Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை பூர்த்தி!

Featured Replies

இராணுவம் விசயத்தில் முந்திக் கொண்டு..புலிகள் புறப்பட்டுப் போன பின்..இழந்த நிலத்தைப் பிடித்துக் கொண்டு..அறிக்கைகளையும் வழங்கி விட்டது. அதையே மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டது. புலிகள் தரப்புச் செய்தி தற்போது வந்துள்ள நிலையில்..பிபிசி அதையும் குறிப்பிடும்.

செய்திகள்...தருவது ஊடகங்களின் கடமை. தீர்மானிக்க வேண்டியது மக்களின் கடமை..! :idea:

தமிழ்நெற்றை புலிகள் ஆதரவு தளம் எண்று செய்திகள் சொன்ன பிபிசியா..??? மற்றய ஊடகங்கள் எல்லாம் புலிகளுடன் தொடர்புகொள்ள முடிய அவர்களால் மட்டும் முடியவில்லை எண்று சொன்ன

ராய்ரர் உட்டப பல சேவைகள் புலிகளின் நேரடி செய்திகளை சேகரித்தது...! ஆனால் லுத்ரா..! கொழும்பில் இருந்து அரச செய்திகளை சேகரித்தார்...! மூதூரில் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் புலிகள் அடித்த செல்தான் மக்கள் மீதும் தங்களுக்கு அருகிலும் விளுந்ததாக புழுகியதை நம்புகின்றோம்...!

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரொயிட்டருக்கு வழங்கிய தகவலின் படி புலிகள் மனித நேய அடிப்படையில் அமைந்த தங்கள் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு...தளம் திரும்பி இருக்கின்றனர்..

அள்ளின ஆயுதங்களோடு திரும்பி வந்தனர் எண்று சேர்த்து சொல்லும்...! :wink:

யாராவது நிதி கொடுப்பார்களாமே ஆயுதம் வாங்க..???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகள் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த நேரம் தொடக்கம் இது ஒரு மட்டுப்படுத்தபட்ட இராணுவ நடவடிக்ககை என்றே சொல்லி இருக்கின்றனர்.

புலிகளின் குரலை தொடர்ந்து கேட்பவர்களுக்கு இது புரிந்து இருக்கும். கட் அன்ட் பேஸ்ட் செய்பவர்களுக்கு புரியாமல் இருந்து இருக்கும்.

புலிகள் கைப்பற்றிய ஆயுதங்கள் தொலைத் தொடர்பு கருவிகள் என்பன சிங்கள அரசுக்கு பேரிடியை கொடுத்து இருக்கும் என்பது தான் வெளிவராத உண்மை. :lol:

எம்மீது தாக்குதல் நடத்த தயாராகிய முகாம்கள் அனைத்தும் தாக்கியழிக்கப்பட்டன: சி.எழிலன்

மூதூர் தாக்குதல்களைப் பொறுத்த வரையில் சிறிலங்காப் படைகளினுடைய அடையாளம் காணப்பட்ட நிலைகள் மீது எமது தாக்குதல்களை நாம் நடத்தியிருந்தோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை "புதினம்" இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்துள்ளதாவது:

எமது பகுதிகளை நோக்கி ஒரு நகர்வு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை இந்த முகாம் பகுதிகளிலிருந்து படையினர் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்ததன் காரணமாகவே அந்த அடையாளம் காணப்பட்ட முகாம்கள் மீது எமது தாக்குதல்களை நாம் ஆரம்பித்திருந்தோம்.

அந்த தாக்குதல் திட்டத்தின் படி எமது தாக்குதல் நடவடிக்கைகளை நாம் நடத்திவிட்டு நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் எமது நிலைகளுக்கு நாம் திரும்பியுள்ளோம்.

இந்த தாக்குதல்களின் போது மகிந்தபுரம்இ செல்வநகர் முகாம்இ கட்டைப்பறிச்சான்இ மூதூர் பகுதியிலிருந்த பெருமளவிலான முகாம்கள் எல்லாவற்றினுடைய இலக்குகள் மீதும் எமது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்த அந்தப் பகுதிகளில் உள்ள முகாம்கள் முற்றுமுழுதாக கைப்பற்றப்பட்டு அங்கே தாக்குதல் நடவடிக்கைகளை நடத்தி படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்திவிட்டு நாம் மீள எமது பிரதேசங்களுக்கு திரும்பியுள்ளோம்.

இதில் நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களுடைய படைக்கலங்கள் பாரியளவில் அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதல்களின் போது எம்மால் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் உடல்கள் முதல் நாள் தாக்குதல்களின் போது எம்மால் கைப்பற்றப்பட்டிருந்தன. அந்த உடல்களை இங்கே உள்ள எந்தவொரு நிறுவனங்களும் பொறுப்பெடுத்துக் கொள்ளாத நிலையில் குறிக்கப்பட்ட உடல்களை நாம் இங்கே அடக்கம் செய்துள்ளோம். ஏனைய உடல்கள் மீள நாம் திரும்புகின்ற போது படையினரின் நடவடிக்கை காரணமாக அந்த அந்த இடங்களிலேயே படையினரின் உடல்கள் இருக்கின்றன. அந்த அந்தப் பகுதிகளிலேயே படையினரின் உடல்கள் விடப்பட்டிருக்கின்றன.

மூதூர்ப் பகுதியில் இருக்கின்ற மக்களில் பெருமளவிலானோர் இடம்பெயர்ந்திருந்தார்கள். அந்த மக்களை மீண்டும் தமது இடங்களில் வந்து இருப்பதற்குஇ நாம் எமது நிலைகளுக்கு நாம் திரும்பியதன் காரணமாக அவர்கள் அந்தப் பகுதியில் வந்து இருக்கலாம் என்பதனை தெரியப்படுத்தியுள்ளோம்.

இந்த தாக்குதல்களின் போது அவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. உடனடி நிவாரணப் பணிகள் செய்வதற்காக நிறுவனங்கள் அந்தப் பகுதியை நோக்கி வருவதற்கான தயார் நிலையில் இருக்கின்றார்கள். ஆனால் படையினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார்கள். இப்போதும் ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதல்கள்இ விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள்இ பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள்இ கடற்படை தாக்குதல்கள் என்பன தொடர்ந்தும் இந்தப் பிரதேசங்களை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கான நிவாரணப் பணிகளையோ அல்லது அவர்களுடைய அவசரப் பணிகளையோ செய்வதற்கு எந்த நிறுவனங்களும் இதுவரை வருகை தரவில்லை. இது விடயம் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் நான் தொடர்பு கொண்டு தெரியப்படுத்திய போதுஇ இந்தப் பகுதிகளை நோக்கி படையினர் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதன் காரணமாக போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

மூதூர் பிரதேசத்தினைப் பொறுத்த வரை அதனுடைய பள்ளிவாசல் பிரதிநிதிகளுடன் நான் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்கள் சரியான உறுதிமொழி கிடைக்கும் பட்சத்தில் தான் அங்கே வரமுடியும் என்று தெரியப்படுத்தியுள்ளார்கள்.

மேலும் நான் அவர்களுக்கு ஒருவிடயத்தை தெரியப்படுத்தினேன். எமது இலக்குகளை அடைந்து விட்டு தாக்குதல்களை நிறுத்தி எமது நிலைகளுக்கு வந்திருக்கின்றோம். ஆன படியினால் உங்களுடைய பிரதேசங்களுக்கு வந்து இருக்கலாம் என்கின்ற தகவலை கூறியிருக்கின்றோம். அதற்கு முன்பாக தாக்குதல்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவர்களுக்கு ஒரு செய்தியை தெரியப்படுத்தியிருந்தோம். இராணுவ முகாம்களுக்கு அருகில் இருப்பவர்கள் வெளியேறுங்கள். நாம் தாக்குதலை நடத்தப் போகின்றோம் என்ற தகவலை முன்பு தெரியப்படுத்தியிருந்தோம்.

ஆகவே தான் அப்படியொரு சந்தர்ப்பம் வருகின்ற போது நாம் மீளவும் தெரியப்படுத்தலாம் என்ற விடயத்தை அவர்களுக்கு நான் கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் படையினரின் தாக்குதல்கள் எமது பகுதிகளை நோக்கி நடத்தப்படுவதன் காரணமாக மீளவும் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்கின்ற அச்சம் காரணமாக சரியான உறுதிப்படுத்தலின் பின்னர்தான் இந்த பிரதேசங்களுக்கு வரலாம் என்பதனை தெரியப்படுத்தியுள்ளனர்.

"சம்பூர் பகுதியில் விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருப்பதால் துறைமுகத்திற்கும் திருமலை நகரத்திற்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி சிறிலங்கா அரசு மற்றுமொரு போரை திணித்தால் அதன் எதிர்விளைவுகள் என்னவாக இருக்கும்?" என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில்இ

சம்பூர் பிரதேசம் என்பது எமது கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருக்கின்றது. அந்தப் பிரதேசத்தில் எமது பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கி

cartoonfp7.jpg

கார்ட்டூன் நன்றி - டெய்லி மிரர்

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழான எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்: இ.இளந்திரையன்

மூதூரில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் நோக்கம் முற்றாக நிறைவு பெற்றுள்ளது என்றும் தமது படையணிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் போதான நிலைகளில் கடமைகளை தற்போது ஆரம்பித்துள்ளன என்றும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரசின் இராணுவ அழுத்தத்தைத் தணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில்இ மகிந்தபுரஇ செல்வநகர்இ 64 ஆவது மைல்கல்இ மூதூர் இறங்குதுறைப் கடற்படை முகாம்இ கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் மற்றும் பச்சனூர்ப் பகுதியில் இருந்த மினி முகாம்கள் என்பனவும் மூதூர் காவல் நிலையத்தோடு இணைந்திருந்த இராணுவ மினி முகாமும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

சிறிலங்காக் கடற்படையின் இரண்டு அதிவேக டோராப் பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று டோராப் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களின் போது மோட்டார்கள் இயந்திரத் துப்பாக்கிகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டுப்படுத்தப்பட்ட இந்த துரித இராணுவ நடவடிக்கையில் லெப். கேணல் குஞ்சன் (இசையமுதன்) உள்ளிட்ட 32 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில்இ எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் அதன் இலக்கை அடையும் வரையான மட்டுப்படுத்த இராணுவ நடவடிக்கையாகவே இருக்கும்.

எமது தற்காப்பு இராணுவ நடவடிக்கை முற்றுப் பெற்று எமது படைகள் பெப்ரவரி 22 2002 ஆம் திகதி அமுலிற்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் போதான நிலைகளுக்கு மீண்டுள்ளன.

தற்போது சிறிலங்காப் படைகள் வெருகல் ஆற்றுப் பகுதியில் மேற்கொள்ளும் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் குண்டு வீச்சுக்கள் மிகவும் கோபமூட்டும் ஓரு நடவடிக்கை. இது விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு தவறான செய்தியை அனுப்புகிறது என்றார் இளந்திரையன்.

விடுதலைப் புலிகள் இந்த நடவடிக்கை குறித்து கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் அரசோ விடுதலைப் புலிகளோ மட்டுப்படுத்த இராணுவ நடவக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் ஆனால்இ அவர்கள் தமது நிலைகளை நகர்த்தி பிரதேசங்களைக் கையகப்படுத்தினால் அது ஏறக்குறைய போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயலிக்கச செய்தது போலாகி விடும் என்றும்இ அதன் பின்இ நோர்வேத் தரப்பு மற்றும் கண்காணிப்புக் குழு என்பன சட்டரீதயாக இருதரப்புடனும் பணியாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ்வளவு நாளும் புலிகள் ஜெற்றியையும், மூதூர் நகரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வில்லை எண்று உங்கட ஆக்கள் சொன்னது பொய்யா..???

எப்ப ஓய் உந்த மாயமான் பிடிக்கிற வேலைகளை நிப்பாட்ட போக்கிண்றீர்கள்...!

முஸ்லீம் மக்கள் தங்கள் பிரதேசங்களுக்கு திரும்பவேண்டும் என்பதுக்காகத்தான் இந்த நடவடிக்கை முடிக்க பட்டு இருகின்றது...!

இனிமேல் இலங்கை படையினரை நம்பும் நிலையில் முஸ்லீம் மக்கள் இருக்க மாட்டார்கள்... அவ்வளவு செல் அடிக்க பட்டு இருக்கின்றது அவர்கள் தலையில்....!

அது சரி தண்ணிக்கு போனவையின்ர நிலமை என்ன...??? மாவிலாறு அணையை பிடிப்பினமோ இல்லை பவர் பேசி புலிகள் திறந்துவிடும் மட்டும் பாத்துக்கொண்டு இருந்துவிட்டு நாங்கள் அடித்த அடியில் பயந்துதான் திறந்தவை எண்டு சப்பைக்கட்டு கட்டப்போறியளோ..???

ஆமாம் தல! சிங்கள இராணுவப் பேச்சாளர், சொல்கின்ற மாதிரி, மூதூருக்குள் புலிகள் வரவில்லை என்றால் எப்போதும், அது இலங்கையரசின் கட்டுப்பாட்டினுள் தானே இருந்திருக்க வேண்டும். இப்போது என்ன குழப்பமாக, மூதூரைப் பிடித்து விட்டோம் என்கின்றார்கள்! ஏன் இராணுவத்துக்குள் ஏதும் உள் மோதலா??

இதில் சில பதில்களும் இருக்கின்றன. எவ்வகை இராணுவ நடவெடிக்கை செய்தாலும், யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் படி, அதைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியாது என்ற பதிலால், மாவிலாறு பிடித்தாலும், அரசாங்கம் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது. அது யுத்தநிறுத்த மீறலாகவே கொள்ளலப்படும்!

திருகோணமலை முடக்கப்பட்டால், யாழ்பாணத்தின் இருப்பு கேள்;விக்குறியாக்கப்படும். இதனால் கட்டாயம் திருகோணமலைப் பாதுகாப்பிற்காக அரசு முயற்சி எடுக்க வேண்டி ஏற்படப் போகின்றது. இதனால் மன்னாரிலிருந்தோ, அல்லது அம்பாறையிலிருந்து இராணுவத்தை திருகோணமலைக்கு அரசு நகர்த்த வேண்டி ஏற்படலாம். அதனால் ஆக்கிரமிப்பு இடங்கள் பல விடுவிக்கப்படலாம்!

யாழ்பாணத்தைப் பிடிக்கப்போய்த் தான், கிழக்கின் பல இடங்களை அரசு இழந்து நின்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நெற்றை புலிகள் ஆதரவு தளம் எண்று செய்திகள் சொன்ன பிபிசியா..??? மற்றய ஊடகங்கள் எல்லாம் புலிகளுடன் தொடர்புகொள்ள முடிய அவர்களால் மட்டும் முடியவில்லை எண்று சொன்ன

ராய்ரர் உட்டப பல சேவைகள் புலிகளின் நேரடி செய்திகளை சேகரித்தது...! ஆனால் லுத்ரா..! கொழும்பில் இருந்து அரச செய்திகளை சேகரித்தார்...! மூதூரில் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் புலிகள் அடித்த செல்தான் மக்கள் மீதும் தங்களுக்கு அருகிலும் விளுந்ததாக புழுகியதை நம்புகின்றோம்...!

Casualties are hard to verify but the army says at least 23 soldiers have been killed since the military launched its latest offensive. The rebels have lost 32 fighters, according to the statement on the TamilNet website.

The International Committee of the Red Cross told the AFP news agency it was unable to verify claims of civilian casualties or massacres because it had not had access to the area.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/5248440.stm

  • கருத்துக்கள உறவுகள்

இக்பால் அத்தாஸின் வாராந்த நிலவர அறிக்கைப்படி ஆக மொத்தம் 36 சிங்கள அரச படையினர்தான் கொல்லப்பட்டுள்ளனர் (மாவிலாறு அணை மோதல், கந்தளாய் கண்ணிவெடி தாக்குதல், திருமலை துறைமுகத் தாக்குதல், மூதூர் தாக்குதல் உட்பட). எனவே புலிகளுக்கு உது பாரிய பின்னடைவு, இது போன்ற தாக்குதல்களை நடாத்தி அரச படைகளை வெல்ல முட்யாது என்ற தோற்றப்பாட்டைக் குடுக்கின்றார். உண்மையாக இருக்கும். :wink:

லங்கா ருத்தின் செய்திப்படி புலிகளில் 400க்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். தோல்வி காரணமாக மாவிலாறு அணயைத் திறக்கச் சம்மதிதுள்ளனர். இதுவும் உண்மையாகத்தான் இருக்கும். :P :wink:

Casualties are hard to verify but the army says at least 23 soldiers have been killed since the military launched its latest offensive. The rebels have lost 32 fighters, according to the statement on the TamilNet website.

The International Committee of the Red Cross told the AFP news agency it was unable to verify claims of civilian casualties or massacres because it had not had access to the area.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5248440.stm

நாங்கள் 3ம் திகதி நடந்ததை BBC சொன்ன திரிபுகளையும் 4ம் திகதி சொன்னால் 5ம் திகதி அவர்கள் திரித்த இன்னும் ஒரு பல்ட்டியை இங்கு இணைக்கிறீர்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.