Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானப்படையின் குண்டுவீச்சில் 5 மூதூர் பொதுமக்கள் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா விமானப்படையின் குண்டுவீச்சில் 5 மூதூர் பொதுமக்கள் பலி

திருகோணமலை ஈச்சிலம்பற்று மற்றும் மூதூர் பகுதிகளிலிருந்து வாகரை நோக்கி இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது, சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வெருகல் ஆற்றைக் கடந்து வாகரை செல்வதற்கு படகில் சென்ற அகதிகள் மீது, நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டுவீசியுள்ளதுடன் இராணுவ முகாமிலிருந்து கண்மூடித்தனமாக ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது.

இந்த குண்டுவீச்சில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெயர்ந்து செல்லும் அகதிகளை நோக்கி தாக்குதல் நடத்தும் சிறிலங்காப்படை

மூதூர் மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்களிலிருந்து 35,000-க்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்து வரும் நிலையில், அவர்கள் சென்று கொண்டிருக்கும் பாதைகளைக் குறிவைத்து சிறிலங்கா ஆட்டிலறி ஏவப்படுவதுடன், கிபீர் குண்டுவீச்சும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

இந்தப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்தால், தங்களது இராணுவ நிலைகளைப் பாதுகாப்பது சிரமமாகி விடலாம் என்பதால், பொதுமக்களைக் கேடயமாகப் பாவித்துவரும் இராணுவத்தினர், அவர்கள் வெளியேறி விடாமல் தடுப்பதற்கான முயற்சியாக இந்த கொடூரமான தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.

பசி பட்டினியுடன், மருத்துவ வசதியுமின்றி கடும் சிரமங்களை அனுபவிக்கும் இந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது, சிறிலங்கா அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது குறித்து மனித உரிமை அமைப்பினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மூதூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மற்றும் சிங்களக் குடும்பங்களுக்கு உரிய உணவும் பாதுகாப்பும் வழங்கப்படும் அதேவேளை, விடுதலைப் புலிகளின் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து ஆட்டிலறி மற்றும் கிபீர் தாக்குதல்களை சிறிலங்கா இனவெறி அரசு ஏவிவருகிறது. பட்டினிச்சாவைச் சந்திக்கும் நிலையில் அல்லலுறும் தமிழ் மக்களைக் குறிவைத்து, அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் மகிந்த அரசு, திட்டமிட்ட வகையில், படுகொலைகளையும் நடாத்தி வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க செல்வதற்கு முயன்ற மனித உரிமை உறுப்பினர்களையும் படுகொலை செய்ததன் மூலம், ஏனைய மனிதஉரிமை உறுப்பினர்கள் அப்பகுதிக்குச் செல்வதையும் சிறீலங்கா இனவெறி அரசு திட்டமிட்டு தடுத்து நிறுத்தியுள்ளது.

கந்தளாய், கிண்ணியா, திருகோணமலை போன்ற பகுதிகளில், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் தனியாக உரிய பராமரிப்பும் கவனிப்பும் வழங்கப்படுகிறார்கள். அதேவேளை, வேறு ஒரு கூட்டத்தினர், தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, தாக்கிக் கொல்லப்படுகிறார்கள், இது மிக அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதுடன், மிகக் கேவலமான இனத்துவேச நடவடிக்கை என, அங்கு பணியாற்றும் மனித உரிமை அமைப்பின் பணியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டார்.

தமிழ் மக்கள் கிழக்கில் செறிந்து வாழும் பல பிரதேசங்களை நோக்கி, பல நாட்களாக தொடர்ச்சியான எறிகணை, ஆட்டிலறி வீச்சும், கிபீர் குண்டுவீச்சும் நடாத்தப்படுவதால், அப்பகுதிகளில் பாரிய அழிவுகள் நேர்ந்துள்ளதுடன், ஏராளமான உயிரிழப்புக்களும் காணப்படுவதாக அந்தப் பணியாளர் மேலும் தெரிவித்தார்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூதூர் கிழக்கில் நிர்க்கதி நிலையில் 30 ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள்!தொடரும் அகோர ஷெல், விமானக் குண்டுவீச்சுகள்

பொருளாதாரத் தடை என்பவற்றால் அங்கு பேரவலம்

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்கள் மீது கடந்த சிலவாரங்களாக அரசுப் படைகள் தொடர்ச்சியாக நடத்திவரும் தாக்குதல்களால் அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து பெரும் மனித அவலம் உருவாகி யிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

வான் வழிக் குண்டு வீச்சுகள், அகோர ஷெல் தாக்குதல்கள் மற்றும் வலிந்த படை நகர்வுகளால் மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்றுப் பகுதிகளில் வீதிகள், பாலங்கள் உட்பட உட்கட்டுமானங் கள் தகர்ந்து, அழிந்து போயிருக்கின்றன. இதனால், சுமார் 30ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் உள்ளூர இடம் பெயர்ந்து அந்தரிக்கும் அவல நிலை தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களில் நடத்தப்பட்டுவரும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களால் அங்கு பெருந்தெருக் கள், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு கள் சிதைவுண்டு போயிருக்கின்றன.

புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களான மூதூர் கிழக்கு நிலப்பரப்பையும், ஈச்சிலம்பற்றை யும் தொடுக்கும் இலங்கைத் துறை முகத்துவாரம் பாலம் விமானக் குண்டுவீச்சினால் முற்றாக அழிவுற்றுள்ளது.

வீதிகள், பாலங்கள் தகர்ந்து போனதால் உள்ளூரில் பொதுமக்களுக்கான உணவு மற் றும் மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங் கும் தொண்டு நிறுவனங்களின் பணிகள் தடைப் பட்டுப் போயிருக்கின்றன.

அடிக்கடி இடப்பெயர்வு

ஏப்ரல் 25 ஆம் திகதி கொழும்பில் இராணு வத் தலைமையகத்தில் இடம்பெற்ற தற் கொலைத் தாக்குதலில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்த சம்பவத் தையடுத்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசமான மூதூர் கிழக்கு தமிழ்க் கிராமங் கள் மீது அரசபடைகள் தாக்குதல்களை ஆரம் பித்தன.

வான், கடல், தரை வழியாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களால் மூதூர் கிழக்கில் வசித்த பெரும் எண்ணிக்கையான குடும்பங் கள் வீடு வாசல்களை விட்டு இடம் பெயர்ந்து ஈச்சிலம்பற்றுப் பகுதிக்கு நகர்ந்தன.

அதன் பின்னர் தினமும் அங்கு மேற்கொள் ளப்பட்ட விமானக் குண்டுவீச்சுக்களால் ஏற் கனவே இடம் பெயர்ந்த மக்கள் அவ்வப்போது மீண்டும் உள்ளூரில் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து அவலப்பட்டனர்.

பின்னர் மாவிலாறு அணை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதும் மேலும் பல குடும்பங்கள் அங்கும் இங்குமாக இடம்பெயர நேர்ந்தது.

வான்வழிக் குண்டு வீச்சுகள், ஆட்லறி ஷெல் தாக்குதல்கள் அதன்பிறகு தீவிரமடைந் தன.

தற்காலிக தங்கும் இடங்களில் தற்சமயம் தங்கியிருக்கும் பலநூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்களுக்கு அகதிகள் புனர்வாழ்வு நிறு வனம் மூன்றுவேளை சமைத்த உணவுகளை வழங்கி வருகிறது. இந்த உணவு விநியோக மும் அங்கு கிடைக்கக் கூடிய உணவுப் பொருள்களைக் கொண்டே வழங்கப்பட்டு வருகிறது.

காட்டுப் பகுதிகளில்

பாதுகாப்புத் தேடுகின்றனர்

விடாது நடத்தப்பட்டுவரும் ஆட்லறி ஷெல் வீச்சுகளில் இருந்து தப்புவதற்காக அகதிகள் வீதிப் பகுதிகளைத் தவிர்த்து காட் டுப்புறங்களில் பாதுகாப்புத்தேடி ஒதுங்குகின்றனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர இடம்பெயர்ந்துள்ள சுமார் 30 ஆயிரம் குடும்பங்களில் கணிசமான குடும்பங் கள் காட்டுப் புறங்களில் பற்றை மறைவுக ளில் இரவு பகலாகத் தங்கியிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

இடம்பெயர்ந்து அலையும் பலநூற்றுக் கணக்கான குடும்பங்கள் ஏற்கனவே இந்தப் பகுதிகளில் அரசு விதித்திருந்த பொருளாதா ரத் தடை மேலும் இறுக்கப்பட்டிருப்பதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அங்கு செயற்படும் தொண்டு நிறுவனங்கள் கூறுகின் றன.

திருகோணமலையில் அரச மற்றும் விடு தலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங் களுக்கு இடையே சோதனைச் சாவடிகளை நிறுவியுள்ள இராணுவத்தினர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் புலிகளின் பிரதேசங்களுக்கு அத்தியாவசியப்பொருள்களையும் எரிபொருள்களையும் எடுத்துச் செல்வதற்கு தடையை அமுல் செய்து வருகின்றனர்.

திருகோணமலையில் உள்ள அரச அதி காரிகளின் உத்தரவுப்படியே இந்தத் தடைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று இராணுவத் தரப்பில் கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் கூட்டுறவுக் கடைகளிலும் பொருள் கையிருப்பு அற்றுப் போயிருப்பதாக தொண்டுநிறுவனங்கள் கூறுகின்றன. பால்மா மற்றும் பால் உணவு வகைகள் கிடைக்காததால் அங்குள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka fighting rages on after rebels end blockade By Peter Apps

TRINCOMALEE (Reuters) - Sri Lanka's Tamil Tigers said the army killed 5 civilians and injured 18 in a rocket attack on Wednesday, as the government vowed to win control of a water source at the center of the worst fighting since a 2002 truce.

Water flowed to thousands of farmers in east Sri Lanka for the first time in three weeks on Wednesday after truce monitors confirmed the Tigers had reopened a blocked, disputed sluice the previous night -- an apparent olive branch to halt the fighting.

But the government said it would not end its campaign until it controlled the sluice and a reservoir used for irrigation located in an area both sides claim as theirs. Truce monitors say the Tigers have de facto control.

"Our concern is control of the water should be under the government," said government defense spokesman Keheliya Rambukwella. "If it is under the terrorists, as and when they want they can open and close it.

"We don't want any interruption in the water, and therefore the forces are in and around and will be taking control."

Military officials said both sides continued to exchange sporadic mortar fire near the sluice. The Tigers said rockets hit a group of civilians as night fell in the eastern village of Verugal, and that Kfir fighter jets had bombed their territory.

"This is really putting the ceasefire in danger," S. Puleedevan, head of the Tigers' peace secretariat, said by telephone from the northern rebel base of Kilinochchi.

"We have clearly mentioned that this is tantamount to a declaration of war if the Sri Lankan armed forces launch official attacks," he added, saying the Tigers had no intention of giving up the sluice area.

Puleedevan accused the army of killing another five people in an ambush on an ambulance in Tiger territory late on Tuesday.

The truce monitors said the fighting must stop immediately.

THOUSANDS DISPLACED

Aid workers say more than 30,000 people have been displaced by the violence. The Tigers say tens of thousands more have been displaced in areas they control.

There are no reliable casualty figures, as many areas in the conflict zone are deemed too dangerous to enter because of landmines and booby traps, but dozens of deaths have been confirmed and aid workers fear the true number could be far higher.

Violence flared in the capital Colombo on Tuesday when suspected Tiger rebels attacked a minority Tamil politician opposed to them with a car bomb. He survived, but his bodyguard and a 3-year-old boy were killed.

Aid workers and the international community are clamoring for answers after 17 local staff from international aid group Action Contre La Faim were found shot dead in their office in the eastern town of Mutur after fierce fighting there.

Some relatives of the dead -- most of them Tamils -- are blaming troops for the killings. The Tigers and the military each accuse the other.

Action Contre La Faim on Wednesday demanded that independent international observers take part in the probe.

"In terms of international law it is a war crime," group honorary president Jean-Christophe Rufin said in Paris. "We can and must demand that the truth come out with regard to this massacre."

More than 800 people had been killed this year even before the recent fighting, in which the military says it has killed more than 150 rebels.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அநியாயமாக எமது தமிழ் உறவுகள் சாகடிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்...ஒரு பக்கம் அரசும் சிங்கள மக்குளுக்கும் தமக்கு வெற்றி கிடைத்து விட்டதாக கூவிக் கொண்டு இருக்கின்றார்கள்...அனைக்கட்ட

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுண்டல் கதைக்கின்றீர்கள்!

அணைக்கட்டைத் திறந்து விட்ட பின்பு தானே இப்படிக் குண்டு வீச்சினை இலங்கையரசு செய்கின்றது என்றால், அதன் நோக்கம் அணைக்கட்டைத் திறப்பதல்ல, தமிழ்மக்களை அழிப்பது என்ற எண்ணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது வெளியிடப்படும், செய்தியைத் தான் அவ் மக்கள் பலகாலமாகத் தெரிவித்து வந்தார்கள். பொருளாதாரத்தடை, தினமும் குண்டுவீச்சு என்று. ஆனால் அணைக்கடடு மூடப்பட்ட பின் தான் செய்தி வெளியுலகத்திற்கு வருகின்றது.

இந்தச் சிங்கள வெறியர்களின் கொடுமைக்கு, ஒட்டுமொத்த மக்களின் உணர்ச்சியான வெளிப்பாடே, பதில் கூறும். அங்கு தலைவரும், போராளிகளும் எப்படிப் போராடுகின்றார்களோ, அதே செய்தியை நாம் வெளியுலகத்திற்கு புலத்தில் இருந்து கொண்டு செல்லும் கடமை இருக்கின்றது. அதைச் செய்வோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.