Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா, பொஸ்டனில் தொடர் குண்டு வெடிப்பு - இருவர் பலி, பலர் படுபாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா, பொஸ்டனில் தொடர் குண்டு வெடிப்பு - இருவர் பலி, பலர் படுபாயம்
ஏப் 16, 2013
  அமெரிக்காவின் பொஸ்டன் நகரில்  ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட மரத்தான் ஓட்டப்போட்டியில் தொடர் வெடிகுண்டுகள் திடீரென அடுத்தடுத்து வெடித்ததால் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் பலரின் கை, கால்கள் சிதறி வீதியெங்கும் கிடந்த பயங்கரமான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
BH6mc_UCIAIhYMH.jpg%20large.jpg

 

மரத்தான் போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கிய வேளையில் பீரங்கி முழங்கியது போன்ற சப்தத்துடன் குண்டு வெடித்தது. தொடர்ந்து 1/2 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன.
 
இதனால், மரத்தானில் பங்கேற்றவர்கள் மூலைக்கு ஒருவராக சிதறி ஓடத் தொடங்கினார்கள். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலீசார், காயமடைந்தவர்களை அம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 2 பேர் பலியானதாவும் சுமார் 30 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொஸ்டன் பொலீசார் தெரிவித்தனர்.
 
இந்த குண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கி வெடிக்கச் செய்திருக்கலாம் எனவும், இது தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கக் கூடும் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வரும் ஒபாமா, காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
சம்பவ இடத்தில் வெடிக்காத 2 குண்டுகளை கைப்பற்றிய போலீசார் அவற்றை செயலிழக்கச் செய்தனர். இச்சம்பவத்தையடுத்து, நியூ யார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது

http://www.sankathi24.com/news/28907/64//d,fullart.aspx

உலகப்புகழ் பெற்ற பாஸ்டன் மரதன் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு : அதிர்ச்சியில் அமெரிக்கா.

 

உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் பாஸ்டன் மரதன் போட்டிகளின் போது நேற்று மாலை இடம்பெற்ற அடுத்தடுத்த இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் குறைந்தது 2  பேர் கொல்லப்பட்டும், 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தும் உள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இக்குண்டுவெடிப்புக்கான பின்னணி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பாஸ்டன் மரதன் ஓட்டப்போட்டிகள் முடிவடையும் இடத்தில் இரு குண்டுவெடிப்புக்கள் 15 செக்கன் இடைவெளிக்குள் வெடித்துள்ளன.

மூன்றாவதும் ஒரு குண்டு அந்நகர நூலகத்தில் வெடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள போதும் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னுமொரு குண்டு வெடிக்க முன்னர் செயலிழக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இக்குண்டுவெடிப்புக்களை அடுத்து, பொதுமக்களை தங்களது வீடுகளிலேயே இருக்குமாறும் பெருமளவில் ஒரே இடத்தில் வெளியில் ஒன்றுகூடுவதை தற்போதைக்கு தவிர்த்துக்கொள்ளுமாறும் நகர காவல்துறை கமிஷினர் அறிவுறுத்தியுள்ளார்.

மச்சாசுவெட்ஸ் மருத்துவமனை தகவல்களின் படி, 19 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்களது கால்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடென் ஆகியோர் உடனடியாக பாஸ்டன் நகர ஆளுனர் டாம் மெனினோ மற்றும் மசாவெட்ஸ் ஆளுனர் டெவல் பட்ரிக்குடன் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு நிலமைகளை கேட்டறிந்துள்ளனர்.

குறித்த பாஸ்டன் பகுதியின் மேலாக விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புடன் தொடர்புடையாதாக சந்தேக நபர்  ஒருவர் கைவிலங்குடன் காவல்துறையினர் வெள்ளை வானில் அழைத்து சென்றிருப்பதையும் ஒரு சிலர் அவதானித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் ஊடாக படம்பிடிக்கப்பட்ட தொலைக்காட்சி பதிவுகளின் படி குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடம் மரதன் ஓட்டப்போட்டி முடிவடையும் எல்லையின் அருகில்  பாதசாரிகள் நடைபாதையில் உள்ள Back Bay  என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உலகின் மிகப்ழமையான வரலாற்றைக்கொண்ட மரதன் ஓட்டப்போட்டிகள் பாஸ்டன் நிகழ்வுகள் ஆகும். இம்முறை 117 வது மரதன் போட்டிகள் நடைபெற்று வந்தன.

அமெரிக்காவின் சூப்பர் பாவ்ல் விளையாட்டு போட்டிகளுக்கு அடுத்து அதிக ஊடக கவனம் பெறும் விளையாட்டு நிகழ்வாகும் இதுவாகும். இவ்வருடம் 28,000 போட்டியாளர்கள் சுமார் 90 நாடுகளிலிருந்து வருகை தந்து இப்போட்டியில் கலந்து கொண்டனர். சுமார் 500,000 பார்வையாளர்கள் இப்போட்டிகளை வருடந்தோறும் கண்டுகளிப்பது வழக்கம்.

கடந்த 25 வருடங்களில், 23 தடவை கென்யா அல்லது எதியோப்பிய வீரர்களே இப்போட்டிகளில் வென்றுள்ளனர். இக்குண்டுவெடிப்பு ஒரு வேளை தீவிரவாத தாக்குதலாக இருந்தால், பெருமளவிலான மக்கள் இங்கு ஒன்று கூடுவார்கள் என தெரிந்தே திட்டமிட்டு இக்குண்டுவெடிப்பை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYzMjM0OTA0.htm#.UW0kC0qC9S0

 

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்டன் குண்டுவெடிப்பு: மூன்,முகர்ஜி கண்டனம்

 

BanKiMoon(1).jpg

அமெரிக்காவில் பாஸ்டன் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன் வெளியிட்டுள்ள செய்தியில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதலாகும் இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்லை தெரிவித்துக்கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 இந்திய ஜனாதிபதி கண்டனம் 

index1(162).jpg

அமெரிக்காவின் பாஸ்டன் மாராத்தான் போட்டியின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். உலகில் எந்த பகுதியிலும் பயங்கரவாதம் தலை தூக்ககூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தினை ஒழித்துக்கட்ட வேண்டும. குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும்இ காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/63994-2013-04-16-05-48-19.html

 

602007_446388638773023_531169902_n.jpg

 

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்டன் குண்டுவெடிப்பு; ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த கண்டனம்

 

 

raj(2).jpg
அமெரிக்காவில் பாஸ்டன் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவிற்கு அனுப்பிவைத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் பலியானவர்களின் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/64064-2013-04-16-14-08-53.html

 

 

பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு மீதான FBI ஆய்வு : ப்ரஷர் குக்கர் பயன்படுத்தப் பட்டதா?

 

news_18-04-2013_30boston_bombing.jpg

 

அமெரிக்காவின் பொஸ்டொன் நகர மரதன் ஓட்டப் போட்டியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சமையல் பாத்திரமான ப்ரஷர் குக்கர் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

திங்கட்கிழமை பொஸ்டொனில் ஓட்டப் போட்டி முடிவுக் கோட்டுக்கு அருகே வெடித்த இரு குண்டுவெடிப்புக்களில் 3 பேர் கொல்லப் பட்டதுடன் 170 பேர் காயமடைந்தனர்.

இறந்தவர்களில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவனும், 29 வயதுடைய பெண்மணி ஒருவரும், சீனாவைச் சேர்ந்த பட்டதாரி மாணவன் ஒருவனும் அடங்குவர். இந்நிலையில் குண்டு வெடித்த இடத்தில் கண்டு பிடிக்கப் பட்ட கறுப்பு நிற உலோகச் சிதறல்களும் வெடிக்க வைக்கும் உபகரணமும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் FBI ஆல் வெளியிடப் பட்ட படங்களில் காட்டப் பட்டுள்ளன.

மிகவும் விலை குறைவாக வாங்கக் கூடிய ப்ரஷர் குக்கரில் எவ்வாறு வெடிகுண்டுகளை இணைத்துத் தாக்குதல் நடத்தலாம் என ஆன்லைன் அல்கொய்தா பத்திரிகையில் ஒருமுறை விபரங்கள் வெளியாகியிருந்தன. மேலும் இந்த பொறிமுறை 2010 ஆம் ஆண்டு இலண்டன் Times Square தாக்குதலில் பயன்படுத்தப் பட்டதாகவும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இம் முறையில் ஒரு டிஜிட்டல் கைக் கடிகாரம் மூலமோ அல்லது மாபைல் தொலைபேசி மூலமோ கட்டளைகள் கொடுத்து குண்டினை வெடிக்கச் செய்ய முடியும். இதனால் தான் பொஸ்டொனில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் பாதுகாப்புக்காக மாபைல் நெட்வேர்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதேவேளை பொஸ்டொன் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அமெரிக்க அதிபர் ஒபாமா இத்தாக்குதலை ஒரு தீவிரவாதச் செயல் என வர்ணித்துள்ளார். மேலும் வியாழக்கிழமை அதிபர் ஒபாமா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுப் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவுள்ளார்.

இதேவேளை  இத்தாக்குதல் தொடர்பில் இன்னமும் எவரும் கைது செய்யப்படவில்லை என FBI அறிவித்துள்ளனர்.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYzNzc4MDg0.htm#.UXBTrEqC9S0

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப அமெரிக்காவிலை சீனவெடி வெடிச்சாலும் பெரிய நியூஸ்.

 

மேலதிக செய்திகள் இந்த இணைப்பில் உள்ளன

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121301

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.