Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு தேர்தலும் ‘ஹை புரபைல்’ விக்கியும் : சோளன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசும், இலங்கை மேன்மைதங்கிய ‘ஹை புரபைல்களும்’ விரும்பியபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராகும் ‘தகுதி படைத்த’ வேட்பாளராக முன்னை நாள் நிதிபதி விக்னேஸ்வரன் இறுதியில் தெரிவுசெய்யப்பட்டார். சுரேஷ் பிரேமச்ச்சந்திரன் குடும்பத்தோடு ‘அண்ணன்’ மாவையும் சென்று குத்தகைக்கு எடுக்கப்பட்ட ரி.என்.ஏ என் முதன்மை வேட்பாளருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

‘ஹை புரபைல்’ கனவான் தான் வேட்பாளர் என்று சாணக்ஸ் சம்பந்தன் முன்னமே முன்மொழிந்த போதே விக்னேஸ்வரனே ‘விடுதலைப் போராளி’ யாவார் என்று பலரும் நம்பியிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாரம்பரியப்படி வழக்குப் பேசுபவர்களே மக்கள் பிரதிநிதிகளாகலாம். அது இன்னொரு படி மேலே போய் தீர்ப்புச் சொல்லும் ‘ஹை புரபைல்’ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தெரிவாகியுள்ளது.

இதெல்லாம் தேசிய தலைவரின் தீர்க்கதரிசனம் என்று செந்தமிழன் சீமான் நரம்பு வெடிக்க எங்கேயாவது மேடையில் சொல்ல தமிழீழ தேசிய சவுண்டான விசிலடித்து புலம் பெயர் நாடுகளில் ஆரவாரம் செய்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

இலங்கை அரச மந்திரியும், புகழ்பூத்து புலம் பெயர் தேசமெல்லாம் சென்று திரும்பிய வாசுதேவ நாணயக்கார என்ற இடது நாமம் போட்ட ‘ஹை புரபைலின்’ மகளை விக்னேஸ்வரைன் மகன் திருமணம் செய்து இன ஐக்கியத்துக்கு குறியீடு போட்டவர் என்ற பெயர் வேறு நமது ஹை புரபைல் முதல்வருக்கு உண்டு. மகிந்த ராஜபக்சவோடு ஸ்கொடிஸ் கள்ளு வாங்கிக் குடிக்கும் அளவிற்கு நட்பு வேறு உண்டு.

இதெல்லாம் அமரிக்காவின் கருணையாலும் இந்தியாவின் இதய சுத்தியாலுமே நடந்தது என்று ஈபிள் ரவர் உச்சியிலிருந்து யோசித்து புல்லரித்துப் போய் பாராட்டுகிறார்கள் புலம் பெயர்ந்த பெரியோர்.

லோ புரபைல் இனக் கொலை மகிந்தவுக்கோ விக்கி வந்தாலும் தயா மாஸ்டர் பிரின்ஸ்பல் ஆனாலும் ஒன்று தான், எல்லாம் ஒன்டுக்கை ஒன்று தான். சம்பந்தர் அவ்வப்போது கதைக்கேக்க ஒட்டுகேட்டு பொறுக்கிய சாணக்கியம் எல்லாத்தையும் சாம்பாராக பிரயோகித்த மகிந்தவின் லோ புரபைல் வெற்றி பெற்றது.

இதையெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பாத நமது ஈபிள் ரவர் சிந்தனைச் சிகரங்களோ அமரிக்க அழுத்தியதில் மகிந்த மெலிந்து போய் இதையெல்லாம் செய்து விட்டதாக கனவால் எழும்பிய பின்னரும் பீற்றுகிறார்கள். பீரிசை குறுக்கால புகுந்து காதோட காதுவச்ச மாதிரி ஹை புரபைல் அமரிக்க, பிரித்தானிய தூதுவர்கள் மிரட்டி வேறு வைத்திருப்பதாக பின்னால காச்சட்டை கிழியும் அளவிற்கு புலம் பெயர் கோமாளிகள் வெடி வெடிக்கினம்.

வடக்கில் நடப்பது இராணுவ ஆட்சி என்பதை விக்னேஸ்வரனுக்கு கூட்டமைப்புக் காரர்சொல்லியிருப்பார்கள் என்பது சந்தேகமில்லை. சரேசு குடும்பம் முன்பொரு காலத்திலே ஆயுதம் தாங்கி ஈழம் வேண்டும் என்று தயா மாஸ்டர் போல், டக்ளசு போல், கருணா போல் களங்கள் கண்டவர்கள்.அவர்கள் வடக்கில் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு இனச் சுத்திகரிப்பு நடக்கிறது என்றும் சொல்லியிருப்பார்கள்.

மகிந்த ராஜபக்சவின் மீன்பிடி அமைச்சின் செயலாளராகவிருந்த சுரேசுவிற்கு இதெல்லம் எப்படியாவது தெரிந்திருக்கும்.

ஆனால் என்ன விக்கி ஹை புரபைல் என்பதால் இப்போதே அமரிக்காவுக்கும் இந்தியாவுகும் கொடுப்பதற்கு சாய் பாபா லட்டு எடுத்த மாதிரி அறிக்கை தயாரித்திருப்பார்.

‘அமரிக்காவே, ஆப்பானிலும் உலகம் முழுவதும் இரத்தம் குடிப்பதற்கு ஒரு நிமிட ஓய்வு கொடுத்துவிட்டு எம்மைக் காப்பாற்று’ என்று அறிக்கை ஆரம்பித்திருக்கும். ‘இந்தியாவே இனப்படுகொலை நடத்தியதில் உனது இரத்தவெறி ஆடங்கிருக்கும் அதனால் மனிதாபிமானியாகிதால் தமிழர்களைக் காப்பாற்று’ என்று முடித்திருப்பார்.

விக்கியை குத்தகைக்கு எடுத்து அரசியல் செய்வதை நிறுத்தி உங்கள் உங்கள் கட்சிகளைக் கலைத்துவிட்டு புதிய மக்கள் தலைமைக்கு வழிவிட்டுப் பாருங்கள். விக்கியின் முன்னைநாள் போஸ்டை மக்கள் கையிலெடுத்து பாசிஸ்ட் ராஜபக்சவை மக்கள் நீதிமன்றத்தில் தண்டிக்கும் அளவிற்குப் பலம் பெறுவார்கள்.

Thanks to inioru

விக்கினேஸ்வரன் மகன் மட்டுமா சிங்கள பெண்ணை மணம்  பிடித்தார்? தமிழர்கள் வேற யாரும்  சிங்களவர்களை மணம் கொள்ளவில்லையா?

சிங்கள சம்மந்தி என்ற படியால் இவர் இனத்தை விற்பார் என்று எதிர்வு கூல் பொருத்தமற்றது. 

யாழில் இருந்து கொழும்பில் குடியேறிய தமிழர் தானே விக்கினேஸ்வரன்? அப்பிடி பார்த்தால்  பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கும் நாமும் எதுவும் பேச முடியாது. சப்பையான காரணங்களை விட்டு விக்கினேஸ்வரன் ஏன் வேண்டாம் என்று நல்ல காரனகளை சொல்லுங்கள் நண்பர்களே 

 

அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனின் மனைவி சிங்களப் பெண் என்பதற்கும் , 2009 வரை பிரித்தானிய தமிழர் பேரவை பேச்சாளராகவும் பின்னர் உலகத் தமிழர் பேரவை பேச்சாளராகவும் இருக்கின்ற சுரேன்சுரேந்திரனின் மனைவும் சிங்களப் பெண்தானே(inioru.com)


விக்கினேஸ்வரன் மகன் மட்டுமா சிங்கள பெண்ணை மணம்  பிடித்தார்? தமிழர்கள் வேற யாரும்  சிங்களவர்களை மணம் கொள்ளவில்லையா?

சிங்கள சம்மந்தி என்ற படியால் இவர் இனத்தை விற்பார் என்று எதிர்வு கூல் பொருத்தமற்றது. 

யாழில் இருந்து கொழும்பில் குடியேறிய தமிழர் தானே விக்கினேஸ்வரன்? அப்பிடி பார்த்தால்  பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கும் நாமும் எதுவும் பேச முடியாது. சப்பையான காரணங்களை விட்டு விக்கினேஸ்வரன் ஏன் வேண்டாம் என்று நல்ல காரனகளை சொல்லுங்கள் நண்பர்களே 

இப்படி ஒரு கட்டுரை எழுதின காசு கொடுப்பாங்களா இந்த இணைய தளங்கள் ? :D  இப்படி தரமான பிரயோசமான கட்டுரை என்னாலும் முடியும்  :o 

விக்கி அண்டைக்கு சுண்டலுக்கு கிள்ளேக்கை சொன்னனான் உது ஆபத்தாய் முடியும்,கவனம்  என்று.  அவர் என்ரை சொல்லைக்கேளாமல்  "சும்மா பகிடிக்குதானே"  என்று கூறிவிட்டு சுண்டலுக்கு இறுக்கி கிள்ளினிவர். அண்டைக்கு அவர் தான் முதல் அமைச்சர் போட்டிக்கு இறங்குவன் என்று கனவிலும் காணவில்லை. இன்று விட்ட பிழைக்கு இனி பார்த்துக்கொள்ளட்டுமே  :lol:

 

நீதியரசர் விக்கினேஸ்வரனைப் பற்றி இப்படியும் சொல்கிறார்கள்.

 

 

விக்னேஸ்வரன்: இன்றைய தேவைக்கேற்ற தெரிவு – மன்னார் ஆயர்

[ புதன்கிழமை, 17 யூலை 2013, 14:56 GMT ]

c-vigneswaran.jpgதமிழ்மக்கள் மிகப்பெரிய இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் அவர்களின் விடிவிற்காக பாடுபடக்கூடிய ஒருவர் வடமாகாண முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது ஆண்டவனின் தெரிவு என்று மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசெப் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், வடக்கு மாகாணசபையின் முதன்மை வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள போதே அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்தத் தெரிவு தமிழினத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களின் சிந்தனை வல்லமையை காண்பிப்பதுடன் காலத்தை நுணுக்கமாக நோக்கி முடிவெடுக்கும் திறனையும் அவர்கள் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

இன்றைய நிலையில் எவர் தேவையோ அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையேயும் இருந்தது.

அதற்கேற்ப அவரது தெரிவும் அமைந்துள்ளது.

நீதியான, நேர்மையான, இறைபக்தி மிகுந்த, இலஞ்சம் ஊழல் போன்றவற்றை தனது வாழ்க்கையில் முழுமையாகத் தோற்கடித்த இவரது தெரிவு கடவுளின் தெரிவென்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைய நிலையில் இவரது தெரிவை எல்லாம் வல்ல ஆண்டவனும் விரும்பியுள்ளார்.

உள்நாட்டிலும் அனைத்துலகமெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நீதியரசர் செயற்பட அனைவரும் உதவ வேண்டும்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான தனது தூரநோக்கை அவர் உடனடியாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

யுத்தத்தாலும் இடம்பெயர்வுகளாலும் பெரும் இழப்புகளை சந்தித்து நிற்கும் தமிழ் மக்களை இவற்றின் தாக்கத்திலிருந்து தூக்கிவிடும் பெரும் பொறுப்பை நீதியரசர் ஏற்றுள்ளார்.

தமிழ் மக்கள் தற்போது மிகப்பெரும் சவால்களையும் நெருக்குதல்களையும் வடக்கு கிழக்கில் எதிர்கொண்டுள்ளனர்.

தாங்கள் வாழும் மண்ணில் இந்த சவால்களிலிருந்து அவர்கள் மீள வேண்டும்.

இந்தத் தேர்தலை அதற்கொரு வாய்ப்பாக அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்பதுடன் தமிழ் மக்கள் தமது உணர்வுகளுக்கு அப்பால் சலுகைகளுக்கு என்றுமே விலைபோகாதவர்கள் என்பதை இந்தத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும்.

பொருத்தமான தருணத்தில் நீதியரசரின் தேர்வு தமிழ் மக்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று கருதுகிறேன்.

அனைத்து மக்களும் அனைத்து மதத்தினரும் சமூக அமைப்புகளும் கல்விமான்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து இவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

நாம் அடிமைகளோ அல்லது இரண்டாம்தர குடிமக்களோ அல்லது ஒதுக்கபட்டவர்களாக வாழவேண்டியவர்களோ அல்லர் என்பதை நீதியரசரின் தேர்வின் மூலம் முழு உலகிற்கும் உணர்த்துவது வடபகுதி மக்களின் கடமை.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20130717108688

 

 

 

விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது நாட்டுக்கு பயங்கரமானது - குணதாச அமரசேகர!

[Wednesday, 2013-07-17 15:08:27]
gunadasa-amarasekara-070613-seithy-150.j

இந்தியாவின் றோ உளவுப் பிரிவின் ஆலோசனையும், இரா. சம்பந்தனின் அரசியல் தந்திரமும் இணைந்தே முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது என தேசியப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேசம் அங்கீகரிக்கப்படக்கூடிய விக்னேஸ்வரனை நியமித்ததன் மூலம் கூட்டமைப்பு தனது விடுதலைப் புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க முயற்சித்துள்ளது.

  

மாவை சேனாதிராஜா முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளின் ஆதரவாளர். முக்கியமாக இந்தியாவும் இதனை நன்கு அறிந்துள்ளது. எனவே மாவை சேனாதிராஜாவை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை இந்தியா விரும்பாது. அதேவேளை இலங்கையில் தனித் தமிழீழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. இதனிடையே முன்னாள் நீதியரசரின் விக்னேஸ்வரனின் இரண்டு புதல்வர்களும் சிங்களப் பெண்களையே மணந்துள்ளனர்.

இது மட்டுமல்லாது அவர் உயர் பதவி வகித்த படித்தவர், இதனை கூட்டமைப்பினர் சர்வதேசத்திடம் எடுத்துரைப்பர். விக்னேஸ்வரனால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் படித்த புத்திஜீவி சர்வதேசத்துடன் ஒத்துப்போகக் கூடியவர் என்பதையும் கூட்டமைப்பு எடுத்துக் கூறும். எவ்வாறாயினும் இந்திய உளவுப் பிரிவின் ஆலோசனை, சம்பந்தனின் அரசியல் வியூகம் என்பன காரணமாக விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது, பயங்கரமானதும் நாட்டுக்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலைமையுமாகும்.

எனவே, ஜனாதிபதி இதனை தடுத்து நிறுத்த அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் பதவியோ அல்லது வெளிநாட்டு தூதுவர் பதவியையோ வழங்கி முதலமைச்சர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது நாட்டுக்கு பயங்கரமானது - குணதாச அமரசேகர!

[Wednesday, 2013-07-17 15:08:27]

 

எனவே, ஜனாதிபதி இதனை தடுத்து நிறுத்த அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் பதவியோ அல்லது வெளிநாட்டு தூதுவர் பதவியையோ வழங்கி முதலமைச்சர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றார்.

 

 

இந்திய  இலங்கை  ஒப்பந்தத்தை கிழித்தெறியச்சொல்லுங்கள் தலைவா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் ஆயர் போல தான் எல்லா தமிழர்களும் நம்பி நம்பியே..... எல்லாத்தையும் இழந்து கெட்ட இனம் ....

படித்த,அனுபவமுள்ளவர்களை களமிறக்கினால் அதற்கும் எதிர்ப்பு ,அவர்களை கொண்டுவராட்டால் அதற்கும் எதிப்பு அல்லது குறைபிடிப்பவர்கள் தாங்கள் முன்வரவேண்டும் அரசியல் என்றாலும் சமூகசேவை என்றாலும் .முன்வருவார்களா ?
                                                                         இது தாண்டா தமிழன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

utter noncence. a person should be judgedbon his own merit. whats wrong Justice's son married to vasudeva's daughter. late anton balasinham married to a foreigner who was accused as a CIA agent. didn't ltte accept it. have you done any serious study about Justice CV wigneswaran before criticising him. Do u know what is criticism. criticism must be a constructive one rather than a personal attack. do you know who he is, what is his reputation, what contribution he provided to enhance and strengthen democratic values and rule of law and human rights. have ever read his speeaches during his tenure as judge and after his retirement. do u have any idea about his qualities. he is a man of principle , an uncorrupted, fair minded person with uncompromising his principle. whats wrong he studied in one of the prestegious colleges in sri lanka. everyone wanted to study there. where Mr chelvanayagam studied? do u think that all the people who study in tamil areas are good tamil nationalists. then what about daya master, KP where did they study. they didn't study at royal college, then how come they became goverment supporters??

you can not make unsubstantiated claim without evidence such as he had alcohol with mahinda. how come you can make such a defamatory statement against a man of principle. further, if you say bevause justice didn't study in tamil areas so he can not be trusted or has no knowledge about tamil.problems, then how tamil youths born and studied in foregin countries can talk about sri lankan tamil issues.

can you deny the fact that anton balasingam had liquor with GL peris amd other sri lankan delegates during the negitiation period.

justice CV wigneswaran is the man in need in this critical juncture. sri lankan gov in fact did not expect that he will be the candidate and they are unable to digest it now. because they can not exert pressure on him. it is one of the positive intelligent and tactical move by the TNA. :D

முகப்புதகத்தில் எனக்கு வந்த பதில் ஓன்று....

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் ஆயர் போல தான் எல்லா தமிழர்களும் நம்பி நம்பியே..... எல்லாத்தையும் இழந்து கெட்ட இனம் ....

சுண்டு மற்ற இணைய வாந்திகளை இணைப்பதை விட்டு தன் சொந்தக் கருத்துக்களை இங்கே எழுதவேண்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்துகளுக்கு வலு சேர்க்க மற்றைய இணைய கட்டுரைகளையும் இணைப்பதில் தவிறில்லை..... உங்களுக்கு ஒரு கருத்து இல்லது கட்டுரை பிடிக்கா விட்டால் அது வாந்தி உங்களுக்கு பிடித்த மாதிரி எழுதினால் அது பன்னீர்... என்று நீங்கள் நினைத்தால் அதுக்கு நாம் எதுவுமே செய்ய முடியாது அன்பு சகோதரா.....

மற்றது என்னுடைய சொந்த கருத்துகள் வேறு ஒரு இணையத்தில் வந்து அதை நீங்கள் பாத்து இருந்தால் அங்கு எழுதுபவரும் என்னை மாதிரியே எழுதி இருப்பார் அதற்காக நான் அங்கு இருந்து தான் கருத்துக்களை எடுத்து வந்து இணைப்பதாக நீங்கள் என்மீது குற்றம்சாட்டுவது உங்கள் அறியாமையே....

சிங்களவருக்கு நீதியரசர் விக்கினேஸ்வரனின் தெரிவால் லாபம் இருக்கு. ஆனால் அந்த லாபத்தைஅவர்கள் பெற்றுகொள்ள  அரசு விட்டுக்கொடுக்குமா என்பதுதான் கேள்வி. மகிந்தாவின் பந்தமாக இருந்தாலும் தாயான் ஜெயதிலகாவும்  நீதியரசரின் தெரிவு பற்றி தனது கருத்தை கூறியிருக்கிறார். 

 

முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டமை அனைத்து இன மக்களும் பெருமையடையலாம்
17 ஜூலை 2013

 

தயான் ஜயதிலக்க – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

dayanjayathilaka_CI.jpg

 

முதலமைச்சர் வேட்பாளராக பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டமை அனைத்து இன மக்களும் பெருமையடையலாம் என முன்னாள் பிரான்ஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதுவரும் சிரேஸ்ட ராஜதந்திரியுமான தயான் ஜயலதிலக்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தமிழரும் இந்த விடயம் குறித்து மகிழ்ச்சியடைய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தமை ஓர் தந்திரோபாயமான நகர்வாகவே கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தமிழ்த் தேவையை முழுமையாக புரிந்து கொண்டு தீர்மானம் எடுக்கின்றனர்.

விக்னேஸ்வரன் தமிழ் மென்மை அதிகாரத்தின் குறியீடாக திகழ்கின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விக்னேஸ்வரன் தனது அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் நாட்டின் மென்மை அதிகாத்தின் குறியீடாக மாற்றமடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரனின் nதிரவானது புத்திஜீவி தமிழ் சமூகம் இன்னமும் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றமை வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை, தெற்கு அரசியல் சமூகம் போட்டியிடுவதில் சவால்களை எதிர்நோக்கி வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விக்னேஸ்வரன் சமஷ்டி முறைமையை போற்றும் அதேவேளை எந்த சந்தர்ப்பத்திலும் நாடு பிளவடைய வேண்டுமென வலியுறுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உருவாகக் கூடுமென அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

பூரண அளவிலான சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய சமஷ்டி முறைமையை விக்னேஸ்வரன் விரும்புவதாக தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94139/language/ta-IN/article.aspx

Edited by மல்லையூரான்

1. முதலில் திட்டமிட்ட சிங்கள குடி ஏற்றங்களை சிங்கள தமிழ் புத்திஜீவிகள் நிறுத்த வழி செய்யுங்கள் . இல்லை என்றால் நாம் சிந்திக்க நிலமே இருக்காது. 

2. வடக்கு கிழக்கை தமிழரின் தாயக பூமி என்று உரக்க கூறுங்கள் அதை இணைக்க முயலுங்கள்.அத்துடன்  நுவரெலியாவையும் வடக்கு கிழக்குடன் இணைந்த தமிழ் மாகாணம் ஆக்க முயலுங்கள்.
3.இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் தாகம் வெறும் 13 திருத்தம் அல்ல. அது தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது  அதற்கும் மேல் என்று உணர்ந்து செயற்படுங்கள்.
4.சுரேஷ் போன்ற கூட்டமைபினர் தேர்தல் நேரம் மட்டுமே தமிழர் பிரச்சனைய சர்வதேசதிட்கு உணர்த்துவோம் ஐநாவிட்கு வகுப்பெடுப்போம் என்று  முழங்காமல் தொடர்ந்து வேலைத்திட்டங்களை முன்னேடுக்கவேண்டும்.
5. அம்பாறை,மூதூர்,புத்தளம் இணைந்த முஸ்லிம் மாகாணத்தை உருவாக்கி அவர்களிடம் குடுங்கள். அதற்க்காக முஸ்லிம் தலைவர்களை போராட சொல்லுங்கள்- இதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களின் மாகாணமாய் இருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.