Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் கூட்டமைப்பு போட்டியிடாத தேர்தல் மணமகள் இல்லாத திருமணம் போன்றது -மனோ கணேசன்

Featured Replies

MANO.jpg

காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் நடத்தப்படும் வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடும் என நான் நம்பவில்லை. நாம் அப்படி ஒரு நிலைமையை வரவேற்கப்போவதும் இல்லை. இந் நிலையில் கூட்டமைப்பு இல்லாமல், வடக்கில் அரசாங்கம் மாகாணசபை தேர்தல் நடத்துமானால், அது மணமக்கள் இல்லாமல் திருமணம் நடத்துவது போன்றதாகும். இந்த நெருக்கடி நிலைமையை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதேவேளை, அரசுக்குள் இருக்கும் தீவிரவாதிகள் கூப்பாடு போடுவதைக் காட்டி, வட மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முன்னர் 19ஆம் திருத்தத்தை கொண்டு வந்து காணி, பொலிஸ் அதிகாரங்களை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ், காணி அதிகாரங்களை உள்ளடக்கிய இன்றைய 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாணசபையை ஏற்றுக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட கூடாது என சொல்லும் பிரிவினர் தமிழ் தேசிய தரப்பில் இருக்கின்றார்கள் என்பதை சிங்கள மக்களும், அரசாங்கமும் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த மாகாண சபையை ஏதோ, காணக்கிடைக்காத பெரும் தீர்வாக கருதி தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக தென்னிலங்கையில் எவரும் நினைத்து விடக்கூடாது. எனக்குத் தெரிந்த வகையில் வடக்கில் அப்படி ஒரு நிலைமை இல்லை.

இந்த மாகாண சபை முறைமையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று சொல்பவர்களும் வடக்கில் இருக்கிறார்கள். இந்நிலையில் சில பெரும்பான்மை இனவாதிகள் சொல்லுகின்றார்கள் என்று சொல்லி, இன்று சட்டப்படி மாகாணசபைக்கு இருக்கும் அதிகாரங்களை குறைக்கும் விஷப் பரீட்சையில் இறங்க வேண்டாம் என அரசாங்கத்துக்கு கூறுகின்றேன்.

எதிர்வரும் நவம்பரில் பொதுநலவாய மாநாடு, செப்டம்பரில் வட மாகாணசபைத் தேர்தல் என்று ஒரு இரகசிய ஒப்பந்தம் இருப்பது விமல் வீரவன்சவுக்கு தெரியாதா? சம்பிக்க ரணவகவுக்கு தெரியாதா? அரசாங்கம் இத்தகைய ஒரு சிக்கலில் இன்று சிக்கி இருப்பது இவர்களுக்கு தெரியாதா?

ஆகவே அரசாங்கம் வடக்கில் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். ஆனால், இனவாதிகள் எதிர்க்கிறார்கள் என்று சொல்லி 19ஆம் திருத்தம் கொண்டு வந்து, அதிகாரங்களை குறைத்து, சர்வதேசத்தையும் மீண்டும் ஏமாற்றி, குறுக்கு வழியில் வடக்கில் மாகாணசபை தேர்தலை நடத்த அரசு முயற்சி செய்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்க விரும்புகின்றேன்.

அதிகாரங்களை குறைத்தால், அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறும் என்று சொல்கிறார்கள். அப்படியே நடத்தினால் விமல் வீரவன்ச வெளியேறுவார் என சொல்கிறார். திடீரென வீரம் வந்து இன்னும் சில தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும், இடதுசாரிகளும் கூட வெளியேறலாம். எப்படியும் செப்டெம்பர் மாதத்திற்கு பிறகு, இன்றைய அரசுக்குள் இருக்கும் சில சில அமைச்சர்களை, முன்னாள் அமைச்சர்களாக இந்த நாட்டில் பார்க்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்..

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=7116:2013-05-15-13-13-23&catid=1:latest-news&Itemid=18

 

"இன்றைய அரசுக்குள் இருக்கும் சில சில அமைச்சர்களை, முன்னாள் அமைச்சர்களாக இந்த நாட்டில் பார்க்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்."

மனோ கனேசன் மிகத்தெளிவாக அரசியல் பேசுபவர்களில் ஒருவர். அதனால் இதை மட்டும் சொல்லக் கூடாது.

 போகவென்றா ராசபக்சாவுக்கு  உப்பு சுமக்கும் இந்தக் கூட்டம் அரசில் இணைந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

மனோகணேசனுக்கும் தமிழர்களை சிங்களத்துக்கு அடங்கிய  பெண்ணாகத்தான் சிந்திக்கமுடிகிறது.... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.