Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவது அவசியம்: தயா மாஸ்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கு கொள்வது அவசியம் என்று முன்னாள் புலிகளின் ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர்  தெரிவித்தார்.

 

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் 13 ஆவது திருத்தத்திலுள்ள காணி பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டுமா? இல்லையா என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளதெனவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் மூத்த அரசியல்வாதியும் அரசியல் பட்டறிவுள்ள இரா.சம்பந்தன் கருத்துக்களை முன்வைப்பது அவசியமாகும்.

 

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்ட பின்னர் அது குறித்து பேசுவதால் எதுவித பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=5136

நல்ல நடிப்பு. சிராணியே அந்த ஒண்டும் "தெரியாத குழு"வுக்கு போக மறுத்து வெளியேறியவ. மானம் இல்லாமல் ஒரு பன்னாடை வேலைக்கு விமல் மாதிரி stooge களிடம் கெஞ்ச வேண்டுமா என்று தன்மானத்துடன் நடந்து கொண்டவ. சம்பந்தர் எதற்கு அங்கே போகவேண்டும்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
 
13 ஆவது திருத்தச்சட்டம் அமுல் படுத்துமிடத்து பொலிஸ் ,காணி அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கலாம் என கூட்டமைப்பு கூறுகிறது. தயா மாஸ்டரும் அதையே செய்யச்சொல்லி  கூட்டமைப்புக்கு சொல்கிறார்.
 
விடுதலைப்புலிகள் இச்சட்டம் உப்பு சப்பில்லாதது என சொல்லி அதனை ஏற்க மறுத்து இருந்தார்கள்.
 
பொலிஸ், காணி அதிகாரங்கள் ஒரு பேச்சுக்கு கிடைக்குமிடத்து அதனை கட்டுப்படுத்துபவர் நிச்சயமாக அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர் ஆவார்.நிச்சயமாக தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடியவராக ஆளுனர்  இருக்கவே மாட்டார். ஆகவே 13 ஆவது திருத்தச்சட்டம் எதற்கு என கூட்டமைப்பு சிந்தித்ததா? அல்லது காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறதா??

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

தயா மாஸ்ரர் அவர்களே, (மாஸ்ரர் என்று வாசிக்கும்போது, சைனா குங்பூ படங்களில் கரட்டிமஸ்ரரை சிஸ்யப்பிள்ளை அழைப்பதுபோல் உச்சரிக்கவும் அதாவது  ம்மாஸ்ரர் என) உதுகள் சங்கக் கடையில அம்மாப்பச்சை நிறுக்கிற விசையம் இல்லைப் பாருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.