Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அநுராதபுரத்தில் அன்ரனோரவை சுட்டது போராளி புலவன்! சுட்ட சாம்-7 படையினரிடம்!!

Featured Replies

 
அநுராதபுரத்தில் அன்ரனோரவை சுட்டது போராளி புலவன்! சுட்ட சாம்-7 படையினரிடம்!!

 

ஆனி 1, 2013

சிறிலங்கா விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீது அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் வில்பத்து சரணாலயத்துக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் – 32 விமானத்தை சரியாக கால 11.45 மணிக்கு ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டுவீழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தில் 32 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர்.

Sri_Lanka_Air_Force_antonov-an-32.jpg

சுட்டுவீழ்த்தப்பட்ட அன்டனோவ் -32 ரக விமானம்

முன்னதாக, இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறினால், வீழ்ந்து நொருங்கியதாக சிறிலங்கா விமானப்படை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்து வழக்கை அப்போது மூடியிருந்தது.

எப்படி மீண்டும் இந்த வழக்கு உயிர்த்தது?

2009 இல் வன்னியின் இதயப்பகுதிக்குள் நுழையத்தொடங்கிய சிங்களப்படைகளுக்கு முன்னார் அறியாமல் விட்டிருந்த தகவல்களும் அவிழாமல் விட்டிருந்த புதிர்முடிச்சுகளும் அவிழத்தொடங்கின.

2009 மார்ச் 5 ஆம் திகதி புதுக்குடியிருப்புப்பகுதிக்குள் இராணுவம் முன்னேறி உள்நுழைந்திருந்தது.இந்த நடவடிக்கையை இரு படையணிகள் இரு வழிகளினுாடு மேற்கொண்டிருந்தன. ஒன்று நெடுங்கேணியிலிருந்து முன்னேறிய படையணி. மற்றையது  புதுக்குடியிருப்புக்கு தென்கிழக்குப்பகுதியிலிருந்து இரகசிய நகர்வுமூலம் புதுக்குடியிருப்பு நரகப்பகுதிக்குச்சமீபமாக நிலையெடுத்துக்கொண்டது.இந்தப்படையணியின் நகர்வை புலிகள் அறிந்திருக்கவில்லை.  நெடுங்கேணி பக்கமிருந்து வந்தபடைகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்த  புலிகளை பின்பக்கமாக வந்து இந்தப்இந்தப்படையணி வளைத்துக்கொண்டது. திகைப்படைந்த புலிகள் இழப்புகளுடன் பின்வாங்கினர்.இதையடுத்தே புதுக்குடியிருப்பிலிருந்த புலிகளின் முக்கிய தளங்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களின் தளங்கள் படையினர் வசமாகின.

 

ராதா வான்காப்பு படையிணியின் தளம் ஒன்று படையினரால் சோதனையிடப்பட்டது.முகாமினும் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை.அதன் வளவினுள் சோதனை தொடங்கியது.அப்பொழுதுதான் புதிதாக மண்வெட்டப்பட்ட அடையாளத்தை அவதானித்தபடையினர் அந்தபகுதிய தோண்டத்தொடங்கினர்.சிறிதளவு ஆழத்தில் நன்கு பொலித்தீனால் சுற்றப்பட்டு உள்ளே கிறீஸ் தடவப்பட்டு நன்கு பாதுகாப்பான முறையில் உறையிடப்பட்டு சுமார் 13  சாம்-07 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மீட்கப்பட்டன.அதன் ஒவ்வொன்றிலும் தாக்குதல் நடத்தப்பட்ட திகதி தாக்குதல் நடத்தியவர் நேரம் எந்த வகை விமானம் மீது தாக்கப்பட்டது என அனைத்து விவரங்களையும் அதில் பதிந்து புலிகள் ஆவணப்படுத்தியிருந்தனர்.

20090415_03A.jpg

பொலித்தீனால் சுற்றப்பட்ட சாம் -07

20090415_03c.jpg பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சாம்-07

 

20100806_12p9.jpg

ஏவுகனைகளில் வெளிப்புறத்தில் தெளிவாகத்தெரியும் தாக்குதல் விவரங்கள்

அதை அடிப்படையாகக்கொண்டு இராணுவ புலனாய்வுப்பிரிவு விசாரணையைத்தொடங்கியது. மே 18 இன் பின்னர் சரணடைந்த புலிகள் படையணி ரீதியாக வகைப்படுத்தப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது அநுராதபுரம் அன்ரனோவ்-32 மீதான தாக்குதல்தாரிகள் அடையாளப்படுத்தப்பட்னர்.

இதுதான்இந்த வழக்கில் மேற்குறித்த இருவரும் அகப்பட்ட கதை.

180.jpg

வான்காப்புப்படையணிப் போராளி ஒருவர்

இந்தத்தாக்குதல் நடந்த நேரம் ஆனையிறவுத்தளம் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது.எனவே பலாலியிலிருந்து வரும் விமானங்களில் காயம்பட்ட படையினர்  அல்லது அதிகாரிகள் அல்லது படையணிகள் கொண்டுசெல்லப்படலாம் எனக்கருதி புலிகளின் வான்காப்பு தாக்குதல் அணி வில்பத்து காட்டுப்பகுதிக்கு முன்கூட்டியே நகர்த்தப்பட்டிருந்தது. ஏன் வில்பத்து பகுதியை தேர்வு செய்தனரெனில் அந்த நேரத்தில் புலிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக பலாலியிலிருந்து புறப்படும் விமானங்கள் இந்திய கடற்பரப்பினுாடாக பயணித்து புலிகளின் கட்டுப்பாட்டுபிரதேசம் கடந்தபின்னரே இலங்கை வான்பரப்புக்குள் நுழையும் என்பதுடன் படைக்கட்டுப்பாட்டு பிரதேசங்களில் ஓரளவு தாழ்வாகவும் பறக்கும் என்பதால் தாக்குவது இலகு என் புலிகள் கணித்திருந்தனர்.

உறுமலுக்காக-  கரிகாலன்

http://urumal.com/archives/அநுராதபுரத்தில்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வலு கிளீனா..நல்ல தமிழில் வடிவான எழுத்தில்....அழுக்கே பிடிக்காத ..பொதிகள்.....சுப்பெர்டா.....அங்கை வேறை வேலை இல்லைத்தானே....வாற மார்ச்சுக்கு பெரிய புரூவ்...

  • கருத்துக்கள உறவுகள்

சாம் 7 என்பது விமான எதிர்ப்பு ஏவுகணை ஆயினும்.. ஒரு தடவை மட்டும் பாவித்து விட்டு எறியும் வகையினது..! பாவித்து விட்டு எறியும்.. லோ வகை உந்து கணை போன்றது. இதனை எல்லாம் விடுதலைப்புலிகள் பொலித்தீன் பார்க்கில சுத்தி சேமிச்சு வைக்க என்ன இருக்குது..???! :)

  • தொடங்கியவர்

எறிவதானால் குப்பையிலா எறிய முடியும்? அதுதான் சேமித்து ஆவணப்படுத்தி வைத்திருந்திருகிறார்கள். நிலைமை இப்படியாகும் என்று யார் கனவு கண்டார்கள் அன்று?

20090415_03A.jpg

 

படம் எடுத்த திகதி                       ஏப்பிரில் 14, 2009

பொதியில் இருக்கும் தேதி        ஏப்பிரில் 16, 2003

 

பொதியில் பல இடங்களில் மண் இருக்கு. ஆனால் பொதிகளோ லேபலோ. ஆறுவருடமும் சின்ன அழுக்கும் பிடிக்கமால் இருந்துவிட்டது.

 

பிரித்து வைத்த பொதி மார்ச் 6ம் திகதி 2009 இல் எடுக்கப்பட்டிருக்கு. அதன் கீழ் காணப்படும் உறை பொதி தயாரிக்கப் பயன் பட்டது மாதிரி இல்லை. மேலும் பிரித்து வைக்காத பொதிகள் ஒருமாதம் பிந்தி ஏப்பிரிலில் எடுக்கப்பட்டிருக்கு.  எல்லாப்படமும் அதே புகைப்பட கருவியால் தான் எடுக்கப்பட்டிருக்கு.  ஒருமாதம் பின்னராக எடுக்கபட்டிருப்பவையும்தான்.(அந்த கருவி ஒருமாதம் ஒரு கையில் தொழில் துறை ரீதியாக காட்டுக்குள் இருந்திருக்கு)  ஏன்எனில் எல்லாவற்றினதும் திகதி முத்திரை ஒரே பாணியில் விழுந்திருக்கு. அப்போது ஏன் பிந்தி எடுத்த படங்களில் பொதிகளை பிரித்துக் காட்ட விரும்பவில்லையோ தெரியவில்லை. 

 

படங்களுக்கு மேலாக உங்கள் மௌசுகளை ஊர வைத்தீர்களானால் அவறின் பெயர் மின்னத் தொடங்கும். இது வழமையில் புகைப்படக்கருவி தானாகப்போடும் பெயர். அது படம் எடுக்கப்படும் திகதியை  பொறுத்திருக்கும். அதன் படி பிரிக்காத பொதிகளுக்கான திகதி ஏப்பிரல் 15, 2009 பிரித்த பொதிக்கான பட திகதி ஆகஸ்டு ஆறு, 2010.  அந்த திகதி நம்மபத்தக்கது போலிருக்கு. ஏன் எனில் அது அமெரிக்க முறையில், YYYYMMDD என்று போகிறது. என்வே இது புகைப்பட கருவியால் இடப்பட்ட பெயராகும். ஆனால் வெளியே தெரியும் சிவப்பு நிற எழுத்துத் திகதி இலங்கை முறையில்  DMYYYY என்று போகிறது. அதாவது இது இலங்கையில் வசிப்பவர் ஒரு புகைப்படத்தில் விழச் செய்த திகதி. 

 

இந்த திகதி மாறாட்டம் மற்றய மாறாட்டங்களும் இருக்கலாம் என்பதைதான் சொல்கிறது.

 

 

Edited by மல்லையூரான்

SLAF உடைய 14 வானூர்திகள் விழுத்தீட்டம் என்று சந்தோசப்படுவமா, அதை விட்டுட்டு இது எங்கடை இல்லை அவன் வைச்சது என்று ஆராய்வோமா

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.