Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிகாமம் வடக்கில் சிங்களக் கொலனிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமம் வடக்கில் சிங்களக் கொலனிகள்!

தமிழ், சிங்களம் பேசும் மக்கள் இந்த நாட்டில் சமாதானமாக ஒட்டுறவோடு வசிப்பதில் விருப்ப மில்லாத இந்த நாட்டின் ஒரு பகுதியினரின் மிகப் பெரிய பின்னடைவுத் திட்டமே இது.

யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கில் 6,381 ஏக்கர் நிலப் பரப்பை சுவீகரிக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இதற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. 
 
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அரசு முன்னெடுத்துவரும் நடவடிக் கையை எதிர்த்து உயர் நீதிமன்றத் திலும் மேல் முறையீட்டு நீதிமன்றத் திலும் 2,500க்கும் மேற் பட்டவர்கள் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். 
 
தோற்றுப்போன மக்கள்
போராட்டங்கள்
 
தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியும் என்று இந்த மக்கள் கடந்த 23 ஆண்டுகளாகக் காத்திருந்த நிலையில், அவர்களின் காணிகளைச் சுவீகரிக்கப் போவதாக அரசு அறிவித்திருப்பது மக்களுக் குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமது நிலங்கள் தமக்குத் திருப்பித் தரப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். 
 
இதற்காக ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை யும் அவர்கள் நடத்தியுள்ளார்கள். 
இருப்பினும் எவற்றுக்கும் மசியாத அரசு, காணிகளைச் சுவீகரிப்பதில் தீவிரமாக இருக்கிறது. 
 
பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயப் பகுதி (பலாலியும் காங்கேசன்துறையும்) அமைந்துள்ள இடத்தை முறைப்படி கையளிப்பதற்காக இந்தச் சுவீகரிப் புச் செய்யப்படுகிறது என்று அமைச்சு அறிவித்துள்ளது. 
 
நட்புறவுக் குடியேற்றம்
 
அரசின் இந்தத் திட்டம் போர் முடிந்த பின்னர், அண்மையில் உருவாக் கப்பட்ட ஒன்றல்ல. அது மிக நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே திட்டமி டப்பட்டிருக்கிறது. 
 
இதனை 14 வருடங் களுக்கு முன்னரே நாடாளுமன் றத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறார், தற்போதைய பாரம்பரிய சிறு தொழில் மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. 
 
வலி. வடக்கில் காணிகளைச் சுவீக ரித்து அங்கு "நட்புறவுக் குடியேற்றம்' என்ற பெயரில் சிங்களவர்களைக் குடியேற்றும் திட்டம் ஒன்று இருந்த மையை அவர் அன்றே நாடாளு மன்றத்தில் தெரிவித்திருக்கிறார். 
 
அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தாவது:
 
நிலசுவீகரிப்பை 
அம்பலமாக்கிய டக்ளஸ்
 
வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட d48 சதுர கிலோ மீற்றர் (இருபது சதுர மைல்) அளவு டையது சுமார் பன்னிரண்டாயிரம் ஏக்கர் விஸ்தீரணம் உள்ளது நிலத்தை குறிப்பிட்டுச் சொல்லப்படாத ஒரு காரணத்துக்காக சுவீகரிப்பதற்கு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக எமக்குத் தெரிய வந்திருக்கின்றது.
 
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 435 கிராம சேவையாளர் பிரிவுகளில் 35 கிராம சேவையாளர் பிரிவுகள் சுவீகரிக்கப்பட இருப்பதை நம்ப முடியாமல் இருக்கின்றது. 
 
இந்தப் பிரதேசத்தின் பிரதான மூலவள நிலப் பகுதியைப் பறிமுதல் செய்ய அரச முடிவு செய்திருக்கின்றதா?
அரசினால் சுவீகரிப்பதற்குத் திட்டமி டப்பட்டுள்ள  கிராம சேவையாளர் பிரிவுகளின் பட்டியலை நான் சபைக் குச் சமர்ப்பிக்கின்றேன். 
யாழ். குடாநாடு விடுவிக்கப்பட்ட பிரதேசம் என்று அரசு கூறுகின்றது. ஆனாலும் இராணுவ நடவடிக்கை காரணமாக காங்கேசன்துறை தெல்லிப்பழைd பலாலி வசா விளான் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்றுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை.
 
இந்தப் பிரதேசத்தின் பெரும்பாலான வீடுகள் பாதுகாப்புப் படையினரால் புல் டோஸர் கொண்டு தரைமட்ட மாக்கப்பட்டுள்ளன.
 
உப உணவுப் பயிர்களின் உற்பத்திக்கு இந்தப் பிரதேச நிலம்தான் மிகச் சிறந்தது . இந்தப் பிரதேச மக்கள் கடந்த காலங்களில் தமது நிலத்தில் பயிர் செய்ததன் மூலம் மாதாந்தம் கணிசமான வருவாயைப் பெற்று வந்தனர். கடந்த மூன்று வருட காலமாக அவர்களது வருமானம் தடுக்கப் பட்டுள்ளது. அவர்களது சொத்துக்களைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும் அரசு அவர்களுக்கு வாடகைகூடக் கொடுக்க வில்லை.
 
குறிப்பிட்டு கூறப்படாத ஏதோ ஒரு காரணத்துக்காக ஆயுதப் படையின ருக்கு மேலும்  நிலம் தேவைப்படு வது போலத் தெரிகின்றது. இல்லையயனில் யாழ். குடாநாட்டின் மிக முக்கிய நிலப் பிரதேசத்தில் 48 சதுர கிலோ மீற்றரை பாதுகாப்புப் படைகள் கபளீகரம் செய்ய முயல்வது ஏன்? காங்கேசன்துறை தெல் லிப்பழை, பலாலி, வசாவிளான் பிரதேசத்தில் உலகின் மிகப்பெரிய படைத்தளத்தை நிறுவ அரசு முயல் கின்றதா?
 
மக்களின் நிலப்பிரதேசத்தில் கட்டி யாக ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அந்த மக்களின் மனதை யும் இதயத்தையும் வெல்ல முடி யாது.  அரசியல் தீர்வு மூலம் மட்டுமே மக்கள் மனதை நீங்கள் வெல்ல முடியும்.
 
இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணும் முயற்சிக்கு வழி வகுப்பதில் ஆர்வம் காட்டுவதோடு மட்டுமல்லாமல்,  மக்கள் நிலத்தை ஆக்கிரமிப்பதிலும், இராணுவ ரீதியில் மக்களை அடக்குவதிலும் நாட்டின் ஒரு பகுதியினர் விருப்பத்தோடு ஈடுபட்டிருப்பதை விசனத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
 
காங்கேசன்துறை சிமெந்து ஆலையை அப்படியே இடமாற்ற வேண்டும் என்ற யோசனை ஏன் முன்வைக் கப்பட்டது என்பதை எங்களால் இப்போது உணரக் கூடியதாகவுள்ளது. பல நூறு கோடி ரூபா பணம் செலவானாலும் கூட, சிமெந்து ஆலை யாழ்ப்பாணத்தில் வேறு இடத்தில் புதிதாகக் கட்டப்பட வேண்டும் என்று அவர்கள் கூறி வந்தனர்.
 
காங்கேசன் துறை சிமெந்து ஆலையைப் படை யினரிடம் ஒப்படைப்பதில் மட்டுமே அவர்களுக்கு ஆர்வம். தமிழ், சிங்களம் பேசும் மக்கள் இந்த நாட்டில் சமாதானமாக ஒட்டுறவோடு வசிப்பதில் விருப்ப மில்லாத இந்த நாட்டின் ஒரு பகுதியினரின் மிகப் பெரிய பின்னடைவுத் திட்டமே இது. 
 
சில காலமாக ஒரு கொள்கை பற்றி நாங்கள் கேள்விப்பட்டு வந்திருக் கின்றோம். யாழ்ப்பாணத்தில் "நட்பு றவுக் கொலனி'யால் (குடியேற்றத் தால்), அதாவது சிங்களப் பொது மக்களால், படைகள் சூழப்பட்டிருந் தால் புலிகளி டமிருந்து படைகளுக்குப் பாதுகாப்புக்கிட்டும் என்பதே அந்தக் கொள்கை. 
 
தமிழ் மக்கள் படையினருடன் நட்புறவுடன் இருக்க மாட்டார்கள் என்ற தீர்மானத்துடன் தான் இந்தக் கொள்கை பிறந்துள்ளது என்பது வெள்ளிடைமலை. 
 
எனவே காங்கேசன்துறைd தெல்லிப் பழை, பலாலி, வசாவிளான் பிரதே சத்தில் அவர்களுக்கு ஒரு "நட்புறவுக் குடியேற்றம்' தேவைப்படுகின்றது. நாங்கள் இந்தக்  கொள்கை உண்மையாக இருக்கக்கூடாது என விரும் புகின்றோம்.
 
இந்தக் கொள்கையின் பின்னணியில் இருக்கும் சிங்கள இனவாத சக்திகளினால் அரசு தவறான முறையில் வழிநடத்தப்படுமானால் அது கடைசியில் ஒரு தேசியப் பேரிழப்பாகவே போய் முடியும். இத்த கைய கொள்கைகள் சிங்கள தமிழ் பிரிவினையை நிரந்தரமானதாக்கி விடும்.
 
இந்த நாட்டின் துன்பப்படும் மக்களின் நிலை குறித்து உணர்வுபூர்வமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவராலும் இத்தகைய இனவாத சக்திகளை அடையாளம் கண்டு ஒடுக்கமுடியும் என நான் நம்புகிறேன்.
 
காங்கேசன்துறை, தெல்லிப்பழை, பலாலி, வசாவிளான் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்பதை நாடாளுமன்றத்திலே அரசு உறுதிபடத் தெரிவிக்க வேண்டும் என நான் கோருகின்றேன்.
 
சம்மதத்துக்கு அறிகுறியான மெளனம்
 
டக்ளஸ் தேவானந்தா 1999 மார்ச் மாதம் 12ஆம் திகதி நாடாளு மன்றத் தில் இந்த உரையை ஆற்றி இருக்கிறார். அப்போது ஜனாதிபதியாக சந்திரிகா குமாரணதுங்க பதவி வகித்தார். 
 
தற்போது மஹிந்த ராஜக் ­வின் அரசின் கீழ் வலி. வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன. இவை சுவீக ரிக்கப்படுவதற்கான திட்டம் இருக்கின்றது என்பதைத் தெரிந்திருந்த போதும் அதனைத் தடுத்து நிறுத்த அவர் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
 
முதலமைச்சரானால் மட்டும்
டக்ளஸ் மீட்பாரா?
 
எனினும் இப்போது அவர், தன்னை வடக்கு மாகாண முதலமைச்சராகத் தமிழ் மக்கள் தெரிவு செய்தால் காணி சுவீகரிப்பைத் தான் தடுத்து நிறுத்தி காணிகளை மீட்டுத் தருவார் என்று கூறிவருகின்றார். காணிகள் பறிபோகும் என்பது தெரிந்திருந்தும் அதனை நாடாளுமன்றத்தில் அம் பலப்படுத்தியிருந்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதவரா முதலமைச்சர் ஆகி காணிகளை மீட்கப் போகிறார் என்று வலி. வடக்கு மக்கள் இப்போது கேள்வி எழுப்பு கின்றனர்.
 
அத்துடன் சுவீகரிக்கப்பட உள்ள காணிகளில் "நட்புறவுக் குடியேற்றங்கள்' உருவாக்கப்படப் போகின்றன என்ற எதிர்வுகூறலையும் அவர் அப்போதே செய்திருக்கிறார் என்ற செய்தி மக்கள் மனங்களில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத் தியிருக்கிறது.
 
தங்கள் நிலம் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு வேறு எவருக்கோ கொடுக்கப்படப் போகின்றதா என்று அங்கலாக்கிறார்கள் அவர்கள். 

 http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5633150430645963

  • கருத்துக்கள உறவுகள்

அடப்போங்கப்பா.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.