Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிந்து கொள்வோம்

Featured Replies

 

• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

• சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ்.

• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

• கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி.

• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள"திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.

• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர்ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

• தாஜ்மஹால் இருக்கும்ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.

• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது.

Visit our Page -► தமிழால் இணைவோம்

523972_638890619462525_6837409_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அன்பர்.

 

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது.

 

 

அப்ப நாலந்தை பல்கலைக்கழகம் இல்லையோ?

 

  • தொடங்கியவர்

481113_616699191698076_1597823235_n.jpg
தென் கொரியா தலைநகர் சியோல் நகரில் மாக்டாங் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் நன்றி என எழுதி உள்ளனர். 

தென்கொரிய நாட்டில் கூட தமிழுக்கு இடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் நடுவண் அரசு வானூர்தியில், வங்கியில், அஞ்சல் சேவையில், தொடர்வண்டிகளில், அலுவலகங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை. 

Snapped at a Burger King store near Mokdong station in Seoul...

- Mok-dong Station.

 

நன்றி முகனூல் 

மொரிசியசில் ஏறக்குறைய 55 000 தமிழர்கள்] வாழ்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாயும் நீதிமான்களாயும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது...

 

Billet_mauricien.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக்க பூர்வமான செய்திகளின் இணைப்பின் மறு பெயர் யாழ் அன்பு. நன்றி.

Edited by anni lingam

  • தொடங்கியவர்

வாழ்கைத் தத்துவம்
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

 

தமிழ் பேஸ்புக் நியூஸ்

  • தொடங்கியவர்

969798_687335474614639_1752402307_n.jpg
இது அலெக்ஸ்சேண்டேரியா நூலகத்தின் வெளி கட்டமைப்பு, இவை ஒரு நூலகமாகவும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் ஒரு நடுவமாகவும் செயல்படுகிறது.. 

இதன் வெளிப்புறத்தில் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வாயிலாக, மொழியின் தொன்மையின் அடையாளமாக தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளது...

இது எகிப்து நகரத்தின், மத்திய தரை கடலின் (Shore of Mediterranean Sea) கரையில் அமைந்துள்ளது..

வாழ்க தமிழ்.....

 
 

நன்றி முகனூல் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.