Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18இல் உயிர்நீத்தோருக்கு யாழ்ப்பாணத்திலும் பிரார்த்தனை!

Featured Replies

May18Jaffna.jpg

 

2009ஆம் ஆண்டு மே மாதம் போரின் இறுதிக் காலகட்டத்தில் பலியானவர்களை நினைவுகூருகின்ற ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்.மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் பிற்பகல் 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

 

இந்த நிகழ்வில் சகல தமிழர்களையும், தமிழின உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.

 

மே 18ஆம் திகதி ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு அஞ்சலியில் கலந்துகொள்ளுமாறு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

தமிழின விடுதலைக்காக இற்றைவரை இலட்சக்கணக்கானவர்கள் தம்முயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

 

குறிப்பாக நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில், 2009 மே 18 காலப்பகுதியில் பலியானவர்களின், காணாமல் போனவர்களின் உறவுகள், தமிழ் உணர்வாளர்கள், உறவுணர்வோடும், நன்றி உணர்வோடும் அந்த ஆத்மாக்களை நினைவுகூர்ந்து ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுவர்.

 

அவ்வைகயில், தமிழ் உறவுகளும், உணர்வாளர்களும் ஆண்டு தோறும் மே 18ஆம் நாளில் பொது இடங்களில் ஒன்றுகூடி, உயிர்த்தியாகம் செய்தோரை நினைவுகூரும் வழக்கத்தையும், கடைப்பிடித்து வருகின்றனர்.

 

இச்செயலானது உயர் நன்றிக்கடனாகவும், தமிழரின் உயர் நாகரிகமாகவும் கருதப்படுகிறது. இவ்வாண்டும் இந்நிகழ்வு யாழ்ப்பாணத்திலும், இடம்பெறுகிறது.

 

தமிழ் இன உறவுகளும், தமிழ் உணர்வாளர்களும் இந்தநிகழ்வில் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அழைக்கின்றோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://tamilworldtoday.com/?p=10641

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தை கொண்டாடிய பல்கலைகளக மாணவர்களை பிடித்து சிறையில் போட்டவர்கள் இம்முறையும் யாரையாவது பிடித்து போடலாம் என்பதால் மக்கள் கவனமாக இருப்பது நல்லது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.