Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கை இணைக்க வழிசமைக்கவும்: இந்திய எம்.பிக்களிடம் தமிழ்க்கட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20130409-165118.jpg

வடக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

 

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும் என்றும் அந்த பிரதிநிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற குழவினருடன் சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த சந்திப்பில்இ தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்இ தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்தசங்கரிஇ தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்இ தமிழர் விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பிஇ தமிழ் தேசிய மக்கள் முண்னணி பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரகுமார் இதமிழரச கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே. சிவஞானம்இ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

 

இந்தசந்திப்பின் போது, இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காது என்றும், அந்த சட்டத் திருத்தத்தின் கீழ் அமைக்கப்படுகின்ற மாகாண சபை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர்களிடம் தெளிவாக விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இலங்கையில் ஜனநாயகம் இல்லை என்பதை அனைவரும் ஒரே தொனியில் எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் வடக்கு கிழக்கை இணைப்பதற்கு உதவ வேண்டும். வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அமுல்படுத்தவேண்டும். வடக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வழிசமைக்கவேண்டும்.

 

அதுமட்டுமன்றி இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களில் சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதுடன் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

http://tamil24news.com/news/?p=57438

வடக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று த.தே.கூ  பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.  ( இது தான் 13வது திணிப்பு) 

 

தமிழ் தேசிய மக்கள் முண்னணி பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவில் சமூகப் பிரதி நிதிகள், .மற்றும் சில அமைப்புகளின் பிரதிநிதிகள் சார்பில் இந்தசந்திப்பின் போது, இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காது என்றும், அந்த சட்டத் திருத்தத்தின் கீழ் அமைக்கப்படுகின்ற மாகாண சபை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர்களிடம் தெளிவாக  விளக்கப்பட்டதுடன், மாற்றாக சர்வதேசத்தின் நேரடியான கண்காணிப்புடனான ஓர் இடைக்கால நிர்வாகம்  கோரப்பட்டது.

 கூட்டம் முடிந்த்த கையுடன் தமிழ்த் தேசியம் பேசும் கூட்டமைப்பினர் தமிழ் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில், சர்வதேசத்தின் நேரடியான கண்காணிப்புடனான ஓர் இடைக்கால நிர்வாகம்

தங்களால் வலியுறுத்தப்பட்டதாக ஓர் செய்தியை பரவவிட்டுள்ளனர். இது உண்மைக்கு புறம்பான ெய்தியென தமிழ் தேசிய மக்கள் முண்னணி அறிவித்துள்ளது.

 

தமிழ்த் தேசியம் பேசும் கூட்டமைப்பினர், தமிழர்களால் தொடர்ச்சியாக அவாவப்படும் தமிழர்களின் போராட்டத்துக்கான இறுதித் தீர்வை ஹிந்திய அமைச்சர்களிடம் ஆனித்தரமாக முன்வைக்கத்தவறுவது விசனத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. தாயகத்தில் தமிழர்களின் அறவழிப் போராட்டமும், ஆயுதப்போராட்டத்தின் மூலம் தமிழர்கள் செய்த அளப்பரிய உயிர்த் தியாகங்களும்,இன்று கோடிக்கணக்கான தொப்பிள்கொடி உறவுகள் புரியும் தர்ம யுத்தமும்,

ஒன்றுமே அற்ற 13வது திணிப்பை தமிழர்கள் ஏற்பதற்காகவல்ல. 

இச்சந்திப்பில் ஹிந்திய அமைச்சர்களே 13வது திணிப்பை தமிழர்களின் தலையில் சுமத்த முன் வராத நிலையில் த.தே கூட்டமைப்பு தமிழர்களின் அபிலாசைகளை கூறத்  தயங்கி  வாய்முடி மௌனிகளாக இருப்பதன் சூத்திரம் தான் என்ன?

த.தே.கூ இதுவரை எக்காலத்திலும் தனிநாடுக்கான காரணங்களை ஹிந்தியாவிடம் முன்வைக்கவில்லை என்பது ஹிந்திய அரசியலாளர்களின் வாதமாகும். தமிழர் மீதான பாரிய  இனவழிப்பின் பின்பும் சிங்கள பௌத்த பாசிச  இராசாக்களின் கோவணத்தில் தான் பிடித்துத் தொங்குவோம் என அடம் பிடிக்கும் தமிழ் தேசியவாதிகளின் இராசதந்திரம் உலக மகா கேவலம்.

 

 காலம் கனிவாகவுள்ள இவ் வேளையில்  தமிழர்களுக்கு உரிய உரிமைகளை, அபிலாசைகளை சொல்லக்கூடத்  தயங்குபவர்கள், தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்துவது தமிழர்களுக்கு செய்யும் கூட்டுத் துரோகத்தைத் தவிர வேறு ஏதாகும்?

இப்போது கூடத் தமிழர்கின் உணர்வை பிரதிபலிக்க முடியாத கூட்டமைப்பு எப்போது  சூரியப்புயல் வரும்அப்போது தான்  பிரதிபல்லிப்போம் என காத்திருக்கிறதா?

பெருந்தகை ஐயா மாவை சேனாதிராஜாஅவர்கள்,த.தே.கூ மார்ச் 20ம் பதிவு செய்யப்படும் என

 சுவிஸ் இல் தமிழர்களின் வாயை அடைக்க கொடுத்த வாக்குறுதி காலாவதியாகி, மகிந்த இராசாக்களின் வாக்குறுதிகள் போல்  உடன் கட்டை ஏறி விட்டது. 

இதுதான் சிங்கள பௌத்த பாசிசத்திடம் தமிழர் தேசியக்  கூட்டமப்பு கற்றுக்கொண்ட பாடங்களும்  தமிழ்த் தேசியத்தை நல்லடக்கம் செய்வதற்கான  அறிகுறியுமாகும். 

 

கட்டையில் போகும் காலத்தில் கூட இனமானத்தை விட கதிரையும் பதவியும் தான் முக்கியம் என அடங்காமல் ஆடுபவர்கள்  பாக்கு நீரிணையின் இரு புறமும்...

 

 

தமிழ்கள் தொடர்ச்சியாக ஏமாறவும் மாட்டார்கள், அடிபணியவும் மாட்டார்கள்.

இதைத்தான் தமிழ்த்தேசியத்தின் ஆன்ம வழிகாட்டியிடம் இருந்து தமிழர் நாம் கற்றுக்கொண்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லெக்சன் முடிய கூட்டமைப்பு பதவியில, கிழக்கில முஸ்லிம், வடக்கில கூட்டமைப்பு. இப்பதான் ஒண்டாயிட்டமே, பேந்தென்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்

லெக்சன் முடிய கூட்டமைப்பு பதவியில, கிழக்கில முஸ்லிம், வடக்கில கூட்டமைப்பு. இப்பதான் ஒண்டாயிட்டமே, பேந்தென்ன?

 

பெரிய கண்டுபிடிப்பு. உடன இதனை பொது பலசேனவுக்கும்.. கோத்தாவுக்கும் பாக்ஸ் பண்ணி விடனும்..! :lol:

கூட்டமைப்பு 13ம் திருத்ததை ஏற்கவில்லை. அதாவது சிங்கள அரசிடமிருந்து அது உண்மையான பாதுகாப்பை தரமுடியாது. இதுதான் திவிநிவி கும்ப; உண்மைக்கோ பொய்யுக்கோ சிராணியின் பதவி நீக்கம் எல்லாமே காட்டுகிறது. அவர்கள் கேட்டது வடக்கு கிழக்கை இணைப்பது. அதில் 13ம்  திருத்தம் அடங்கும். இதை பத்திரிகைகள் விளக்கமில்லாமல் பிரசுரிக்கின்றன.

 

எதை வெளிநாடுகள் இலகுவாக செய்து தரமோ அதைதான் நாம் கேடகவேண்டும். இடைக்கால, அரசா அல்லது வடக்கு கிழக்கு இணைந்த 13ம் திருத்தமா? வடக்கு கிழக்கு இணைந்த திருத்தம் தான் JR-இந்திய அரசின் திருத்தம். சும்மா 13ம் திருத்தம் மகிந்தா கொண்டுவந்த திருத்தம். காணி, பொலிஸ், வடக்கு கிழக்கு இணைந்த திருத்தம் ஒரு இடைக்கால திருத்தமே. அது ஒரு இடைக்கால அரசாகவும் செயல்ப்படாலாம்.

 

இரண்டிலும் குறைகள் இருக்கு.

1.இடைக்கால அரசாங்கம் இதுவரையில் கிடைக்காதாது. இந்திய எம்.பி.கள் பெற்று தருவார்கள் என்ற கதையே இல்லை. அதை அவர்களிடம் கேட்பது அவர்களுக்கு தங்களை சும்மா சீண்டுவது போலிருக்கும். அதை பிரேரணைகள் மூலம் ஐ.நாவில் முன்னேற்றப்பார்க்க்க வேண்டும். 

2.வடக்கு கிழக்கு இணைந்த 13ம் திருத்தம் நடைமுறையில் வந்தால் தமிழருக்கு ஒரு தீர்வு கியடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்தலாம். அதன் பின்னர் அது பிரேரணைகளுக்கு தனது ஆதரவை விலக்கலாம்.  நமது நிலை பழைய குருடி கதவை திறவடி என்று போகும்.

அரசியல் வாதிகள் இந்திய எம்.பிக்களின் மன நிலையை அறிந்து முதலில் கிடைக்கக்கூடியதை கேட்டுபெற்றால் மட்டுமே இன அழிப்புக்கு தற்காலிக நிறுத்தம் வரும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.