Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் வளர்த்த நாட்டில் தமிழுக்குச் சோதனை

Featured Replies

தமிழ் வளர்த்த நாட்டில் தமிழுக்குச் சோதனை

540920_572810312737223_75047906_n.jpg

தமிழ் மொழியை தெரிந்து கொள்வது முக்கியமல்ல அதனை எழுத்துப் பிழைகளின்றியும் பேசும்பொழுது அதற்கான ஒலிக்குறிப்புகளை அட்சரசுத்தமாக பேசுகின்ற தமிழர் எத்தனைபேர்??  இவைகளை ஆய்வு செய்வதே இந்தப்பதிவின் நோக்கம் .

சங்கம் வளர்த்து தமிழைக்கட்டிக் காத்த தமிழகம் இன்று தமிழ் மொழிப்பாவனையில் தலைகீழாக நிற்கின்றது . இதற்கு மூலகாரணமாக கடந்த 20 வருடங்களுக்குப் பின்பு முன்னணியில் இருக்கின்ற இரண்டு திராவிடக்கட்சிகளின் ஊடகங்கள் , தொலைகாட்சிகள் தமிழக இளைய சமூகத்திடம் ஏற்படுத்திய தமிழ்கொலை என்பன முன்னணியில் நிற்கின்றன . அதையே பின்பற்றி இலங்கையிலும் , புலத்திலும் தமிழ்கொலைகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன . முன்பு தமிழ் உச்சரிப்பை மக்களிடம் கொண்டு சென்றதில் இலங்கை வானொலி முன்னணியில் நின்றது . ஆனால் இன்று நிலமை தலைகீழாகவே இருக்கின்றது . தமிழர் , அவர்தம் தேசியப்போராட்டம் என்பவற்றை பேசுவதற்கு முதல் எமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் ஆயுட்காலம் , அதன் பாவனை முறைகள் என்பன காய்த்தல் உவத்தலின்றி விவாதத்திற்கு உட்படுத்தப்படவேண்டும் . இந்தப் பதிவை நான் ஆரம்பிப்பதற்கு மூலகாரணியாக இருந்தது இன்றைய பத்திரிகைக் குறிப்பு ஒன்றே .  கள உறவுகளாகிய உங்கள் கருத்துகளையும் எதிர்பார்க்கின்றேன் .

******************************

கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் குறில், நெடில் சார்ந்த தெளிவின்மையின் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழை அதிகமாக உள்ளது என்று ஆய்வுப்பணியில் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும், ஆரம்பப்பள்ளிகளில், காலை வழிபாடு, செயல் வழி கற்றல் வகுப்பு, தனித்தன்மை வெளிப்பாடு, நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா என்று உதவி தொடக்ககல்வி அலுவலர், வட்டார வள மைய அலுவலர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். ஆய்வின் ஒரு பகுதியாக, மாணவர்களின் வாசிப்பு திறன், புரிந்து கொள்ளும் தன்மை சோதிக்கப்பட்டன.கோவை செல்வபுரம் ஆரம்பப்பள்ளி (மையம்) மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு செய்யப்பட்டதில், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சரியாக உச்சரிக்கும் மாணவர்கள், எழுத்துக்களை தனியாக உச்சரிக்கும் போது, பெரும்பாலான மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த தெளிவு இல்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழைகள் அதிகரிப்பதாகவும், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த குறைபாடு இருப்பதாகவும் வட்டார வள மைய அலுவலர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, "க' என்பதை க்+ அ என்று உச்சரிப்பதற்கு பதிலாக க்+ஆ என்றே 95 சதவீத மாணவர்கள் பயில்கின்றனர். வார்த்தைகளாக எழுதும்போதும், இந்த குறில், நெடில் பற்றிய தெளிவு இல்லாததால், எழுத்துப் பிழையுடனே எழுதுவதையும் அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர். ஆரம்பப்பள்ளியில் தவறான முறையில் கற்கும் மாணவர்கள், பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் இந்த குறில், நெடில் வித்தியாசங்களை உணராமலே மேல்நிலைக் கல்வி கற்கச்செல்கின்றனர். அங்கு தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாததால், வாழ்க்கை முழுவதும் இந்த எழுத்துப் பிழையும் அவர்களுடன் பயணிக்கிறது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் வசந்தி கூறுகையில்,""ஆரம்பப்பள்ளிகளில் நாம் கற்றுக்கொடுப்பதே மாணவர்களின் மனதில் நன்கு பதியும். கற்பித்தலில், தவறுகள் ஏற்பட்டால் சரி செய்வது கடினம். மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த மாதிரி வகுப்புகள் எடுக்கப்பட்டது. தமிழ் மொழியின் அழகே சரியான உச்சரிப்பு, அதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். குறில் தெரியாமல் வாசிப்பது எளிது; ஆனால், எழுதுவது கடினம். சராசரி மாணவர்களுக்கும், சராசரிக்குக் குறைவான மாணவர்களுக்கும் எழுத்துப்பிழைகள் அதிகரிக்க இதுவே காரணம்,'' என்றார்.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,"கோவை மாவட்டத்தில் பொதுவாக குறில், நெடில் கற்பிக்கும் முறை சரியாக இல்லை. "எனக்கு' என்ற சாதாரண வார்த்தையை மாணவர்கள் எழுத்துக்களாக படிக்க சொல்லும் போது "ஏ,னா,க் கூ' (எனக்கு) என்று உச்சரிக்கின்றனர். இது முற்றிலும் தவறு, பெரும்பாலான ஆசிரியர்களுக்கே குறிலுக்கான வித்தியாசம் புரியவில்லை என்பதே உண்மை. முதலில் இந்த வித்தியாசத்தை ஆசிரியர்கள் மத்தியில் தெளிவு படுத்துவது அவசியம்' என்றனர்.

தாய்மொழியும் முக்கியம்:

ஆங்கில வழிக்கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு, தாய் மொழியான தமிழை தவறின்றிப் படிப்பதற்கு பள்ளி மாணவர்களைத் தயார் படுத்த வேண்டுமென்பதே கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கான முதல் முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழைத் தெளிவாக எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் கற்றுத்தருவது அவசியம்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=747158

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

தமிழுக்கு உண்மையில் சோதனை தானோ ???

தமிழருக்கு உலகில் எங்குமே சோதனை. அது தமிழுக்கும் வந்து சேர்கிறது. இந்த குறில், நெடில் இது வரை பெரிய பிரச்சனையாக இருந்ததாக அறியப்படவில்லை. தமிழ் நாட்டில் தமிழைக் கெடுப்பது ஆங்கிலம். ஆனால் அதுதான் அங்கு பொருளாதார வளர்த்தியைக் கொண்டு வந்்து. இந்தித் திணிப்பை தடுத்தது. ஆங்கிலம் கெடுக்காவிட்டால் இதை விட மோசமாக இந்தி புகுந்து கெடுத்திருக்கும்.

தமிழருக்கு தமிழ் மீது ஆர்வம் வரவேண்டும். திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க வழி இல்லை.

வரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மல்லை .

1044492_542490425787290_877687698_n.jpg

994207_574445045927268_555436154_n.jpg
தமிழில் படித்து உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் தமிழர். அய்யா சதாசிவம் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இணையமயமாகி விட்ட இந்தக் காலத்தில் ஒரு மொழியை வளர்ப்பதற்கு

இணைய மொழி ஆளுகை இலகுவாக்கப்பட வேண்டும்.

பெரிய பெரிய கவிதையாளர்கள், எழுத்தாளர்கள்  எல்லோரும் தற்போது இணையத்தில் தான் 

தங்கள் திறமையை வெளிப்படுத்த முயல்கின்றனர்.

அவர்களுக்கு இணையத்தில் எழுதுவதற்கு போதுமான ஆளுமை இல்லை.

தமிழ் மொழி இணையத்தில் எழுதும் முறை இன்னும் இலகுவாக்கப்பட்டால் 

அதை எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இலகுவாக இருக்கும் 

பேச்சு வழக்கில் மாற்றங்கள் இலகுவானதல்ல. பழைய காலங்களில் இருந்தே 

ஒரு மொழி பல வழக்குகளில் பேசப்படுகின்றது.

தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்காக: கூகுள் நேரடி தமிழ் தட்டச்சிற்கான ன மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது ............. தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் டைப் பண்ணினால் இந்த மென் பொருள் தானாகவே தமிழில் மாற்றும் செய்து கொள்கிறது ........... நண்பர்களே உபயோகித்து பயன் பெறுங்கள் ......மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..... http://www.google.com/intl/ta/inputtools/windows/ அல்லது http://www.google.co.in/inputtools/windows/ > Select Tamil from the List வலது புறத்தில் உள்ள மொழிகளில் தமிழை தெரிவு செய்து பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். நன்றி... உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
10372_10151520290097473_1168563557_n.png

1011802_678947445464057_419877907_n.jpg

  • தொடங்கியவர்

தமிழருக்கு உலகில் எங்குமே சோதனை. அது தமிழுக்கும் வந்து சேர்கிறது. இந்த குறில், நெடில் இது வரை பெரிய பிரச்சனையாக இருந்ததாக அறியப்படவில்லை. தமிழ் நாட்டில் தமிழைக் கெடுப்பது ஆங்கிலம். ஆனால் அதுதான் அங்கு பொருளாதார வளர்த்தியைக் கொண்டு வந்்து. இந்தித் திணிப்பை தடுத்தது. ஆங்கிலம் கெடுக்காவிட்டால் இதை விட மோசமாக இந்தி புகுந்து கெடுத்திருக்கும்.

தமிழருக்கு தமிழ் மீது ஆர்வம் வரவேண்டும். திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க வழி இல்லை.

இல்லை மல்லையூரன் ....... குறில் , நெடில் , லகர , ளகர போன்றவையே , அது பேச்சிலும் சரி எழுத்திலும் சரி தமிழைக் கொல்வதில் முன்நிற்கின்றன .  அதற்காக நான் சுத்தமானவன் என்று சொல்லவில்லை . நானும் ஆரம்பத்தில்  பிழை விட்டேன் . என்மீது அக்கறை கொண்ட களஉறவுகளின் வழிகாட்டலில் முடிந்தளவு திருந்தியுள்ளேன் . ஓர் சிறிய உதாரணம் தருகின்றேன் . நான் இணைத்த படத்தில் " மகிழூந்தி"  என்று வரவேண்டியதிற்கு " மகிழுந்தி " என்று போட்டு இணையத்தில் படமாக விட்டுள்ளார்கள் . உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி .

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இணையமயமாகி விட்ட இந்தக் காலத்தில் ஒரு மொழியை வளர்ப்பதற்கு

இணைய மொழி ஆளுகை இலகுவாக்கப்பட வேண்டும்.

பெரிய பெரிய கவிதையாளர்கள், எழுத்தாளர்கள்  எல்லோரும் தற்போது இணையத்தில் தான் 

தங்கள் திறமையை வெளிப்படுத்த முயல்கின்றனர்.

அவர்களுக்கு இணையத்தில் எழுதுவதற்கு போதுமான ஆளுமை இல்லை.

தமிழ் மொழி இணையத்தில் எழுதும் முறை இன்னும் இலகுவாக்கப்பட்டால் 

அதை எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இலகுவாக இருக்கும் 

பேச்சு வழக்கில் மாற்றங்கள் இலகுவானதல்ல. பழைய காலங்களில் இருந்தே 

ஒரு மொழி பல வழக்குகளில் பேசப்படுகின்றது.

உங்கள் கருத்துடன் நான் ஒன்றுபட்டாலும் , பேச்சுவழக்கு அல்லது வட்டார வழக்குடன் நான் வேறுபடுகின்றேன் . ஒருவருடன் நேரடியாகப் பேசும்பொழுது வட்டாரவழக்கு வருவதில் தவறில்லை . ஆனால் மொழிப்பாவனையில் ழகரங்கள் , லகரங்கள் , குறில் , நெடில்கள் போன்றவற்றைத் தவறாகப்பாவிப்பது ஒரு கருத்தின் போக்கையே மாற்றிவிடும் என்பதே எனது கருத்தாகும் .உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றிகள்  வாத்தியார் .

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தை பார்ப்பவர்களும் எழுதுபவர்களும் அதிகம் என்பதால் இணையத்தில் தமிழில் சரியாக எழுதும் போது தமிழை வழஇணையத்தை பார்ப்பவர்களும் எழுதுபவர்களும் அதிகம் என்பதால் இணையத்தில் தமிழில் சரியாக எழுதும் போது தமிழை வழப்பதில் எமது பங்கை அளிக்கலாம் என்பது எனது கருத்து.பதில் எமது பங்கை அளிக்கலாம் என்பது எனது கருத்து.

ல,ழ,ள & ர, ற &  ண, ன  போன்ற எழுத்துக்களை எழுதும் போது பாவிக்க வேண்டிய இடங்களில் பாவிக்கும் போது தமிழில் எழுதும் போது ஏற்படும் அநேகமான பிழைகள் நீங்கி விடும். ஏனெனில் இவ் எழுத்துக்களை பாவிப்பதில் தான் அநேகருக்கு பிரச்சனை உண்டு.

உண்மை நுணா .   அத்துடன் மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள ஊடகங்கள் ( வானொலி , தோலைக்காட்சி ) மக்களுடன் அன்னியோன்யத்தை வளர்க்கின்றோம் என்ற கோணங்கித்தனமான செயல்பாடுகளை முதலில் ஆரம்பித்தது தமிழகத்தின் இருபிரதான கட்சிகளின் ஊடகங்களே . இதனால் பாதிக்கப்பட்டது வயது வந்தோரில் இருந்து சிறியவர்கள்வரை சாதாரணமக்களே . அதன் விழைவைத்தான் இந்த செய்திக்குறிப்பும் சொல்கின்றது.

  • தொடங்கியவர்

1044492_542490425787290_877687698_n.jpg

994207_574445045927268_555436154_n.jpg
தமிழில் படித்து உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் தமிழர். அய்யா சதாசிவம் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

வரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி யாழ் அன்பு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.