைசிப் பிரேரணையால் சில காரியங்களை நிறைவேற்றும் படி கேடக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அவற்றில் எதையும் செய்யாமல், எல்லாமே செய்துமுடித்துவிட்டதாக உலகம் முழுவதையும் ஏமாற்ற அவசரம்  அவசரமாக பல யுதிக்களை உருவாக்கி பல கூலிகளை அவற்றை சோடிக்கவும் நியமித்திருக்கிறது. மேலும் கருணா புதிதாக வெளிவிட போவதாக அறிவித்திருக்கும் "புலிகளுக்கு உதவிய பயங்கரவாத நாடுகளின் பட்டியல்" கூட இந்த சமாளிப்புக்களுக்குத்தான் என்றதை எல்லோரும் ஏற்கனவே அவதானித்தும் விட்டார்கள். அந்த அவலத்திற்குள் இலங்கை மாட்டித் திண்டாடிக்கொண்டிருக்கும் போது தமிழக மாணவர் இலங்கை வீரர்களை தமிழ் நாட்டில் விளையாடவிடாமல் தடுத்துவிட்டார்கள். "தமிழ் நாடு என்றால் என்ன?  A bunch of Clowns"  என்று நாட்டுப்புறத்து சிங்களவருக்கு வீராப்பு பேசி பதவிக்கு வந்த அரசர் கூட்டத்திற்கு இது இன்னொரு அவசரமவசரமாக இலங்கையில் மூடி மறைத்துவிட வேண்டிய அவமானம் ஒன்று. இதற்கு அவர்கள் தலையைச் சொறிந்து கொண்டிருக்கும் போதுதான் இந்த புதிய "புறக்கிள மேசன்...    டிக்கிளறேசன் .. ஃபீடொம் சாட்டர்" எல்லாம் புதிதாக வந்திறங்கியிருக்கிறது. 

 

J.R.இன் 6ம் திருத்ததின் படி இலங்கையில் எவரும் சுதந்திரம் என்ற சொல்லை உச்சரிக்க கூடாது. TNAயும் அதை யாரும் நாயகத்தன்னும் அடித்தாலும் அது இன்னமும் இணக்க அரசியல் மட்டும்தான் பேசுவதற்கு இந்த 6ம் திருத்தமும் ஒரு காரணம். 6ம் திருத்ததின்படி TNA இலங்கையிடம் ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் அடிமைத்துவத்தை தவிர வேறு எதுவும் பேசக்கூடாது.  அண்மையில், கஜேந்திரன் ஐரோப்பா   வந்திருந்தபோதும் இந்த சுதந்திரம், தமிழ் ஈழம் என்ற சொற்களை கொஞ்சம் கவனமாகத்தான் செலவழித்திருந்தார்.  ஏன் எனில் அதை வெளிநாடுகளில் பிரயோகித்தாலும் கூட அந்த 6ம் திருத்ததிற்கு அவர்கள் மீது பாயத்தக்க வலு இருக்கிறது. ஆனல் இப்பொது நாடுகடந்த அரசு இந்த 6ம் திருத்ததிற்கு சவாலாக தனது சுதந்திர சாசனத்தை வெளிவிடப்போகிறது. இந்த சாசனம், புலிகள் ஆயுதத்தால் கேட்டதை அகிம்சையால் கேட்கப்போகிறது. இதில் தான் இலங்கை ஊடகங்களும், மக்களும் பகிடிச் செந்நாயிற்கும், உண்மை செந்நாயிற்கும் பேதம் விளங்காமல் தவிக்கப் போகிறார்கள். 

 

போர் முடிந்த உடனேயே அரசரின் அரசு, கூட்டமைப்புடன் பேச்சுவார்தைகளை தொடங்க மறுத்தகாரணம், புலிகள் ஆயுதத்தால் கேட்டதை, கூட்டமைப்பும், புலம் பெயர் தமிழர்களுடன் சேர்ந்து  பேச்சுவார்த்தையில் கேட்கிறார்கள் என்று கூறிக்கொண்டேயாகும். சிங்கள பத்திரிகைகள், மானம் இல்லாமல், படிக்காத முட்டாள்கள் மாதிரி, அரசின் கடைக்கண் பார்வையை பெறுவதற்காக அந்த பொய் வதந்திக் கதையானா "செந்நாய் , செந்நாய்"  கூக்குரலை  பிரச்சாரம் செய்தார்கள். உண்மையை அறிந்து கொள்ளும் மன நிலையில் இருக்காத சிங்கள மக்களும் அதை 100% வீதம் நம்பினார்கள்.  அவர்களில் யாரும் 6ம் திருத்தம் இருக்கும் போது எப்படி கூட்டமைப்பு தனிநாடு கேட்கிறது என்று அரசை தட்டிக்கேட்க விரும்பவில்லை. ஆனால் இன்று உண்மையான செந்நாய் வெளியே வந்திருக்கிறது. அரசு பாரிய பிரச்சாரத்தில் இறங்கினால்த்தான் சிங்கள  மக்களுக்கு அந்த மாயைக்கும் இந்த உண்மைக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை உணரவைக்க முடியும். அதனால்தான் அரசு இப்போதே தனது கைக்கூலி ஊடங்கங்களை அழைத்து மக்களை உசுப்பேத்த தொடங்கும் படி ஆணையிட்டிருக்கிறது. இது நல்ல நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த துவேச பிரச்சரம் தொடங்க இருக்கும் நேரத்தில்தான் இலங்கை, LLRC அறிக்கையை நிறை வேற்றுகிறதா என்று ஐ.நா. மனித உரிமைகள் சபை கண்காணிக்கவும் போகிறது. 

 

 

Edited by மல்லையூரான்

நாடு கடந்த அரசு இதை மட்டும் வைத்து பிழைப்பு நடத்துவதை விட்டுவிட்டு, செய்ய வேண்டிய நூற்றுக்கணக்கான வேலைகளையும் இழுத்தடிக்காமல்  செய்வதே தமிழ் இனத்துக்குச் செய்யும் ஆகக் குறைந்த உதவியாக இருக்கும்.

சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு: மக்களின் கருத்தறியும் கேள்விக் கொத்து!

0bcfb010-f314-424c-a6ba-82f658eb83ed1.jp

சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான கேள்விக் கொத்தில் ஜக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளின் அடிப்படையில் வரையப்படும் இந்த சாசனம் தமிழீழ மக்களுக்கு மாற்ற முடியாத உரிமை உண்டு எனத் தெரித்துள்ளது.

தமிழீழ சுதந்திர சாசனதத்தினை அச்சத்தோடு சிங்கள அரசு பார்த்து வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையில் தமிழீழ சுதந்திர சாசனத்தை வரைவதற்கு உலகெங்கும் வாழும் தமிழ்மக்களினதும் சிங்கள முற்போக்கு வாதிகளினதும் மற்றும் அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்களினதும் உள்ளீட்டைப் பெறுவதற்கு விருப்பம் கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ள தமிழீழ சுதந்;திரச சாசன உருவாக்கத்திற்கான செயற்குழு தெரிவித்துள்ளது.

கீழே உள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கும் கேள்விகளுக்கு http://tamileelamfreedomcharter.org எனும் இணையவழியூடாக பதில்களை இட்டுக் கொள்ள முடியும் என்பததோடு அச்சுப்பிரதிகளைப் பெற்றுக் கொண்டும் கருத்துக்களை பதிலிட்டு வழங்க முடியும்.

கேள்விக் கொத்தின் விபரம்:

இச்சுதந்திர சாசனம் தமிழீழ மக்கள் தனித்தன்மை கொண்டவர்கள், இன்று சிறீலங்கா என்று அழைக்கப்படும் தீவில் மரபுவழி தாயக பூமியை உடைமையாகக் கொண்டவர்கள், பன்னாட்டு   சட்டங்களின் கீழ் சுதந்திர நாடொன்றில்  தம்மைத்தாமே ஆளும் உரிமை கொண்டவர்கள் என  முரசறைகிறது. மக்களது தன்னாட்சி உரிமை தற்போதைய பன்னாட்டு சட்டங்களின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

மேலும் இச் சாசனம் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் போது 100,000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் எனவும்  தற்பாதுகாப்பு, தற்பத்திரப்படுத்தல் ஆகிய சட்டம் மற்றும்  தார்மீக கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் சுதந்திரமும் இறைமையும் உள்ள நாடொன்றிலேயே தமிழ் மக்கள் கண்ணியமாகவும் மற்றும் மனித உரிமைகளைத் துய்து மகிழவும் முடியும் என முரைசறைகிறது.

மேலும் இச்சாசனம் இலங்கைத்தீவில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சிங்கள இனவாத அரசுகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொலை, வன்புணர்ச்சி, கொள்ளை ஆகியவற்றிற்குப் பரிகாரமாக தமிழீழத்தில் இனப் பாகுபாடும் மற்றும் மனித உரிமை மீறல்களும் பல தலைமுறைகளாக தமிழ் மக்களுக்கு துன்பத்தை விளைவித்தன என்ற உண்மையைக்  கருத்திற் கொண்டு  ஆண் பெண் சமத்துவம் மத சுதந்திரம் போன்ற சகல உரிமைகளும் அங்கீகரிக்கப்படும் என முரசறைகிறது.

மனித உரிமைகள் என்பது அடிப்படைச் சுதந்திரங்கள் மற்றும் பாதுகாப்புகள் ஆகும். அவற்றுக்கு   மனதர்கள் என்ற அடிப்படையில்  நாம் அனைவரும்  உரித்துடையவர்கள் ஆவர். மனித உரிமைகள் என்பது அகவை, தேசியம், இனம், நிறம், மதம், பால், பாலியல் முன்னுரிமை அல்லது வேறு தகைமை வேறுபாடிமின்றி யாவருக்கும் பொருந்தும் என்பதை இச்சாசனம் ஏற்றுக் கொள்கிறது.

சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும். சில உரிமைகள் முக்கியமானதால் குடிமுறை,  பொருளாதார, சமூக மற்றும் பண்பாடு உட்பட அவற்றுக்குக் குறிப்பிட்ட சட்ட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறன உரிமைகள் குறைக்கப் படவோ அன்றி  நீக்கப் படவோ முடியாதவை. ஆனால் ஒத்திசைவுக்கு  ஏற்ப  உருவாகும்  புதிய உரிமைகள் சேர்க்கப்படலாம்.

இச்சுதந்திர சாசனம் மூலமாக தமிழீழ மக்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் ஜக்கிய நாடுகள் அவையால் தங்களுக்கு அடையாளப் படுத்துள்ள உரிமைகளை வலியுறுத்துகிறார்கள்.  மனித உரிமைகள் மதிக்கப்பட்டாலே சமாதானமும் பாதுகாப்பும் பேணப்படும் என்பதை தமது வரலாறின் மூலமாக நன்றாக அறிந்து கொண்ட தமிழீழ மக்கள் ஒருவருக்கொருவர் இந்த உரிமைகளை வழங்கியும்  தம்முடன் வாழும் ஏனைய மக்களுக்கு இவ்வுரிமைகளைக் கொடுப்பதற்கும் தங்களை ஈடுபடுத்துகிறார்கள்.

இச்சுதந்திர சாசனம் ஜக்கிய நாடுகள் அவையின் பல்வேறு மனித உரிமை உடன்படிக்கைகளில் மற்றும் சாற்றுதல்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மனித உரிமைகளும் தமிழீழ அரசியலமைப்பு ஆவணங்களில் மாற்ற முடியாத உரிமைகளாக உள்வாங்கப்படும் என உறுதியளிக்கிறது.

ஜக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளின் அடிப்படையில் வரையப்படும்  இப் சாசனம் தமிழீழ மக்களுக்கு மாற்ற முடியாத உரிமை உண்டு எனத் தெரிவிக்கிறது. அதே சமயம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கு தம்மோடு தொடர்பில் வரும் சகலருக்கும் அவ்வுரிமைகள் உண்டென்பதை அங்கீகரிக்க வேண்டும் என்ற கடப்பாடு உண்டு என்றும் தெரிவிக்கிறது.

இச்சுதந்திர சாசனம் அரசின் நடவடிக்கைகளை எடை போடும் அளவுகோலாகவும் அதே சமயம் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை அறிந்து கொள்வதற்கும் உதவுகின்றது. இப் பட்டயம் சட்டவாளர்கள் அல்லது முடிவு எடுப்பவர்கள் வினை செய்யும் போது மனித உரிமைகள் முன்னிடப்படுத்தப்பட வேண்டுமென்பதை உறுதிசெய்யும்.

இச்சுதந்திர சாசனம் மனித உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படவிருக்கும் தமிழ் ஈழத்திற்கும் மனித உரிமைகள் மீறப்பட்டு அடக்குமுறை தொடரும் சிறீலங்காவிற்கும் உள்ள வேறுபாட்டை ஒப்பீட்டடிப்படையில் கோடிட்டுக் காட்டும்.

கேள்விக்கொத்து:

(பதில்களை தருவதற்கு தரப்பட்டுள்ள இடம் போதாதுவிடின் பிறிதொரு தாளில் கேள்வி இலக்கத்தையும் அதனுடைய பதிலையும் கேள்விக்கொத்துடன் இணைத்துவிடவும்)

    தமிழீழ சுதந்திர சாசனம்

தமிழீழ மக்களின் சுதந்திரம் பற்றிய  கோட்பாடுகளை (கொள்கைகளை), இந்த சுதந்திர சாசனத்தில்  தெளிவாக இயற்றி அதனை அனைத்துலக அரங்கில் முரசறைதல், எங்கள் சுதந்திரத்தினை அடைவதற்கான வழியென நாம் நம்புகின்றோம்.

1.    தமிழீழ சுதந்திர சாசனத்தின் அவசியம் என்ன?

அ. அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரம், சொத்துக்கள் மற்றும் சுமூகநிலை பேணப்படுவதல்

ஆ. அது பெரும்பான்மை தனிமனித சுதந்திரங்களை உறுதி செய்வதோடு நீதித்துறைகளிலும், நிர்வாகங்களிலும் அரசுக்குள்ள அதிகாரத்தினை கட்டுப்படுத்தல்

இ. தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் அமையவிருக்கும் தமிழீழத்தின் மாதிரியினை விளங்க வைத்தல்

ஈ. மேற்கூறிய யாவும்

2. இந்த சாசனத்தினை உருவாக்குவதற்கும் முரசறைவதற்கும் யார் ஈடுபட வேண்டும் என்று நம்புகிறீர்கள்?

அ. .உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள்

ஆ. இலங்கையில் வாழும் தமிழர்கள்

இ. புலம்பெயர் தமிழர்கள்

ஈ. இலங்கை வாழ் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும்

3. சர்வசன வாக்கெடுப்பின் மூலம் எட்டப்படும் முடிவு தமிழ் மக்களின் விடுதலைக்கான நிரந்தர அரசியல் தீர்வாகும் என நம்புகின்றீர்களா?

இது அவர்கள் சமாதானத்துடனும் சுயகௌரவத்துடனும் பாதுகாப்புடனும் ஒரு தேசிய இனமாக வாழ வழி வகுக்குமா ?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

4. இலங்கைத் தீவில் தமிழ் தேசிய முரண்பாட்டிற்கான தீர்;வினை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதனை அங்கீகரிக்கின்றீர்களா ?

அ. ஆம்

ஆ. இல்லை

இ.தெரியவில்லை

5. அப்படியானால் அனைத்துலகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? எந்த மட்டத்தில் ? எவ்வளவு வரையறைக்குள் ? இதில் எந்த நாடுகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உங்களுடைய கருத்துக்களை தரவும்.

6. தமிழீழ மக்களுக்கு வேறு எந்த அரசியல் தீர்வுகளை கருத்தில் கொள்கிறீர்கள்?

உரிமைகளும் சுதந்திரங்களும்

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும், சுதந்திரங்களையும் இந்த சுதந்திர சாசனம் உறுதிப்படுத்தும்

7. வரலாற்று ரீதியாக தமிழீழ மக்கள் அனுபவித்த ஒடுக்குமுறையை கருத்தில் கொண்டு  தமிழீழ சுதந்திர சாசனம் எந்த முக்கிய உரிமைகளையும்  சுதந்திரங்களையும் கொண்டிருக்க வேண்டும்?

8. தமிழ் மக்கள் சுதந்திரத்திற்;கான உரித்துடையவர்கள் என்று கோருவதற்கு கீழ் வருவனவற்றில் எந்த உரிமைகள் அடிப்படையாக அமையும்?

அ. தாய்நாட்டிற்கான உரிமை

ஆ. சுயநிர்ணயத்துக்கான உரிமை

இ. தேசியத்துக்கான உரிமை

ஈ. இழந்த இறைமையை மீளப் பெறும் உரிமை

9. எங்கள் தேசியத்தை கோருவதற்கு மேலும் வேறு எந்த உரிமைகளை சேர்க்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்?

10. சுதந்திர இறைமையுள்ள ஒரு தமிழீழ அரசினை உருவாக்குவதற்கு ஒரு தமிழார்களாக சுயநிர்ணய உரிமை மற்றும் இறைமை என்பனவற்றை நீங்கள் பிரயோகிக்க விரும்புகிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ.தெரியாது

    வரலாறு

இயற்கையாக பிரிக்கப்பட முடியாத எங்கள் தமிழீழப் பிரதேசம் அன்று தொட்டு இன்று வரைக்கும்  சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்  கரங்களுக்குள் இருக்கிறது.

11. இடைக்கால தன்னாட்சி நிர்வாகத்தினரால் பரிந்துரைக்கப்பட்ட இலங்கையின் வடகிழக்கின்  எட்டு மாவட்டங்களாகிய  அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா என்பன தமிழீழத்தின் பூகோள எல்லைகளாக வரையறுக்கப்படுவதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஏற்றுக் கொள்கிறேன்

ஆ. இல்லை

இ. தெரியாது

12. இறுதியாக எங்களது பூர்வீக தாய்நாட்டை முழுமையாக மீளப் பெற்றுக் கொள்வதற்கும் அதன் பிளவு படாத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குமாக  நீங்கள் நினைக்கும் சில தெரிவுகள் யாவை? முன் நடந்த வரலாற்றில் இருந்து வேறு எந்த உதாரணங்களைஎடுக்கலாம்?

13. சிறிலங்கா அரசாங்கங்களால் வாக்குறுதிகள் மீறப்பட்டமையாலும், ஒருபக்க சார்பாக ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டமையாலும் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட வரலாறு பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை.

இ. தெரியாது

14. தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கங்களால் தமிழருக்கெதிராக இழைக்கப்பட்ட அடக்குமுறைகள், பாகுபாடுகள், அரச வன்முறைகள்,அரசினால் ஏவி விடப்பட்ட வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியாது

15. தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தற்பாதுகாப்பு நிலையில் இருந்ததென்பதனையும்; அதாவது தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மூன்று தசாப்த காலங்களாக தமிழர்களின் அமைதி வழி, அகிம்சை வழி சனநாயக போராட்டங்கள்  மற்றும் அரசியல் போராட்டங்கள் மிகக் கொடூரமான அரச வன்முறை மூலம் அடக்கியொடுக்கப்பட்டது என்பதனையும் தேசியப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உள்நாட்டு மற்றும் அனைத்துலக தலையீடு இன்மை காரணம் என்பதனையும்  நம்புகிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

16. 1972ம் ஆண்டு மற்றும் 1978ம் ஆண்டுகளில் சிறிலங்காவின் அரசியல் யாப்புகள் எழுதப்பட்ட போது தமிழ் மக்கள் அதில் பங்கு பற்றவில்லை என்பது பற்றி அறிந்திருக்கின்றீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ.தெரியவில்லை

 சுதந்திர தேசத்தின் கருவிகள்

17. அனைத்துலக கண்காணிப்பின் கீழ் தமிழீழத்தில் சனநாயக சுதந்திர தேர்தல் ஆணைக்குழு ஒன்று அனைத்துலக சனநாயக நோக்கங்களுக்கும் நியமங்களுக்கும் அமைய தேர்தல்களை நடாத்த வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

18. சட்டம்,ஒழுங்கு, ஆட்சி, கட்டளை, தீர்மானங்கள் என்பன சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதவுரிமைகள் பாதுகாப்பு நியமங்களுக்கு ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

19. அனைத்துலக மனிதவுரிமைகள் அமைப்புக்களின் உறுதுணையுடன் காத்திரமான (திறன் வாய்ந்த) பொறி முறையொன்றினை கொண்ட ஒரு சுதந்திரமான மனிதவுரிமைகள் ஆணைக்குழு ஒன்றினை மிகவிரைவில் அமைப்பதன் மூலம் மனிதவுரிமைகளை பாதுகாக்கவும், மனிதவுரிமைகள் கடமைப் பாடுகளை உறுதிப்படுத்தும் முகமாகவும் இருக்கவேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

20. இந்த மனிதவுரிமைகள் ஆணைக்குழு எந்தவொரு தனிப்பட்ட நபர் ஒருவரின் முறைப்பாட்டினைப்  பெற்றுக் கொள்ளவும், எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் (நஷ்டஈடு) வழங்கவும் அவரின் உரிமைகள் மீளுறுதி செய்யப்படுவதற்குமான முழு உரிமையையும் கொண்டிருக்கும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

 கொள்கைகள்

21. எந்த மதத்திற்கும் தமிழீழத்தில் முதலிடம் கொடுக்கப்படமாட்டாது என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

22. தமிழ் தவிர, வேறு எந்த மொழி உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்?

அ. ஆங்கிலம்

ஆ. சிங்களம்

இ. ஆங்கிலம்;, சிங்களம்

23. தமிழீழ குடிமக்கள் அனைவருக்கும் கல்வி இலவசமாக இருக்க வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

24. சிறுவர்கள் எல்லோருக்கும் கட்டாய ஆரம்ப கல்வி இருக்க வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

25. தமிழீழ குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

26. தமிழீழத்திற்கு சுயாதீன கiயூட்டு ஊழல் ஆணைக்குழு ஒன்று தேவையென்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

 சுதந்திர தேசத்தின் கடப்பாடுகள்

27. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் சட்டநியமங்களுக்கு தமிழீழம் கட்டுப்பட வேண்டும்?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியாது

28. தமிழீழம்  அனைத்துலக மனிதவுரிமைகள் உடன்படிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியாது

29. நீதிக் கோட்பாடுகள், சுதந்திரம்(விடுதலை), இறைமை, தன்னாட்சி, மனித கௌரவம் மற்றும் மக்களின் உரிமைகள் என்பவற்றை நடைமுறைப்படுத்த விரும்புகின்றீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ.தெரியவில்லை

30. தமிழீழத்தில் அரசுத் தலைவர் ஒருவர் ஆகக் கூடியது இரண்டு  பதவிக் காலங்களுக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

31. உலக குடியியல், அரசியல் உரிமைகள் சாசனம் சரத்து 27ல் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் சிறுபான்மை இனத்திற்கும் உரியது என்பது உத்தரவாதமளிக்கப்படும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியவில்லை

32. நீதித் துறை நிர்வாகங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திணைக்களங்கள் தமிழீழத்தில் அமைக்கப்படும். நீதித்துறை அதிகாரங்கள் இத் திணைக்களங்கள் ஊடாகப் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் நீதிபதிகளின்(சுதந்திரம்) சுயாதீனத் தன்மை உறுதிப்படுத்தப்படும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம்

ஆ .இல்லை

இ. தெரியவில்லை

33. தமிழீழத்தில் சுதந்திர வர்த்தக வலயம் வேண்டுமா?

அ. ஆம்

ஆ. ஆம்,குறிப்பிட்ட காலத்திற்கு

இ. இல்லை

ஈ.  வேறு

34. அமையும் தமிழீழம் பிராந்திய அமைதிக்கும் அதன் நிலையான தன்மைக்கும் (நிரந்தரத் தன்மைக்கு) வழி வகுக்கும்?

அ. ஆம்

ஆ. இல்லை

இ. தெரியாது

இக்கேள்விப் பட்டியலில் சுதந்திரம் தொடர்பாக குறிப்பிடப்படாத வேறு ஏதாவது உரிமைகள், விடயங்கள் இந்த சுதந்திர சாசனத்தில் உள்ளடக்கப்படவேண்டி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதனை இங்கே குறிப்பிடவும் என நாதம் ஊடக சேவை மேலும் தெரிவித்துள்ளது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=0bcfb010-f314-424c-a6ba-82f658eb83ed

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு இதை மட்டும் வைத்து பிழைப்பு நடத்துவதை விட்டுவிட்டு, செய்ய வேண்டிய நூற்றுக்கணக்கான வேலைகளையும் இழுத்தடிக்காமல்  செய்வதே தமிழ் இனத்துக்குச் செய்யும் ஆகக் குறைந்த உதவியாக இருக்கும்.

 

இப்படி மொட்டையாக் கருத்துச் சொல்லாமல்.. ஒரு ஜனநாயக மக்கள் அமைப்பு என்ற வகையில் மக்களாகிய நீங்கள் அவர்கள் செய்ய இனங்கண்டுள்ள நூற்றுக்கணக்கான வேலைகளில் ஒரு 50 வேணாம் ஒரு 20 தை பட்டியலிட்டுக் காட்டுங்கள்.

 

அவர்கள் அதனை தமது வளத்திற்கும் வலுவிற்கும் ஏற்க செய்ய முயற்சிப்பார்கள். அதைவிட்டிட்டு இப்படி மொட்டையா எழுதிறதும்... சும்மா திட்டிறதும்.. ஜனநாயகம் அல்ல. அது காழ்ப்புணர்ச்சி என்ற எல்லைக்குள் வந்துவிடும்..! நீங்களும் சிங்களவனைப் போல.. அதையா செய்யப் போகிறீர்கள்..??!

 

இது உங்கள் அரசு. அதற்கு நீங்கள் உங்களால் ஆன முன்மொழிவுகளை முன் வைக்கலாம்.

 

எனது முன்மொழிவு இது... நாடு கடந்த தமிழீழ அரசு இதையும் கொஞ்சம் பரிசீலித்துப் பாருங்கோ. உங்களைத் தேர்வு செய்ய வாக்களித்தவன் என்ற வகையில்..

 

தமிழீழப் பிரகடனமும் Exile government உம்..!!

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120686

 

 

 

Edited by nedukkalapoovan

தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்……

Posted by sankathinews on April 8th, 2013
TGTE-300x175.gif

தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்……

 

தமிழீழ சுதந்திர சாசனத்தின் இணையம் :

www.tamileelamfreedomcharter.org/

சுதந்திர சாசன உருவாக்க கருத்தறிவில் இணைய வழி பங்கெடுத்துக் கொள்ள :

தமிழ் : http://tamileelamfreedomcharter.org/?page_id=71

ஆங்கிலம் : http://tamileelamfreedomcharter.org/?page_id=61

தரவிறக்கம் செய்யக்கூடியதான :

அறிமுகக் கையேடு : http://fr.calameo.com/read/000341502cda4a20894a7

கேள்விக் கொத்து tamil : http://fr.calameo.com/read/000341502f4d19f614135

கேள்விக் கொத்து english : http://fr.calameo.com/read/0003415027e9bf8386a4b

நன்றி

தமிழீழ சுதந்திர சாசன பரப்புரைக் குழு

Both comments and pings are currently closed.

http://sankathi.com/dailynews/?p=5398

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.