Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி சுவீகரிப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணி சுவீகரிப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 1474 பேர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். சட்ட விரோதமாகவும் நீதிக்குப் புறம்பான வகையிலும் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் 2000 பேர் மேன்முறையீடு செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தின் சில பகுதிகளில் காணி சுவீகரிப்பு தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள இரண்டு அறிவிப்புக்களின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற அடிப்படையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் 2011ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டதனைத் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக இவ்வாறு காணிகளை சுவீகரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காணி சுவீகரிப்பு அதிகாரி, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர், யாழ்ப்பாண மாவட்ட காணி அளவை அதிகாரி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91789/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். காணி சுவீகரிப்புக்கு எதிராக 1,474பேர் ரிட் மனு தாக்கல்

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர், இன்று புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். தங்களது சொந்த காணிகள் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டே இவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையின் தலைமையகத்தை அமைப்பதற்கு என 6,381 ஏக்கர் 38.97 பேர்சஸ் பரப்பளவுள்ள இடத்தை கைப்பற்றவுள்ளதாக காணி சுவீகரித்தல் சட்டத்தின் பிரிவு 2 கீழ் பிரகடணம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பு மற்றும் பலாலி மற்றும் காங்கேசன்துறை அதி உயர் பாதுகாப்பு வலையத்தை நிர்மாணிப்பதற்காக அப்பிரதேசத்தை கையளிப்பது பற்றிய அறிவித்தல் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

”சதுர கிலோ மீட்டர் 25.8 பரப்பளவுள்ள இந்த பிரதேசமானது, சதுர கிலோ மீட்டர் 37.21 உள்ள கொழும்பு நகரத்தை போன்று 2/3 பரப்பளவு கொண்டதாகும்.

இந்த மனுவை தாக்கல் செய்துள்ள அனைவருக்கும் மேற்படி பிரதேசத்தில் குறிப்பிடும் அளவு பரப்பளவுள்ள காணிகள் இருக்கின்றன. இவர்கள் மோதல் சமயத்தில் இப்பகுதியை விட்டு வெளியேறி யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து தம்முடைய சொந்தக் காணிகளுக்கு வர முயற்சித்துள்ளனர்.

இதன்போது இராணுவம் இவர்களை தடுத்து விட்டுள்ளது. தற்போது இராணுவம் நிலை கொண்டுள்ள இப்பாரிய பிரதேசத்தை சுற்றி கம்பி வேலி இடப்பட்டுள்ளதோடு இராணுவ வீரர்கள் இப்பிரதேசத்தைச் சுற்றி காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இப்பிரதேசத்தின் ஒரு அதி உயர் பாதுகாப்பு வலயம் என எப்போதும் பிரகடனம் செய்யப்படவில்லை என்பதோடு 2011ஆம் ஆண்டு அவசர கால சட்டம் நீக்கப்பட்ட நிலையில் தற்போது இப்பிரதேசத்தை அதி பாதுகாப்பு வலையம் என பிரகடனப்படுத்துவதற்கோ அல்லது ஏனைய பொது தேவைகளுக்காக இதை சுவீகரிப்பதற்கான எந்த சட்ட அடிப்படையும் கிடையாது” என்பதை மனுதாரார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

”காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர், யாழ்ப்பாணத்தில் காணிகளை சுவீகரிக்கும் தகுதி வாய்ந்த அரச அதிகாரி மற்றும் அரச காணி அளவையியலாளர் ஆகியோரை இந்த மனுவில் பிரதிவாதிகளாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சட்டத்தரணி மோகன் பாலேந்திரனின் அறிவுறுத்தல்படி ஜனாதிபதி சட்டதரணி கே. கனகேஷ்வரன் மற்றும் சட்டதரணிகளான எம்.ஏ. சுமாந்திரன், விரான் கொரேயா, லக்ஷ்மன் ஜெயக்குமார், பவானீ பொன்சேகா மற்றும் நிரான் அன்கிடெல் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். இதேவேளை, எதிர்வரும் நாட்களில் மேலும் 2,000 பேர் இதே போன்ற மனுவை தாக்கல் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/67314--1474-.html

supreme_court.jpgயாழ்ப்பாணம், வலிகாமம், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவத் தேவைக்கென காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும் 1,474 பேர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக காணி, காணி அபிவிருத்தி அமைச்சர், யாழ்ப்பாணத்தில் காணிகளை சுவீகரிக்கும் தகுதிவாய்ந்த அரச அதிகாரி, அரச காணி அளவையாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுவை சட்டத்தரணி மோகன் பாலேந்திரனின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகேஸ்வரன், சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், விரான் கொரேயா, லக்‌ஷ்மன் ஜெயக்குமார், பவானி பொன்சேகா, நிரான் அன்கிடெல் ஆகியோர் ஆவணப்படுத்தியுள்ளனர்.

இந்த மனுவில் தமக்குச் சொந்தமான காணிகள் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறும் காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையணியின் தலைமையகத்தை அமைப்பதற்கு என 6,381 ஏக்கர் 38,97 பேர்சஸ் பரப்பளவுள்ள இடத்தை கைப்பற்றவுள்ளதாக காணி சுவீகரித்தல் சட்டத்தின் பிரிவு 2இன் கீழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பு பலாலி மற்றும் காங்கேசன்துறை அதி பாதுகாப்பு வலயத்தை நிர்மாணிப்பதற்காக அப்பிரேசத்தைக் கையளிப்பது பற்றிய அறிவித்தல் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த மனுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் மேலும் 2000 பேர் இதேபோன்ற ரீட் மனுவொன்றினை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://tamilworldtoday.com/?p=10637

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.