Jump to content

ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்


Recommended Posts

ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்
 

041612lunchhealthcol_512x288.jpgமனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேத்து வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு வந்திருச்சாம் என்று பேசுவதை கேட்டிருப்போம். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது. எதனால் இந்த திடீர் மரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

வேலை, குடும்பம், உடல்பருமன், மனஅழுத்தம் மற்றும் பணப் பிரச்சனைகளினால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து இதை கணிக்க முடியும் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. தலைமுடியில் உள்ள கார்டிசால் ஹார்மோன் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேலில் உள்ள மெய்ர் மெடிகல் சென்டரில் அனுமதிக்கப்பட்ட, மாரடைப்பு ஏற்பட்ட 56 ஆண்களின் முடி மாதிரியையும், இதய நோயாளிகள் அல்லாத 56 ஆண்களின் முடி மாதிரியையும் பரிசோதித்தனர். இதில் மாரடைப்பு நோயாளிகளின் முடியில் கார்டிசால் அதிக அளவில் இருந்தது தெரியவந்ததாம். வழக்கமாக ரத்த நிணநீர், சிறுநீர் மற்றும் உமிழ்நீரில் தான் கார்டிசாலின் அளவு கண்டறியப்பட்டது. இவற்றில் சில மணி நேரத்தில் இருந்து சில நாட்கள் வரை உள்ள கார்டிசாலைத் தான் அளக்க முடியும். இதனால் நீண்ட காலமாக உள்ள அழுத்தத்தைக் கண்டறிய முடியாது. ஆனால் தலைமுடியில் உள்ள கார்டிசாலை வைத்து பல மாதங்களுக்கு முன்பே மாரடைப்பை கணிக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சாதாரணமாக நமது தலை முடி ஒவ்வொரு மாதமும் 1 செமீ வளர்கிறது. 6 செமீ நீளம் உள்ள முடியை பரிசோதனை செய்வதன் மூலம் நெடுங்காலமாக இருந்து வரும் அழுத்த அளவை அறியலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.sugavani.com/medical-news-12/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்

 
 

யார் தலை முடியை வச்சு, மனைவியிண்டையயா ? ஆமாம் அவர்கள் சீவி சிங்காரிக்கிறக்கிடயில எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.