Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்நாட்டு கிளர்ச்சிக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் ஒரே நாடு இலங்கை: மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ManoGanesh(43).JPG

ஏறக்குறைய ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சொந்த நாட்டு மக்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்த உள்நாட்டு யுத்தத்தில் கிடைத்த  வெற்றியை மாபெரும் தேசிய வெற்றி விழாவாக கொண்டாடும் ஒரே நாடு உலகத்தில் இலங்கை மட்டும்தான்' என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

'அண்டை நாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக யுத்தம் செய்து பெற்ற வெற்றியை போன்று உள்நாட்டு யுத்த வெற்றியை கொண்டாடுபவர்கள், இந்த யுத்த வெற்றியின் பின்னால் மறைந்து நிற்கும் மனதை கொல்லும் சோகத்தை அங்கீகரிக்க மறுக்கின்றார்கள். 

அதனால் யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், உயிரிழந்த தமது அந்த உறவுகளை நினைவு கூறுவதற்கும் உரிமைகளை இழந்து நிற்கிறார்கள்.

இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து யுத்தம் நடத்திவிட்டு, இவ்வாரம் கொழும்பில் நடைபெறும் வெற்றி விழாவிலும் கலந்துகொள்ளும் இந்தியா, அமெரிக்கா மற்றும் உலக நாட்டு அரசாங்க பிரதிநிதிகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த யுத்தத்தை நாங்கள் மறக்க நினைக்கின்றோம். ஆனால் அதை வருடா வருடம் ஞாபகப்படுத்தி இந்த அரசாங்கம் அரசியல் செய்கிறது.

யுத்தம் நடத்தியவர்களது கோணத்தில் பாத்தாலும்கூட, யுத்தத்தை நடத்திய அன்றைய இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்த வெற்றி விழாவில் இடமில்லை. இதன்மூலம் இந்த வெற்றி விழாவை இந்த அரசாங்கம் தனது சொந்த வெற்றியாக அரசியல் இலாப கண்ணோட்டத்தில் நடத்துகின்றது என்பது தெளிவாகின்றது.

ஆகவே தனது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக யுத்தத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் நினைவுகளை இந்த அரசாங்கம் துச்சமாக நினைக்கின்றதும் தெளிவாகின்றது.

அதேபோல் இவர்கள் வெற்றிவிழா கொண்டாடும் அதேவேளையில் தங்கள் உறவுகளை இழந்து வாழ்பவர்களுக்கு, இறந்து போனவர்களை நினைந்து நிகழ்வுகள் நடத்தவும் உரிமை மறுக்கப்படுகின்றது. இதன்மூலம் இந்த அரசாங்கம் இறந்து போனவர்களை அவமரியாதை செய்கின்றதும் தெளிவாகின்றது.

இந்த பின்னணியில் இந்த அரசாங்கம் நடத்தும் யுத்த வெற்றி விழாவில் கலந்துகொண்டு, இந்த விழாவுக்கு அங்கீகாரம் தந்து சிறப்பிக்க போகும் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் யார் என்பதையும், சர்வதேச சமூக பிரதிநிதிகள் யார் என்பதையும் இலங்கை வாழ் தமிழ் மக்களும், நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களும் எதிர்நோக்கி இருக்கின்றார்கள்' என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/66794-2013-05-11-09-27-50.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழர் சொல்வது

 

சிங்களத்தைப்பொறுத்தவரை    எப்பொழுதும் தமிழரை தன் நாட்டவராக நினைத்ததில்லை.

தமிழரை ஆளுவதை அவர்கள் என்றும் மறந்ததில்லை.

இலங்கை  தமது தாயகமல்ல என்பதையும் அவர்கள்  மறந்ததில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.