Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய மாநாட்டின் பெயரில் மோசடிகள் சிலர் களமிறங்க தயாராகின்றனர்! ஹர்ஷ

Featured Replies

CHOGM-Thife.jpg

 

பொதுநலவாய மாநாட்டின் பெயரில் வாகனங்கள் இறக்குமதி செய்து, ஊழல் செய்வதற்கு மோசடியாளர்கள் சிலர் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது ஹர்ஷ டி சில்வா இதுகுறித்து சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

 

நாடாளுமன்றத்தில் மேலும் கருத்துரைத்த ஹர்ஷ டி சில்வா,


harsha-de-silva.gif

''பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு 200 வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய மாநாடு 2007ஆம் ஆண்டு உகண்டாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவில் மிகப் பாரிய பிரச்சினையொன்று கிளப்பப்பட்டது. இதனால் அந்நாட்டு உப ஜனாதிபதியாக இருந்த பேராசிரியர் கில்பட் புகேன்யா பதவி விலக நேரிட்டது. அதாவது பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு 204 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இதன்போது உப ஜனாதிபதி இந்த வாகன இறக்குமதியின் போது பாரிய மோசடியில் ஈடுபட்டு களவாடியதாக அவர் மீது பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அரசாங்கத்திற்குரிய பல மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டது. இதனால் அவருக்கு பதவி விலக நேரிட்டது எனினும் 2011ஆம் ஆண்டில் இந்தக் குற்றச்சாட்டுக்களை மழுங்கடித்து அவர் அதிலிருந்து தப்பித்துக் கொண்டார்.

 

இம்முறை பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும்போது இவ்வாறான பல நபர்கள் தலையீடு செய்வதற்கு தயாராகி வருகின்றனர். இவர்கள் பல்வேறு ரகத்தில் நவீன வாகனங்களைத் தருவிப்பதாகக் கூறுவார்கள். இதனைக் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி இலங்கைக்கு கப்பல் ஒன்று வந்தது. இந்தக் கப்பலில் ரோல்ஸ் ரொய்ஸ் கோஸ்ட் என்ற நவீனரக வாகனமொன்று இருந்தது. இதற்கான சில ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. இந்த வாகனம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டொருக்கே கொள்வனவு செய்யப்பட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்து தேடிய அறிய முற்பட்டபோது இந்த விலைக்கு எங்கும் இந்த வாகனத்தைக் கொள்வனவு செய்ய முடியாது. அந்த வாகனத்தின் உண்மையான விலை குறைந்தது மூன்றரை லட்சம் அமெரிக்க டொலர்களாகின்றது. விலைக் கழிவைப் பெற்றுக்கொண்டாலும் குறைந்தது 3 லட்சம் அமெரிக்க டொலர் வரைச் செல்லும். இதனால் அரசாங்கத்திற்கு சுமார் 50 லட்சம் ரூபா வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மோசடியாக விலை மாற்றம் செய்த ஆவணங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கான வருவாயை இவர்கள் மோசடி செய்கின்றனர். ஆகவே, இவ்வாறான திருடர்கள் இந்த பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் போதும் தமது கைவரியைக் காட்டக்கூடும்'' என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://tamilworldtoday.com/?p=10630

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

மகித்த குடும்பம் உகண்டாவில் எத்தகைய முதலீடுகளை செய்துள்ளார்கள் என்பதையும் ஐ.தே.காவிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.