Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ச்செல்வனின் மனைவியின் உறவினர் மாமனார் அல்ல– உள்வீட்டு துரோகத்தால் வெளியேற்றப்பட்டோம்"

Featured Replies

"தேர்தல் களத்தில் சுயேட்சைக்குழுவாக மகிந்தவை பலப்படுத்துவோம்"

indi_CI.jpg

 

ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்படாத தரப்புக்கள் சுயேட்சையாக தற்போது களமிறங்கியுள்ளன. அருளம்பலம் பாலசுப்பிரமணியம் என்பவரை முதன்மை வேட்பாளராகக் கொண்டு போட்டியிடும் இச்சுயேட்சைக்குழு காக்கைவன்னிய துரோகத்தினால் சுதந்திரக்கூட்டமைப்பின் பெயர்பட்டியலிலிருந்து தாம் தூக்கப்பட்டதாக தெரிவித்தது. எனினும் தாம் பூட்டு சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டு மஹிந்தவின் கரங்களை பலப்படுத்தப்போதாக யாழ்ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

வேட்பாளர் தெரிவு தொடர்பாக பலாலியில் நடைபெற்ற முதலாவது கூட்டம் முதல் அலரி மாளிகையில் நடைபெற்ற நேர்முகம் வரை நாம் பங்குபற்றியிருந்தோம். வேட்பாளர்கள் தொடர்பான பட்டியலிலும் முதலில் எமது பெயர்கள் இருந்தன. ஆனால் உள்வீட்டுத் துரோகத்தினால் நாம் ஏமாற்றப்பட்டு வெளியே விடப்பட்டோமெனவும் தெரிவித்தனர்.

யுத்தத்தினாலும் இடப்பெயர்வினாலும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நாம் உதவி வருகின்றோம். எனினும் அவை தேர்தல் நோக்கமாக கொண்டதல்ல. இந்நிலையில் எமது தேவைகளை குறிப்பாக இளம் சமூகத்தை நோக்கமாக கொண்டு முன்னெடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்த முதன்மை வேட்பாளர் அருளம்பலம் பாலசுப்பிரமணியம் தேர்தல் பணிகளில் தலையிடாதவாறு படைத்தரப்பின் உதவிகளை அவ்விவகாரங்களிற்கு பெறப்போவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே மாகாணசபையினது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் என்பது பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படுவது. மாகாண சபையென்பது அரசியல் நோக்கங்களிற்கானதென தெரிவித்த அவர் சில ஊடகங்களில் விடுதலைப்புலிகளது அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ் செல்வனது மாமனாரென வெளியிடப்பட்டது தவறானது உள்நோக்கம் கொண்டதென தெரிவித்தார். தமிழ் செல்வனது மனைவி தமது உறவினர் என்பதை ஏற்றுக்கொண்ட அவர் ஆனால் மாமனாரென அடையாளப்படுத்துவது திரிபு படுத்தப்பட்டதென தெரிவித்தார். விடுதலைப்புலிகள் போராளிகள் அனைவருமே எம் பிள்ளைகளே. அவர்கள் சிந்திய இரத்தம் மண்ணில் காயவில்லை. தமிழ் மக்களிற்கு அனைத்துப் போராளிகளுமே சொந்தமென அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பத்திரிகையாளர் மாநாட்டில் இப்பட்டியலில் போட்டியிடும் சர்மா உள்ளிட்ட பலரும் பங்கெடுத்திருந்தனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

1) போராளிகள் அனைவரும் எமது பிள்ளைகளே..

2) மகிந்தவின் கரத்தை வலுப்படுத்துவோம்..

ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது..

தயான் ஜெயதிலகா, ரஜீவ விக்கிரசிங்கா மாதிரி அரசியல் விள்ங்கியவர்களும், இந்தகோமாளிக்குட்டி, மணல் குத்தி வரைக்கும் மகிந்தா அல்ல, மற்ற்வர்கள் தான் என்கிறார்கள். இது அரச குடும்பத்தை காப்பாற்ற சிங்கள துவேசத்தையும், பணத்தையும் முறையாகப் பயன்படுத்தி கட்டியெழுப்பியிருக்கும் காவல் கோட்டை, பாதுகாப்பு அரன், 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.