Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த நாடுகளில் கருப்பு யூலை நிகழ்வுகள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் சூரிச்சில் கறுப்பு யூலை நிகழ்வு சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் கறுப்பு யூலை நிகழ்வு சுவிஸ் சூரிச் மாநகரில் இன்று திங்கட்கிழமை நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வில் ஊடகவியலாளரும் வொய்ஸ் ஓஃப் அமெரிக்காவின் முன்னைய செய்தி ஆய்வாளருமான மார்க் றீத்தா மரியான் அம்மையார் ஈகைச்சுடரேற்றி தொடங்கி வைத்தார்.

23 வருடகால நினைவழியா நாட்களின் நிகழ்வுகள் நினைவு கூரப்பட்டன.

சுவிஸ் பேர்ண் மாநகரத்தில் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தினால் 83 யூலை கலவரத்தை நினைவுகூர்ந்து "சாவிலும் வாழ்வோம்" நிகழ்வு வெற்றிபெற சுவிஸ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தினால் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நட்புறவைப் பேணும் முகமாக முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக இது அமைந்திருந்தது.

இந்தியாவைச் சேர்ந்த கத்தோலிக்க ஆன்மீக அருட்தந்தை செவலின் அடிகளார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

-புதினம்

டெனிஸ் மக்களை கவர்ந்த "சாவிலும் வாழ்வோம்" போராட்டம்

டென்மார்க்கில் 3 பெரிய நகரங்களில் கறுப்பு யூலையை நினைவு கூரும் வகையில் "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது.

83 யூலை படுகொலையிலிருந்து இன்று மகிந்த அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் படுகொலைகள் தொடர்பான விவரங்கள் துண்டுப்பிரசுரங்களை தமிழ் இளையோர் அமைப்பினர் நகரமத்திகளில் நின்று டெனிஸ் மக்களுக்கு வளங்கியதுடன் இன்றைய தமிழரின் அரசியல் அபிலாசைகளையும் எடுத்துரைத்தனர்.

அத்துடன் 3 நகரங்களிலும் சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பபட்டுள்ள படுகொலைகள் தொடர்பான பெரிய பதாதைகள் அங்கே காணக்கூடியதாக இருந்தது.

தமிழீழ தேசியகொடியும் அங்கே பறந்தவண்ணம் இருந்தது. டெனிஸ் மக்கள் தங்கள் கைகளில் கிடைத்த துண்டுப்பிரசுரங்களையும் காட்சிக்கிருந்த பதாதைகளையும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மொத்தத்தில் சிங்கள இனவெறி அரசின் கோரமுகத்தை மீட்டும் ஒருமுறை டென்மார்க வாழ் புலம்பெயர் தமிழீழமக்களின் ஆதரவும் டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியமும் தமிழ் இளையோர் அமைப்பினரும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

S3700185.jpg

S3700191.jpg

உறவுகள் உரிமை பெறும் வரை உறங்கோம் - கனேடிய கறுப்பு யூலை நிகழ்வு

இருபத்து மூன்றாண்டுகளின் முன்னர், சிறீலங்கா அரசாங்கத்தின் நேரடி மேற்பார்வையில், இரத்த நெடி பதித்த கோர யூலையின் பயங்கரங்கள், கனேடிய மண்ணின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் விழிப்புணர்வோடு இன்றைய தினம் நினைவு கூரப்பட்டன. மிகப் பெருந்திரளான கனேடிய தமிழர்களும், கனேடிய தமி;ழ் சமூகம் தனது அபரிமித வழர்ச்சிப்பாதையில் சேகரித்துக் கொண்ட தமிழரல்லாத கனேடிய நண்பர்கள் மற்றும் அபிமானிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். வர்த்தக நாடான கனடாவின் வர்த்தகத் தலைநகரம் எனச் சொல்லும் வகை உயர்ந்து நிற்கும் ரொறன்ரோவின் நகரமத்தியில் இந்நிகழ்வுகள், திறந்த வெளிச் சதுக்கத்தில் திறம்பட நடந்தன. பரபரப்பு மிக்க வீதிகளின் சந்திப்பில் வெட்டவெளிச்சத்தில் நடைபெற்ற நிகழ்வுகள், விடயம் என்னவென போவோர் வருவோரையும் கேட்க வைத்தன.

கனடாவிற்கு நன்றி கூறும் விழாவென்ற தலைப்பு ஆரம்பத்தில் சிலரிற்குக் குளப்பத்தைக் கொடுத்தது. அல்லைப் பிட்டியிலும் வங்காலையிலும் பேசாலையிலும் இன்னும் எங்கெங்கோவெல்லாம், எண்பத்து மூன்றின் கோரத்தை நினைவுபடுத்தும் வகை சிங்களத்தால் இன்னமும் தமிழ் குருதி சிந்தப்பட்டுக் கொண்டிருக்கையில், சிங்களத்திற்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் தமிழரைக் கனடா மூன்று மாதங்களின் முன்னர் தடைசெய்தது. கனேடியத் தமிழரின் சுதந்திர கோசத்தையும் அடக்கச் சொன்னது. ஆனால், சிங்களத்தின் மந்திரிகள் தங்கு தடையின்றிக் கனடாவந்து தமிழ் எதிர்ப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்க்கக் கனடா கரங்கொடுக்கின்றது. இந்நிலையில், ஒரு வேலைநாளில், திங்கள் இரவில், தமிழர்கள் கூடிக் கனடாவிற்கு நன்றி கூறுகிறார்களா? என்ற குரல்கள் சில தமிழர் மத்தியில் மட்டுமல்ல இதர கனேடியர்கள் மற்றும் அரசியல் வாதிகள் மத்தியிலும் அங்கங்கே கேட்கத் தான் செய்தன. ஆனால் அக்குரல்களிற்கான விளக்கங்கத்தைத் தமிழர்களே முன்வைத்தார்கள்.

திருக்குறள் தன்னைப் பின்பற்றுவது அல்லத் தமிழர் இனம். மாறாக, திருக்குறள் என்பதே தமிழர் வாழ்வுமுறை பற்றிய பதிவு. "என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு" என்பது தமிழரின் வாழ்வு முறை. நிகழ்காலத்தின் துரதிஸ்ரவசமான தவறுகள் ஒருவரின் இறந்த கால உபகாரங்களை மறக்கச்செய்யாது என்பது தமிழரின் சீரிய பக்குவம். தமிழரின் உடலங்கள் சிங்களத்தால் பந்தாடப்பட்டுக்கொண்டிருந்த அந்தக் கொடிய யூலையில், தமிழரின் அவலங்கண்டிரங்கிய முதல் தேசம் கனடா. கதவு திறந்து கரம் நீட்டி பதைபதைத்து நடுங்கி மருண்ட விளியோடு தளர்ந்து நடந்த தமிழரை அரவணைத்த தாய்மைத் தன்மையின் உதாரணம் கனடா. காலத்தின் நீட்சியி;ல் சில தவறான புரிதல்கள். சிங்களம் செலவிட்ட மில்லியன்களின் பொய்பிரச்சார கட்டுக் கதைகள் ஏற்படுத்தியிருக்கும் தற்காலிக இடைவெளி.. தவறுகள் திருத்தப்படுவது உலகியல் இயல்பு. தமிழன் பண்பு காலத்தை வென்ற உன்னத மாறிலி. இழவு வீட்டிற்கு ஆறுதல் சொல்ல வந்தோரை முப்தியோராம் நாள் உணவுக்கழைத்து நன்றி சொல்பவர் தமிழர். அதுவும் போதாது என்று ஆண்டுதோறும் வரும் ஆட்டுத் துவசங்கள். ஏங்களைப் பொறுத்த வரை இந்த யூலை இருபத்தி மூன்றாவது ஆட்டுத் துவசம். ஓவ்வொரு யூலையிலும் 83ல் நம் இழவு வீடு வந்தோர்க்கும் ஆறுதல் சொன்னோர்க்கும் தமிழரின் நன்றியறிதல்கள் தொடரும்.

நன்றியறிதல் என்பதற்கும் மேலால் ஈழத்தமிழனின் கடந்த ஐம்பது வருடகால வரலாறு பற்றி சக கனேடியர்கள் அறிவதற்கும் இன்றைய நிகழ்வு வழி வகுத்தது. மூவாயிரம் உயிர்கள் கணநேரத்தில் பறிபோகும் வலி எத்தகையது என்பதனை மேற்குலகம் இன்று அறியும். அநாதரவற்று நின்ற தமிழனை உலக நாடுகள் அகதியாக அழைத்தனவே அன்றி தமிழ் மண்ணில் தமிழ் இனம் காக்கப்படத்தவறியது. இந்நிலையில், வாழ்வுரிமைப் போராட்டம் அவசியமானது. இந்த ஐம்பது வருட காலச் சரித்திரத்தைத் தெளிவு படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் கையேடுகள் படங்களுடன் வடிவமைக்கப்பட்டு இன்றைய நிகழ்வில் விநியோகிக்கப்பட்டன. தமிழர்கள் போர் வெறியர்கள் அல்லர், போர் திணிக்ப்பட்டதன் விளைவாகத் தற்காப்பு இயந்திரத்தை உருவாக்கியவர்கள் மட்டுமே என்ற செய்தி தெளிவாகவின்றும் பதியப்பட்டது.

கனேடிய தமிழ் சமூகத்தின் பன்முகப்பட்ட வழர்ச்சிப் பரிமாணத்தைத் தெளிவுபடக் கூறும் மற்றுமோர் விடயம் இன்று கனடாவில் பதிவானது. கனேடிய சரித்திரத்தில், முதன் முதலாக, தமிழரின் அவலம் ஒரு இளம் தமிழ் கனேடிய ஊடகவியலாளரால், ஒட்டுமொத்தக் கனடாவிலும் அதிக பிரதிகள் விநியோகமாகும் ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகையில், இன்று பதிவு செய்யப்பட்டது. ஏமது அவலங்களைக் கேட்பாரில்லையா என்ற நிர்க்கதியான நிலை மாறி எமது அவலத்தை நாமே கூறும் மகிழ்சிதரும் நிலை துளசி சிறீகாந்தன் என்ற கனேடிய தமிழ் ஊடகவியலாளரால் இன்றைய தினம் நனவானது. இக்கட்டுரையில், 83 யூலையில் தமிழர்கள் அனுபவித்த இன்னல்கள் கனேடியத் தமிழர்களின் வாக்கு மூலங்களாக, சிங்களத்தின் முகத்திரையைக் கிழிப்பனவாக இடம்பெற்றுள்ளன.

இன்றைய நிகழ்வில் கனடாவின் மூன்று பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநினதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து தமிழரின் தொடரும் அவலங்கள் பற்றி தாம் நன்கு அறிவதாகவும், இந்த இன்னல்களை நிரந்தரமாக நீக்கும் வகையில் கனேடிய அரசு செயற்பட வேண்டும் என்ற தொனிப்படவும் உரையாற்றினார்கள். அத்தோடு பெரும் எண்ணிக்கையான கனேடிய ஊடகத் துறையினரும் இந்நிகழ்வில் பங்கேற்று விவவரம் சேகரித்துச் சென்றமை குறிப்பிடத் தக்கது.

மொத்தத்தில், ஈழத்தில் எமது உறவுகள் உரிமை பெறும் வரை கனேடிய உறவுகள் உறங்கமாட்டோம் என்று அடித்துக் கூறிய இன்னுமொரு நிகழ்வாக, இன்றைய நிகழ்வு சிறப்புற நடந்தேறியது.

லண்டனிலும் பல ஆண்டுகளின் பின்னர் பல்லாயிரம் மக்களின் உணர்வு பூர்வமான பங்களிப்புடன் சாவிலும் வாழ்வோம் நிகழ்வு நடந்து முடிந்துள்ளது.செல்வம் அடைக்கல நாதன்,தயா இடைக்காடர்,சாந்தன் முதலானோர் கலந்து கொண்டனர்.பொங்கு தமிழ் எழுசிப் பாடல்களுடன் உணர்வுபூர்வமக நடைபெற்றது.எற்பாடுகளை தமிழ் இளையோர் அமைப்பு வெகு நேர்த்தியாக ஒருங்கமைதிருந்தது,பாரட்டுக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்சில்......

4cl2.jpg

2bi6.jpg

1xo0.jpg

6wq3.jpg

10qs4.jpg

9bl9.jpg

13gf3.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பல்லின மக்களை கவர்ந்த "சாவிலும் வாழ்வோம்" போராட்டம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கறுப்பு யூலையை நினைவு கூரும் வகையில் "சாவிலும் வாழ்வோம்" மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வு சிட்னி நகரின் மத்தியில் Pitt Street and Castlereag Street -க்கும் இடையில் உள்ள Martin Place இல் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெற்றது.

முதல் நிகழ்வாக அல்லைப்பிட்டி, வங்காலை படுகொலைகளை அவுஸ்திரேலிய மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக சிட்னி கலை பண்பாட்டுக் கலைஞர்களினால் வீதி நாடகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் நடத்தப்பட்டது.

இந்த வீதி நாடகம் 25 நிமிடங்கள் நடத்தப்பட்ட போதும் சிட்னியின் குளிரையும் பொருட்படுத்தாது தொடர்ந்து மூன்று முறை கலைஞர்கள் நடித்து காண்பித்தனர்.

உலகமே!

எமக்குப் பதில் வேண்டும்.

இப்போது வாருங்கள்

இல்லையெனில் எப்போதும் வரவேண்டாம்

எதற்காகவும் வரவேண்டாம்.

முடியுமெனில்

உங்கள் வழியில் எங்களை எடுங்கள்

இல்லையெனில்

எங்கள் வழியில் எங்களை விடுங்கள்.

என்று அனைத்துக் கலைஞர்களும் உரத்த குரலில் பாடினர். அங்கே வைக்கப்பட்டிருந்த படுகொலை காட்சிப்படங்கள், 83 யூலை கலவரம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திகள், விவரணங்களைப் பல்லின மக்களும் பார்வையிட்டனர். மேலும் அது தொடர்பான மேலதிக தகவல்களையும் கேட்டறிந்து சென்றனர்.

அல்லைப்பிட்டி படுகொலை கோரப்படத்தினை கலைஞர்கள் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்கு காண்பித்து

பாருங்கள்

உற்றுப் பாருங்கள்

அந்தச் சின்னப்பிள்ளையின் சிரசிலிருந்து

பென்னம்பெரிய நெருப்பு மூழ்கிறது

தெரிகிறதா?

இது தணியாது

இனிப் பணியாது

என்று உரத்த குரலில் பாடியதனை பரபரப்பான அந்த அலுவலக நேரத்திலும் ஒருகணம் அனைவரும் நின்று பார்வையிட்டுச் சென்றனர்.

83 யூலை படுகொலையிலிருந்து இன்று மகிந்த அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் படுகொலைகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய 5,000-க்கும் மேற்பட்ட துண்டுப்பிரசுரங்களை மார்ட்டின் பிளேசின் பல பகுதிகளில் நின்று சிட்னி தமிழர்கள் வழங்கினர்.

சிட்னி வாழ் ஈழத்தமிழர்களின் நண்பரான சர்வதேச நீதியாளர் ஆணைக்குழுவின் தலைவர் ஜோன் டாவுட் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரை:

தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் போரில் "உண்மை" முதலில் பலியாகியுள்ளது.

பிரித்தானியா இந்த தீவிற்கு சுதந்திரம் வழங்கிய போது தமிழ் மக்களினது கலாச்சார வாழ்வை பாதுகாக்க தவறிவிட்டனர்.

தமிழர்கள் அதற்கு முன்னர் தனித்துவமாக வாழ்ந்து வந்தனர்.

சர்வதேச நீதியாளர்கள் ஆணைக்குழு தமிழ் மக்களின் போராட்ட நியாயங்களை வெளியுலகிற்கு கூறி வருகின்றது. இனியும் கூறும்.

நான் சென்ற மே மாதம் தமிழ்ப் பகுதிகளுக்குச் செல்ல இருந்தேன். தற்போது அங்கு நடைபெற்று வரும் நிழல் யுத்தம் காரணமாக அங்கு செல்ல முடியவில்லை.

இங்கு வாழும் தமிழர்கள் தொடர்ந்து தமக்கு இழைக்கப்பட்டு வரும் இன்னல்களை அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

83 யூலை படுகொலை 23 ஆண்டுகள் கழிந்தும் தமிழர்கள் மறக்காது நினைவுகூர்வதன் முக்கியத்துவத்தை என்னால் உணர முடிகின்றது என்றார் அவர்.

நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வேர்ஜினா ஜட்ஜ்:

ஸ்ரத்வீல்ட் மாநகர சபை உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து தமிழ் மக்களது பிரச்சனைகள் எனக்குத் தெரியும். ஆழிப்பேரலை பாதிப்புக்காக தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட பணத்தை நான் எடுத்துச் செல்கின்ற வாய்ப்பு கிடைத்தது.

அப்போது படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

தமிழீழத்திற்கு சென்ற போது தமிழ் மக்கள் படும் இன்னல்களை நேரில் கண்டேன். அந்த இன்னல்கள் மத்தியில் தங்களுக்கான அரச கட்டுமானங்களை ஏற்படுத்தி வருவதை கண்டு பிரமிப்பு அடைந்தேன் என்றார்.

ஜோன் மேர்பியின் பிரதிநிதி றொபேர்ட் பலறோ உரையாற்றுகையில், தீர்வு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேசம் அங்கீகரிப்பதன் மூலமாகத்தான் தமிழர்களின் பிரச்சனை முடிவுக்கு வரும் என்றார்.

யுனைட்டிங்க் சேர்ஜ் மைக்கல் பாண்ஸ் உரை நிகழ்தினார்.

கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியார் இசடோர் இனப்படுகொலையின் போது கொல்லப்போட்டோருக்கு ஆத்ம சாந்தி பிரார்த்தனை நடத்தினார்.

தொடர்ந்து மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

படங்களினைப்பார்க்க

http://www.eelampage.com/?cn=27796

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற கறுப்பு யூலை நிகழ்வு

கறுப்பு யூலை நாள் நிகழ்வையொட்டி பிரித்தானியாவில் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர்.

பிரித்தானியாவின் ரோயல் பார்க் மையப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்நிகழ்வு பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்வு குறித்து தமிழ் இளையோர் வெளியிட்ட அறிக்கையில், சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் குறித்த கவன ஈர்ப்பை இந்நிகழ்வு வெளிப்படுத்தியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியும் மஞ்சள் சிவப்புக் கொடிகள் தாங்கியவாறும் இந்நிகழ்வில் தமிழர்கள் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரேன் பார்க்கர் ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் மனித உரிமை மீறல் அவலங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய கரேன் பார்க்கர், இத்தகைய மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றம் என்றும் கூறினார்.

இனப்பிரச்சனை காலத்தில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் பங்களிப்பை செல்வம் அடைக்கலநாதன் பாரட்டினார். வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கான அரசாங்கம் அமைவதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையை விமர்சனம் செய்த செல்வம் அடைக்கலநாதன், இஸ்ரேலின் தாக்குதலால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏன் சர்வதேச சமூகம் கண்டிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

எமது தாயகத்தை நாங்களே ஆட்சி செய்ய எமக்கு உரிமை இருக்கிறது. எந்த அடிப்படையில் இந்த சர்வதேச சமூகம் அதை மறுக்கிறது? எந்த அடிப்படையில் எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி கண்டனம் செய்கிறது என்றும் செல்வம் அடைக்கலாநாதன் கூறினார்.

மேலும், தடைகளைத் தாண்டி நாம் ஒரே அணியாக ஒரே கொடியின் கீழ் இணையும்போதுதான் தமிழீழம் மலரும்" என்றும் செல்வம் அடைக்கலநாதன் தனது உரையில் குறிப்பிட்டார்.

பிரித்தானிய தமிழ் சங்கத்தின் நிர்வாகி ஏ.சி. சாந்தன் தனது உரையில், 23 ஆண்டுகால நமது போராட்டத்தில் 70 வீதமான நிலப்பரப்பை நாம் மீட்டெடுத்துளோம். தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கான அரசு உருவாகியுள்ளது. நமது போராடம் ஓயவில்லை. மகிந்தவின் 6 மாத ஆட்சிக்காலத்தில் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளன. 4 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மகிந்தவின் ஆட்சிக் காலத்தில்தான் துணை இராணுவக் குழுக்களின் உதவியுடன் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் நடந்தன. கனடாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை நாம் ஒன்றிணைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இன்றைய நிகழ்வின் மூலம் சர்வதேச சமூகத்துக்கு தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பிரிக்க முடியாது என்ற செய்தியை தெரிவித்திருக்கிறோம். நாம் விடுதலைக்கான ஒருங்கிணைத்திருக்கிறோம் என்றார்.

http://www.eelampage.com/?cn=27799

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோவில் பெருவெற்றியுடன் நடைபெற்ற "சாவிலும் வாழ்வோம்" நிகழ்வு

கனடாவில் தமிழர்கள் செறிந்து வாழும் இரு பிரதான நகரங்களான ரொறன்ரோ மற்றும் மொன்றியல் நகரங்களில் "சாவிலும் வாழ்வோம்" நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.

ரொறன்ரோவில் பெருவெற்றியுடன் இந்த நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடந்தது. மொன்றியல் மாநகரில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

1983 கலவரங்களை நினைவுகூர்ந்து, சிங்கள அரசின் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு முன்னெடுப்புக்களை துல்லியமாகப் புரியவைக்கக்கூடிய வகையில், பேச்சுக்களும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நாட்டின் ஆளும் கட்சியான கொன்சவ்வேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள், லிபரல் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியான என்.டி.பி. கட்சியின் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு பிரதான கட்சிகளும், ஈழத்தமிழரின் துயரங்கள் தீர்ந்து, சமாதானம் மலர வேண்டுமென்றும், சிறிலங்கா அரசின் அராஜகங்களும் அரச பயங்கரவாதமும் நிறுத்தப்பட வேண்டுமென்றும் கருத்துக் கூறினர்.

ஈழத்தின் அவலங்களைப் பிரதிபலிக்கும் நடனங்கள், நாட்டியங்கள், கவிதை உட்பட மிகச்சிறந்த உணர்ச்சிததும்பும் "சாவிலும் எழுவோம்" என்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

நாடகத்தின்போது, 83 இன அழிப்பின் துயரங்கள் உட்பட, 1956 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இனவெறி அரசுகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் பயங்கரவாத அட்டூழியங்கள் குறித்த விவரங்களை, ஆங்கிலத்திலும் வழங்கினர்.

தற்போது ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன், தொலைபேசி மூலம் இணைந்து கருத்துரை வழங்கினார்.

லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்காகப் போட்டியிடும், சமஷ்டி அமைப்பின் போஷகரான பொப் றே உட்பட, ஈழத்தமிழருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடாளுமன்ற உறுப்பினரான ஜிம் கரிஜியானிஸ், அண்மையில் கனடிய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையை வெளிக்கொணர்ந்த கொன்சவ்வேட்டிவ் எம்.பி., மற்றும் குடிவரவு சட்டத்தரணி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

ரொறன்ரோ பல்கலைக்கழக விரிவுரையாளரான அருட்கலாநிதி சந்திரகாந்தன், கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வின்சன்ட் வீரசுந்தரம், ஈழத்தில் தமிழர் குரலாக ஒலித்த சட்டத்தரணியொருவர் உள்ளிட்டோரும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நிகழ்வில், கனடிய சமூகத்தினர் உட்பட பல்வேறு நாட்டவர்களும் கலந்துகொண்டு விவரங்களை அறிந்து சென்றனர்.

மிக முக்கிய சந்திப்பில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற டன்டாஸ் சதுக்கத்தில், ஒரு வேலை நாளில் இந்த நிகழ்வு நடைபெற்றதால் பல்லின சமூகத்தின் கவனத்தையும், பிரதான கனடிய ஊடகங்களையும் ஈர்த்தது. வேலை நாள் என்பதையும் பொருட்படுத்தாமல், தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு, சதுக்கத்தை நிறைத்து, நிகழ்வுக்கு வெற்றியளித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு, 83 இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழினமும் கடமைப்பட்டுள்ளது என்று நிகழ்வில் பங்கேற்றோர் கூறினர்.

http://www.eelampage.com/?cn=27789

அது சரி மக்களின் கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் இவர்கள் என்னத்துக்கு புலிக்கொடி வைத்திருக்கிறார்கள் எண்டு யாரும் அதிமேதாவி கேள்வி கேக்க இல்லையே.... ஏனாம்...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்சில்......

6 வயதுடைய நிசாந்தினி ஜெயசீலன் என்ற சிறுமி சர்வதேசத்திடம் எங்களைப் போன்ற சின்னக் குழந்தைகளை இந்த சிங்கள தேசம் படுகொலை செய்து அழிக்கின்றதே இதை ஏன் சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என நீதி கேட்டு தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும், ஆற்றிய உரை அனைத்து மக்களின் மனங்களினையும் தொட்டிருக்கிறது.

france1iz4.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தில் எழுச்சியுடன் நடைபெற்றது சாவிலும் வாழ்வோம் உண்ணாவிரதப் போராட்டம்.

நெதர்லாந்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மிகவும் எழுச்சியுடன் சாவிலும் வாழ்வோம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இதில் பெருமளவு தமிழீழ புலம்பெயர் மக்கள் கலந்து கொண்டனர்.

hollend5.jpg

hollend4.jpg

hollend1.jpg

hollend2.jpg

Pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.