Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களை இந்தியாவும் நட்டாற்றினில் விட்டது!! கூட்டமைப்பின் சிறீதரன் எச்சரிக்கை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை இந்தியாவும் நட்டாற்றினில் விட்டது!! கூட்டமைப்பின் சிறீதரன் எச்சரிக்கை!!

Jun 12, 2013
 
 
13வது திருத்தமோ, அதன் கீழ் வரும் மாகாண சபைத்தேர்தலோ, அதில் வெற்றி பெற்று நாம் அமைக்கக்கூடிய மாகாண சபையோ ஒரு போதும் சொற்ப அளவில்தானும் எமது எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யப்போவதில்லையென கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சிசிறீதரன் தெரிவித்துள்ளார். 13வது திருத்தத்தை தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக நான் ஒரு போதும் கருதவில்லை.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் வழி உருவாகிய இந்த 13வது திருத்தம் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தேசத்தின் அபிலாஷைகளையும் நியாயமான அச்சங்களையும் சற்றேனும் கருத்திலெடுக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழருக்கு சாதகமான ஒரு சில சரத்துக்கள் கூட 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது தமிழர்களுக்கு வாக்குறுதி வழங்கியபடி இந்திய அரசு ஒரு போதும் இந்த 13வது திருத்தம் தமிழரின் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைய வேண்டும் என்பதற்காக  எந்த முயற்சியையும் எடுத்ததுமில்லை, உறுதிப்படுத்தவுமில்லையென மேலும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

யாழ். ஊடக அமையத்தினில் அவர் இன்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் மேலும் தெரிவிக்கையினில் 1987ல் வரையப்பட்டபோதே இந்த 13வது திருத்தம் தமிழர் மீதான இன அழிப்பை தடுக்கக்கூடிய எந்த அதிகாரங்களையும் தமிழருக்கு வழங்கும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. மாறாக சில நிர்வாக பரவலாக்கங்களையே செய்தது. தமிழ்த்தேசத்தின் இருப்புக்கு மிக முக்கியமானது நிலம் அல்லது காணியாகும். ஆரம்பத்திலேயே இதன் கீழ் வழங்கியதாக காட்டப்பட்ட காணி அதிகாரங்களை செயற்படுத்தும் அதிகாரங்கள் முழுவதும் உண்மையில் ஜனாதிபதியிடமே வழங்கப்பட்டிருந்தன. இப்படித்தான் மிக முக்கியமான அதிகாரங்களான சட்டம் - ஓழுங்கு (பொலிஸ்), நீதித்துறை, கல்வி, நிதி, அபிவிருத்தி என்பன அரைகுறையாக தமிழருக்கு பயனளிக்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருந்தன. மேலும் வழங்கப்பட்ட சில அதிகாரங்கள் கூட ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநரிடமே வழங்கப்பட்டிருந்தன. அவர் விரும்பினால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையிடம் அந்த அதிகாரங்களை வழங்கலாம், வழங்காமலும் விடலாம். அதாவது சிறீலங்கா அரசு தனது இன அழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை பாதிக்கக்கூடிய எதுவும் 13வது திருத்தத்தில் (மாகாணசபை அமைப்பில்) வராதவாறு பார்த்துக்கொண்டது.

பின்னர் காலத்துக்குக்காலம் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள், 17ம், 18ம் அரசியல்யாப்புத்திருத்தங்கள் மூலம் ஏலவே இருந்த ஒரு சில சிறிய அதிகாரங்களும் பறிக்கப்பட்டன.

1987க்குப்பின்னான காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச்சக்தியாக இருந்த வரை 13வது திருத்தத்தை பிரச்சனையின் தீர்வுக்கான அடிப்படையாக யாருமே பேசியதுமில்லை, கருதியதுமில்லை. சிறீலங்கா அரசாங்ஙகங்களால் அமைக்கப்பட்ட மங்கள முனசிங்க ஆணைக்குழுவாகட்டும் சந்திரிகாவினால் 1995, 1997, 2000ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களாகட்டும் அண்மையில் நடந்து முடிந்த அனைத்துக்கட்சிக் கூட்டமாகட்டும் ஏன் இறுதியில் நடந்த த.தே.கூ. – அரசு பேச்சு வார்த்தையாகட்டும் எல்லாவற்றிலுமே தமிழரின் தேசியப்பிரச்சனைக்கு 13க்கு அப்பாலான ஒரு தீர்வு தேவை என்பதை அடிப்படையாகக்கொண்டே பேசப்பட்டன.

ஆனால் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப்பின், தமிழர் தரப்பு பலவீனமடைந்து விட்டதாக முடிவெடுத்துள்ள சிறீலங்கா அரசும் சிங்களப் பேரினவாதமும் 13வது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்மொழியத் தொடங்கினார்கள். துரதிர்ஷ்ட வசமாக தோற்றுவிட்டோம் எனத்துவண்டுவிட்ட எமது மக்களும் தலைவர்களும் 13வது திருத்தத்யையாவது பெற்று விடமாட்டோமா என ஏங்கத்தொடங்கினர். மற்றும் எம்மவர் போல வேடமிட்டு எமது தோல்வி மனப்பான்மையை நிலை பெறச்செய்து எம்மை மீளா அடிமைகளாக்கிவிட கைக்கூலி பெற்று செயற்படும் புத்திஜீவிகளாக தம்மைக் கூறிக்கொள்பவர்கள் சிலரும் 13ஐ சர்வரோக நிவாரணியாகவோ அல்லது எமது பலவீன நிலையில் கிடைக்கக்கூடிய ஒன்று இது மட்டும்தான் என்றோ கூறி ஏமாற்றி வருகின்றார்கள்.

இப்படியான 13வது திருத்தம் எப்படி தமிழரின் தேசியப்பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும்? இதன் வழி உருவாகும் மாகாண சபை எப்படி தமிழரின் இன அழிப்பை தடுக்கும் (காணிப்பறிப்பைத்தடுக்கும், திட்டமிட்ட குடியேற்றங்களைத்தடுக்கும்) அதிகாரங்களை  எமக்குத்தரும். அதனால்தான் 13வது திருத்தம் முழுமையாக அமுல் படுத்தப்பட்டால் கூட எமது பிரச்சனைகளுக்கான தீர்வாகவோ அல்லது ஒரு இடைக்காலத் தீர்வாகவோ அமைய முடியாது.

அதே நேரம் 13வது திருத்தத்தின் கீழான வட மாகாணசபைத் தேர்தலில் வென்று அதைக்கைப்பற்றி, பின்னர் அதிலிருந்துகொண்டு போராடியோ அல்லது இரந்தோ மேலும் மேலும் அதிகாரங்களை சேர்த்து, அதிகரித்துக் கொண்டுபோய் தமிழருக்கு ஒரு நல்ல தீர்வையோ அல்லது சிலர் சொல்வது போல சமஷ்டி அமைப்பையோ எக்காலத்திலும் அடையவும் முடியாது. இப்போதுள்ள அரசியல் யாப்பிலும் 13வது திருத்தத்திலும் அதற்கான எந்த சட்ட அடிப்படைகளும், வாய்ப்புகளும் இல்லை என்பதை சட்டம் அறிந்த அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றார்கள்.

இந்த நிலையில் சிங்கள பேரினவாதிகளும் அவர்களைத் தூண்டி விடுகின்ற பேரினவாத மையமான அரசும் ஏதோ மாகாணசபைகளிடம் இருக்கும் அதிகாரங்கள் தமிழருக்கு பலமாகிவிடும் எனக்கூக்குரலிடுவதும் (இல்லாத, வெற்று) அதிகாரங்களை அகற்றிவிட்டுத்தான் வட மகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் எனக்கூறுவதும் நகைப்புக்கிடமானது.

ஆனால் இவர்கள் அறியாமையால் செய்வதல்ல இந்த ஆர்ப்பாட்டங்கள். இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். ஆனால் இப்படி எதிர்ப்புகள் உள்ளதாகக் காட்டிக் கொள்வதற்கும் சில காரணங்கள் உள்ளன. முதலாவதாக, சிங்களப் பேரினவாதிகள் எதிர்ப்பதால் 13வது திருத்தத்தில் தமிழருக்கு பயனுள்ளதாக ஏதோ உள்ளது என தமிழரை தவறாக நம்ப வைப்பது, இரண்டாவதாக, இந்த 13வது திருத்தத்திலுள்ளதைச் செயற்படுத்தவே சிறீலங்கா அரசுக்கு இவ்வளவு எதிர்ப்பு உள்ளதால் இதற்கு மேல் எதையும் தமிழருக்கு வழங்குவது சிறீலங்கா அரசுக்கு மிகவும் கடினமானது என எம்மையும் சர்வதேசத்தையும் நம்ப வைப்பது, மூன்றாவதாக இப்போது இருக்கும் சில அற்ப அதிகாரங்களையும் பிடுங்குவதன் மூலம் சிங்கள தேசத்தின் பேரினவாத மனதைக் குளிர்வித்து தாமே சிங்கள தேசத்தின் காவலர்கள் என்பதை தொடர்ந்தும் நிலை நிறுத்தவது என்பனவாகும்.

இந்த அரசோ, இனிவரும் சிறீலங்கா அரசுகளோ ஒருபோதும் மாகாண சபையை முழுமையாக ஒழிக்கா. ஏனெனில் ஐ.தே.க., சி.சு.க. போன்ற கட்சிகளின் 2ம், 3ம் நிலை அரசியல்வாதிகளுக்கு பதவிகளையும் சம்பளம், சலுகைகள் என வசதிகளையும் வழங்க இந்த அமைப்பே பயன்படுகிறது. தற்போது மாகாண சபைகளில் 200க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பதவியில் இருந்து கொண்டு பல வசதிகளை அனுபவக்கின்றனர். அவர்களில் திரு. விமல் வீரவன்ச அணியினரும் ஹெல உறுமயவினரும்கூட உள்ளனர். இவர்கள் தமது நலன்களை ஒரு போதும் தியாகம் செய்ய மாட்டார்கள். ஆகவே 13வது தருத்தத்துக்கு எதிரான இந்த எதிர்ப்புகளெல்லாம் ஒரு நாடகத்தின் காட்சிகள் எனவும் கூறலாம்.

ஆனால் எம்மவர் சிலர் அரசை நோக்கி மாகாண சபையின் அதிகாரங்களைப் பறிக்காதே என கெஞ்சுவதும் மிரட்டுவதும் வட மாகாண சபைத்தேர்தலை நடாத்து எனக்கூறுவதும் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதுவும் ஆரம்பத்தில் (அதாவது 1987ல்) இருந்த 13வது திருத்தத்தை மீளவும் கொண்டுவர வேண்டும் என கூறுவதுவும் மிகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

என்னைப்பொறுத்தவரை இலங்கையின் அரசியல் யாப்பில் 13வது திருத்தம் உள்ளடங்கியுள்ளது. அதை அமுல்படுத்த வேண்டியது அந்த அரசியல் யாப்பினை பாதுகாப்போம் எனக்கூறுகின்ற அரசின் கடமை. அதை செய்வதும் செய்யாததும் அவர்களைப்பொறுத்தது. அந்த 13வது திருத்தத்தின் படி ஏனைய மாகாண சபைத்தேர்தல்களை நடாத்துவதைப்போல வடக்கு மாகாண சபைத்தேர்தலை நடாத்துவதும் அவர்களைப்பொறுத்தது.

மாகாண சபை முறைமையின் கீழ் எமக்கு ஒருபோதும் விடிவு ஏற்படப்போவதும் இல்லை. அதை வைத்துக்கொண்டு நாம் எதிர் நோக்குகின்ற இன அழிப்பை தடுக்கவோ, தணிக்கவோ முடியாது. அல்லது மாகாண சபையைப் பெற்றுக்கொண்டு மேலும் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது. அதனால் 13வது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் தமிழரின் தேசியப்பிரச்சனைக்கு தீர்வாகவோ அல்லது ஒரு இடைக்காலத் தீர்வாகவோ அல்லது எதிர்காலத்தில் வளர்த்தெடுத்துப் பெற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கான அடித்தளமாகவோ கருத முடியாது.

ஆனால் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் ஒன்று நடைபெறும் போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத் தேர்தலில் போட்டியிடும்.

ஏனெனில் தமிழரின் அரசியல் வெளிகளை அரசோ அல்லது சிங்களப் பேரினவாத்தின் ஏவலாள்களாக கேள்வியேதுமின்றி இன அழிப்புக்கு துணை போய்க்கொண்டிருக்கும், காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களோ கைப்பற்ற நாம் அனுமதிக்க முடியாது.

மேலும் புத்திக்கூர்மையுடன் செயற்பட்டால் பின்வரும் வழிகளில் வடக்கு மாகாண சபைத்தேர்தலினை நாம் ஒரு அரசியல் வேலைத்திட்டமாக செயற்படுத்த முடியும்.

நாம் எமது மக்களிடமிருந்து தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் மீண்டும் ஒரு தடவை மிகத்தெளிவான ஆணையைப் பெற இத் தேர்தலை பயன்படுத்த முடியும். தமிழரின் தேசிய அபிலாஷைகளான தமிழருக்கு ஒரு தாயகம் உண்டு, தமிழர் ஒரு தேசம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்பவற்றை அடிப்படையாக ஏற்றுக்கொண்டு அவற்றைப்பாதுகாக்கக்கூடிய அதிகாரங்கள் உள்ள, தமிழர்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய அதிகாரங்களைத் தரக்கூடிய ஒரு தீர்வே தமிழர்களின் அபிலாஷையாகும்.  அதற்கேற்றவாறான ஒரு காத்திரமான, வெளிப்படையான பிரகடனமாக தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் மக்களின் ஆணைக்காக முன்வைத்தல்.

தேர்தலில் நிற்பதற்கு வேட்பாளர்களாக தமிழ் மக்கள் மீதும் தமிழ்த் தேசியத்திலும் அசைக்க முடியாத பற்றுறுதியும், எதிரிக்கும் துரோகிகளுக்கும் தலை வணங்காத துணிவும், 13வது திருத்தம் எமக்கான தீர்வல்ல என்பதை கொள்கையாகவும் செயற்பாடுகளின் மூலமும் வெளிப்படுத்தக்கூடிய திறமையும், தமிழ்மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டக்கூடிய தலைமைத்துவ ஆற்றலும் தியாக சிந்தையும் உள்ள ஒற்றுமையாக அர்ப்பணிப்புடன் வேலை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்தல்.

இப்படியாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாணசபையின் த.தே.கூ. உறுப்பினர்கள் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் மூலம் தமிழருக்கான முழுமையான ஒரு தீர்வை சர்வதேச ஆதரவுடன் பெறுவதை தமது இலக்காக கொண்டு மக்களை அணிதிரட்டி ஜனநாயக விழுமியங்களை மீறாது போராடுதல்.

ஆகியவற்றை அவர் வலியுறுத்திக்கூறியிருந்தார். 

 
 
பதிவு
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நம்பி தலைவர் ஆயுதங்களை 1987 இல் ஒப்படைத்திருந்தால்.. இன்று வந்துள்ள இந்தக் கதி அன்றே வந்திருக்கும்.புலிகளின் இருப்புத் தான் மாகாண சபை என்ற ஒன்று உருவாகவும் உயிர் வாழவும் செய்தது..! எனித் தமிழர்களுக்கு எதுவுமே கிடைக்காது.

 

புலிகள் அழிந்தால் வெட்டுவம் விழுத்துவம் என்றவர்கள் கூட இன்று புலிகள் வளர்த்த தமிழ் தேசியத்தின் பின்னால் தான் ஒளிந்து நிற்கிறார்கள். மற்றவர்கள் வழமை போல இயன்றவரை தங்கள் பொக்கற்றுக்களை நிரப்பிக் கொள்வதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இவர்கள் தான் புலிகளின் அழிவு என்று தமிழ் மக்களின் அழிவை வரவேற்றவர்களும் கூட..!

 

தமிழர்களை இந்தியா நட்டாற்றில் விட்டுவிட்டு எனி சந்தோசமாக அது இருக்க முடியாது. ஏனெனில் 1987 இல் இருந்த பூகோள சூழ்நிலை இன்றில்லை. இன்று சீனா அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன் ஆதிக்கம் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்.. தமிழர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு இந்தியா பெருமூச்செறிந்து குறட்டை விடக் கூடிய சூழல் தெற்காசியாவில் இன்றில்லை. அப்படி ஒரு நிலையை சிங்களம் அவ்வளவு இலகுவாக இந்தியாவுக்கு விட்டு வைக்கப் போவதும் இல்லை.

 

இன்று தமிழர்களிடம் உள்ள ஒரே தெரிவு. ஒன்றிணைவும். சர்வதேச சமூகத்தின் நேரடி நுழைவை இலங்கைத் தீவுக்குள் இழுக்கக் கூடிய நகர்வுகளுமே..! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை  எப்பொழுது இந்தியா காப்பாற்றி  வைத்திருந்தது  கைவிடுவதற்கு...?

சபேசன் போன்றோரிடம் சேர்க்கவேண்டிய செய்தி இது.

 

தாயகத்திலிருந்து இதைச்சொல்லும் சிறீதரனுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

13.. 13 என்று பேசி அதை ஏதோ ஒரு பெரிய விடயம் போல பிரமாண்டமாகக் காட்டி வந்துள்ளார்கள்.. இந்தியா அதை விரும்புவதுபோல் காட்டியும் சிங்களம் அதை எதிர்ப்பதுபோல் காட்டியும் நாடகமாடி வருகிறார்கள்.. த.தே.கூட்டமைப்பும் மடங்கிவிட்டதுபோல் தெரிகிறது..

சமஷ்டியில் இருந்து 13.. பிறகு 13 இல் இருந்து சுழியம்.. :icon_idea: இதுதான் சிங்களவனின் இராஜதந்திரம்போல் உள்ளது.. இதில் இழுபட்டுத் திரிவதுதான் கூட்டமைப்பின் இராஜதந்திரமா? :rolleyes:

கூட்டமைப்பு இந்தியா சொல்வதற்கெல்லாம் தலையாட்டாமல் ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கு இணக்கமாக இந்தியாவின் கொள்கைகள் மாற்றப்படவேண்டிய அவசியத்தையும் அவ்வாறு செய்யாதுபோனால் சீன அபிவிருத்திகளை தமிழர்கள் உள்வாங்குகிற சூழல் ஏற்படலாம் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.. :rolleyes: ஐந்துபைசாவுக்குப் பிரியோசனம் இல்லாத இந்தியா காட்சியில் எதுக்கு இருக்கவேண்டும்? :rolleyes:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிங்களத்தின் நாடகத்தில் பங்கேற்பது என்பது..  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிலைப்பாடு அல்ல. இது சம்பந்தனின் கூத்து. 13 வது திருத்தத்தை இதே சம்பந்தன் 1987 இல் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி அப்போதைய இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய கூட்டத்தில் இருந்த ஒருவர். இந்தத் திருத்தம் ஒரு ஏமாற்று வேலை என்றவர்களே இப்போது அதை அடிப்படையாக வைச்சுப் பேசுவோம் என்கிறார்கள். அதனை இந்தியா தனக்கும்.. சிங்களம்.. தமிழர்களைப் பழிவாங்கவும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

 

புலிகள்.. தெளிவாகக் கூறி விட்டிருந்தனர். 13 வது திருத்தத்தினூடாகவோ.. மாகாண சபைகளுக்கூடாகவோ தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு எட்ட முடியாது என்று. குறைந்தது தமிழீழத்துக்கு மாற்றீடாக சுயநிர்ணய அங்கீகாரத்துடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறைமை.. அதுவும் ஒரே நாடு இரண்டு நிர்வாகம் என்ற நிலையில் இருந்தால் மட்டுமே அது தமிழீழத்துக்கு.. ஏதாவது உருப்படியான ஒரு மாற்றீடாக இருக்குமென்று.

 

இந்த நிலைப்பாடுகளில் இருந்து விட்டுக்கொடுக்க வெளிக்கிட்டுத்தான்.. இப்ப 13++.. 13+ ஆகி 13 ஆகி 13 -.. 13-- இப்போது அது பூச்சியமாக மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம்... சம்பந்தரின் விவேகமற்ற சாணக்கியம் மட்டுமே..! :(:rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.