Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவை சேனாதிராஜா முதலமைச்சராவதை ஏன் இந்தியா விரும்பவில்லை: ஏசியன் ரிபியூன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாவை சேனாதிராஜா முதலமைச்சராவதை ஏன் இந்தியா விரும்பவில்லை: ஏசியன் ரிபியூன்

mavai-senathiraja.jpg

இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று ஆசியன் ரிபியூன் இணைத்தளம் தெரிவித்துள்ளது.இணையத்தளத்தின் ஆசிரியர், தமது ஆசிரியர் தலையங்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய உளவு நிறுவனமான ரோ, மாவை சேனாதிராஜாவின் மீது குற்றச்சாட்டை சுமத்தி இந்திய அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.இதன்படி, 2004ம் ஆண்டில் மிதவாத தமிழ் தலைவர்களை மாவை சேனாதிராஜாவே விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்திவிட்டார். இந்தியா எச்சரித்தபோதும் மாவை சேனாதிராஜா, இந்த விடயத்தில் மும்முரமாக இருந்ததாக ரோ குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் கொலைகள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு என்ற சம்பவங்களின் பின்னணியில் மாவை சேனாதிராஜா செயற்பட்டுள்ளார் என்று ரோ குறிப்பிட்டுள்ளதாக ஆசியன் ரிபியூன் தெரிவித்துள்ளது.

அத்துடன், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக தெரிவுசெய்யப்படுவதை ஏற்கவில்லை என்று ஆசியன் ரிபியூன் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், திருகோணமலையை சேர்ந்த இளைப்பாறிய நீதியரசர் சி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக பெயரிட யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

எனினும் விக்னேஸ்வரனின் மகன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் உறவுவழிப் பெண்ணை மணம் முடித்துள்ளார் என்றும் ஏசியன் ரிபியூன் குறிப்பிட்டுள்ளது.இதற்கிடையில் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் வி.டி.தமிழ்மாறன் மற்றும் பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோரின் பெயர்களும் முதலமைச்சர் வேட்பாளர்களுக்காக பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஆசியன் ரிபியூன் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக முதலமைச்சர் வேட்பாளர் நிலையில் பிரச்சினைகள் இல்லாத போதும் ரோவின் தலையீட்டின் பின்னர் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் நிலையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஏசியன் ரிபியூன் தெரிவித்துள்ளது.

http://www.ampalam.com/2013/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/

அரிசிடம் நேராக கையூட்டு வாங்கும் இந்துவை விட எள்ளவும் வித்தியாசம் இல்லாத பத்திரிகை. அதுதான் ஆதாரமாக்கும்.

Edited by மல்லையூரான்

இந்தியக் கைக் கூலி (இ என் டி எல் எப் )பரந்தன் ராயனின்  ஆலோசகர் ராஜசிங்கத்தின் இணையம் தான் இந்த ஆசியந்திறிபு 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ விடுதலை போராட்டத்துக்கு எப்போதும் இந்த ஏசியன் ரிபியூன் ஊடகம் அதரவாக இருந்தது கிடையாது இதுவும் ஒரு ஒட்டுக்குழு ஊடகம் 

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கமோதல்கள், போட்டிகளினால் முடிவில் சில முன்னாள் போராளிகள் சிறிலங்காவுடன் சேர்ந்து இயங்குகின்றார்கள். ஆனால் ஏசியன் ரிபியூன் ஆசிரியர் ராஜசிங்கம் 50களிலே சிங்களத்துடன் இணைந்து தமிழினத்துக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகிறார்.

தயவுசெய்து ஏசியன் ரிபியூனில் வரும் குப்பைகளை இங்கு இணைக்கவேண்டாம்.

தயவுசெய்து ஏசியன் ரிபியூனில் வரும் குப்பைகளை இங்கு இணைக்கவேண்டாம்.

 

பெரும்பாலும் திரித்து, புனைந்து வரும் செய்திகளையே ஏசியன் ரிபியூன் உள்நோக்கங்களுடன் காவி வருவதாக அறிந்துள்ளோம்.

 

இவர்கள் இப்பிடி செய்தி எழுதி மாவை இந்தியாவை எதிர்ப்பவர் ஆகவே ஈழத் தமிழர்கள் மாவைய ஆதரியுங்கள் என்று பிரச்சாரம் செய்யும் நோக்கமே. அனால் உண்மை தலை கீள். விக்கி வருவது இந்தியாவிற்கும், இலங்கைக்கும்,ஒட்டுக்குழுக்களும் விருப்பம் இல்லை 

இவர்கள் இப்பிடி செய்தி எழுதி மாவை இந்தியாவை எதிர்ப்பவர் ஆகவே ஈழத் தமிழர்கள் மாவைய ஆதரியுங்கள் என்று பிரச்சாரம் செய்யும் நோக்கமே. அனால் உண்மை தலை கீள். விக்கி வருவது இந்தியாவிற்கும், இலங்கைக்கும்,ஒட்டுக்குழுக்களும் விருப்பம் இல்லை 

 

இது தான் உண்மை!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.