Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அரசாங்கத்தின் இறுதியாக அது அமையும் - ராஜித

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அரசாங்கத்தின் இறுதியாக அது அமையும் - ராஜித
06 ஜூலை 2013



13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அதுவே அரசாங்கத்தின் முடிவாக அமையும் என ஆளும் கட்சியின் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதில் பிரச்சினை கிடையாது எனவும், அவ்வாறு ரத்து செய்தால் அரசாங்கம் உடனடியாக ஆட்சியை விட்டு வெளியேற நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்களை தேசப்பற்றாளர்களாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களை இனவாதிகளாகவே அடையாளப்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இன சமூகங்களுக்கு இடையில் நிலவி வரும் புரிந்துணர்வின்மையை களைய வேண்டுமாயின் அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரங்களை பகிர்வதே தற்போதைக்கு காணப்படும் மிகவும் சிறந்த தீர்வுத் திட்டமாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் இந்தத் தீர்வுத் திட்டத்தை வழங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஆளும் கூட்டணி கட்சிகளான ஜே.என்.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93722/language/ta-IN/article.aspx

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அரசாங்கத்தின் இறுதியாக அது அமையும் - ராஜித

06 ஜூலை 2013

வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஆளும் கூட்டணி கட்சிகளான ஜே.என்.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93722/language/ta-IN/article.aspx

தமிழ் ஊடகங்கங்கள் இப்படி எழுதுகின்றனவா அல்லது அவர்தான் இப்படி இரட்டை கருத்தில் பேசுகின்றாரா தெரியாது. ஆனால் அவர் சொல்வதுமட்டும் மிகவும் சரி. மாகாணங்கள் இணைப்பைத்தவிர மற்ற காணி, பொலிஸ் திருத்தம் கூட்டமைப்பு தேர்தலில் வென்றால் மட்டுமே வரும். இல்லையேல் அது அவசியமல்ல்.

இந்த திருகுதாளங்களுக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடாது. கிழக்கு மாகாணக மு.க தலைமைகள்(கக்கீம்) கிழக்கும் வடக்கும் இணைந்திருந்த போது முஸ்லீம்களும் சிங்களவர்களும்தான் துன்பப்பட்டார்கள் என்று பேசிவர்கள். அவர்கள் திவி நெகும்பாவை ஆதரித்தவர்கள் ஏன் எனில் அதன் மூலம் கிழக்கில் இணைக்கப்படிருக்கும் தமிழ் கிராமங்களை சிதைத்து பிரிக்க முடியும் என்பதால்.  எனவே கூட்டமைப்பு, கிழக்கின் தலைமையை அரசாங்கத்திடம் இருந்து மு.க ஏற்காதவரைக்கும் மு.கா.வின் சுய நல பிரேரணைகளுக்கு வாக்களிக்க கூடாது.  மு.க ஆள விரும்பாத மாகாணசபை பறி போவதாக மு.க நடித்தால் அதை நம்பி கூட்டமைப்பினர் முட்டாள்களாக நடந்துகொள்ள்க்கூடாது. இதை மு.க கொண்டுவருவது அரசாங்கத்துடன் தனது பேரங்களை உயர்த்தவும், உயர்த்தியவற்றை இறுக்கவும் மட்டுமே.   

 

 

13வது திருத்தச் சட்டமூலத்தில் மாற்றம் செய்யக் கூடாது! - கிழக்கு மாகாணசபையில் பிரேரணை நிறைவேற்ற முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்!! 

de0dff52-0280-44d2-a935-ee440107878a1.jp

13வது திருத்தச் சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை கிழக்கு மாகாணசபையில் சமர்ப்பித்து நிறைவேற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

இப்பிரேரணையை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கையை உடன் மேற்கொள்ளவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைமைக்குமிடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் நீதி அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸான் அலி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அறுவரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஹஸான் மௌலவி மாத்திரம் இக்கலந்துரையாடலில் பங்குபற்றவில்லை.

இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் கட்சித் தலைவரின் மிகக் கண்டிப்பான வேண்டுகோளுக்கமைய குறித்த 13வது திருத்தச் சட்டமூலத்தில் மாற்றங்களைச் செய்யும் சிறிலங்கா அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்றும் மேற்படி பிரேரணையை அரசு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதனை எதிர்ப்போம் என்றும் உறுதியளித்தனர்.

இது இவ்வாறிருக்க, குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினர்களுடன் அரசு மேற்கொண்டுவரும் இரகசிய பேச்சுகள் குறித்தும் இக்கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டுள்ளது.

அடுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடச் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும், ஒரு தொகை கோடி ரூபாக்கள் வழங்கப்படும் என்றும் சிறிலங்கா அரச தரப்பினர் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு சில முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலின்போது தலைவர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கும் கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Edited by மல்லையூரான்

  •  
  தமிழ்த் தேசியத்திற்கு முஸ்லிம் சமூகம் செய்த அனுசரணை மிகப்பெரியது - பஷீர் சேகுதாவூத்

[saturday, 2013-07-06 19:05:11]
bashee-sehu-seithy-2-150.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் தலைமைத்துவம் இப்பொழுது மாத்திரமல்ல எப்பொழுதுமே பலவீனமானதுதான். அதேவேளை, இந்த மாவட்டத்திற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள முதல் அமைச்சு சரித்திரத்திலே இப்பொழுதுதான் கிடைத்துள்ளது. இன்று இந்த அரசாங்கத்தோடு எனக்குள்ள பேரம் பேசும் சக்தியும் பலமும் மிகப் பெரியது என்று உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இதனை நான் நகைச்சுவையாகச் சொல்லவில்லை. அந்தளவுக்கு நான் அரசுடன் நம்பிக்கையைக் கட்டி வளர்த்துள்ளேன். நான் வேகமில்லாமல் விவேகத்துடன் இயங்கக் கூடிய ஒரு நிசப்தமான செயற்பாட்டாளர். இது எனக்கு மட்டுமுள்ள ஒரு முறைமையாக இருக்கக் கூடாது. இந்தக் குணாம்சம் ஒட்டு மொத்த இந்த சமூகத்தினதும் பண்பாகவே இருக்க வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

  

அபிவிருத்திக் கனவில் மிதக்கின்ற சமூகமாக இந்த சமூகத்தைக் கற்பனை உலகில் வாழ வைக்க நான் விரும்ப வில்லை. என்றும் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டார். ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் நிறுவனத்தினால் நேற்று வெள்ளி மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐம்பெரும் விழாவில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நிறுவனத்தின் தலைவர் ஏ.நஸீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் விதவைகளுக்கு சுய தொழிலுக்கான கொடுப்பனவு, வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவு, பள்ளிவாசல் புனரமைப்புக்கு நிதியுதவி, விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு, கணனி பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பன இடம்பெற்றன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பஷீர் சேகுதாவூத்;

பங்களிப்புச் செய்யாத அரசியல் வாதிகளையும் பிரதம அதிதிகளாக அழைக்க வேண்டும் என்ற நிலைமை கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது என்பது இன்றைய எமது சமூகச் சுழலில் இருக்கின்ற அவலத்தைக் காட்டுகின்றது. அரசியல் வாதிகள் ஏனைய நிறுவனங்களில்லாமல் தமது சொந்தக் காலில் நிற்க முடியாது. நிறுவனங்கள் அரசியல் வாதிகளில்லாது தமது சொந்தக் காலில் நிற்கவும் முடியாத ஒரு போக்குக் காணப்படுகின்றது. தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற இந்தப் பிரதேசங்களிலே நாங்கள் கடுமையாக செயற்படுகின்றோம் என்பதில் முன்னுதாரணமாகவும் பெருந்தன்மையாகவும் இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கின்ற மற்றவர்களுக்கு அவர்கள் நாணிக் கோணி நிற்கும்படியாக நாம் நன்மைகளையே செய்ய வெண்டும். அப்பொழுதுதான் அவர்களது மனங்களை வெல்ல முடியும்.

தொப்பிகளும் பொட்டுக்களும் வேட்டிகளும் ஹபாயாக்களும் சமத்துவமாகப் பார்க்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில்தான் கொள்கை அடிப்படையிலான விடயங்கள் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். சில சிங்கள அமைப்புக்கள் ஒரு தொப்பி போட்ட நபரையும் ஒரு பொட்டு வைத்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு சமத்துவம் பேசித் திரிகின்றன. மக்களின் குடிப் பரம்பலுக்கேற்ற வகையிலே சமமாகப் பங்கிட்டு வழங்குவது என்பது இந்த நாட்டிலே ஒரு குறையாகத் தான் இருந்து வந்திருக்கின்றது.

யுத்தத்திற்குப் பின்னர் நாடு முழுவதும் இனத்துவேசமும் இனப் பகைமைகளும் வீழ்ச்சியடைவதற்குப் பதிலாக எழுச்சி பெற்று வருகின்றது. யுத்த காலத்திலிருந்த கோபதாபங்களுக்கு மேலாக காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் பகைமையும் யுத்தம் முடிந்த பின்னர் மேலோங்கியிருக்கின்றது. இதற்கு காலாகாலமாக இருந்து வந்த அரசியல்தான் காரணம். இனங்களுக்கிடையிலே பகைமை வைத்துச் செய்யப்பட்டு வந்த அரசியல்தான் இதற்கு களம் அமைத்துக் கொடுத்தது. பரம்பரையாக நாம் இந்த இன வெறுப்பு அரசியலுக்குப் பழக்கப்பட்டு விட்டோம். இப்பொழுது நாமெல்லோரும் இனவெறுப்பு அரசியலின் மடியிலே சாய்ந்து கண்ணயர்கின்றோம். இனத்துவேச தாலாட்டில் நாம் தூங்குகின்றோம். சிங்கள மக்களை தமது அபிமானிகளாக தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டுமென்றால் அங்கே இனத்துவேசத்தைக் கிளறி விட வேண்டும். இதைத்தான் அங்குள்ள கட்சிகள் விரும்புகின்றன.

முஸ்லிம்கள் வர்த்தகம் செய்து வாரிச் சுருட்டிக் கொள்கின்றார்கள் என்றோ, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வெளிநாட்டு வளங்களைப் பயன்படுத்தி மதம் மாற்றுகின்றார்கள் என்றோ, காணிகளைப் பிடிக்கின்றார்கள் என்றோ, கலாச்சாரத்தை மாற்றுகின்றார்கள் என்றோ எதையாவது கூறி வரிந்து கட்டிக் கொண்டு வம்புக்கிழுக்க வேண்டும். இதேவிடயத்தைத் தான் தமிழ்த் தேசியமும் செய்கின்றது. தமிழ்த் தேசியத்திற்கு முஸ்லிம் சமூகம் செய்த அனுசரணை என்பது மிகப்பெரியது. அளவிட முடியாதது. குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. தமிழ்த் தேசியத்தினுடைய அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தூண்களாக முஸ்லிம் சமூகம் இருந்திருக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தம் முஸ்லிம்களின் முதுகிலே எழுதப்பட்ட அடிமைச் சாசனம் என்று எமது மறைந்த தலைவர் அஷ்ரப் சொன்னார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயினும், தமிழர் நலனுக்காக நாம் அதனை சகித்துக் கொண்டு அதற்கு ஆதரவளித்தோம். தமிழர் தரப்பின் காப்பரணாக நாம் இருந்திருக்கின்றோம். ஆனால் தமிழ்த் தேசியம் அதனை மறந்து வாகனேரியில் விவசாயிகளுக்கிடையில் ஏற்பட்ட தண்ணீர்ப் பிரச்சினையை அரசியலாக்கப் பார்க்கின்றது. அதன் வெளிப்பாடுதான் ஆர்ப்பாட்டம். என்றார். நிகழ்வில் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம். சுபைர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகரபிதாவுமான அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.