Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பின் கட்சிகளே முடிவெடுக்கவேண்டும்: சுரேஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பின் கட்சிகளே முடிவெடுக்கவேண்டும்: சுரேஸ்

 

வடக்கு மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.கிளை தீர்மானித்துள்ளமை ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையாது எனத் தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபைக்கான முதலமைச்சர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் இணைந்தே முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண சபைக்கான கூட்டமைப்பினுடைய வேட்பாளர்களை கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளே தெரிவு செய்யவேண்டும். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி தனது சார்பாக ஒருவரை தெரிவு செய்வது என்பது, ஒரு கட்சி சார்ந்த முடிவாகவே அமையும். கூட்டமைப்பினுடைய வேட்பாளராக இருக்க வேண்டுமானால் அதன் இணைக்கப்பாடுடன் வேட்பாளர்களை தெரிவு செய்யவேண்டும்.

தமிழரசுக் கட்சியினுடைய யாழ்.கிளை தமிழரசுக் கட்சியினுடைய முதலமைச்சர் வேட்பாளராக மாவை சோனாதிராஜாவை பிரேரித்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். அதனை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருக்கு அறிவித்துள்ளார்கள். ஆனால் சம்பந்தன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், அப்படியான எதுவும் நடைபெறவில்லையென தெரிவித்ததுடன் மட்டுமல்லாது தேர்தலுக்கான திகதி அறிவித்த பின்னரே இது தொடர்பாக ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=5637

சுரேஸ் நெடுகவும் இந்த வடமாகாணத் தேர்தலில் மினக்கெடுகிறார். அரசு ஆப்பிறுக்க வடிவாக வளைந்து கொடுக்கிறார்.

 

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதனை இன்னமும் தீர்மானிக்கவில்லை - இரா.சம்பந்தன் 
[Tuesday, 2013-07-02 17:38:30]
sampanthan-seithy-2-150.jpg

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளர் எவரையும் இதுவரையில் தெரிவு செய்யவில்லை என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும் எனவும் அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=86523&category=TamilNews&language=tamil

 


தமிழர்கள் முதலில் தோல்வி மனப்பாங்கிலிருந்து வெளியே வரவேண்டும் - சிறீதரன் camera_icon.jpeg 
[Tuesday, 2013-07-02 19:14:52]
tna-village-seithy-2-20130702-150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம யாத்திரையின் தொடர்ச்சியாக வேரவில் கிராமத் தரிசிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இத்தரிசிப்பில் பாராளுமன்ற பாராளுன்ற உறுப்பினர் சி.சிறீதரன், பூநகரிப் பிரதேச அமைப்பாளரும் ஆசிரியருமான செ.சிறீரஞ்சன், கிளிநொச்சி பிரதேச இளைஞர் அணிச் செயலாளர் கு.சர்வானந்தா, கிளிநொச்சி பிரதேச இளைஞர் அணிச் செயற்பாட்டாளர் கிருபாகரன் ஆகியோருடன் வேரவில் கிராம பொது மக்கள், விவசாயிகள், ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில், மிக முக்கியமாக இன்றுள்ள அரசியல் சூழ்நிலைகள் பற்றி, குறிப்பாக வரப்போகின்ற மாகாணசபைத் தேர்தல் பற்றியும் மக்கள் அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதனையும் தமிழர்கள் பட்ட வலிகள், துன்பங்களுக்கு வரப் போகின்ற தேர்தல் தீர்வாக அமையுமா? என்பதையும் தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அரசியல் அபிலாசைகளைக் கையாள்வதற்கு இந்த மாகாண சபை ஊடாக எதனையாவது சாதிக்க முடியுமா என்ற பல கோணங்களில் மக்களுடன் கலந்துரையாடப்பட்டது.

  

மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள்,

"13ம் திருத்தம் என்பது இலங்கை இந்திய அரசுகளால் திடீரெனக் கொண்டுவரப்பட்ட ஒரு குறைப் பிரசவமாக உலகத்தால் பார்க்கப்படுகிறது. இந்தப் 13ம் திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் அபிலாசையானது, பூர்த்தி செய்யப்படும் என்ற எண்ணப்பாட்டை நாம் முதலில் கைவிட வேண்டும். 13ம் திருத்தம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு தீர்வைத் தமிழர்கள் பெறுவதற்கு ஒரு ஆரம்பப் புள்ளியாகவோ அல்லது இடைக்காலத் தீர்வாகவோ நினைத்துத் தமிழர்கள் ஏமாறக் கூடாது. நாங்கள் எங்கள் இலட்சியத்தினை அடைவதற்குத் தொடர்ந்து ஜனநாயக ரீதியில் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என நாம் முதலில் உணர வேண்டும்.

முழு இராணுவப் பிரசன்னத்துள்ளும், நேரடியான இராணுவ ஆட்சி முறைக்குள் வைத்திருக்கப்படும்வரை, மானிட தர்மத்துக்கு மாறாக எம்மீது குற்றம் புரிந்தோரே எம்மைக் காப்பதாகவும், அவர்களே எம்மீது நடாத்தப்பட்ட குற்றங்களிற்கெதிராக விசாரிப்பதென்பது எவ்வளவு தூரம் நியாயமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களாகிய நாம் முதலில் தோல்வி மனப்பாங்கிலிருந்து வெளியே வரவேண்டும். நம் இலட்சியம் நோக்கிய ஆயுதப் போராட்டத்தில் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கலாம் அல்லது மௌனிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வி என ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் அரசியல் ரீதியாகத் தமிழர்கள் தோற்கடிக்கப்படவில்லை. உலகம் விரும்பும் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி அகிம்சை முறையில் ஜனநாயக வழியில் தமிழர் தொடர்ந்து போராடுவதற்கான வல்லமையினைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, தோல்வி என்ற மன நிலையிலிருந்து எம்மை மீட்டு வெளிவர வேண்டும். இக்கிராம ரீதியான யாத்திரை அல்லது மக்கள் சந்திப்பென்பது ஒவ்வொரு தமிழனதும் மன உணர்வை சர்வதேசத்தின் காதுகளிற்கு கொண்டு செல்கிறது என்பதனை நாம் அறிய வேண்டும். எனவே வலி சுமந்த தமிழர் அனைவரும் விழித்தெழ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்." எனக் கூறினார்.

இந்நிகழ்வில் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் 'நம்பிக்கை ஒளி' அமைப்பின் அனுசரணை மூலம் அங்கு கலந்து கொண்டிருந்த விவசாயிகளுக்கு மண்வெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

 

tna-village-seithy-1-20130702-455.jpg

 

 

tna-village-seithy-2-20130702-450.jpg

 

 

tna-village-seithy-3-20130702-455.jpg

 

 

tna-village-seithy-4-20130702-450.jpg

 

சுரேஸ் கவனத்தை திருப்புகிறார். இந்தியாவின் 13ம் திருத்தம் மீது தேவை இல்லாத ஆர்வம் காடுகிறார். தேர்தல் வந்தால் பார்த்துக்கொள்ளுவம் என்ற மனநிலயில் இல்லை.

 

ரஜிவ வியசிங்கா, வாசுதேவ, கக்கீம், ரயித சேனரத்தின, ரணில், பொன்சேக்கா, JVP, தயான் ஜெயதிலகா, ட்யூ குணசேகரா... எந்த அரசியல் வாதியும் 13ம் திருத்த திருத்தத்தில் ஜனாதிபதியின் நடத்தை தவறு என்று கூறவில்லை. மேலும் ரணிலையும், JVPயையும் தவிர மற்றவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசு கவிழ்வதை ஏற்க முடியாது என்கிறார்கள். இந்த சுரேஸ் தனக்கு மூன்று மந்திரிகள் ஆதரவு என்று அப்பாவித்தனமாக பேசுகிறார். 

 

13வது் திருத்தத்தை​க் காட்டி தமிழர் மீது தீர்வைத் திணிக்கும் முயற்சி நடக்கிறது: நாம் தமிழர் கட்சி


[Tuesday, 2013-07-02 15:47:58]

seeman-040313-seithy-150.jpg

ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஏற்பாட்டை உறுதி செய்ய இலங்கையின் பொருளாதாரத் துறை அமைச்சரும், அதிபர் ராஜபக்சவின் தம்பியுமான பசில் ராஜபக்ச வரும் 4ஆம் தேதி டெல்லிக்கு வரவிருப்பதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே இடையே 1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13வது திருத்தத்தின் கீழ் தீர்வு காணும் பேச்சுக்கள் நடந்து வருகிறது.

  

தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தலைமையில் வந்த அந்நாட்டு நாடாளுமன்ற தமிழர் பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ளது. இப்போது அந்நாட்டின் செல்வாக்குமிக்க அமைச்சர் பசில் ராஜபக்ச வருகிறார் என்றால், ஈழத் தமிழர்கள் மீது ஒரு தீர்வு திட்டத்தினை திணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது நன்கு புலனாகிறது.

இலங்கை ஒற்றையாட்சி அரசமைப்புச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அங்கமாக இருந்த தலைவர்கள்தான், இன்றைக்கு தமிழர் தேசிய கூட்டமைப்பாக இயங்கி வருகின்றனர். ஆனால் இப்போது அவர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசமைப்பிற்குட்பட்ட ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பது, ஈழத் தமிழினம் அரை நூற்றாண்டுக் காலமாக நடத்தி வரும் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கு முரணானதும், எதிரானதும் ஆகும். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் செய்யப்பட்ட 13வது திருத்தம் எப்படிப்பட்ட அதிகாரங்களை மாகாணங்களுக்கு அளிக்கிறது என்று பார்த்தால் அது மிகப் பெரிய ஏமாற்று என்பது தெரியவரும். 13வது திருத்தத்தின் படி தமிழர் மாகாணங்களுக்கு கிடைக்கும் அதிகாரம் அனைத்தும் மாகாண சபைகளுக்கு கிடைக்கப்போவதில்லை. மாறாக, அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்படும் ஆளுநருக்குத்தான் இருக்கும்.

ஒரு மாகாணத்தின் செயல் அதிகாரம் அனைத்தும் ஆளுநருக்கு இருக்கும்போது, ஒரு பொம்மை நிர்வாக சபையாக மட்டுமே மாகாண சபைகள் இருக்கும். 13வது திருத்தத்தின் படி அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையால் தமிழர்களுக்கு என்ன கிடைத்தது? அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த எம்.ஏ.எம்.எல். அப்துல்லா, இந்த திருத்தச் சட்டத்தின் கீழ் எமக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி, காவல்துறையின் ஒரு ஏட்டை பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் கூட எமக்கு இல்லை என்று கூறினார். மாகாண சபை நிறைவேற்றும் எந்த தீர்மானத்தையும் ஒரு உத்தரவு பிறப்பித்து நிராகரிக்கும் அதிகாரம் அந்நாட்டு அதிபருக்கு இருக்கிறது என்றால், இந்த திருத்தத்தை வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு வாழ்வுரிமையும், அரசியல் சம உரிமையும், பொருளாதார சுதந்திரமும் எப்படி கிட்டும்?

1987ஆம் ஆண்டு இராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் இணைந்து திணித்த ஒப்பந்தம் ஈழத் தமிழினத்திற்கு எந்தத் தீர்வை தராது என்று அப்போது சுதுமலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் கூறினார். அப்போது அவர் கூறிய வார்த்தைகளை அப்படியே தருகிறோம்: �இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுமென நாம் நினைக்கவில்லை. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு. தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்தக் கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால், எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை� என்று தெளிவாக பிரபாகரன் பேசியுள்ளார். அது இன்றளவும் வரலாறாக தமிழர் நெஞ்சங்களில் உள்ளது.

உண்மை இவ்வாறிருக்க, ஈழத் தமிழினத்தின் மீது, அவர்களுக்கு எவ்வித அரசியல், பொருளாதார அதிகாரத்தையும் வழங்காத 13வது திருத்தத்தைக் காட்டி ஒரு தீர்வைத் திணிக்க இலங்கை, இந்திய அரசுகள் முயற்சிப்பதை தமிழர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும், எதிர்ப்போம். இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பது தமிழீழ மக்களையோ அல்லது அவர்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாத் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளையோ கலந்து உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் அல்ல. அது தமிழர்களை பகடையாக பயன்படுத்த முற்பட்ட இராஜீவ் காந்தி அரசுக்கும், தமிழினத்தை பூண்டோடு அழிக்க உறுதி பூண்ட சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனேவுக்கும் இடையில் செய்யப்பட்டதாகும். எனவேதான் அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்தனர்.

ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தின் இலக்கு ஒன்றுதான், அது தனித் தமிழ் ஈழமே. இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழினத்திற்கு ஒரு கெளரவமான தீர்வை வென்றிட பல முயற்சிகள் மேற்கொண்டு தோல்வியைத் தழுவிய நிலையில்தான், ஈழத் தந்தை செல்வா அவர்கள், 1976இல் வட்டுக்கோட்டை மாநாட்டில் தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்கிற தீர்மானத்தை நிறைவேற்றி வழிகாட்டினார். எனவே, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அந்த உன்னத இலக்கை அடையும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதற்கு எதிரான எந்தத் தீர்வையும் ஒற்றுமையுடன் நின்று தமிழினம் முறியடிக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

Edited by மல்லையூரான்

13ஐ நீக்கினால் சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்: த.தே.கூ
புதன்கிழமை, 03 ஜூலை 2013 01:46 0 COMMENTS
Suresh-prema-chandra(1).jpg-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டால் சர்வதேச விசாரணைகளுக்கு அரசாங்கம் முகங்கொடுக்க நேரிடும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன், 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும்.  அதுவும் மூன்றாம் தரப்பொன்றின் மத்தியஸ்தத்தின் கீழ் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும்" என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

யாழ் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '1987ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்;டமானது ஒரு சர்வதேச உடன்படிக்கையாகும்' என்று சுட்டிக்காட்டினார். 

'இந்த உடன்படிக்கை மீறப்படும் விதத்தில் 13ஆவது திருத்தத்தை நீக்க அரசாங்கத் முயற்சி செய்தால் அதற்கு எதிராக இந்தியாவினால் சர்வதேச நீதிமன்றத்தினை நாடும் வாய்ப்பு உள்ளது. அதனால், 13ஆவது திருத்தம் நீக்கப்படும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்' என்று அவர் தெரிவித்தார்.

'அத்துடன், இந்த 13ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. அதில் இருக்கும் அதிகாக்ரங்கள் போதுமானவையாக இல்லை. இருப்பினும், இருப்பதை வைத்துக்கொண்டு முழுமையான அதிகாரத்தை நோக்கி நாங்கள் முன்னோக்கிச் செல்லவேண்டும். 

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அதுவும் மூன்றாம் தரப்பொன்றின் மத்தியஸ்தத்தின் கீழ் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார். 

 'தான் ஒரு ஜனநாயகவாதி என்ற மாயையை உருவாக்கும் முயற்சியின் பேரிலேயே வட மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னதாக வட மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் ஜனாதிபதி உள்ளார். 

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்துவம் மீறல் தொடர்பாக சர்வதேசம் தனது கண்டனத்தை தெரிவித்து வரும் இத்தருணத்தில் தான் ஒரு ஜனநாயகவாதி என்ற மாயையை சர்வதேசத்திற்கு காட்டுவதற்கான முயற்சியின் பேரில் இந்த தேர்தல் நடத்தப்பட இருக்கின்றது' என்றும் சுரேஸ் எம்.பி குறிப்பிட்டார்.

'இரு மாகாண சபைகள் தங்களுக்குள் இணங்கி செயற்படுதல் மற்றும் மாகாண சபையில் உரிய அதிகாரங்கள் தொடர்பாக சகல மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறுதல் என்ற அடிப்படையில் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். அதில் சில மாகாணங்கள் அங்கீகாரம் வழங்கலாம், வழங்காமலும் விடலாம். 

ஆனால், ஒன்பது மாகாணசபைகளின் 7 மாகாண சபைகள் தனிச் சிங்கள சட்டத்தினை கொண்டு இயங்குபவை. வட, கிழக்கு மாகாணங்களின் அங்கீகாரத்தை பெறவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு எவ்வளவு அங்கீகாரம் கிடைக்கும் என்பதும் தெரியாது' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.