Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரூந்தில் ஆசனத்திற்காக தமிழ்ப் பெண்ணுடன் இராணுவத்தினர் சேட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேரூந்து ஒன்றில் பயணித்த தமிழ்ப் பெண் ஒருவருடன் இராணுவத்தினர் மதுபோதையில் சேட்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பேரூந்தில் பயணித்தவர்கள் அனைவரும் அசௌகரியம் அடைந்தனர். இந்த சம்பவம் கடந்த 26ம் தேதி இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

குறித்த பெண் பேரூந்தில் பயணிக்கும் பொழுது இரண்டு ஆசனங்களுக்கு கட்டணம் செலுத்தி பற்றுச்சீட்டை வாங்கியுள்ளார். ஒரு ஆசனத்தில் தான் அமர்ந்து கொண்டு மற்றைய ஆசனத்தில் தனது பொதிகளை வைத்துள்ளார். அப்பொழுது விடுமுறைக்கு ஊருக்குச் சென்று திரும்பிய சிவில் உடையணிந்த சில இராணுவத்தினர் மதுபோதையுடன் பேரூந்தில் ஏறிக்கொண்டனர். 

 

தாம் அந்த ஆசனத்தில் இருக்க போவதாக இராணுவத்தினர் குறித்த பெண்ணுடன் தகராறு செய்தனர். அந்தப் பெண் அவ்விடத்திறகு கட்டணம் செலுத்தியிருப்பதாகவும் இடத்தை வழங்க முடியாது என்றும் பேரூந்து நடத்துனர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை இராணுவத்தினர் விடாமல் சிங்களத்தில் கெட்ட வார்த்தைகளில் கடுமையாக திட்டியுள்ளனர். 

 

முகத்தை மூடியபடி அழுதுகொண்டிருந்த அந்தப் பெண் சிங்களத்தில் அப்படி பேச வேண்டாம் என்று சொல்லிய பொழுதும் இராணுவத்தினர் தமது நடவடிக்கையை நிறுத்தவில்லை. பேரூந்தில் பயணித்த மதகுரு ஒருவர் உட்பட பயணிகள் என்ன செய்வதென அறியாதிருந்தனர். 

 

இந்நிலையில் பேரூந்தில் ஏறிய இலங்கை காவல்துறையிdu; குறித்த இராணுவத்தினர் மீது சம்பவ இடத்திலேயே நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 

பின்னர் பேரூந்து மாங்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குறித்த இராணுவத்தினர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர். அதன் பின்னர் தமிழ்ப் பெண்ணுடன் தகராறு புரிந்து சேட்டையில் ஈடுபட்டமை தொடர்பில் காவல்துறையினர் இராணுவத்தினர் kPJ என்ன நடவடிக்கையை எடுத்தனர் என்று அறியமுடியவில்லை. 

 

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92290/language/ta-IN/article.aspx

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.