Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழாவில் அமெரிக்கத் தூதுவருக்கு பின்வரிசை ஆசனம்!

Featured Replies

 


சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழாவில் அமெரிக்கத் தூதுவருக்கு பின்வரிசை ஆசனம்!

256925a0-e66e-43c8-baa2-213b5a7f66881.jp

 

சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழா நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸனுக்கு அதிதிகள் மேடையில் பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டிருந்தது.

யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று சனிக்கிழமை காலி முகத்திடலில் பெருமெடுப்பில் யுத்த வெற்றி விழாவை நடத்தியது சிறிலங்கா அரசு.

இதில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் என பல உயர்மட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கென அதிதிகள் மேடை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸனுக்கு பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டிருந்தது.  அதில் அமர்ந்தவாறு அவர் நிகழ்வுகளைப் பார்வையிட்டார். அதேவேளை, அரபு நாட்டுத் தூதுவர்கள் பலர் முன்வரிசையில் அமர்ந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புக் கிளையின் அலுவலகத்தில் அதன் தலைவர் சம்பந்தனை அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸன் சந்தித்துக் கலந்துரைடியிருந்தார். இதன்போது அவர், வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பான கள நிலவரம், வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பில் சம்பந்தனிடம் கேட்டறிந்துகொண்டார்.

இதன் பின்னர் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸன் இலங்கை நாட்டுக்குத் துரோகம் இழைக்கின்றார் எனவும், இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைபோகின்றது எனவும் கடும் போக்குடைய சிங்கள அமைப்புகள் அரசை எச்சரித்திருந்தன. அத்துடன் அமெரிக்கத் தூதுவரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்றுமாறும் இவ் அமைப்புகள் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இவ்வாறான சூழ்நிலையில், சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழா நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸனுக்கு அதிதிகள் மேடையில் பின்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=256925a0-e66e-43c8-baa2-213b5a7f6688

 

மகிந்தாவுக்கு உதவிய பிளேக் கொழும்புத் தெருக்களில் இறங்கி கால்நடையாக நடந்தார்.  மடாகளைபு உயிராபத்தான பயணத்தில் போட்டு அனுப்பி வைக்கபட்டார். எனவே இலங்கை அரசுடன் ஒத்துளைக்க மறுக்குல் மிசேல் சிசனுக்கு இது நடப்பது அப்படி ஒன்றும் பெரிதல்ல

.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கத் தூதுவர் முஸ்லிம்களை இரகசியமாக கிழக்கில் சந்தித்து இருந்தார். கட்டுரையாளர் ஏன் அதனை குறிப்பிடவில்லை?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.