Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடுவில் வந்திறங்குவார் நவிபிள்ளை – சிறிலங்கா விமானப்படை விமானத்தை நிராகரிப்பு?

Featured Replies

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, விடுதலைப் புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட ஓடுபாதை வழியாகவே வன்னிக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் ஓகஸ்ட் 25ம் நாள் தொடக்கம், 31ம் நாள் வரை சிறிலங்காவில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இவரது பாதுகாப்பு மற்றும் பயண ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய, ஐ,நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆப்ரஹாம் மதாய் தலைமையிலான குழுவொன்று கடந்தவாரம் சிறிலங்கா வந்திருந்தது.

நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவினர், தனியார் விமானம் மூலமே, சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்வதற்கே ஐ.நா அதிகாரிகள் விருப்பம் கொண்டிருந்தனர்.

ஆனால், சிறிலங்கா அரசாங்கம், தனது விமானப்படை விமானங்களில் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளலாம் என்று உத்தரவாதம் அளித்துள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் ஹெலி ருவர்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் அல்லது உலங்குவானூர்திகளில் நாட்டின் எந்தப் பகுதிக்கும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகளிடம், மூத்த சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம், கிளநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிடவுள்ளனர்.

இந்தக் குழுவினர், விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு, சிறிலங்கா விமானப்படையால் திருத்தியமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இரணைமடு ஓடுதளம் வழியாகவே பயணத்தை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தவுடன், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தி மூலமே போர்க்களப் பகுதிக்குச் சென்றதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நவநீதம்பிள்ளையின் பயணத்துக்கு ஐ.நா ஒற்றை இயந்திர விமானத்தையே தெரிவு செய்ததாகவும், ஆனால் சிறிலங்கா விமானப்படையிடம், இரட்டை இயந்திர விமானத்தை சேவையில் ஈடுபடுத்துவதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

நவநீதம்பிள்ளையின் பயணத்துக்கு தனியார் விமானத்தைப் பயன்படுத்தினாலும், கட்டுநாயக்க மற்றும் மத்தால அனைத்துலக விமான நிலையங்கள் தவிர, சிறிலங்காவில் உள்ள ஏனைய அனைத்து விமான நிலையங்களும் சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதால், தனியார் விமானங்களையும் அவற்றையே பயன்படுத்தியாக வேண்டும் என்றும் ஐ.நா அதிகாரிகளிடம் சிறிலங்கா அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்கா விமானப்படை விமானத்தில் நவநீதம்பிள்ளை குழுவினர் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அச்சமின்றிப் பயணம் செய்ய முடியும் என்று ஐ.நா அதிகாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட போதிலும், ஹெலி ருவர்ஸ் விமானங்களில் பயணிக்கும் யோசனையை ஐ.நா குழு நிராகரித்து விட்டது.

சிறிலங்கா விமானப்படை குடியியல் விமானப் போக்குவரத்து நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலும், அதில் பயணம் மேற்கொள்வது தவறான விம்பத்தைக் காட்டும் என்பதால், ஐ,நா இந்த வாய்ப்பை விரும்பவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

சிறிலங்கா விமானப்படை, நவநீதம்பிள்ளை குழுவினருக்கு வை -12 விமானத்தை ஒழுங்கு செய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.http://goldtamil.com/?p=3401

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.