Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கிழக்கு தமிழர்களுக்கான தாயகம் என்பதற்கு ஆதாரம் இல்லை..!

Featured Replies

  • தொடங்கியவர்

வள்ளுவர ;வந்து கருத்துச் சொல்லிப் போட்டார். அது தான் யாருக்குமே விளங்கவில்லையாக்கும். ஒரே கருத்தில் உறுதியாக இருந்தால் தானே புரியும்!

மேலும், சங்கர் ஜி பிரிந்தபோது மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டனர் என்று சொல்லக் காரணம், பல மூஸ்லீம் உறுப்பினர்களும் இருந்ததால் தான். அவர்கள் பிறகு முஸ்லீம் காங்கிரசில் இணைந்து கொண்டனர்.

முஸ்லீம் காங்கிரசில் மிச்சமாக உள்ள மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் ஈரோசில் இருந்து வந்தவர் தான் என நினைக்கின்றேன்!

இப்ப தான் புரிஞ்சிருக்கு...உண்மை வருகுதுங்கோ..கொஞ்சம் கொஞ்சமா...! இதைத்தான் எதிர்பார்த்தம்...! :P :idea:

  • Replies 158
  • Views 13.7k
  • Created
  • Last Reply

quote="kuruvikal"]

சங்கர் ராஜி அளித்த பேட்டிகளைப் பாருங்கள்..! வீரகேசரி.. போன்ற பத்திரிகைகளில் தாராளமாக வந்துள்ளன..! வீரகேசரியோடு தொடர்பு கொண்டால் தருவார்கள்..! ஓக்கேவா..! :wink: :idea:

  • தொடங்கியவர்

கருத்தை அப்படியே திசை மாற்றி...சங்கர ராஜி விவகாரமாக்கிக் காட்டுறாங்கப்பா...! நல்லாத்தான்...செய்யுறீங்கள்..த

யாழ்க் களத்தில கருத்தியல் மோசடிகளை,வரலாற்றுத் திருபுகளை எவ்வாறு குருவிகள் மேற்கொள்கிறார் என்பதைத் தோலிருத்துக்காட்டவே சங்கர் ராஜி பற்றியும் இரோஸ் பற்றியும் கூற வேண்டி வந்தது.இவற்றை எழுதியது குருவிகளே.அதற்குள் எத்தினை வெட்டிச் செருகல்கள் பின் வாங்கல்களை இந்தக் குருவி மேற்கொண்டார் என்பதை அனைவரும் கண்டிருப்பர்.இவ்வாறு தான் தாந்தோன்றித் தனமான புரிதல்களின் அரைகுறை அறிவுடன் தனக்கு இருக்கும் குழப்பத்தில் தேசிய விடுதலைப் போராட்டததையும் தலமையையும் விமர்சித்துக்கொண்டு , வரலார்றைத் திருத்துக் கொண்டிருகிறார்.

தமது தேவைக்கென வரலாற்றைத் திரிப்பது சங்கர் ராஜி போன்ற கைக் கூலிகளுக்கு மட்டும் கை வந்த கலை இல்லை அவரைப் போலவே இங்கேயும் தேசிய விடுதலைப் போராட்டதைக் கொச்சைப்படுத்த வரலாற்றைத் திருத்துக் கருதுக்களை எழுதுவோரின் முகமூடியள் கிழிக்க இது அவசியம் ஆகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிகமாக சங்கர் ராஜி பற்றியது இந்திய விமான நிலையத்தில் ஒருவர் பல லட்சம் டெலர் காசுடன் சுங்க தறையினரால்கைதாகிறார் அது உடனடியா இந்திய பத்திரிகைகள் எல்லாவற்றிலும் வெளியாகிறது அன்னிய செலாவணி கடத்தல் மோசடியென்று பின்னர் அவரை கைது செய்த விமான நிலைய கவல் துறைக்கு இந்திய உளவு தறையினரால் ஒரு தகவல் அனுப்ப படுகிறது அவரை உடனடியாக விடுதலை செய்ய சொல்லி அவரும் சத்தமில்லாமல் விடுதலையாகிறார் அவர்தான் சங்கர் ராஜி அவருக்கும் அந்த பணத்திற்கும் என்ன தொடர்பு அந்த பணத்திற்கும் றேவிற்கும் என்ன தொடர்பு அவரிற்கும் றோவிற்கும் என்ன தொடர்பு ??? சில நெரம் ஈழவிடுதலை போரை நடத்த ஆயுதம் வாங்க றோ கொடுத்த பணமா இருக்கலாம்.

  • தொடங்கியவர்

யாழ்க் களத்தில கருத்தியல் மோசடிகளை,வரலாற்றுத் திருபுகளை எவ்வாறு குருவிகள் மேற்கொள்கிறார் என்பதைத் தோலிருத்துக்காட்டவே சங்கர் ராஜி பற்றியும் இரோஸ் பற்றியும் கூற வேண்டி வந்தது.இவற்றை எழுதியது குருவிகளே.அதற்குள் எத்தினை வெட்டிச் செருகல்கள் பின் வாங்கல்களை இந்தக் குருவி மேற்கொண்டார் என்பதை அனைவரும் கண்டிருப்பர்.இவ்வாறு தான் தாந்தோன்றித் தனமான புரிதல்களின் அரைகுறை அறிவுடன் தனக்கு இருக்கும் குழப்பத்தில் தேசிய விடுதலைப் போராட்டததையும் தலமையையும் விமர்சித்துக்கொண்டு , வரலார்றைத் திருத்துக் கொண்டிருகிறார்.

தமது தேவைக்கென வரலாற்றைத் திரிப்பது சங்கர் ராஜி போன்ற கைக் கூலிகளுக்கு மட்டும் கை வந்த கலை இல்லை அவரைப் போலவே இங்கேயும் தேசிய விடுதலைப் போராட்டதைக் கொச்சைப்படுத்த வரலாற்றைத் திருத்துக் கருதுக்களை எழுதுவோரின் முகமூடியள் கிழிக்க இது அவசியம் ஆகிறது.

ஓமோம் வழமையான உங்கள் இயலாமையை இப்படித்தான் சொல்லிக்கிறது என்பது தெரியும் பார்வையாளர்களுக்கு.

இப்ப ஈரோஸுக்கு இன்னொரு தலைவர் சங்கராஜி இருந்தார் என்றாவது சனத்துக்குப் புரியும்...! அவர் எப்படி வந்தார் என்று...ஆராய்ஞ்சு அறிவினம்...! உங்கட கருத்தை அப்படியே நம்புவினம் என்றில்லை..ஓக்கேவா..! தோலுருக்கவும் நாருரிக்கவும்..உண்மைகளுக்கான ஆதாரங்கள்..நீங்கள் தந்ததே கிடையாது..! அப்புறம் என்ன..! எல்லாம் வாயால்தான்..! :P

ஆனால்..இத்தனைக்கும் காரணம்..என்ன...அதுதான் கேள்வி...! இன்றைய கூட்டமைப்புத் தனிக் கட்சிகளும் நாளை ஒரு அதிருப்தியோடு..இதே பாதைகளை மீளவும் தெரிவு செய்யாயினம் என்றதுக்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்படுகிறது..என்பதுதான் வினவல்..! அது எங்க போயிட்டு இருக்கு...சங்கர் ராஜுயின் பேசாளரா குருவியை இனக்காட்டிடனும் என்ற தோறணையில் போயிட்டு இருக்கு...! இதுதான் யாழ் களத்தில இப்ப நடந்திட்டு இருக்கிற கருத்தாடல் வழமை...! :wink: :idea:

தேசிய விடுதலை பற்றிய அரசியற் தெளிவு தான் போராட்டப் பாதையில இருந்து விலகாம ஒருவரை பயணிக்க வைக்கிறது.தெளிவில்லாமல் அல்லது சுய லாபத்திற்காக அந்தப் பாதையில் இருந்து வழி மாறுபவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பர்.இங்கே தெளிவில்லாமல் இருப்பவர்கள் தெளிவாக வேண்டியது அவர்களைப் பொறுத்தது.ஒருவர் வருங்க் கலத்தில் அந்தப்பாதையில் இருந்து பிரளுவாரா இல்லயா என்பது அவரைப் பொறுத்தது.போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் அதன் பயனை அனுபவிப்பர்.இதுதான் வரலாறு சொல்லும் பாடம்.

போராட்டப்பாதையைத் தெளிவாக புரிந்து கொண்டவர்கள் அதனுடன் என்றும் இணைந்திருப்பர்.அது தான் இங்கும் நடக்கிறது.உமக்கும் சங்கர் ராஜியின் வரலாறு சொல்லும் பாடம் அதுவே.

அறிவினம்...! உங்கட கருத்தை அப்படியே நம்புவினம் என்றில்லை..ஓக்கேவா..! தோலுருக்கவும் நாருரிக்கவும்..உண்மைகளுக்கான ஆதாரங்கள்..நீங்கள் தந்ததே கிடையாது..! அப்புறம் என்ன..! எல்லாம் வாயால்தான்..! :P

அப்ப நீர் எதால எழுதுறீர்? நான் கையால தான் எழுதுறன் வாயால பேசுறன், நீர் எந்தப் பக்கத்தால கதைக்கிறனீர்? :lol::D

  • தொடங்கியவர்

எனி இப்படி தனி நபர் தாக்குதலை ஆரம்பிச்சு...குருவிகள் மேல ஒரு தொப்பியைப் போட்டிட்டு..நாருச்சிட்டம் என்று தம்பட்டம் அடிச்சுக்க வேண்டியதுதான். உங்களுக்க நீங்களே..ஆனா உலகம் நல்ல விபரமாத்தான்..விடயங்களை அறிஞ்சுக்குது..உங்களையும் விட..! எனி இங்கு எழுதிப் பயனில்லை..அப்புறம்...விவகாரம் இருந்தா அங்க சந்திப்பம்..! :P :idea:

ஓமோம் வழமையான உங்கள் இயலாமையை இப்படித்தான் சொல்லிக்கிறது என்பது தெரியும் பார்வையாளர்களுக்கு.

இப்ப ஈரோஸுக்கு இன்னொரு தலைவர் சங்கராஜி இருந்தார் என்றாவது சனத்துக்குப் புரியும்...! அவர் எப்படி வந்தார் என்று...ஆராய்ஞ்சு அறிவினம்...! உங்கட கருத்தை அப்படியே நம்புவினம் என்றில்லை..ஓக்கேவா..! தோலுருக்கவும் நாருரிக்கவும்..உண்மைகளுக்கான ஆதாரங்கள்..நீங்கள் தந்ததே கிடையாது..! அப்புறம் என்ன..! எல்லாம் வாயால்தான்..! :P

அது தானே உங்கட ஆதாரம் சங்கர்ராஜியின் பேட்டி எண்டா அது உண்மை தான்.சனத்துக்கு வடிவாத் தெரியும் யாரு சங்கர் ராஜி எண்டு உமக்குத் தெரியாட்டி அது சனத்துக்கும் தெரியாது என்பது தான் உமது அறிவின் எல்லை என்பது. :lol:

அதோட இரோசுக்கு என்றும் தலைவர் இருந்தது கிடையாது.எல்லா முடுவுகளும் மத்திய குழுவாலயே மேற்கொள்ளப் பட்டது.பாலகுமார் மத்திய குழுவின் செயலர். :idea:

  • தொடங்கியவர்

தலைவர் இல்லாட்டி செயலர்...இப்ப அதுதான் முக்கியம்..! ஆனா...ஈரோஸ்..பாலகுமாரோடு...போகவி

நாரயண சுவாமி என்னும் ரோவின் ஊடகவியலாளரின் ஆங்கிலக்கட்டுரையில் இருந்து ஒரு சில பகுதிகள்.இந்தக் கட்டுரை சங்கர் ராஜி இறந்த போது அவருக்கு அனுதாபம் தெருவிக்கும் வகையில் அவரை ஒரு விடுதலைப் போராளியாகச் சித்தரிக்கவும் புலிகள் மேல் குற்றச் சாட்டுக்களை அடுக்கவும் என்ற நோக்கில் எழுதப் பட்டது.ஆனால் அதில் சில வரலாற்று உண்மைகள் இடைகிடை வருவதால் அவற்றை படி எடுதுப் போடுகிறேன்.தெரிய விரும்புபவர்களுக்கு மட்டும்.

Tribute: Shankar Rajee

M.R. Narayan Swamy

In the last years of his life, Shankar (real name Nesadurai Thirunesan) had bowed out of the Indian media scene and led a largely low key, though not quiet, life, hopping between Chennai, where his mother lived, and Colombo, where he was a consultant with the state-run Cashew Corporation.

In the years I covered the Sri Lankan ethnic conflict, I came into close contact with Shankar and he helped me gain valuable insight into the Tamil society.

But their relations never improved, and years later LTTE’s Anton Balasingham, probably reflecting Prabhakaran’s view, accused Shankar of being an Indian spy—a charge the latter vehemently denied.

Shankar was also among the first to understand that New Delhi would never allow an independent Tamil Eelam to come up.

During the years leading up to the 1987 India-Sri Lanka peace agreement that sought to end Tamil separatism, Shankar, as the EROS military wing leader, masterminded some deadly bomb attacks in the island-nation that claimed many innocent lives. He also developed close ties with the Indian establishment but this was not enough to save him from a jail term in Chennai that may have contributed to his early death.

Shankar and Balakumar met the then Prime Minister, Rajiv Gandhi, just before the latter flew to Colombo in July 1987 to sign the India-Sri Lanka accord. Prabhakaran, however, continued to mistrust him. Shankar and Balakumar met the LTTE chief at New Delhi’s Ashok Hotel at that time; but on a second occasion, Prabhakaran told Balakumar that he did not want to see Shankar.Shankar had a keen understanding of the Sri Lankan Tamil society and of LTTE. When the Tigers took on the Indian Army, he prophesied to friends that Prabhakaran would never, ever give up his Eelam goal. He was proved right.

Shankar was arrested in Chennai in 1997 on charges of smugggling foreign currency and was jailed. None of his contacts in the Indian establishment came to his rescue.

தலைவர் இல்லாட்டி செயலர்...இப்ப அதுதான் முக்கியம்..! ஆனா...ஈரோஸ்..பாலகுமாரோடு...போகவி

  • தொடங்கியவர்

இதில் எவை உண்மை..எவை பொய் என்று..ஆதாரங்களோடு உங்களால் சொல்ல முடியுமா நாரதரே..! அப்பதான் புலுடாக்கள் வெளிப்படும்..! சும்மா மற்றவையை கேள்வி கேட்டன் பதில் சொல்லினமில்ல..என்று புலம்பிட்டுத் திரியாம..ஆதாரங்களோடு..சொல்லுங

இதில் எவை உண்மை..எவை பொய் என்று..ஆதாரங்களோடு உங்களால் சொல்ல முடியுமா நாரதரே..! அப்பதான் புலுடாக்கள் வெளிப்படும்..! சும்மா மற்றவையை கேள்வி கேட்டன் பதில் சொல்லினமில்ல..என்று புலம்பிட்டுத் திரியாம..ஆதாரங்களோடு..சொல்லுங

சரி குருவியின் கதையை விட்டு தலைப்புக்கு மிகவும் பொருந்தும் ஒரு கட்டுரையை இங்கே இணைக்கிறேன்.தமிழ்த்தேசியத்த

வீரா: இன்றைய இந்த நிகழ்ச்சியின் தலையங்கம் 'தமிழ்த் தேசியமும் ஊடகச்சவல்களும்' என்பதாகும் இதில் மிக முக்கியமாக இன்று, ஊடகங்களும் சரி, மக்களும் சரி, எல்லோருமே பேசுகின்ற முக்கியமான வார்த்தைப் பிரயோகமாக தமிழ்த்தேசியம் என்ற வார்த்தை அமைந்திருக்கிறது. இந்த தமிழ்த்தேசியம் என்கின்ற விடயத்தை - நாங்கள், ஓட்டுமொத்தத் தமிழர்கள் எப்படி அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

கா.சிவத்தம்பி: இந்த உரையாடலில் நண்பர் பாலகுமாரன் அவர்களுடன் கலந்து கொண்டு உரையாடுவதில் மனம் நிறைந்த திருப்தி, தமிழ்த்தேசியம் என்ற சொற்றொடருடைய முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நான் கருதுகின்றேன். நீங்கள் முதலிலே சொன்னது போல இந்த தமிழ்த்தேசியம் என்று இந்தச்சொல் இந்தச் சொற்றொடர், இந்த எண்ணக்கருத்து இன்று சிறீலங்கா பாராளுமன்ற அமர்வுகளிலும், இலங்கை அரசியல் போராட்ட களங்களிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களால் பயன் படுத்தப்படுகிற ஒரு சொல்லாகி விட்டது. 'தெமுலு ஐhதிய சந்தானய, என்று சொல்லும் அளவிற்கு அது முக்கிய கருதுகோலாக வந்துவிட்டது. என்னைப்பொறுத்தவரையில், தமிழ்மக்களினுடைய நீண்டகால குறைபாடுகளுக்கு எதிரான போராட்டங்களை இந்தத் 'தமிழ் தேசியம் என்ற கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது முக்கியமான விடயமாக கருதுகின்றேன். அதேவேளையில் தமிழ்த்தேசியம் என்று நாம் எதனைக்கருதுகின்றோம் இது மிக முக்கியம். உண்மையில் மிக கருத்துத் தெளிவுடன் எந்தவிதமான சந்தேகங்களுக்கும் இடமில்லாத வகையில், அதனை நாங்கள் தெளிவுபடுத்திக்கொள்வது அவசியமென்று கருதுகின்றேன் .

தமிழர்களுக்கு மாத்திரமில்ல தமிழர்கள் அல்லாதவர்களும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் பொதுவிலே, வழக்கத்திலே நமக்குத் தெரிந்த நம்முடைய பண்பாட்;டு வழக்கங்களில் ஈழத்தமிழ் என்கிறதைக்கூட இடை நிறுத்தி - 'இலங்கைத்தமிழ் தேசியம், இலங்கையில் தமிழ் தேசியம்" என்ற சொற்றொடரை அந்த ஒரு காரணத்திற்காகப் பயன்படுத்த விரும்புகின்றேன்.

என்னுடைய அபிப்பிராயப்படி இலங்கையில் தமிழ்த்தேசியம் என்பது இலங்கையிலுள்ள தமிழ்மக்கள் இந்தத் தேசத்தின்பால் தங்களுக்குள்ள நிலத்தை வன்புறுத்துவதான ஒரு அரசியல் கொள்கை.

ஏனெனில் இவர்களும் நீண்டகால வரலாற்று - சமூக பண்பாட்டு உறவின் பின்னணியில் இந்த நாட்டில் இலங்கைத் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்பதற்கான ஒரு ஆட்சியாப்பு அந்தஸ்த்தை அல்லது ஒரு அரசியல் அந்தஸ்த்தை இந்தத் தமிழ் தேசியம் என்ற சொல் எமக்கு வழங்குகிறது

நிச்சயமாக - எங்களுக்கு கடந்த காலத்தில் ஆட்சியாப்புக்கள் அரசியல்யாப்புக்கள் இருக்கவில்லை. சிங்களத்துக்கு சிங்கள மொழிக்கு பௌத்தத்திற்கு அது இருக்கிறது. முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையிலும் அவர்கள் தங்களுடைய மத அடிப்படையில் ஒன்றாக இணைந்து நிற்கின்ற ஒரு உலகப்பொதுவான தன்மை இலங்கையிலும் காணப்படுகின்றது. எனவே அந்த விடயத்தில் அவர்களுடைய ஒருமைப்பாடும் அடையாளமும் நிச்சயமாக இருக்கிறது.

நம்மைப் பொறுத்தவரையில் இலங்கைக்குள்ளே நமது அடையாளம் என்ன என்கின்ற அரசியல் வினாவிற்கான ஒரு குரலாக, அந்த அடையாளத்தைக்கேட்டு நிற்கின்ற, ஒரு அரசியல் கருத்துருவாக்கமாக நான் தமிழ்த் தேசியத்தைப் பார்க்கின்றேன்.

உண்மையில் தமிழ் தேசியம் என்பதை நா~னலிசம் என்ற சொல்லினுடைய மொழி பெயர்ப்பாகச் சொல்வதிலும் பார்க்க, இந்தத் தேசத்தில் தமிழுக்குரிய நிலப்பரப்பான தமிழ் தேசம் என்பதை எவ்வாறு நாங்கள் (தமிழர்கள்) பார்க்கின்றோம்? இங்கே தமிழ் தேசம் என்று நாங்கள் எதனைக் கருதுகின்றோம்? என்கின்ற விடயங்கள் இதனூடாக வருகிறது. இது ஒரு மிக முக்கியமான ஒரு விடயம். ஏன் என்றால் எங்களுடைய இந்த நாடு சம்பந்தமான, இலங்கை சம்பந்தமான எங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளுக்கான, எங்கள் அடையாளத்துக்கான ஒரு உரிமைக் குரலாகவே இதனை நான் பார்க்கின்றேன்.

இலங்கையில் தமிழ்த்தேசியம் என்று அழுத்திச் சொல்லும் காரணம் என்னவென்றால் தமிழர்கள் வாழுகின்ற இடங்களில் எல்லாம் அந்த தேசங்களோடு இணைந்து வாழ்கிறார்கள். குறிப்பாக தமிழகத்திலே தமிழ்தேசியம், நீண்டகால வரலாறை உடையது. மலேசியாவில் கூட அந்தச் சொல் பயன்படுத்தப்படா விட்டாலும் பேசப்படுகிறது. தென் ஆபிரிக்காவில் கூட பேசுகிறார்கள். இங்கே நாங்கள் இலங்கையில் தமிழத்தேசியம் என்று சொல்வது இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் அடையாளங்களை, அதற்கான அங்கீகாரங்களை, அதற்கான இடத்தை, வன்புறுத்துவதற்கான ஒரு தேச நிலைப்பட்ட குரலாகும்.

வீரா: பேராசிரியர் குறிப்பிட்டது போலவே இந்தத் தமிழ்த் தேசியம் எல்லா இடங்களுக்கும் ஏற்றதுபோலவே இங்கே(எங்களுடைய தளத்தில்) வைத்துப்பார்க்கின்ற பொழுது மிக முக்கியமான அரசியல் கருத்தியல் கோட்பாடு எதனுடைய பின்னணியிலே உருவாக்கப்பட்டது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

பாலகுமார்: இது ஒரு மிக முக்கியமான வினா என நான் நினைக்கிறேன். உண்மையில் தமிழ் தேசியம்என்பதை மிகத் தெளிவாக அறிவு பூர்வமாக இன்றைக்கு நிரூபிக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கு மிகுந்த அறிவுத்திறன் நிறைந்த ஊட்டம் நிரம்பிய கருத்துக்கள் நாங்கள் காவிக்கொண்டு செல்லவேண்டிய தேவையும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த்தேசியம் யாருக்கும் எதிரானது அல்ல. இது யாரையும் கொல்வதற்காகவோ, யாருக்கும் எதிராகவோ, எந்த விதமான சூழ்ச்சிகள், தந்திரங்கள் கொண்டதல்ல. இது உண்மையில் இருப்பினுடைய வெளிப்பாடு. தமிழ் மக்களிலே மனங்களிலே நிலப்பிரிவு என்பது இருக்கின்றது. தாய்நிலத்தை விட்டுப் பிரிந்த வாழ்வு இருக்கிறது. அதைப் போல துயர், கொடுந்துயர் நாங்கள் என்றும் அனுபவித்தது கிடையாது. 'அலைந்துழல்வு" நாங்கள் அலைந்து திரிகின்றோம். எமது அடையாளம் என்னவென்று தெரியாமல் தவிக்கின்றோம். இது யாருக்கும் எதிரானதல்ல... இலங்கையில் தமிழ்த் தேசியம் என்பது உண்மையில் அந்த மக்களுடைய அடையாளத்தைப் பேணுவதற்கான ஒரு கொள்கை என்பதை உலகம் ஏற்றுக்கொண்டால் புரிந்து கொண்டால் அதுவே எங்களுக்கு பாரிய வெற்றியாக மாறும். தேசியத்தினுடைய அறிதல் நிலையையும், அறிவு நிலையையும் வெளியிலே கொண்டு வருவதற்காக பேராசிரியர் சொன்னது போல தெளிவான ஒரு கருத்துருவாக்கத்தை நாங்கள் வைக்க வேண்டிய காலத்தில் நாங்கள் இருக்கின்றோம்

வீரா: இப்படியான கருத்துருவாக்கம் தமிழ்மக்களினுடைய வேர் வரைக்கும், சாதாரணமக்களினுடைய மன நிலைவரைக்கும் ஆழ வேரூன்றி விட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பாலகுமார்: 13ம் நூற்றாண்டுக்கு முன்னால் தமிழ் மக்களினுடைய வரலாறு எழுதப்படவில்லை என்று இன்று சொல்லப்படுகிறது. எங்களுடைய மீள் உயிர்ப்பு குடியேற்றவாத காலகட்டத்திலே தமிழ்தேசியத்தின் உருவாக்கம் குறித்து இன்றைக்குத்தான் ஆய்வுகள் நடக்கின்றது. அது காலம் பிந்தி தான் தமிழ்த்தேசியம் தொடர்பான ஆழமான ஆய்வுகள் மேற்கொள்கின்ற காலத்தில் நாங்கள் வாழ்கிறோம். ஆனால் இன்றைக்கு எங்களுடைய மக்கள் தேசியம் என்று பார்க்கின்ற பொழுது அதனுடைய ஆழமான உள்அர்த்த பரிமாணங்களைப் புரிந்துகொள்வதற்கப்பாலே நான் சொன்னது போல அவர்களுடைய வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டது - அவர்கள் தங்களுடைய தாய் நிலத்திலிருந்து பிரிந்து வாழ்வதென்பது மிகப் பெரிய தேசிய உணர்வினை ஊட்டி இருக்கின்றது. அவர்களுக்கு அதை விட தேசியம் பற்றிய காரணங்கள் கிடையாது. தாய் நிலம் பறிக்கப்பட்டது என்று சொல்லும் பொழுது அங்கிருந்து கேள்விவருகிறது; ஏன் பறிக்கப்பட்டது.? எவ்வாறு பறிக்கப்பட்டது.? பறித்தது எப்படி என்றாகும் பொழுது தமிழ்த்தேசியம் என்பது புதிய வரைவிலக்கணத்தை உலகத்திற்கு முன்னால் வைக்க விரும்புகிறது. அதைத்தான் பேராசிரியர் சொல்ல விரும்புகிறார் அந்த வகையில் அது அறிவு பூர்வமான செயற்பாடாக அமையும்.

வீரா: அதாவது தமிழ்த்தேசியத்தினுடைய மக்களினுடைய கருத்துருவாக்கம் இப்பொழுது வலுவடைந்து வருகின்றது போலத் தெரிகிறது. வலுவடைந்து வருகின்றது போன்ற சூழ் நிலையின் பின்னணி எதுவாக இருக்கும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

கா.சிவத்தம்பி: உண்மையிலேயே, தமிழர்களுடைய உரிமைக்கான போராட்டம் ஏறத்தாள முப்பதுகளிலிருந்து நிச்சயமாக நாற்பத்தி ஏழு, நாற்பத்தி எட்டுகளிலிருந்து அந்தக்குரல் இருந்து கொண்டே வருகிறது. ஆனால் இந்தக்கால கட்டங்கள் எல்லாவற்றிலும் தமிழ்த்தேசியம் என்ற சொல்லாடலை பயன்படுத்தவில்லை. இப்பொழுது நான் நம்புகிறேன் ஏரத்தாள 1990க்குப் பின்னர் 1993,1994களில் தான் இந்தத் தேசியம், தேசியத் தலைவர் என்ற கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. இதில் ஒரு நியாயப்பாடு இருப்பதாக நான் கருதுகின்றேன். ஏனென்றால் இது தேச நிலைப்பட்ட எங்களுடைய இருப்பின் - (பாலா சொன்னது போல) அடையாளத்தைப்பற்றிய ஒரு வற்புறுத்தல். இதனை இன்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். என்னவென்றால் ஒரு காலத்தில நாடு முழுவதிலும்; சம அந்தஸ்து என்று இருந்து, அது சரி வராமல் பின்னர் சிங்களம் மாத்திரம் சட்டம் கொண்டுவரப்பட்டபோது நியாயமான அளவு தமிழ்பிரயோகம் என்கின்ற நிலைப்பாடொன்றும் (அதற்கு சட்டம் இயற்ற முடியாத போதிலும்)வந்தது. அது வந்ததன் பின்னர் உண்மையிலேயே நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்த வடக்கு கிழக்குப் பிரதேசத்தை தமிழ் மக்களினுடைய தாயகமாகக்கொள்கிற கொள்கையினை ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சூழல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்காவால் ஏற்பட்டது. அப்போது இந்தநாட்டின் அரசியலுக்கு சமஸ்டி கட்சியினுடைய மிக முக்கியமான பங்களிப்பு என்னவென்றால் இந்தத் தமிழ் மக்களினுடைய இருப்பினை ஒரு புவியியல் கூறாக எடுத்துக்கொண்டது. .அதில் எத்தனையோ வகையான பிரச்சனைகள் இருக்கலாம், ஆனால் பின்னோக்கிப் பார்க்கிற பொழுது தமிழ்மக்களினுடைய இருப்பிற்கான புவியியல் அடிப்படையை எடுத்துக்கொண்டு அதனுடன் சேர்த்து தமிழ் பேசும் மக்கள் என்கிற சொல்லையும் முஸ்லிம்களையும் தமிழர்களையும் ஒன்றாக இணைப்பதற்காக பயன்படுத்தினார்கள்;. அது ஓரளவிற்கு அரசியல் ரீதியாக வெற்றியீட்டவில்லையென்றாலும

வீரா: பேராசிரியர் குறிப்பிட்து போலவே அதாவது இந்தத் தமிழ்த்தேசியம் வலுவடைந்து வந்தது 90, 94ம் ஆண்டுகாலப்பகுதியென்று குறிப்படுகிறீர்கள். இது இப்படியான ஒருவிதமாக மாற்றம் அடைந்து வளர்ச்சி அடைந்தது என்று கூடச் சொல்லலாம். அதற்கு அடிப்படைக் காரணங்கள் எவையாக இருக்கின்றது?

பாலகுமார்: நல்ல கேள்வி: இன்றைக்கு உலகம் இதுபற்றி ஆய்வுகள் செய்யத் தொடங்கியிருக்கின்றது.

நீங்கள் பார்க்கலாம் 1930ம் ஆண்டுகளில் இருந்து 1951ம் ஆண்டு வரை ஏறத்தாள 24 நீர்ப்பாசனக் குடியேற்றத் திட்டங்களை சிங்கள தேசம் செய்திருக்கின்றது. எப்படியென்று பார்த்தீர்களென்றால், அவர்கள் இன்று வன்னி என்பது எங்களுடைய பகுதிகளையும் அநுராதபுரப் பகுதியையும் சோத்துத்தான் வன்னியென்று சொல்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் அந்தவனம் மிக்க செழிப்பான பகுதியை அவர்களுடைய தாயகமாக கருதி வந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்நிலக்கருத்து இதில் மையமாக இருக்கிறது.

குடியேற்றத்திட்டங்கள் வடமத்திய மாகாணத்தை அண்டிசெய்யப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு நன்றாகத்தெரியும். இலங்கையினுடைய இனச்சிக்கலென்பது அந்த வரண்டவலய நிலப்பகுதியை அந்த மக்களுக்கு ஓதுக்கீடு ஆக்காமல் விட்டது என்று. இது ஓரு புதியகருத்தை உலகத்திற்கு வைத்திருக்கிறம். இன்றைக்கு நாங்கள் நில மீட்பு என்று சொல்கின்றோம். மண்மீட்பு சொல்கின்றோம். அதைவிட மிக முக்கியமானது 70க்கு பின்னர் ஏற்பட்ட பாரிய மாற்றம், 70க்கு முன்னால் அரசியல் எவ்வாறு இருந்தாலும் பேராசிரியர் சொன்னது போல ஒரு செய்தியைக் கூடச் சொல்ல விரும்புகின்றேன்; தமிழரசுக்கட்சியினுடைய மூன்றாவது பங்களிப்பாக இந்தத் தேசத்தை எப்படி மீட்கோணும் என்று 77ம் ஆண்டு தீர்மானித்திருக்கிறார்கள்.

அவர்களால் மீட்கப்படாமல் போய் விட்டாலும் கூட ஒருகாலத்தில் மீட்கப்படும் என்ற நம்பிக்கை அன்றைக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த நம்பிக்கையின் கீற்றைத்தான் நாங்கள் சுமந்து கொண்டு செல்கின்றோம். 70ம் ஆண்டுகளில் பிரபாகரன் என்றொரு ஆளினுடைய வருகைக்காக இந்தத்தேசியம் காத்துக் கொண்டு இருந்திருக்கிறது. அது தெளிவான செய்தி. இந்தத் தேசியத்தை இணைக்கிற சாதனம் என்ன?

அது மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது. தமிழ்த் தேசியத்தை எவ்வாறு இணைக்கோணும்.

அதுமிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது.தமிழ்த்தேசியத்தை எவ்வாறு நாங்கள் இணைக்கிறோம் என்று பார்த்தீர்கள் என்று சொன்னால் அது தேசியத்தலைமைக்கூடாகத்தான் நாங்கள் இணைகின்றோம். அதுமாத்திரம் போதுமென்று சொல்லவரவில்லை. அதில் இருந்துதான் நாங்கள் ஆரம்பிக்கின்றோம்.எழுபதுகளில

வீரா: நாங்கள் குறிப்பிட்டது போலவே, சமகாலத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த்தேசியம் என்பது வலுவடைந்து கொண்டு வருகின்றதாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக மேலோங்கிவிட்டது என்று கருதமுடியாமல் இருக்கிறது. அந்தவகையில் பார்க்கின்ற பொழுது இந்தத் தமிழ்த்தேசியத்தினுடைய மேலோங்கு தன்மைக்கு வளர்ச்சி நிலைக்கு இன்னும் வலுவடைவதற்கு தடையாக இருக்கின்ற காரணிகள், பிரச்சினைகள் எதுவாக இருக்கின்றது. என நீங்கள் நினைக்கின்றீர்கள்.

கா.சிவத்தம்பி: தமிழ்த்தேசியம் என்பது ஒரு குறியீடு. அது ஒரு சுட்டி. இந்தக் கொள்கை நிலைக்கு யார் யார் எதிரிகளோ அவர்கள் தமிழ்த் தேசியம் என்ற சொல்லாடலுக்கு எதிராக நிற்பார்கள் ஒன்று.

அப்போ தமிழ்த்தேசியம் என்பது இலங்கை பற்றி சிங்கள மக்களிடையே நிலவிவந்த பல விடயங்கள், பல மௌனங்களை உடைப்பதற்கான ஒரு சாத்தியப்பாடுகளை உணர்ந்து கொண்டவர்கள் தமிழ்த் தேசியம் பற்றிய ஒரு தொடரான வேறுபட்டவிளக்கத்தை கொடுக்கின்ற ஒரு நிலைமையும், அதன் காரணமாக பல எதிப்புகள் வருகின்ற நிலைமை ஒரு புறத்திலும், இரண்டாவதாக தமிழ் மக்களிடையே இது பற்றிய இலக்குகள் பற்றி தெளிவில்லாத் தன்மையும்.

மூன்றாவதாக மிக முக்கியமானது அரசியல் சூழலில் இலங்கையின் தமிழ்த் தேசியத்தினுடைய சாத்தியப்பாடுகள் யாவை என்பது பற்றிய ஒரு அதில் கூட ஒரு ஆழம் ஏற்படவில்லை. அது எங்கே போய் எங்கு நிற்கும் என்ற தேடல் என்பதுபற்றிய வினா இலங்கைக்குள் மட்டும் நிற்கவில்லை, தென்னாசிய நாடுகள்பலவற்றை உள்ளடக்கியது. அதுவும் இலங்கையினுடைய புவியியல் அமைப்பும் வட கிழக்கிலும் புவியியல் அமைப்பும் அதற்குள் வருகின்ற கப்பல்போக்குவரத்து, கடல் போக்குவரத்து மையங்களும் இலங்கையினுடைய பாரம்பரிய ஆளுகை முறைகள் என்கிறதெல்லாம் வருகிற பொழுது இது ஒரு முற்று முழுதான சர்வதேச அரசியல் ஆகிறது. எனவே மூன்று நான்கு நிலையில் பார்க்க வேண்டும். இலங்கை நிலையில் தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டை எதிர்க்க விரும்புகின்றவர்கள், அவர்கள் எதிர் நிலைப்பட்டவர்கள் ஒன்று.

சிங்கள மக்களினுடைய - சிங்களத்துவ மேலாண்மை சிங்கள மக்கள் எல்லாரையும் என்று சொல்ல முடியாது சிங்களத்து மேலாண்மையை நிலை நிறுத்த விரும்புவர்கள், மற்றது இந்த விடயம் பற்றிய தெளிவில்லாத தமிழ் நிலைக்கட்ட கருத்துக்கள், தென்னாசிய கருத்துக்கள், சர்வதேசக்கருத்துக்கள் இந்த நான்கு மட்டத்திற்கும் தமிழ்த்தேசியம் என்பது யாது? நாங்கள் இதனைத்தான் கருதுகின்றோம் பாலா சொன்னதுமாதிரி இதனை நாங்கள் மிகத் தெளிவு படுத்தி சொல்லவேண்டும். இதுயாருக்கும் எதிரானது அல்ல. எங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுகிற ஒரு விடயம். அந்த அடையாளத்தை நாங்கள் சொல்ல வேண்டும் அந்த அடையாளத்தை ஏன் இப்பொழுது தான் சொல்லுகின்றோம். ஏன் முந்திச் சொல்லவில்லையா என்றால் அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றின் வளர்ச்சியில் தான் எல்லாம் வரும், சொற்கள் சும்மாவராது அது காலத்திற்கு என்ற சொல் தான்வரும் ஒரு பையனைப் பார்த்து நாங்கள் வாலிபன் என்று சொல்வதில்லை, ஒரு வயோதிபரைப்பார்த்து நாங்கள் இளைஞர் என்று சொல்வதில்லை, வயசுபோனாத்தான் வயசு போனவர் என்று சொல்வோம். அதுமாதிரி இந்தச் சொற்களுக்கும் வயதுண்டு, கருத்துண்டு அந்தஅளவில் தான் இதற்கும் ஒரு வளர்ச்சியுண்டு. பிரச்சனை என்னவென்றால் தமிழ்த்தேசியம் என்ற இந்தச் சொல்லாடல் எதிர் நோக்குகின்ற சவால்கள், பிரச்சனைகள்; யாவை?

அவற்றுக்கெதிராக எப்படி முகம் கொடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன்.

வீரா: தமிழ்த் தேசியத்தை தென்னிலங்கை சார்பாக தென்னாசியம் பிரந்தியம் சார்பாக, தமிழர்களுடைய கருத்துவேறுபாடுகள் சார்பாக, சர்வதேசம் சார்பாக இதிலே தென்னிலங்கை சார்பாக தெமிழ ஐதிக என்று குறிப்பிட்டிருந்தார்கள் கூட எப்படியான கருத்துரு வாக்கம் இருக்கிறதென்று கூறமுடியுமா?

பாலகுமார்: அது ஏலவேதெரிந்தவிடயம் தான். அது 2400ஆண்டு வரலாற்றுக்கூடாக சொல்லப்பட வேண்டிய செய்தி அவர்களுடை அந்த உண்மையில் ஐதீகங்களூடாக உருவாக்கப்பட்ட பாரிய கருத்துருவாக்கத்தினுடைய செய்தி அது உண்மையில் ஊடகங்கள் தான் செய்தது. நான் சொல்லுவது வழக்கமாக மகாநாம தேரர் என்ற பிக்கு எழுதிய மகாவம்சம் என்பது உலகத்தின் தலையாய இலக்கியம். ஆனால் அதை அவர் ஒழுங்குபடுத்தி திட்டமிட்டு அந்தக்காலத்தில் செய்திருப்பதென்பது கவனிக்கப்படவேண்டிய செய்தி.

அறிவு பூர்வமாகத்தான் அந்த பரம்பரையைச் செய்தார்கள். வெறுமனே வாய்திறந்தபடி யெ;யவில்லை. அதுபற்றியெல்லாம் ஆய்வுகள் செய்யப்படுகிறது. அவ்வாறாயின், ஒரு நீண்ட காலமாக சிங்களத் தேசியம் என்பது தமிழ்த்தேசியத்திற்கு எதிரான நிலைப்பாடுகொண்டதாக உருவாக்கப்பட்டுவிட்டது. அதை எளிதில் மாற்றுவதென்பது முடியாதகாரியம். மகிந்தருடைய அறிக்கைகளைப் பார்க்கும் பொழுது இரண்டாகத் தன்மை துலாம்பரமாகத் தெரியும்.

அவர்கள் தீர்க்க விரும்புவது போல காட்டிக்கொள்வார்கள், தீர்க்க முடியாமல் இருக்கிறார்கள் தீர்ப்பதற்கு இருக்கக் கூடிய சகல வாய்ப்புகளையும் மீறியும் விடுகிறார்கள். ஒரே நேரத்திலே இதைச் செய்வார்கள் உலகத்தில் நாங்கள் எங்கும் பாத்திராத விடயம். தீர்க்க வேண்டி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட தீர்க்க முடியாமல் இருப்பதென்பது வந்து எது என்று சொன்னால் இந்த கருத்துவாக்கம்.

அப்ப சிங்கள் தேசத்தின் பிரச்சனைவந்து அதனுடைய கருத்துருவாக்கம். அதற்கமைவாக அவர்களுடைய கருத்தியல் கோட்டையைப் பாதுகாக்கும் இராணுவம். அதற்கும் மேலாக ஒரு சட்டம.; அது சம்பந்தமான அரசியல் யாப்பு. எல்லாம் இதைச் சுற்றி அமையும் பொழுது அறிதல் மறுப்புச் செயற்பாடாக அமைகிறது. பகுத்தறிவற்ற பாங்குள்ள தேசத்தை எவ்வாறு பகுதறிவாக்குவது அல்லது ஐனநாயகப்;படுத்துவதென்பது புலிகளின் மேல் சுமத்தப்பட்ட வேலையாக மாறி விட்டது. எங்களுடைய வலுவினை உறுதிப்படுத்த வேண்டிய அதே காலத்திலே எங்களை பெயர்க்கும் சேனையோடு மோதி நிருபிக்க வேண்டியிருக்கிறது.

சிறீ எதிர்ப்பிற்கு இப்பவே தெரிகிறது எத்துனை பெரிய பளுவைச்சுமத்துவது எத்துணை பெரிதுயரம் என்பது எங்களுக்குத் தான் தெரியும். அந்தக் காலத்துயர். நாங்கள் அறிந்து கொண்டதுன்பம் இருந்தும் கூட நாங்கள் நீடித்தபின்பும் கூட சிங்கள தேசம் இந்த உண்மையை உணர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கு.

வெளியை நாங்கள் மன வெளி வாழ் வெளி யாழ்ப்பாணத்திற்குப் போனால் வெளிதான்.

வெளியில் ஒரு பெரிய செய்தி இருக்கிறது. இன்றைக்கு தமிழீழ மக்கள் தனித்தேசம் தமிழ் தேசியம் அதுவாக இருக்கட்டும் ஒரு பெரிய வெளியை இந்த உலகத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டு நல்ல தீர்வை முன்வையுங்கள். இது ஒரு புதிய பரிமாணம் என்று பார்க்கின்றேன். சிங்கள தேசத்தோடு மோத வேண்டியது ஒரு நிலைப்பாடு. தென்னாசியப் பிராந்தியத்தில் நாங்கள் உணர்த்த வேண்டியது எந்த விதமான குழப்பமும் அற்ற எங்களுடைய இருப்பை உறுதிப்படுத்துகின்ற ஒரு அணியென்பதைத் தவிர வேறு எங்களுக்கு ஒரு நோக்கமும் கிடையாது என்பதை உறுதிப்படுத்தலாம். உலக அரங்கத்தில அதனுடைய நவீன மயமாக்கல் போக்கிற்கு ஏற்பச்சென்று அவர்களுக்கு உணர்த்த வேண்டிய செய்தி ஏராளம் இருக்கின்றது.

தொடர்ந்து அந்த இடங்களால் பேசிக் கொண்டிருக்கின்றோம். இது ஒரு நம்ப முடியாத செய்தியாக உலகத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. ஏன் பேசுகிறோம் என்று சொன்னால் எதற்கு ஒரு பகுத்தறிவின்அடிப்படையேமூலம

வீரா: இதில் பாலகுமாரன் அவர்கள் குறிப்பிட்டது போலவே. இந்த வார்த்தைப்பிரயோகத்திற்கு சர்வதேச ரீதியான கருத்தையும் நாங்கள் பார்த்திருந்தோம் இருந்தாலும் இதற்கு மத்தியில் கூட இந்தச் சூழ்நிலையிலும் கூட தமிழர் தரப்பிற்கு மத்தியில் இது சார்ந்த அரசியல் கருத்து முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. இந்த நோக்குநிலையைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கா.சிவத்தம்பி: துரதிஸ்டவசமாக இலங்கைத் தமிழர்களிடையே உள்ள அரசியல் வரலாற்றை நோக்குகிற பொழுது ஒரு, இந்த இருநிலைப்பட்ட மூன்று நிலைப்பட்ட அல்லது பல்வேறு நிலைப்பட்ட கருத்துக்கள் தமிழ் மக்களிடையே நிலவி வந்துள்ளது உண்மை. ஆனால் ஒரு காலகட்டத்தில் 77களில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் எல்லாக்கட்சிகளும் இனைந்து கொண்டன. அதனை வு.ரு.டு.கு என்று மாத்திரமாக்காமல் நான் நினைக்கிறேன் காலம் சென்ற திருச்செல்வம் அதற்கு இன்னொரு பரிணாமம் கொடுத்தார். தமிழ் யுனைற்றி லிபேரசன் புறோன்ற் - விடுதலை என்பது மிக முக்கியமானது. தளை நீக்கம் விடுதலையிலும் பார்க்க மிகக் கூடியது.அந்த விடுவிப்பு மிக முக்கியமானது ஆனால் துரதிஸ்டவசமாக. பிறகு அந்த அரசியல் வரலாற்றில் ஏற்பட்டிருக்கிற பிரச்சனைகள் காரணமாக, தென்னாசிய அரசியல் காரணமாக, இலங்கை அரசின் அரசியல் நிலைகாரணமாக மேலும் சிக்கலுக்கு குறிப்பாக இளைஞர் இயக்கங்கள் இதற்கு முதன்மைப்பட வந்ததன் பின்னர். இந்த தேசிய நிலைப்பாட்டில் பல தளம்பல்கள் ஏற்பட்டன. அவற்றை தென்னிலங்கை அரசு நன்கு ஊக்குவிக்க விரும்புகிறார்கள். அந்த நிலைமை காரணமாக தமிழ்மக்களிடையே இன்னும் ஒரு நிலையான கருத்து ஏற்படவில்லை. அதற்கு நியாயபூர்வமான அம்சமும் இருக்கிறதென்னவென்றால் இந்த வடகிழக்கினுடைய பிரச்சனையாக இது இருக்கிற அதே வேளையில் வடகிழக்கிற்கு வெளியே வாழ்கிற தமிழ் மக்களுக்கும் இது பற்றிய ஒரு தெளிவினை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறேன். எனவே ஒரு புறத்தில் இதை தெளிவு படுத்த வேண்டியிருக்கின்றது.

மற்றைய புறத்தில் இது நாங்கள் சில அரசியல் வரலாற்றிடம் கைதிகளாகவும் இருக்கின்றோம்.

அப்போ அதனை நாங்கள் ஒட்டு மொத்தமாக பார்க்கவேண்டும். துரதிஸ்டவசமாக இதை நான் சொல்ல விரும்புகிறேன்.

இந்த கால கட்டத்தில் அவதானித்துப் பாருங்கள் தமிழர் ஒருமைப்பாட்டைப் பற்றி பேசுவதற்கு ஒரு தயக்கம் காணப்படுகின்றது. ஏனென்றால் இந்தத் தமிழ் தேசியம் ஒருமைப்பட்ட தமிழ்குரலாக வந்துவிடக் கூடாது என்பதில் சில சக்திகள் கவனமாக இருக்கின்றன. அதனை எப்படியாவது உடைக்கவேண்டும்; அல்லது தகர வேண்டும் என நினைக்கின்றன. எனது தாழ்மையான அபிப்பிராயம்.

ஆன படியினால் தமிழ்மக்களிடையே இது சம்பந்தமாக இன்னொரு அடிப்படையான காரணம் என்னவென்றால் எங்களுடைய வரலாற்றை நாங்கள் பார்க்க வேண்டும் நாங்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் மாத்திரம் இருந்தவர்கள் அல்ல. நாங்கள் போர்த்துக்கேய ஆட்சியின் கீழ் இருந்தவர்கள்; ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் இருந்தவர்கள்;. காலனித்துவ ஆட்சிக்கு இந்த பிரதேசம் பழக்கப்பட்டது போல் மற்ற இடங்கள் அதிகமில்லை. நாவலருடைய போராட்டம் கூட நாங்கள் சைவத்தையும் தமிழையும் வைத்துக்கொள்ளுவோம். தேiயானால் இங்கிலிசை படிக்கிறோம் உத்தியோகத்திற்குப் போகிறோம் என்று சொன்னதே தவிர நாங்கள் அதை நிராகரிக்கவில்லை.

இந்த மாதிரியான பிரச்சனை எங்களுக்கு இருந்து கொண்டே இருக்கு. நாங்கள் காலனித்துவத்திலிருந்து சரியாக விடுபடாத தன்மை இருக்கிறது. இப்பொழுது தான் தேசியம் என்கிற கோசம் மூலம் தான் நாங்கள் காலனித்துவ பிடிகளிலிருந்து விடுபட்ட ஒரு நாடாக தமிழ் தேசியம் என்பது மூன்றாவது உலக நாடுகளில் பின் காலனித்துவ வரலாற்றில் ஏற்பட்ட தேசிய விழிப்புணர்வின் அடிப்படையில் தோன்றிய ஒரு குரலாக அமைவதற்கு காரணம் அது தான்.

வீரா: பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்ட கருத்தைப் போலவே இந்த தமிழர்கள்தரப்புடன் இருக்கின்ற சில அரசியல் கருத்து வேறு பாடுகள் இதனுடைய பின்னணி காரணமாக சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன அதற்கு உங்களுடைய கருத்தென்ன?

பாலகுமார்: உண்மையில் நீங்கள் பார்க்கலாம் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பதற்கு எந்தக் காலமும் இல்லாமல் தமிழ் தேசியத்தின் தொகுதி மக்களினுடைய உயிர்ப்பாக காட்டிக்கொண்டுதான் உலகமோ சிறிலங்காவே இந்த முன் கொடுப்புகைளக் காட்டிக்கொண்டுதான் செய்கிறது.

இதிலிருந்து பார்க்கலாம் இந்தக் குழுக்கள் என்ற சொல்லை வைத்துக் கொண்டு பெரிதான குழுக்களாக மாத்தி அவர்கள் ஏதோ கருத்து நிலைப்பட்ட பின்னணியைக் கொண்டவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். வேறு எந்தக் காரணம் அவர்கள் சொல்லிக்கொள்ள முடியாது. நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்றால் துரோகி, எதிரி என்று சொல்வதற்கப்பாலே, நான் ஒரு செய்தியை பேராசிரியருடைய கருத்தோடு உடன்பட்டுச் சொல்ல விரும்புகிறேன்; குடியேற்ற வாதத்திற்குள் நீண்ட காலம் வாழ்ந்த மக்கள் மன நிலைமை வந்து அடிமை மனநிலையாக இருக்கிறது. அவர்களுக்கு விடுதலை என்பது வந்து ஏற்பில்லாத, விருப்பமற்ற, புரிய முடியாத புதிராக இருக்கிறது. அவ்வாறு இருக்கும் பொழுது இந்தப் போராட்டம் என்பது வெறும் ராணுவ ரீதியாகவும்,

தலைமையென்பது புகழுக்காகவும், சௌகரியத்திற்காகவும் பார்க்கின்ற ஒரு குறுகிய பார்வை உருவாகுவது வழமை.

துரதிஸ்டம் என்னவென்று சொன்னால் ஸ்ரீலங்கா இவை வந்து தமிழ் குழுக்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் பழைய மிக வல்லரசின் பிற்போக்குத்தனமான ஒரு தொடர்ச்சியாக இருப்பது குறித்து அவர்கள் உணர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.

இந்தத் தமிழ் தேசியம் என்பது வெறுமனே தலைவருடைய போராட்டமாகவோ, அவர்களை அழிப்பதோ, இவர்களை அழிப்பதோ என்றெல்லாமல் தடையாக உள்ளதை நீக்கிக் கொண்டு போகவேண்டிய பொறுப்பு இருக்கு. ஒருவாகனம் நகரும் போது தடையாக இருந்தால் நிச்சயமாக சில்லுக்க அகப்படவேண்டித்தான் வரும்.

அந்த வேகத்தடையை யார் தடுக்கவேண்டும் இடையில் நிற்பவர்கள் தான் தவிர்த்துக்கொள்ள வேண்டும் ஏன் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதில் நிற்பதில் மடமைத்தனம் என்றாகும். இந்தத் தேசிய எதிர்போக்கு என்பது மடமைத்தனம் என்பதை உணர வேண்டும் இவர்கள் உணர்வதற்கு ஏன் முடியாமல் இருக்கிறதென்றால், அது தான் துன்பமான செய்தி. இந்த நீண்ட அடிமை வாழ்வில் மறந்துவிட்டார்கள். ஆகவே சொல்வார்கள் விடுதலைப் போராட்டம் என்பது மறதிக்கும் நினைவுக்குமான போராட்டம் என்று அது நிலைக்க வேண்டும் என்று இந்த இடத்திலே வேண்டுகின்றோம்.

http://www.erimalai.info/index.php?id=118

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.