Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படலாம் ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட முடியாது'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

HARDEEP%20S.%20PURI.jpg

இந்தியாவுக்கு வழங்கிய அரசியல் மீளிணக்கப்பாடுகள் மற்றும் அதிகாரப்பகிர்வு வாக்குறுதிகளை சிறிலங்காவை ஆட்சி செய்யும் 'சகோதரர்கள்' இன்னமும் நிறைவேற்றவில்லை. 

இவ்வாறு The Hindu [April 9, 2013] ஆங்கில நாளேட்டில் ஐநாவுக்கான இந்தியாவின் முன்னாள் பிரதிநிதியான HARDEEP S.PURI எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

இந்தியாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையானது உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டேதயன்றி காரணிகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. 

இந்தியா தற்போது யதார்த்ததை அடிப்படையாகக் கொண்டு தனது வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்காது அரசியல் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகின்றது. இதற்கு சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை மற்றும் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்தமை என்பன சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். 

இந்திய மத்திய அரசாங்கம் பிராந்திய உணர்வலைகளைப் புறக்கணிப்பதுடன், தனது சிறிய அயல்நாட்டில் இடம்பெறும் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதை கைவிட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

1956ல் சிறிலங்காவை ஆட்சி செய்த S.W.R.D.பண்டாரநாயக்க, சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல்படுத்தினார். இதனை இந்திய மத்திய அரசாங்கத்தின் அரசியல் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் வரவேற்றனர். இது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுக்கான ஒருங்கிணைப்பு என இந்திய அரசியல் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருசாரார் கருதினர். இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு சில ஆண்டுகளின் பின்னர், சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ் மக்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடாத்தப்பட்டனர். 

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட புறக்கணிப்புக்களும் பாரபட்சங்களும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. தமிழ்ப் புலிகளைத் தலைமை தாங்கிய பிரபாகரனால் யாழ்ப்பாண மேயராகக் கடமையாற்றிய அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. 

புலிகள் அமைப்பை பெரும்பாலான சிங்களவர்கள் பயங்கரவாதிகள் என விபரித்தனர். புலிகளை இந்தியாவின் உதவியுடனேயே வெற்றி கொள்ள முடியும் என சிங்களவர்கள் நம்பினர். அதாவது இந்நிலையில் இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, சிறிலங்காவில் தோற்றம் பெற்ற புலிகள் அமைப்பை அழித்து சிறிலங்காவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதற்கு இந்தியாவின் பங்களிப்பை வழங்கவேண்டும் எனத் தீர்மானித்தார். 

அதாவது இந்தியாவானது சிறிலங்கா பிளவுபடுவதை தடுப்பதற்கு மட்டுமல்லாது சிறிலங்காவில் தோற்றம் பெற்றிருந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆதரவை வழங்கும் என்கின்ற அடிப்படைத் தீர்மானத்தை ராஜீவ் காந்தி முன்வைத்தார். பல்கலாசார, பல்லின, பல்மொழிகளைப் பேசும் நாடான சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் சமமாகவும் கௌரவத்துடனும் நடாத்தப்பட வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட நிலையிலும் கூட முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சிறிலங்காவுக்கான தனது ஆதரவை வழங்கினார். 

அனைத்துலக சமூகமானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையையோ அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவோ கேள்வி கேட்கவில்லை. குறிப்பாக இறுதியில் 100 நாட்கள் வரை மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மட்டுமே அனைத்துலக சமூகம் தனது கேள்விகளை முன்வைத்துள்ளது. சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர் மீறல்கள் தொடர்பான காணொலிகள் மற்றும் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த ஆவணங்களைக் கொண்டு மார்ச் 2012ல் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரின் போது தீர்மானம் ஒன்றை முன்வைத்தது. ஆனால் இது ஒரு மிகச்சிறிய முயற்சி மட்டுமே. கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு சிறிலங்கா செயற்படவேண்டும் என அமெரிக்காவின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் சிறிலங்கா தன் மீதான போர்க் கால குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மழுப்பலான பதிலையே வழங்கி வருகிறது. 

சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் மீளிணக்கப்பாடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைளை எடுக்கத் தவறிய நிலையில், 2012ல் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த இந்தியா 2013ல் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தையும் ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 

இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றிலிருந்து சிறிலங்கா தப்பிப்பதில் இறையாண்மை ஒருபோதும் வெற்றிகொள்ளவில்லை. தனது நாட்டில் முன்வைக்கப்படும் தீர்மானங்களை இந்தியா ஆதரிக்காதமை நியாயமற்றது. இதற்கும் அப்பால், இது தொடர்பில் இந்தியா நெறிமுறை சார் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. கோட்பாடு மற்றும் தேசிய நலன் ஆகியன ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்காவிட்டால், தேசிய நலன் என்பது அரசாங்கத்தின் மேலாண்மைக்கு உட்பட்டுவிடும். 

1983ல் கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து பாரபட்சப்படுதலைத் தடுத்தல் மற்றும் சிறுபான்மை இனங்களைப் பாதுகாத்தல் தொடர்பான உபஆணையகத்தில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என பரவலாகக் கோரப்பட்டது. 

இஸ்ரேலியர்கள் தம்மால் கைப்பற்றப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் வாழ்ந்த பாலஸ்தீன மக்கள் மீது திட்டமிட்ட முறையில் மனித உரிமை மீறல்கள் பலவற்றைக் கட்டவிழ்த்துவிட்ட போது இத்தகைய தீர்மானம் ஒன்றுக்கு ஆதரவாக இந்தியர்கள் வாக்களித்திருந்தனர். தேசிய நலனுக்கு இடையூறில்லாமால் இந்தியா ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானம் முன்வைக்கும் போது இந்தியர்கள் ஆதரவளித்தனர். தமிழ்நாட்டில் சிறிலங்காத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் உணர்வலைகள் தட்டிக்கழிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஏப்ரல் -மே 2009ல் சிறிலங்கா, இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மதித்து நடக்காதது ஏன்? 

இந்தியா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட முடியாது. சிறிலங்காத் தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்கள் ஆகியோருக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அபிப்பிராயத்தை மிக வெற்றிகரமாக கையாண்டனர் என்ற கருத்து நிலவுகிறது. இவ்வாறான உணர்வுநிலை நாம் தட்டிக்கழிக்க முடியாது. 

13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதே தற்போது தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கக் கூடியாது. 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என ஏற்கனவே சிறிலங்கா, இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. 

தமிழ்மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் இதயசுத்தியுடன் கூடிய தீர்வை வழங்கும் வரை இந்தப் பிரச்சினை நீண்டுகொண்டே செல்லும். அ.இ.அ.தி.மு.க, தி.மு.க மற்றும் ஏனைய தமிழ்நாட்டின் அரசியற் கட்சிகள் சிறிலங்கா வாழ் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டு அவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

"இங்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் அது தேசிய தலைமைத்துவம் துப்பாக்கி முனையில் இருப்பதற்கு ஒப்பானதாகும். இதனால் மாகாண சபைக்கு அதிகாரம் வழங்க நாம் விரும்பவில்லை" என மார்ச் 27, 2013 அன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருந்தார். 

இந்தியாவுக்கு வழங்கிய அரசியல் மீளிணக்கப்பாடுகள் மற்றும் அதிகாரப்பகிர்வு வாக்குறுதிகளை சிறிலங்காவை ஆட்சி செய்யும் 'சகோதரர்கள்' இன்னமும் நிறைவேற்றவில்லை. இது நாட்டில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவதையும் சமமாக மதிக்கப்படுவதையும் தடுக்கின்றது. 

சிறிலங்கா நாடாளுமன்றைப் பலப்படுத்தும் விதமாக இந்நாட்டின் அரசியல் மூலோபாயம் வகுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கொழும்பிலுள்ள முஸ்லீம் வர்த்தக நிலையம் மீது புத்த பிக்குகளின் தலைமையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான தாக்குதல்கள் சிறுபான்மையினரின் மொழி, மதம் மற்றும் கலாசார உரிமையைப் பறிப்பதாக காணப்படுகிறது. இந்நிலையில் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் இந்தியாவானது சரியான தீர்மானத்தை எடுத்துள்ளது. 

சிறிலங்காவில் தற்போது சீனா அதிக செல்வாக்குச் செலுத்தி வருவதானது கெட்டவாயப்பாகும். நடைமுறைக்கு அப்பால், சீனர்களை எளிதில் ஏமாற்றமுடியாது என்பது உண்மையாகும். இந்தியா சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்ததைப் பயன்படுத்தி சிறிலங்காவின் பொருளாதார மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை சீனா பயன்படுத்திக் கொள்கிறது. 

சிறிலங்கா, இந்தியாவின் மிக நெருங்கிய நாடு மட்டுமல்லாது, கலாசாரம் மற்றும் பௌதீக ரீதியாகவும் இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. இதனுடன் இந்தியா மிக நெருங்கிய உறவைக் கட்டியெழுப்ப வேண்டும். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டின் தமிழ் குடிமக்களை கௌரவத்துடனும், மதிப்புடனும், சமமாகவும் நடத்தாவிட்டால், இந்திய மத்திய அரசாங்கம் சிறிலங்கா தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட உறவையே பேணவேண்டியேற்படும். 

இந்தியாவானது சிறிலங்கா விடயத்தில் தவறான அறிதல்கள், மிகப் பிழையான தகவல்களைக் கொண்டு தனது தெரிவுகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டால், இந்தியா இறுதியில் அவமானத்தையே சந்திக்கும். 
*Hardeep S. Puri is India’s former Permanent Representative to the United Nations in New York.

 

http://www.puthinappalakai.com/view.php?20130412108096

 

  • கருத்துக்கள உறவுகள்

//தமிழ்ப் புலிகளைத் தலைமை தாங்கிய பிரபாகரனால் யாழ்ப்பாண மேயராகக் கடமையாற்றிய அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. //

 

ஐநாவுக்கான இந்தியப் பிரதிநிதியாக முன்னாளில் ஒரு சர்தார்ஜீ பதவி வகித்த விடயம் வேதனை தருகிறது. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

அது அவற்ற பிழை இல்லை. இங்க இருந்து போன  அமிர்தலிங்கம்.. வரதராஜப்பெருமாள் கோஸ்டிகளும்.. உதைத்தான் ரகசியமா சொல்லிக் கொடுத்தது. றோவுக்கு அவை சொல்ல றோ அதை இன்னும் வடிவா அழங்கரிச்சுச் சொல்லிக் கொடுத்திருக்குது. எல்லாத்திற்கும் நாங்களே தான் காரணம் இசை..!

 

மக்களின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கக் கூடிய நல்ல தலைவர்களை நாம் சரியாக இனங்காணவும் பாதுகாக்கவும் தவறிவிட்டோம். இன்றும்.. இன்னும் அதையே செய்கிறோம்..! :(:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.