Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு வாகனேரியில் தமிழ் விவசாயிகள் மீது முஸ்லீம் காடையர்கள் தாக்குதல் -

Featured Replies

vahanery_attack_tna_visit_005-150x150.jpமட்டக்களப்பு வாகனேரியில் தமிழ் விவசாயிகள் மீது முஸ்லீம் காடையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தாக்குதலில் 22தமிழ் விவசாயிகள் காயமடைந்துள்ளதுடன் ஐந்து தமிழர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனேரி பொத்தானைப்பகுதியில் உள்ள கொழுவாமடு விவசாய கண்டப்பகுதியில் பல காலமாக தமிழர்கள் விவசாயம் செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் இப்பகுதியில் உள்ள காணிகளை பிடித்தும் பலரிடம் ஆசை வார்த்தை காட்டி காணிகளை வாங்கியுள்ள முஸ்லிம்கள் காடையர்கள் சிலர் இப்பகுதியில் தமிழர்களின் விவசாய நடவடிக்கைகக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதுடன் அவர்களுக்கான நீர் விநியோக நடவடிக்கைகளையும் தடுத்து வந்தனர்.

இது தொடர்பில் கடந்த ஆண்டும் இரு சமூகங்களுக்கும் இடையில் இது தொடர்பில் இப்பகுதியில் முறுகல் நிலையேற்பட்டு இராணுவத்தின் தலையீட்டின் காரணமாக அந்த முறுகல் நிலை நிறுத்தப்பட்டது.  இந்த நிலையில் இன்று அப்பகுதிக்கு சென்ற பெருமளவான முஸ்லிம் பயங்கரவாதிகளான காடையர்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அப்பாவி தமிழர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது 22 விவசாயிகள் காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 17பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ள நிலையில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்,

தமது பகுதிக்கான தண்ணீர் வரும்பகுதியை சில முஸ்லிம் காடையர்கள் அடைத்து வைத்து தமது பகுதிக்கு அதனை திரும்பியிருந்தனர். இதனை திறந்து விடுமாறு பல்வேறு தடவைகள் கோரிய போதிலும் நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்,தண்ணீர் இல்லாத காரணத்தினால் எமது விவசாய நடவடிக்கைகள் முடங்கிப்போகின.   இதனை கருத்தில்கொண்டு இன்று அப்பகுதியில் விவசாயம் செய்யும் நாங்கள் அப்பகுதிக்கு சென்று தண்ணீர் கட்டப்பட்டுள்ள பகுதியில் திறந்து விட முயற்சி செய்தோம்.

இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த பெருமளவான முஸ்லீம் காடையர்கள் எம்மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்களில் அதிகமானோர் அப்பகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள். அவர்கள் விவசாய நடவடிக்கைகளில் அப்பகுதியில் ஈடுபடுவதில்லை. திட்டமிட்ட வகையிலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதல் நடத்துவதன் மூலம் இப்பகுதியில் உள்ள காணிகளை தமிழர்கள் விற்று விட்டுச்செல்வார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை தமிழ் தேசிய கூட்மைப்பினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சென்று பார்வையிட்டனர்.

இவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

தாக்கிய முஸ்லிம்கள் காடையர்கள் சுமார் 8000ஏக்கர் காணிகளில் எந்தவொரு சட்ட அங்கிகாரமும் அற்ற முறையில் முஸ்லீம் அரசியல் வாதியின் பின்னணியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் தமிழ் விவசாயிகளின் பெயர் விபரம் வருமாறு:-

01.சுப்பிரமணியம் கருணாகரன் (39) சித்தாண்டி.

02.சிவப்பிரகாசம் மயில்வாகனம் (43) மாவடிவேம்பு 02.

03.சாமித்தம்பி துரைராஜா (42) சந்திவெளி.

04.வேலாயுதம் சிவசாரசா (43) சந்திவெளி.

05.சுக்குறு சாமித்தம்பி (63) –வட்டவிதானை சந்திவெளிVayal-Farmer-Attack-4.jpgVayal-Farmer-Attack-6.jpgvahanery_attack_tna_visit_001.jpgvahanery_attack_tna_visit_005.jpg

 

 

 

 

- See more at: http://www.thinakkathir.com/?p=51017#sthash.3D90Womv.dpuf

 

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் காடைத்தன அரசியலுக்கும் காடைத்தன சமூக வாழ்விற்கும் சலாம் போடுபவர்கள் இந்த மக்களின் துன்பங்களுக்கு முடிவு கட்டுவார்கள்..!!!!

இது யாழிலும் மற்ற இடங்களிலும் தொடந்து சேவையாற்றும் அரச பிரசாரிகளால் துவக்கி வைக்கப்பட்டது.  வெகு விரைவில் சாதிச்சண்டைகள் ஆரம்பிக்கும்.

 

இதில் தமிழர் திருப்பி அடித்தால் புத்தகம் அடித்து வெளியிடுவார்கள்.  இந்த செய்தி சில நாட்களாக அடிபடுகிறது. அந்த விவசாயிகளுக்கு சண்டை இல்லாமல்  தண்ணீர் பெற்றுக்கொடுக்க யாராவது முன்வருவார்களா?    

Edited by மல்லையூரான்

எட்டி உதைத்த சிங்களவனுக்கு அடி விழும் போது பதறும் புலம்பெயர் சிறி லங்கா செல்வங்கள் எங்கே?

 

அவங்க இதற்குப் பிறகு கிடைத்த Salary Increaseயை கொண்டாட போத்தல் ஒன்ணு வாங்க வெளியில் போய் இருக்கிறாங்க. வந்தவுடன் பதில் எழுதுவாங்க.

Edited by மல்லையூரான்

விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு எதிராக மட்டக்களப்பு கிரானில் ஆர்ப்பாட்டம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 ஜூலை, 2013 - 10:05 ஜிஎம்டி
130701095833_tamils_protest_304x171_bbc_

தமிழ் விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று கிரான் சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டப் பேரணியில் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

களுவாமடு எனுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பத்தில் 5 விவசாயிகள் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை காவல் துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைதான முஸ்லிம் விவசாயிகள் 5 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாதூறு ஒயா நீர்த்தேக்கத்திலிருந்து வாகனேரி குளத்திற்கு திறந்து விடப்பட்டுள்ள நீரை சிலர் அணை போட்டு திருப்பியுள்ள நிலையில், அந்த தடுப்பு அணைகளை அகற்றி விட்டு திரும்பும் போதே குறித்த விவசாயிகள் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளனர்.

130701100001_batti_famers_protest_sri_la

சட்டவிரோத வேளாண்மைச் செய்கைகளை தடுக்குமாறும் கோரிக்கை

இந்த சட்டவிரோத அணைகளை தங்களது அனுமதி பெற்றே விவசாயிகள் அகற்றியதாக நீர்ப்பானத் தினைக்களம் தெரிவிக்கிறது.

வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அந்தப் பகுதிகளில் தொடரும் சட்டவிரோத வேளாண்மைச் செய்கைகள் தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் வாசக அட்டைகளை ஏந்தியிருந்தார்கள்.

விவசாயிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான இரா. துரைரெத்தினம், கி.துரைராஜசிங்கம் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/07/130701_battifarmersprotest.shtml

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.