Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் நல்ல முடிவெடுத்தால் அனைத்து பிரச்சனையையும் சுலபமாகத் தீர்ப்பாராம்

Featured Replies

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் நல்ல முடிவெடுத்தால் அனைத்து பிரச்சனையையும் சுலபமாகத் தீர்ப்பாராம்
25 ஏப்ரல் 2013
 
 

டக்ளஸ் தேவானந்தா.... குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Duclas_CI.jpg

 

வடமாகாண தேர்தலில் தமிழ் மக்கள் நல்லதொரு முடிவினை எடுப்பார்களேயானால் பலாலியில் மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்களை் சுலபமாக தீர்க்கப்பட்டுவிடக் கூடியதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியிலமைந்துள்ள யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையம் நிறுவப்பட்டமை பாராட்டத்தக்கது என்றும் அதன் நோக்கம் சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பக்கசார்பின்றி உண்மைச் செய்திகளை வெளியிடுவதே முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகங்கள் பலப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன் அவை உண்மை மற்றும் நேர்மையான வழியில் பயணிக்கும் பட்சத்தில் அவற்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கத் தயாராகவுள்ளேன். அத்துடன் அமையத்தின் நோக்கம் சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் இதற்கென ஒழுக்கநெறிக் கோவை அமைத்து செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டென்றும், அதனை தூண்டவேண்டாமென்றும் கடந்த காலங்களில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகள் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இதனிடையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தொடர்பில் ஊடகங்களில் வெளிவரும் அவதூறான செய்திகள் தொடர்பில் தாம் துறைசார்ந்தோரிடம் பகிரங்கமாக விவாதிக்க தயாராகயிருப்பதாகவும், எமது கொள்கைகளை நாம் வெளிப்படையாகவே வெளியிட்டு வருகின்றோம் என்றும் ஈ.பி.டி.பி தப்புச் செய்தால் உண்மையை நிரூபித்து செய்திகளை வெளியிடுங்கள் என்றும் கட்சி தவறு செய்யும் பட்சத்தில் அதற்கு பொறுப்பெடுத்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார். இதன்போது ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா உடனிருந்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91122/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சராக இருக்கும் போது (அதுவும் ஆளும் கட்சியில்)மீள் குடியேற்றங்களை ஒழுங்காக செய்ய முடியாதவர் எப்படி வடமாகண தேர்தலில் இவரை மக்கள் தேர்ந்தெடுத்தால் (அப்படி தான் இவர் மனப்பால் குடிக்கிறார் போல தெரிகிறது)குடியேற்றங்களை ஒழுங்காக செய்யலாம் என கூறுகிறார்??

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் கூட சிங்களவரையும்...முஸ்லிம்களையும் குடிய்ற்றுவார்...இதுதான் இவர் கொள்கை

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவெடுப்பார்கள், அதாவது கூடியவிரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள். அனால் என்ன நக்கிப்பிழைக்க மகிந்த இருக்கிறார் பிரச்சனை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.