Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா, சிறிலங்கா குறித்த மூலோபாயக் கொள்கைகளை இந்தியா மாற்ற வேண்டும் – கேணல் ஹரிகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா, சிறிலங்கா குறித்த மூலோபாயக் கொள்கைகளை இந்தியா மாற்ற வேண்டும் – கேணல் ஹரிகரன்
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 05:13 GMT ] [ நித்தியபாரதி ]


சீனாவின் கடல்சார் நடவடிக்கைகள் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரிப்பதால் ஏற்படுகின்ற ஆபத்தை தவிர்ப்பதற்கு, சீனா மற்றும் சிறிலங்கா தொடர்பான தனது மூலோபாயக் கொள்கைகளில் இந்தியா மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு சண்டேலீடர் ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ள இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். அவரது செவ்வியை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் 'நித்தியபாரதி'.

கேள்வி: சிறிலங்காவின் தேசிய பிரச்சினையில் இந்தியா கடந்த பல பத்தாண்டுகளாக ஆர்வத்துடனும் சில நேரங்களில் கண்டுகொள்ளாதும் நடந்துள்ளது. தற்போது சிறிலங்காவில் 13வது திருத்தச் சட்டம் மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் போன்றன முக்கியமாக பேசப்படுகின்றன. இவ்வாறான விடயங்களில் மன்மோகன் அரசாங்கம் சாதகமாகவும், உறுதியுடனும் செயற்படுகின்றது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: சிறிலங்காவின் தேசியப் பிரச்சினை தொடர்பில் இந்தியா இரு வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. அதாவது பிராந்திய சக்தியாக உள்ள இந்தியா, சிறிலங்காவுடன் கேந்திர நலன் பயக்கும், நட்புரீதியான உறவைத் தொடர வேண்டும் என விரும்புகிறது. இது இந்தியாவின் ஒரு நிலைப்பாடாகும்.

தமிழ்நாட்டுக்கும் சிறிலங்கா வாழ் தமிழ் மக்களுக்கும் இடையிலான பாரம்பரிய தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய ரீதியில் முரண்பாட்டைத் தோற்றுவிக்காது அரசியலைக் கொண்டு செல்ல வேண்டிய மற்றைய நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது.

இந்நிலையில் நீங்கள் இங்கே குறிப்பிட்ட இந்தியாவின் 'மாறுபட்ட' நிலைப்பாடானது, குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுகின்ற சூழ்நிலையின் முன்னுரிமைக்கேற்ப இந்தியா தனது கொள்கை வகுப்பை மாற்றிக் கொள்ளும். அதாவது சிறிலங்காவின் தேசிய பிரச்சினை தொடர்பில் பிராந்திய சக்தி என்கின்ற அதிகாரத்தை நிலை நாட்ட வேண்டும் என இந்தியா விரும்பினால் அல்லது தேசிய ரீதியில் தமிழ்நாட்டில் எழும் உணர்வலைகளைப் பொறுத்து இந்தியா தனது தலையீட்டை மேற்கொள்ளும்.

இந்தியா இவ்விரு வேறுபட்ட நிலைப்பாடுகளை சமப்படுத்தி தீர்வை எடுக்க முயற்சிக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே 1987ல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் பிராந்திய மூலோபாயத் தேவையையோ அல்லது உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அவாக்களையோ திருப்திப்படுத்துவதாக இந்திய -இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்படவில்லை.

இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இரு தரப்புக்களினதும் அரசியல்வாதிகள் தமது கடப்பாட்டிலிருந்து விலகிக் கொள்வதற்கான சட்ட ஓட்டைகள் பல காணப்படுவதால் இந்திய - இலங்கை ஒப்பந்தம் உண்மையில் தோல்வியடைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இந்த உடன்பாட்டின் பிரகாரம் வரையப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் இத்திருத்தச் சட்டம் குறைந்தது சிறுபான்மை மக்களுக்கு சமமான நீதியை வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறது.

இத்திருத்தச் சட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கவில்லை என்றாலும் கூட, தற்போது அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகள் மௌனமாக்கப்பட்டுள்ள இந்நிலையில் இத்திருத்தச் சட்டத்தை மீள ஆராய்ந்து சீர்செய்ய வேண்டிய தேவையுள்ளது.

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச ஆட்சி வந்தபோது, அதிகாரப் பகிர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்த பின்னர், ஈழப்போர் முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கு இந்தியாவின் சம்மதம் பெறப்பட்டதானது, பிராந்திய நலனைக் கருத்திற் கொண்டு இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட தீர்வாகக் காணப்படுகிறது.

ஆனால் இந்தியாவுக்கு ராஜபக்ச உறுதியளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம், சிறிலங்கா அதிபர் இந்திய மத்திய அரசாங்கத்துடன் பகைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டில் எழுந்த அரசியற் கோரிக்கைகளைச் சந்திப்பதற்கான இயலுமையை இழந்த நிலையில், உள்நாட்டில் அதிருப்தியைப் பெற்றுக் கொள்ள நேரிட்டது.

2013-14ல் இந்தியாவில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது ஆளும் காங்கிரஸ் கூட்டணி பல சவால்களைச் சந்திக்க வேண்டியேற்படும். அதாவது ராஜபக்ச அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் இந்தியாவில் வாழும் தமிழ் மக்கள் தமது அழுத்தங்களைத் தொடர்ந்தும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கே வழங்குவர்.

சிறிலங்கா விடயத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகப்பிரபலமான 'இந்திய யானை' போன்று நகர்வதுடன், இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் கட்டமைப்பு, சரியானதொரு தீர்மானத்தை எட்டுவதற்கு நீண்ட காலத்தை எடுக்கிறது.

சிறிலங்காவின் தேசிய பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும், தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் இடையில் நிலவுகின்ற முரண்பாடானது எதிர்காலத்தில் முன்னேற்றகரமான தீர்வுக்கு வித்திடும் என நான் எதிர்பார்க்கவில்லை. சிறிலங்கா தேசியப் பிரச்சினை தொடர்பில் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்துடன் இணைந்து மிகப் பயனுள்ளதொரு தீர்வை முன்வைக்க முன்வரவேண்டும்.

இதைவிடுத்து தமிழ்நாட்டு முதலமைச்சர் தற்போது போல் தொடர்ந்தும் சிறிலங்காவின் தேசிய பிரச்சினை தொடர்பில் பக்கச் சார்பான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுப்பதானது மத்திய அரசாங்கத்துடன் இணைந்து சாதகமான, பயனுள்ளதொரு தீர்வை முன்வைப்பதற்கு தடையாக இருக்கும்.

யாழ்ப்பாண முற்றுகையை நிறைவுக்குக் கொண்டு வருவதற்காக இந்திய விமானப் படை 'பூமாலை நடவடிக்கை' என்ற பெயரில் வானிலிருந்து உணவுப் பொதிகளை மக்களுக்கு வழங்கியதன் மூலம் யாழ்ப்பாண முற்றுகை நிறுத்தப்பட்டது.

அனைத்துலக ரீதியில் அங்கீகாரம் பெற்றிருக்காத எந்தவொரு நாடும் குறிப்பாக அமெரிக்கா கூட இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்க முடியாது. ஆனால் இந்தியா இதனைச் செய்தது. இந்தியா, ஐ.நா அமைப்பின் ஆதரவில்லாது, தனது அயல்நாடொன்றில் இவ்வாறானதொரு பன்முகப்பட்ட நகர்வுகளைச் செய்ய முடியாது.

கேள்வி: சிறிலங்காவில் நடைபெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சிமாநாட்டில் இந்தியா பங்களிக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா? சிறிலங்காவிடமிருந்து தகுந்த பதில் கிடைக்காது விட்டால் தான் இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என கனேடியப் பிரதமர் டேவிட் கம்றூன் தெரிவித்துள்ளார். இதேபோன்று தென்னாபிரிக்காவும் இதனைப் பின்பற்றுவதாக தெரிகிறது. அவுஸ்திரேலியா உட்பட ஏனைய நாடுகள் வேறுவிதமான தெரிவைக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில், போர்க்குற்றவாளி எனக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் அடுத்த இரு ஆண்டுகள் பொதுநலவாய அமைப்பிற்கு தலைமை தாங்கும் என்பதை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்: பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இந்தியா பெரும் குழப்பத்திலுள்ளது என்பது தெளிவானதாகும். இந்தியாவின் பிராந்திய மற்றும் தேசிய ரீதியான இரு வேறுபட்ட அணுகுமுறைகள் இந்தியாவை இவ்வாறான சிக்கலுக்குள் தள்ளியுள்ளது.

அதாவது தமிழ்நாட்டு சட்டசபை உள்ளடங்கலாக தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் அனைத்தும் இந்திய மத்திய அரசாங்கம் பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கோரிவருகின்றன. அதாவது சிறிலங்கா போர்க் குற்றங்களைப் புரிந்துள்ள போதிலும், இது தொடர்பில் இது உரியமுறையில் பதிலளிக்கவில்லை என தமிழ்நாடு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இந்தியா இவ்வாறான கடும்போக்கான தீர்மானத்தை எடுக்க முடியாது.
இந்திய- சிறிலங்கா உறவைப் பாதிக்கும் தீர்மானத்தை தற்போதைய இந்தியத் தலைமை எடுக்கும் என நான் கருதவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்த போது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில், சிறிலங்காவில் நடைபெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது விட்டால், இதனை உச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பகையாகக் கருதிக் கொள்வார்.

மகிந்த ராஜபக்ச, இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து தற்போது மீறுவதானது இந்தியாவுக்கு ஒருபோதும் மகிழ்ச்சியைக் கொடுக்காது. இதேவேளை இந்தியா தமிழ்நாட்டு அரசியலைக் கருத்திற் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. தொடர்ந்தும் தமிழ்நாடு அழுத்தம் கொடுத்தால், இந்தியா, வெளியுறவு அமைச்சரை இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனுப்ப வேண்டிய தீர்மானத்தை சிலவேளைகளில் எடுக்கும்.

மறுபுறத்தே, சிறிலங்காவிடமிருந்து தான் எதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இந்தியா விரும்புகிறதோ, அதனை அடைந்து கொள்வதற்காக இந்தியா இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய மூலோபாயத் தேவையுள்ளது.

தற்போதைய நிலவரத்தின் படி, சிறிலங்கா 13வது திருத்தச்சட்டத்தை விடுத்து வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடாத்தி அதன் மூலம் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக சிறிலங்கா ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்தியா தனது உள்நாட்டு அழுத்தங்களைக் கருத்திற் கொண்டு, பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுமாயின் வரும் வாரங்களில் மகிந்த ராஜபக்ச மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

இந்தியா எந்த மட்டத்திலாவது சிறிலங்காவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். கனேடிய வாக்கு வங்கிகளுக்கு 'பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை கனேடியப் பிரதமர் புறக்கணிப்பதானது' பொருத்தமாக இருக்கும். ஆனால் இது இந்தியாவுக்குப் பொருந்தாது.

சிறிலங்காவுடன் இந்தியா தொப்புள்கொடி உறவைப் பேணி வருகிறது. இந்நிலையில் இந்தியா உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதை நிறுத்தாது, வேறுவழியில் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கேள்வி: சிறிலங்கா அதிபர் ராஜபக்ச தற்போது சீனாவுடன் மிக நெருங்கிய தொடர்பைப் பேணிவரும் இந்தவேளையில், சிறிலங்காவுக்கு ஆயுதங்களை வழங்குதல் மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கான பாதுகாப்பு உடன்பாட்டிலும் சீனா கைச்சாத்திட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், சீனாவின் பங்களிப்பு என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: சீனா, சிறிலங்காவின் பல்வேறு துறைகளிலும் அகலக்கால் பரப்பி வருகிறது. நேபாளத்தில் சீனா தனது சீன மொழியைக் கற்பிப்பதற்கான திட்டத்திற்கு நிதியுதவி வழங்குகின்றனர். பங்களாதேசிலும் சீனா முதலீடு செய்கிறது. பாகிஸ்தான் சீனாவுக்கு மூலோபாய முக்கியத்துவம் மிக்க நாடாக உள்ளது. இதேபோல் மியான்மாரும் காணப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த அயல் நாடுகளும் சீனாவின் தற்போதைய கட்டுமானம், தொலைத் தொடர்பாடல், சுற்றுலாத்துறை, மின்சக்தி உற்பத்தி மற்றும் உற்பத்தித் துறைக்கான நுகர்வுவசதிகள் போன்ற பல்வேறு உயர்மட்ட திட்டங்களின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத் துறை தவிர, இவ்வாறான பொருளாதாரத் துறைகளில் இந்தியாவில் சீனாவின் செல்வாக்கு காணப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஏற்கனவே இந்திய நிறுவனங்கள் RMB கடன்களைப் பெறுகின்றன. 2015ல் சீன-இந்திய வர்த்தகமானது 100 பில்லியன் டொலர்களாக காணப்படும்.

இந்தியாவின் இவ்வாறான பொருளாதார நலனைப் பெறும் சீனா, இதேவிதமான வர்த்தக சார் நோக்குடன் சிறிலங்காவில் செல்வாக்குச் செலுத்துவதானது இந்தியாவின் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என நாம் கருதலாமா? நான் அவ்வாறு நினைக்கவில்லை.

சீனா, சிறிலங்காவுக்கு ஆயுத தளபாடங்கள் மற்றும் இராணுவப் பயிற்சிகளை வழங்குவது இந்தியாவுக்கு மூலோபாய ரீதியான ஆபத்தை ஏற்படுத்தாது. சிறிலங்காவுக்கு இந்தியா இராணுவப் பயிற்சிகளை வழங்குகிறது. சிறிலங்காவுக்கு இந்தியா ஒருபோதும் ஆயுதங்களை வழங்கவில்லை. தெரிவுசெய்யப்பட்ட சில துறைகள் தவிர வேறு துறைகளில் சீனாவுடன் இந்தியாவைத் தொடர்புபடுத்த முடியாது.

சீனாவை விட சிறிலங்காவும் இந்தியாவும் மகிழ்வடையக் கூடிய இராணுவக் கலாசாரம் ஒன்று காணப்படுகிறது. இந்தியாவும் சிறிலங்காவும் மிக நெருங்கிய நட்பு நாடுகள் என்பதால் சீனாவின் செல்வாக்கு இரு நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்தில் தடையாக இருக்க முடியாது.

ஆனால் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்புகள், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து போன்ற சில துறைகளில் சீனாவின் அதிகரித்த செல்வாக்கும், சிறிலங்காவின் கொள்கை வகுப்பில் சீனாவின் தலையீடும் இந்தியாவுக்கு ஆபத்தை உண்டுபண்ண முடியும். இதற்கான முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டதை பல்வேறு எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.

போர்க் காலத்தில், கடல் மற்றும் தரை மூலம் இந்தியா, சிறிலங்காவுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்துள்ள நிலையில், சீனாவின் அதிகரித்த செல்வாக்கு உண்மையான அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்வழி மற்றும் தொலைத் தொடர்பாடல் ஒட்டுக் கேட்கப்படலாம்.

சீன மற்றும் சிறிலங்காவின் தீர்மானங்களுக்கு ஏற்ப இந்தியா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுவே இந்தியாவின் மூலோபாய நகர்வாக இருக்கும். சீனாவின் கடல்சார் நடவடிக்கைகள் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரிப்பதால் ஏற்படுகின்ற ஆபத்தை தவிர்ப்பதற்கு சீனா மற்றும் சிறிலங்கா தொடர்பான தனது மூலோபாயக் கொள்கைகளில் இந்தியா மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதனை யாராவது தற்போது செய்து கொண்டிருப்பார்கள் அல்லது செய்வதற்குத் திட்டமிடுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130705108608

யாழ்ப்பாண முற்றுகையை நிறைவுக்குக் கொண்டு வருவதற்காக இந்திய விமானப் படை 'பூமாலை நடவடிக்கை' என்ற பெயரில் வானிலிருந்து உணவுப் பொதிகளை மக்களுக்கு வழங்கியதன் மூலம் யாழ்ப்பாண முற்றுகை நிறுத்தப்பட்டது.

அனைத்துலக ரீதியில் அங்கீகாரம் பெற்றிருக்காத எந்தவொரு நாடும் குறிப்பாக அமெரிக்கா கூட இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்க முடியாது. ஆனால் இந்தியா இதனைச் செய்தது. இந்தியா, ஐ.நா அமைப்பின் ஆதரவில்லாது, தனது அயல்நாடொன்றில் இவ்வாறானதொரு பன்முகப்பட்ட நகர்வுகளைச் செய்ய முடியாது.

 

கேணல் கரனும் என்னை போல வல்லாரைக் கீரைதான் சாப்பிட வேண்டும் போல இருக்கு. நிறையத்தான் மறதி.

 

1971 ல் இந்திய-பாகிஸ்தானிய- வங்காள தேச யுத்தத்தில் இலங்கை எப்படி நடந்து கொண்டது என்றதை மறந்துவிட்டாரா? இந்திரா காந்தி  தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியை கூட ஒரு சொல்லுக் கேளாமல் ஏன் கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தார் என்று மறந்து போனாரா? தமிழர் மீது கோண்டிருந்த பாசத்தால் மட்டுமா கருணாநிதியை முதல் முறை பதவி நீக்கினார்?  இது திருமதி காந்தியின் உற்ற தோழி சிறிமா காலத்தில் நடந்தது. அதன் பின்னர் ஏன் ஈழத்து தமிழர் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வந்தார் என்று மறந்து போனாரா?

 

அவர்கள் தனித்து போராட்டி வெல்லாதிருக்க ஏன் பிரித்து வைத்தார்கள் என்று மறந்தா போய்விட்டார்?.....

 

அதை ஏன் கேட்டு?

 

இந்திய இராணுவம் இ்லங்கை வந்தது ஏன் என்றது என்னை விட கேணல் கரிகரனுக்குதான் நன்றாகத்தெரியுமே.

 

அவர் நிறையத்தான் 13ம் திருத்தம் நடுநிலைமையுடன் வரையப்பட்டதாகக் காட்ட முயல்கிறார்.  ஆனால் தானாகவே அது தமிழருக்கும் தீர்வாகாது என்கிறார். ஆனால் இந்திய இராணுவம் இலங்கையில் புகுந்தது தமிழருக்கு தீர்வு ஒன்றை கொண்டுவர அல்ல என்பதால் தானே அவர்கள் திணித்த தீர்வான 13ம் திருத்தத்தை இலங்கையும் இந்தியாவும் மட்டுமே உள்ளதான உடன் படிக்கை மூலம் பெற்றார்கள். தமிழருக்காக இந்திய இராணுவம் இலங்கை வந்திருந்தால், 13ம் திருத்தத்தின் தாய் ஒப்பந்தம்  இந்தியா- இலங்கை- தமிழர் உடன் படிக்கை என்றல்லவா பெயர் இடப்பட்டிருந்திருக்கும். தமிழருக்கு தீர்வு பெற என்று வந்த முன்னைய ஒப்பந்தங்களில், பண்டா-செல்வா, டட்லி-செல்வா என்று தமிழரின் பெயரும் அல்லவா உள்ளடக்கப்பட்டிருக்கிறது.  பின்னர் எதற்கு இதில் ஐ.நா வின் ஆணை இருக்காமலே இந்தியா வந்தது என்கிறார்?  ஒருவேளை நாடு பிடிக்க இந்தியாவுக்கு ஐ.நா ஆணை கொடுக்க முடியாது என்பது கேணல் கரனுக்கு இன்னனும் தெரியாதோ? இல்லை, இனிமேல்த்தன்னும் ஐ.நா. தான் இலங்கையினுள் போக என்று கேட்டால் இந்தியா சரி போ என்று சொல்லும் என்கிறாரா அல்லது ஐ.நா தான் வரமாட்டேன் என்றால் ஐ.நா.வில் சென்று , "நான் அங்கே போக முடியாது தமிழரை இலங்கையில் போய் காப்பாற்று" என்று ஐ.நாவை இந்தியா கேட்கும் என்கிறாரா?  தமிழரை ஒதுக்கி இலங்கையைப் பிடிக்க என்று வந்த இந்திய சமாதானப்படையை எப்படி எல்லாம் கேணல் கரிகரன் நியாப்படுத்த முடியுமென்றால் அதுதான் கரனின் இந்த விளக்கங்கள்.

 

உண்மையில் இந்தியாவுக்கு தமிழரில் அக்கறை இருந்தால் தமிழரையும் அந்த ஒப்பந்ததில் இந்தியா இணைத்திருக்கும். சிங்களம் சொல்வது மாதிரியே படையை காட்டித்தான் உண்மையில் அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்புறம் இதில் தமிழரையும் சேர்க்க என்ன கஸ்டம் வந்தது இந்தியாவுக்கு?  ஆனால் நடந்தது பிரபாகரனை மிரட்டி ஒதுங்க வைத்துவிட்டுத்தான் இலங்கையுடன் இந்தியா கை கோர்த்தது. இல்லையேல் வடக்கும் - கிழக்கும் பிரிக்கப்பட்ட போது இந்தியாவுக்கு அந்த நேரம் தெரியவில்லையா 13ம் திருத்தம் அடிப்படையில் முறிக்கப்பட்டுவிட்டது என்பது.  அதன் பின்னர் எதற்கு இலங்கைக்கு இராசயனக் குண்டுகள் கொடுத்து உதவியது? ஏன் போர் முடிந்தவுடன் இலங்கை கொடுப்பதை மட்டும்தான் தமிழர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றது? எதற்காக, இந்தியா ஆதாரிக்காவிட்டாலும் வெல்லும் என்று வந்த ஐ.நா பிரேரணைகளை, தான் ஆதரிக்க விரும்புவதாக நடித்து  நீர்த்துப்போக செய்து பின்கதவால் தோல்விகளை உட் புகுத்தியது?

 

இந்தியா இப்போ சம்பந்தரை கூப்பிட்டு 13ம் திருத்தத்தை காட்டி சம்பந்தரிடம் பழைய குறுடி கதவைத் திறவடி வென்கிறது. அதாவது இனி எப்படி திரும்ப ஐ.நாவுக்கு டிமிக்கி கொடுத்து இலங்கையில் தான் நுளையலாம் என்ற திட்டங்களில் திரும்ப இறங்குகிறது.

 

ஹோலிவூட் நடத்தும் பொழுபோக்கு போலி "மல்யுத்தம்" ஒன்றிருக்கிறது. அதில் இப்படியும் ஒரு விளையாட்டு இருக்கிறது. அந்த விளையாடில் ஒரே நேரத்தில் பல வீரர்கள் மேடை ஏறி அவர்களுள் யார் தனிப்பெரும் வீரன் என்று காட்ட முயல்வார்கள்.  அப்போது முதலில் இரண்டு பெரிய வீரர்கள் தம்முள் குத்துப்பட்டு ஒருவரை மற்றவர் வெளியே தூக்கி எறிவார். அதன் பின்னர் இடைத்தர வீரர் ஒருவர் களைத்து போனது மாதிரி நடிக்கும் எஞ்சியிருக்கும் பெரிய வீரரை வெளியே எறிவார். அப்படியே தொடர்ந்து நடந்து ஒரு புல்லுட்டை வீரர் இறுதியில் தான் மற்ற மலைகள் எல்லோரையும் தூக்கி வெளியே எறிந்து, ஆட்டவளையத்தை கைப்பற்றியதாக நடித்து பரிசைத் தட்டிச்செல்வார். இந்தியா இந்த ஆடத்திற்குதான் தமிழ் ஈழ இளைஞர்களை விடுதலைப் போராட்டம் என்று பயிற்றுவித்தது. அதாவது தமிழ் இளைஞர்களும் சிங்கள அரசும் ஒருவருடன் ஒருவர் மோதி ஒரு பகுதி தோற்க, தான் உள்ளே நுளைந்து வெற்றியை இலகுவாகத் தட்டிச்செல்லாம் என்று நினைத்தது. அதானல் புலிகள் தோற்கிறார்கள் என்று கனவு கண்ட போது IPKF யை இலங்கைப் பிடிக்க அனுப்பியது. அதில் புலிகள் உண்மையில் தோற்கவில்லை, ஆனால் இழப்பைக் குறைக்க திரும்பவும் முற்று முழுதாக கரந்தடி முறைக்கு மாறுகிறார்கள் என்று கண்ட போது வாலை சுருட்ட வேண்டி வந்தது. பின்னர் 2006களில் சிங்களம் தோற்றுவிட்டத்தாக நினைத்து மற்றப்பக்கத்தால் வந்தது. புலிகளை முன்னர் காப்பாற்றுவதாக நடிந்து அழிக்க முயன்றுது போலவே, இலங்கை அரசையும் 2009 முடிய அழிக்கலாம் என்று நினைத்தது. ஆனால் சிங்களவர்களும் இந்தியாவிடம் அனுபவப்பட்டவர்களே. தேவை முடிய இந்தியாவை ஓட்டிக்கலைத்தது மட்டுமன்றி சீனாவை வைத்து, இனி இந்தியா உள்ளே வந்து வாலை ஆட்ட முடியாதவாறு  தம்மைத்தாம் பாதுகாத்தும் கொண்டார்கள்.

.

இப்போது கேணல் கரன், இந்தியா ஐ.நா இல்லாமல் இலங்கையில் வந்து இறங்கியது; ஐ.நா பிரேரணையில் இலங்கையை இந்தியா எதிர்த்தது என்று நாடகம் ஆடுகிறார்.

 

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

குதிரை ஓடிய‌ பின், லாய‌த்தை பூட்டுவ‌து போன்ற‌து,
கேணல் ஹரிஹரனின் கருத்து,
இந்தியாவின்... மூக்கிற்கு, மேல் வெள்ளம் ஏறி விட்டது.
இனி.... சாண் ஏறினாலும், முழம் ஏறினாலும்... இந்தியாவால், ஒரு மயிரையும் புடுங்க முடியாது.
 

  • கருத்துக்கள உறவுகள்

புடுங்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தரமில்லாத‌ இந்திய அரசியல் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களாலும், இந்திய அரசியல்வாதிகளாலும்....
இந்தியாவின் மானம் கப்பல் ஏறியதே தவிர, இனி குலைத்து பய்னில்லை. வாலைச் சுருட்டிக் கொண்டு....
சீனன், பாகிஸ்தான், சிறிலாங்கா தாற, அதிரடியைப் பார்த்து.... கண்ணீர் வடிக்க வேண்டும் இந்தியா.

தாங்கள் ஒரு நாட்டுக்குள் புகுந்தவர்கள் என்பதையும் அந்த நாட்டை கைப்பற்ற முயன்ற கதைகள் பத்திரிகைகள் எங்கும் வெளியாகி சாதாரண மனிதர்கள் படிந்தார் என்பதையும் தெரிந்து வைத்துக்கொண்டு அந்த நாடு தொடர்பான பாதுகாப்பு கொள்கைகளை வகுக்க முடியாமல்,  பழிவாங்கள் கொள்கைகளை ஆக்கி வைத்துகொண்டு அதை தமது புவிசார் பாதுகப்பு கொள்கை என்றவர்கள் இந்த கோமாளிகள். தாங்கள் தமிழர்கள் மீது பழிவாங்கல் கொள்கைகளை ஆக்கி வைத்துக்கொண்டு, தாங்கள் ஆக்கிரமித்த நாடான இலங்கை தங்கள் மீது அப்படி ஒரு பழிவாங்களை சிந்திக்காது என்றா இருந்தார்கள். அதனாலா ரஜீவ் J.R. சந்திக்க வந்த போது கொலை செய்ய முயற்சித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qP0jOOU45mc

  • 2 weeks later...

கோணல் கரிகரன் என்று இவரை அழைக்காலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.