Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொம்ப ஞாயம்

Featured Replies

shreya-200x300.jpg

சே, என்னமா சொல்லித்தராரு?

 

“ஏண்டா தினேஷ், இன்னிக்கு ஒரு சில்லறை மேட்டரோட ஆரம்பிக்கலாமா?”

“அது என்னடா சில்லறை மேட்டர்?”

“போன முறை நாம இந்த ர/ற பத்திப் பேசினோமே. அப்போ சில்லறையா சில்லரையான்னு பேசாம விட்டுட்டோமேன்னு சொல்லி இருக்காரு எழுத்தாளர் இரா முருகன். நியாயப்படி சேர்த்து இருக்க வேண்டிய விஷயம்தான். அதை இப்போ சொல்லிடலாம். சில்லரைன்னா சில அரைகள் அப்படின்னு சொல்லறது மாதிரி ஆகிடும். சில என்றால் இரண்டுக்கும் மேல். உதாரணமா ஒரு நூறு ரூபாயை மாத்தினோமுன்னா, நூறு ரூபாய் மதிப்புதானே திரும்பக் கிடைக்கும். ஆனா சில அரைன்னு சொன்னோமுன்னா நூறு ரூபாய்க்கு மேல கிடைக்கணும்தானே. அதனால அது தப்பு. அதே சமயம் சில்லறைன்னா சில பகுதிகளாக நறுக்குவதால் அறுப்பது என்பது போல அறை என்பது வரும். எனவே சில்லறைன்னுதான் சொல்லணும்.”

“இன்னும் ஒண்ணு. நீ கூட இப்போ நியாயம்ன்னு சொன்ன. அதை சிலர் ஞாயம்ன்னு எழுதறாங்களே. அதுவும் சரிதானா?”

“இல்லை. ஞாபகம்ன்னு எழுதும் போது ஞா போடறோம். பேச்சுவழக்கில் நியாயம்ன்னு சொல்லாம ஞாயம்ன்னு சொல்லறோம். அதுல ஞா அப்படின்னு ஒலி வருது இல்லையா, அதனால எழுதும் போது ஞாயம்ன்னு எழுதிடறாங்க. அது சரி கிடையாது. நியாயம்ன்னு எழுதணும். நியாயம்ன்னுதான் உச்சரிக்கணும்.”

“போன தடவை பேசாம விட்ட இன்னும் ஒரு விஷயம் கூட இருக்கு. இது எனக்கே தெரியும். ரொம்ப அக்கரையா பார்த்துக்கோன்னு சிலவங்க எழுதிப் பார்த்து இருக்கேன். அது அக்கறையோடன்னு வரணும் இல்லையா?”

“ஆமாம். அக்கறைன்னா ஈடுபாடு. அக்கரைன்னா அந்தப் பக்கத்தில் இருக்கும் (ஆற்றின்) கரை அப்படின்னு அர்த்தம். இதெல்லாம் சரியா சொல்லலைன்னா அர்த்தம் அனர்த்தம் ஆயிடும் தெரியுமா?”

“ஆகும்தான். ஆனா ஒரு எடுத்துக்காட்டு ஒண்ணு சொல்லு பார்க்கலாம்.”

“சொல்லறது என்ன, பாட்டாவே பாடறேன் கேட்டுக்கோ – கல்யாண நாள் பார்த்துக் கொல்லலாமா,  கையோடு கை சேர்த்துக் கொல்லலாமா, அன்னிக்கு ஒரு நாள் ஒரு பாட்டுப் போட்டியில் ஒரு அம்மா  இப்படிப் பாடிக்கிட்டு இருந்தாங்க. பண்ணப்போறது அதான்னாலும், பொதுவில சொன்னா, புருஷனாகப் போறவன் உஷாராயிடமாட்டானோ?!”

“ ஆகா! இவங்க எல்லாம் ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பி இருக்காங்க போல. ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். வல்லின ற / இடையின ர அப்படின்னு போன முறை வித்தியாசத்தைச் சொல்லிக் குடுத்த. இந்த ல /ள /ழ எல்லாமே மெல்லினமாச்சே. எப்படி சொல்லறது?”

“நல்லா கேட்ட. ரகரம் / றகரம் உச்சரிக்கும் பொழுது கொஞ்சம் ஒண்ணு போல ஒலிக்கும். ஆனா இந்த ல/ள/ழ குழப்பம் வரதுக்குக் காரணமே தப்பான உச்சரிப்புதான். சரியானபடி உச்சரிச்சோமுன்னா லகரம், ளகரம், ழகரம்ன்னு சொன்னாலே போதும். இதைச் சரியாச் சொல்லலைன்னா ரொம்ப குழப்பம் வரும். அது தெரியாம கன்னாப்பின்னான்னு எழுத்துப்பிழை பண்ணறாங்க. உதாரணமா ஒலி, ஒளி, ஒழி – இது மூணையும் எடுத்துக்கோ. ஒலின்னா சத்தம். ஒளின்னா வெளிச்சம்ன்னும் சொல்லலாம், பதுங்குன்னும் சொல்லலாம். ஒழின்னா அழித்து விடு அல்லது தொலைத்து விடுன்னு அர்த்தம். நம்ம ஆட்கள் ஊழல் அரசியல்வாதி ஒளிக அப்படின்னு கோஷம் போட்டா அவங்களை ஒளிஞ்சுக்கச் சொல்லறாங்களா இல்லை நல்ல ஒளியோட பிரகாசமா இருக்கச் சொல்லறாங்களான்னு சந்தேகமே வருது.”

“அவங்களை விடு. நல்ல வேளை நீ ஒலி ஒளின்னு ஆரம்பிச்ச. அழி, அளின்னு போனா அதுக்கே உன்னைத் தனியாத் திட்டி இருப்பாங்க!”

”ஆமாம். அவங்களுக்குத் தெரியலைன்னாக்கூட நீயே போட்டுக் குடுப்ப போல. இங்க எப்பவுமே ழ மாறி ள / லவா ஆகறது இல்லை தெரியுமா. கொளுத்து என்பதைக் கொழுத்து, வாளை மீனை வாழ மீன் அப்படின்னு எல்லாம் கூட எழுதறதைப் பார்க்கறேன்.”

“நான் வாழ சாகும் மீன் என்பதை வாழ மீன் அப்படின்னு சொல்லி இருப்பாங்கப்பா. நீதான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இருக்கப் போற!”

“அப்படிப் பார்த்தா அன்னிக்கு ஒருத்தர் உழுந்து அப்பளம் அப்படின்னு சொன்னாரு. ஒரு வேளை அவரு கீழ விழுந்து அப்பளம் மாதிரி நொறுங்கிப் போன கதையைத்தான் அப்படிச் சொல்லி இருப்பாரோ? நான் வேற விஷயம் தெரியாம அது உழுந்து இல்லை சார் உளுந்துன்னு சொல்லிட்டு வந்துட்டேனே!”

“நீ சொன்ன ஒலி, ஒளி, ஒழி மாதிரி மூணும் வர மாதிரி இன்னும் கொஞ்சம் சொல்லேன். இன்னும் இருக்கா?”

“ஏன் இல்லாம,  நீ சொல்லாமச் சொன்ன அலி, அளி, அழி இருக்கு. கிலி, கிளி, கிழி இருக்கு. தாலி, தாளி, தாழி இருக்கு. வலி,வளி, வழி – புலி, புளி, புழின்னும் சொல்லலாம்.”

“ஏன் எல்லாமே லி ளின்னு சொல்லற. மத்த எழுத்துகளில் ஒண்ணும் இல்லையா?”

“கேள்வி மட்டும் நல்லாக் கேட்கறடா. கொஞ்சம் யோசிச்சா சொல்லிடலாம். ”

“ஹை! உனக்கே உடனடியாப் பதில் தெரியாத கேள்வி கேட்டுடேனா? ஹை ஜாலி!”

“டேய் சும்மா வாள் வாள்ன்னு கத்தாதே. வாள் எடுத்து வாலை நறுக்கினா வாழ்க்கையே வீணாயிடும்!”

“அடப்பாவி. அதுக்குள்ள வால், வாள், வாழ்ன்னு கண்டுபிடிச்சுட்டியா? ”

“ஸ்டார்ட்டிங் ட்ரபுள்தான்.  விலா, விளா, விழான்னு கூட சொல்லலாம். இன்னும் ஐகாரம் பக்கம் போனா நிறையா மாட்டும். ”

“மாட்டும்ன்னு சொன்னாப் போதுமா? ஒரு லிஸ்டுப் போடு. அதையும் கேட்கலாம்.”

“வால் சொன்னேன் இல்லையா. அதுகூட வாலை, வாளை, வாழை அப்படின்னு சொல்லலாம். தலை, தளை, தழை – இலை, இளை, இழை -  கலை, களை, கழை – அலை, அளை, அழை – முலை, முளை, முழை – வலை, வளை, வழை – உலை, உளை, உழை – விலை, விளை, விழை”

“போதும் போதும். விட்டா சொல்லிக்கிட்டே போவ போல. தமிழ்ல தப்புப் பண்ண இவ்வளவு வழி இருக்கா. யப்பா!”

”தெரியாமலே நிறைய பண்ணுவே, இப்ப தெரிஞ்சுக்கிட்டு விஞ்ஞான முறைப்படி தப்பு பண்ணப் போறியா?”

“இல்லடா, இனிமே இந்த மேட்டர்லே எல்லாம் தப்பே பண்ண மாட்டேன்”

“அட, அவ்ளோ புரிஞ்சுடுச்சா?”

“இல்லை, தெரியாதவன் பண்ணா தப்பு, தெரிஞ்சவன் பண்ணா வலு அமைதின்னு சொன்னியே”

“என் வலுவைக் காட்டறேன், அமைதியாயிடுவே. அது வழு டா!”

”அட, வலு வழு. இங்க வளு இல்லையா?”

“இல்லை. சரி. மூணில் எதாவது ரெண்டு மட்டும் வர லிஸ்ட் ஒண்ணு போடலாமா?.”

“இன்னும் அது வேறயா, இன்னிக்கு இதையெல்லாம் உச்சரிச்சுப் பார்த்தே என் நாக்கு சுளுக்கிக்கப் போகுது.”

”அன்னிக்கு ஒருத்தன் என்னை மிரட்டினான். இதுக்கும் மேல பேசின, உன்னைப் புதைச்ச இடத்தில் புள்ளு கூட முளைக்காதுன்னான். அவன்கிட்ட போய், ராசா நீ சொல்ல வேண்டியது புல். புள்ன்னா பறவை. அது என்னிக்கும் முளைக்காதுன்னு சொல்லவா முடியும். அன்னிக்கு மூடிக்கிட்டு வந்துட்டு இன்னிக்கு உன் கிட்ட சொல்லறேன். இந்த மாதிரி ஏகப்பட்ட வார்த்தைகளை தப்பாச் சொல்லறோம், எழுதறோம்.”

“ஆமாம். பழம்ன்னு சரியாச் சொல்லாம பலம் பளம் அப்படின்னு சொல்லறவங்கதான் இன்னிக்கி அதிகமா இருக்காங்க.”

“பளம்ன்னு ஒரு வார்த்தையும் கிடையாது. ஆனா பலம்ன்னா சக்தி. வாழைப்பழம்ன்னு சொல்லாம வாலைப்பலம்ன்னு சொன்னா இளம்பெண்களுடைய சக்தி அப்படின்னு அர்த்தம் அனர்த்தம் ஆகிடும். இன்னிக்கு நாட்டில் குளத்தில் எல்லாம் மண்ணைக் கொட்டிப் ப்ளாட் போட்டுடறாங்களே. அதுக்குக் கூட இந்த எழுத்துப்பிழைதான் காரணம்ன்னு நினைக்கிறேன்.”

“என்னடா சொல்லற?”

“ஆமாம். ஜாதியை ஒழிப்போம், குலத்தை ஒழிப்போம்ன்னு சொல்ல வந்து குளத்தை ஒழிப்போம்ன்னு சொல்லிட்டாங்களோன்னு எனக்கு சந்தேகம்.”

“ஒரு மார்க்கமாத்தான் கிளம்பி இருக்க. குளத்தைப் பத்திப் பேசின, என் பங்குக்கு நானும் பாலம் பாளம்ன்னு சொல்லிக்கறேன்.”

“சபாஷ். விலக்கு – விளக்கு, விலங்கு – விளங்கு, வெல்லம் – வெள்ளம், பால் – பாழ், தாள் – தாழ், கொல்லை – கொள்ளை, கல் – கள், தொலை – தொளை, காலை – காளை, குலை – குழை இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்டா.”

”இன்னும் அர்த்தமே இல்லாத எழுத்துப்பிழைகள் கூட இருக்கு. பல்லிக்கூடம், அளகான பெண், மிழகாய்ப்பழம் – இப்படி எல்லாம் கூட எழுதிப் பார்த்து இருக்கேன். சொல்லிக் குடுக்கும் பொழுது சரியான உச்சரிப்போட சொல்லிக் குடுத்தால் இந்தப் பிரச்சனையே வராது.”

“உனக்கு நாக்கு நல்லா வழையுது. சாரி, வளையுதுடா. அதான் நீ ஈசியாச் சொல்லற. ஆனா எங்க தமிழ் வாத்தியாருக்கே ழ வராது. யாரெல்லாம் தமிள் வீட்டுப் பாடம் எளுதலைன்னு கேட்பாரு. அப்போ என்ன செய்ய?”

“கஷ்டம்தான். இன்னிக்கு ஒரு கடையில் ஒரு போர்டு பார்த்தேன். பிரதி ஞாயிறுதோறும் விடுமுறைன்னு போட்டு இருக்காங்க. இதுல என்ன தப்பு தெரியுமா?”

“தெரியலையே. நிறையா இடங்களில் இந்த மாதிரி போர்டு பார்த்து இருக்கேனே.”

“பிரதின்னா ஒவ்வொரு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தறாங்க. ஆனா ஞாயிறு தோறும்ன்னு சொன்னாலே ஒவ்வொரு ஞாயிறும்ன்னுதான் அர்த்தம். அதனால பிரதி என்ற வார்த்தையே அவசியமில்லாதது.  இதைப் பார்த்தா எனக்கு இந்த விளம்பரங்களில் வரும் வாசகம்தான் நினைவுக்கு வருது. முற்றிலும் புதிய, மேம்படுத்தப்பட்ட அப்படின்னு சொல்லறாங்க. மேம்படுத்தப்பட்டன்னு சொன்னா இருப்பதை இன்னும் நல்ல வகையில் செய்யறது. புதிய என்றால் இல்லாததைக் கொண்டு வரது. இது ரெண்டுல எதாவது ஒண்ணுதான் இருக்க முடியும். அது என்ன புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட?”

“நல்ல கேள்வி. இதை அப்படியே ஒரு கல்லில் செதுக்கி வெச்சுக்கிட்டு தஞ்சாவூர் பெரிய கோயில் வாசலில் உட்கார்ந்துக்கோ.”

  • சில்லறை என்பதே சரி. சில்லரை என்பது தவறு
  • நியாயம் என்பது சரி. ஞாயம் என்பது தவறு.
  • பிரதி ஞாயிறு தோறும் என்று எழுதுவது தவறு. ஞாயிறு தோறும் என்றாலே போதும்.

 

ஒலி ஓசை ஒளி பிரகாசம்

 

மறைத்தல்

ஒழி தொலைத்தல்

 

அழித்தல்

அலி ஆணும் இல்லாமல்

 

பெண்ணும் இல்லாமல்

இருப்பது

அளி கொடுப்பது அழி கெடுப்பது கிலி பயம் கிளி பறவை கிழி கிழிப்பது

 

பொற்கிழி

புலி மிருகம் புளி புளிப்பு

 

புளியமரத்தின் காய்

புழி பிழி என்பதின்

 

பேசும் வடிவம்

வலி துன்பம் வளி காற்று வழி தடம் தாலி திருமணத்தில் கட்டுவது தாளி கடுகு தாளிப்பது தாழி குடம் வால் விலங்குகளின் வால் வாள் கத்தி வாழ் வாழ்வது விலா மார்பு விளா ஒருவகை மரம் விழா திருவிழா

 

விழாமல்

வாலை இளம்பெண் வாளை வாளை மீன் வாழை வாழை மரம் தலை மண்டை தளை கட்டு தழை புல்

 

செழித்து வளரு

இலை செடியின் இலை இளை அளவைக் குறைத்தல் இழை நூல் கலை வித்தை களை எடுத்து விடுதல்

 

முகத்தின் ஒளி

கழை மூங்கில் அலை கடல் அலை

 

அலைதல்

அளை அளைதல் அழை கூப்பிடு முலை மார்பு முளை முளைப்பது முழை குகை வலை மீன் பிடிக்கும் வலை

 

சிலந்தி வலை

வளை வளையல்

 

வளைந்து செல்

வழை ஒரு வகை மரம் உலை உலைக்களம்,

 

சமைக்கும் அடுப்பு

உளை சேறு

 

வலி

உழை பாடுபடு விலை மதிப்பு விளை உண்டாக்கு விழை ஆசைப்படு வலு பலம்     வழு தவறு குலம் சாதி குளம் ஏரி     பாலம் ஆற்றைக் கடக்க

 

கட்டுவது

பாளம் கட்டி

 

பாளம் பாளமய்

வெடிக்கிறது

    புல் தழை புள் பறவை     பலம் சக்தி     பழம் கனி விலக்கு தவிர்த்திடு விளக்கு தெளிவாக்கு

 

ஒளி தருவது

    விலங்கு மிருகம் விளங்கு சிறப்போடு இரு     வெல்லம் இனிப்பு வெள்ளம் நீர்வரத்து அதிகமாவது     பால் குடிக்கும் திரவம்     பாழ் கெடுவது     தாள் காகிதம் தாழ் பணிவது கொல்லை புழக்கடை கொள்ளை திருட்டு     கல் பாறை கள் பனை மரத்தில்

 

இறக்குவது

    தொலை தூரம்

 

தவறவிடு

தொளை ஓட்டை     காலை நேரம் காளை மாடு

 

இளம் வாலிபன்

    குலை கொத்து     குழை பணிவது
 
 

நல்ல ஒரு பதிவு. இணைப்புக்கு நன்றி வந்தியத்தேவன்

  • கருத்துக்கள உறவுகள்
தமிழை படிப்பிப்பதற்கு கூட நடிகையின்ட படத்தை முன்னுக்கு போட வேண்டியதாய் இருக்கு :(
  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழை படிப்பிப்பதற்கு கூட நடிகையின்ட படத்தை முன்னுக்கு போட வேண்டியதாய் இருக்கு :(

 

 

வந்தனை செய்வதற்கே, வந்தியதேவன் அப்படத்தைப் பதிந்துள்ளார். :D  படத்திலுள்ள நடிகையின் முகத்தில், கல்விக் கடவுளான சரஸ்வதியின் களை மிளிர்வது தெரியவில்லையா? :icon_idea: 

அவருடைய பெயர் ஸ்ரேயாவா அல்லது ஸ்றோயாவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.