Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேதாஜி பற்றிய ஆச்சரிய தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நேதாஜி பற்றிய ஆச்சரிய தகவல்
 
 
 
 
நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
 
''நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?''
 
''ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது. தைவான் நாட்டு அரசும், ''தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை'' என்று கூறிவிட்டது. ஜப்பான் அரசும், ''சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரிலோ இச்சிரோ உக்குடா (நேதாஜிக்கு சூட்டிய புனைபெயர்) என்ற பெயரிலோ எவரும் இறந்து சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை'' என்று தெரிவித்துவிட்டது. 'நேதாஜியினுடையது' என்று ஜப்பானிய கோயில் ஒன்றில் வைக்கப்பட்ட அந்தச் சாம்பல் மற்றும் எலும்புகளை டி.என்.ஏ பரிசோதனை நடத்தவிடாமல் இந்திய அரசுதடுத்துக் குழப்பியது உலகுக்கே தெரியும். இறுதியாக, முகர்ஜி கமிஷனும்ஆகஸ்ட் 18, 1945-ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்றுஅரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தவித காரணமும் கூறாமல், தானே நியமித்த முகர்ஜி கமிஷன் அறிக்கையை ஏற்க முடியாது என்று இந்திய அரசு நிராகரித்ததுதான்'' என்கிற தேவபிரதா பிஸ்வாஸ்,“நேதாஜி தொடர்பான ஏராளமான ஆவணங்களை பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம்  மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகிய மூன்றும் சேர்ந்து அழித்து ஒழித்துவிட்டன. இதை நீதிபதி முகர்ஜி கமிஷனே சுட்டிக்காட்டி உள்ளது என்றார்.“எல்லா ஆதாரமும் அழிந்து விட்டதா? என்று கேட்டோம். இல்லை, சுமார் 800ஃபைல்கள் 'ரகசிய ஃபைல்கள்' என்று முத்திரை குத்தப்பட்டு மத்திய அரசிடம்உள்ளன. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே ரகசியஃபைல்களாக வைத்திருந்து, பின்னர் ஆய்வாளர்களுக்காக 'பொது ஆவணமாக' அறிவிப்பார்கள்.
 
இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால், இந்த 800 ஃபைல்களையும் நிரந்தரமாக ரகசிய ஃபைல்களாக இந்திய அரசு வைத்துள்ளது. இது பகிரங்கப் படுத்தப்பட்டால் நேதாஜிக்கு நேர்ந்தது என்ன என்பதை உலகம் அறிந்து கொள்ளும்” என்கிறார்.
 
''இதை யாரும் பார்க்க முடியாதா என்ன?''
 
“எனக்குக் காட்டி னார்கள். ஆனால், அதைப்பற்றிப்பேசவோ, மேற்கோள் காட் டவோ கூடாது'' என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள்'' என்கிறார் பரூண்
முகர்ஜி.
 
''நேதாஜி உயிருடன் இருந்தார் என நீங்கள் சொல்லி வந்தீர்கள்? அரசு இறந்து
விட்டதாகத்தானே கூறி வந்தது?'' என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பிஸ்வாஸ்,
 
''மறைந்த பிறகு, நாட்டின் உயர் தலைவர்களை கௌரவிக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு நேதாஜிக்கு அளித்தது. அது பற்றி உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை எழுந்தபோது, அங்கே நேதாஜி இறந்ததை நிருபிக்கமுடியவில்லை. எனவே, மத்திய அரசு பின்வாங்கிக்கொண்டது. அதுமட்டுமல்ல. கொடுத்த பாரத ரத்னாவையே திரும்பப் பெற்று ஜகா வாங்கியது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், ஆகஸ்ட் 18,- 1945-ம் ஆண்டு, விமான விபத்தில் நேதாஜி கொல்லப்பட்டதாக ஜப்பானியர் உதவியுடன் கட்டுக்கதை சொல்லப்பட்டது. நேதாஜியைப் பின் தொடரும் நேச நாட்டுப் படைகளிடம் இருந்து அவரைக் காப்பாற்றவே இக்கதை புனையப்பட்டிருக்கலாம். அதேசமயம், சோவியத் யூனியனுக்குள் நேதாஜி நழுவிச் சென்றிருக்கக்கூடும்' என்றும் சொல்லப்பட்டது.
 
ஆனால், 'பைசியாபாத் நகரில் வாழ்ந்து வந்த ஒரு துறவிதான் நேதாஜி' என்கிற
கிசுகிசு கிளம்பியபோது நிலைமையே தலைகீழாக மாறியது. 'கும்நாமி பாபா'
என்பதுதான் அந்தத் துறவியின் பெயர். அவர், மிகமிக மர்ம யோகியாக வாழ்ந்து வந்தார். திரைக்குப் பின்னிருந்தே மக்களைச் சந்தித்தார். வெளியே எங்கும் தலைகாட்ட மாட்டார். அவர் மறைந்தபோது, நேதாஜி மறைந்துவிட்டார் என்ற செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக, 'அவருடைய உடைமைகளை சீல் வைத்து, பைசியாபாத் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு' உத்திரப்பிரதேச நீதிமன்றம் ஆணையிட்டது. பிறகு, டிசம்பர் 22, 2001-ல்தான் முகர்ஜி கமிஷனுக்காக அந்த சீல் உடைக்கப்பட்டது.
 
பகவான்ஜி ஒரு வங்காளி. ஆனால், ஆங்கிலம், இந்துஸ்தானி, சமஸ்கிருதம்,
ஜெர்மன் ஆகிய மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார். நேதாஜி அணிவது போலவே வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். தங்க வாட்சும்
அணிந்திருந்தார். 1945-ல் நேதாஜி மறைந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவரது மூக்குக் கண்ணாடியோ, தங்க வாட்சோ அகப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
 
பகவான்ஜி, பார்ப்பதற்கு நேதாஜி போலவே
 
இருப்பார். நேதாஜி போலவே பேசுவார். அந்த வயதில், அவரது உயரமும் தோற்றமும் நேதாஜியை வெகுவாக ஒத்திருந்தது. பல் இடுக்கும், வயிற்றின் கீழே இருந்த தழும்பும்கூட ஒத்திருந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்கள் அந்தத் துறவி வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. நேதாஜியின் பெற்றோரின் அரிய புகைப்படங்கள் மட்டுமல்ல, அவருடைய தந்தையார் பயன்படுத்திய குடையும் அங்கிருந்தது. இந்தத் துறவியின் சீடர்களாக இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்ட டாக்டர் பவித்ரா மோகன் ராய், லீலா ராய், சுனில் தாஸ், திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகிய நேதாஜியின் நெருங்கிய கூட்டாளிகள் இருந்தனர். நேதாஜி மரணம் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு கடந்த 2002-ம் ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், இருவருடைய எழுத்தும் நடையும் ஒரே மாதிரி இருந்ததாக குறிப்பிட்டிருந்தது.
 
ஓவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23-ல்தான் பகவான்ஜியின் பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டு மானால், பவித்ரா மோகன்ராய் உள்ளிட்ட நெருங்கிய கூட்டாளிகளே கொண்டாடினார்கள். 1971-ம் ஆண்டு, நேதாஜியின் மூத்த சகோதரர் சுரேஷ் போஸுக்கு நேதாஜி மரணம் குறித்து இரண்டாவதாக அமைக்கப்பட்ட கோஸ்லா கமிஷன் விடுத்த சம்மனின் ஒரிஜினல்கூட பகவான்ஜியின் உடைமைகளுடன் இருந்தது. 1985-ல் துறவியார் மறைந்தபோது, கல்கத்தாவில் இருந்த டாக்டர் பவித்ரா மோகன் ராய், 'நான்
மட்டும் வாய் திறந்தால் நாடே பற்றி எரியும்' என்று சொல்லியிருக்கிறார்.
இன்றைக்கு நேதாஜி உயிருடன் இல்லை. ஆனால், நான்தான் நேதாஜி என்று பலபேர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எனவே, அதைப் பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. 1945, ஆகஸ்ட் 18-ல் நேதாஜி இறக்கவில்லை என்பது மட்டும் உறுதி'' என்கிறார்.
 
'நேதாஜி ரஷ்யா சென்றதாக சொல்கிறார்களே! அந்த மர்மமும் விலகவில்லையே?''
 
''இதுதான் மிக முக்கியமான விஷயம். அந்த நேரத்தில் வியட்நாம் விடுதலை
பெற்றிருந்தது. வியட்நாம் அதிபர் ஹோசிமின்னுக்கும், நேதாஜிக்கும்
நெருங்கிய நட்பு இருந்ததால் அவர்தான் நேதாஜியை பாதுகாத்திருக்க வேண்டும்.
 
அதுதான் உண்மையும்கூட.'' என்கிறவர்,
 
''நேதாஜி வரலாறு மட்டுமல்ல. இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவத்தின் வீரம் செறிந்த வரலாற்றைக்கூட இந்திய அரசு வெளியிடவில்லை.
 
சுதந்திரப்போரின் உண்மை வரலாற்றை வெளியிட, இந்திய அரசு ஏன் மறுத்து
வருகிறது என்பது புரியவில்லை. நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய சுதந்திர வரலாற்றை எழுத 'இராதா வினோத்பால்' என்ற அறிஞரை கேட்டுக்கொண்டது. அவரும் வரலாற்றின் கையெழுத்துப்படியை நேரு அரசிடம் ஒப்படைத்தார். அதுவும் புத்தகமாகி வெளியே வரவில்லை. அப்படி வந்தால், பல உண்மைகள் வெளிப்படும்'' அழுத்தமாகச் சொல்கிறார் தேவப்பிரதா பிஸ்வாஸ்.
 
நன்றி: சூரியகதிர் நாளிதழ்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சுதந்திரப் போரில், சுபாஸ் சந்திரபோஸின் பங்கு அளப்பரியது! அவர் மூலம் இந்தியா சுதந்திரம் பெற்றிருந்தால், அது உண்மையான போராடிப் பெற்ற சுதந்திரமாக இருந்திருக்கும்! இந்தியாவும், உண்மையான சுதந்திர இந்தியாவாகப் பரிணமித்திருக்கும்!

 

எப்படியும் வெளியேற வேண்டிய பிரித்தானியாவுக்கு, அவர்கள் மரியாதையுடன் வெளியேறும் வகையில், வழி சமைத்துக்கொடுத்ததுடன், சுதந்திரம் பெற்றுகொடுத்த பெருமையையும் காந்தி பெற்றுக்கொண்டார்!

 

சுபாஸ் சந்திரபோஸ் வழியில் போயிருந்தால் முஸ்லிம்களும், இந்துக்களும் இணைந்த இந்தியாவாக, போராடிப் பெற்ற சுதந்திர இந்தியா இருந்திருக்கும்! இந்திய விடுதலை த்தீயை ஏற்றியதிலும், அதை அணையாமல் வைத்திருந்ததிலும், இந்தச் செயல் வீரனின் பங்கு அளப்பரியது என்பதை யாரும் மறுக்கமுடியாது என்பதே உண்மையாகும்!

 

இணைப்புக்கு நன்றிகள், நுணா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !
 
 
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?
அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?
 
சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .
சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார் .
 
முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து . வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் . பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார் . ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது .
 
தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள்
சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் . அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது . தமிழர்கள் சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள் .
 
அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர . இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள் .
 
சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள் . சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது . வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார் .
 
சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார் . ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் . எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர் .
 
தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் . நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் . இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் . என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது . இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .
 
அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது . நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் . அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் . ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .
 
ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது . சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள் . அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் . வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது .
 
சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் .
ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .
 
அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார் .
 
காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் . அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள் . ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார் . அதன் பிறகு
ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது
வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது .
 
 
ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக . அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .
 
வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம் என்று சொன்னார்கள் . காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான் .
 
ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் . அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக .
 
இந்தியர்களே தமிழர்களே நன்றி மறப்பது நன்றன்று.. எனவே இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கம் இந்நாளில் அந்த வீரனை நினைவு கொள்வோம்...
 

ஊழல் நிறைந்த, மனித நாகரிகம் தெரியாத இந்தியாவிற்கு அடித்தளமிட்ட காங்கிரஸ் கட்சியை வளர்த்துவிட்ட பெருமை காந்திக்கு உண்டு.

சுபாஷ் சந்திரபோசை தந்திரமாக ஒதுக்கியதில் காந்தியின் பங்கு பெரியது.

அது இன்று உலகின் கேவலமான நாடு என்ற பெயரை பெறுமளவுக்கு சென்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

காந்திகூட காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடச் சொன்னார்.. அந்தக்கட்சிக் கொடியின் நடுவில் ராட்டைச் சின்னம் இருக்கும்..

அரசியல் காரணங்களுக்காக கட்சியைக் கலைக்காதது மட்டுமல்ல.. ராட்டைச் சின்னத்தை எடுத்துவிட்டு அசோகச் சின்னத்தை வைத்துவிட்டார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்
-----------------------------------------------------------------------------

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:-

ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான்.

http://eththanam.blogspot.ca/2012/10/blog-post_6.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நுணாவிலான்!

 

பகத் சிங், தூக்கிலடப்பட்ட போதும் கூட, காந்தி வாயே திறக்கவில்லை!

 

அந்தத் தூக்கித் தடுத்து நிறுத்தும் வல்லமை, அப்போது காந்தியிடம் இருந்தது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களிலேயே பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகம் செயல்பட்டவர் என்றும் அவருடைய ஆட்சிக் காலம்தான் இந்தியாவின் முழு முகத்தையும் மாற்றி இருக்கிறது என்றும் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா? உண்மை!
சிங் செயல்பாடற்ற ஒரு பிரதமர் என்பது உண்மையில் அறியாமை. கல்வி, சுகாதாரம், தொழில், கனிம வளங்கள், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அணுசக்தி, வெளியுறவு என எல்லாத் துறைகளிலும் கால் பதித்து இருக்கிறார் சிங். சுதந்திர இந்தியாவின் வரலாற்றை சிங்குக்கு முன்… சிங்குக்குப் பின் என்றுகூடப் பிரிக்கலாம். ஆனால், அவருடைய எல்லா முயற்சிகளும் இந்த நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையை அடித்து நொறுக்கி இருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.
சிங்கின் ஆட்சி முதலில் இந்த நாட்டைப் பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று இரண்டு தேசமாகப் பிளந்தது. பிறகு, அது மெள்ள மெள்ள சரியத் தொடங்கியது. இந்தியா இப்போது சரிந்துகொண்டு இருக்கும் தேசம்… ஒரு சீட்டுக்கட்டு மாளிகையைப் போல அது சரிகிறது… அதன் பொருளாதாரம், கூட்டாட்சித் தத்துவம், சர்வதேச உறவுகள், பாதுகாப்பு எனச் சகல கட்டுமானங்களும் சிதறுகின்றன!

அடிவாங்கிய அஸ்திவாரம்!

பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ”நாட்டின் வளர்ச்சியைக் கல்வியில் இருந்து தொடங்கி இருக்கிறோம். அனைவருக்குமான வளர்ச்சியின் அஸ்திவாரம் அதுதான்” என்றார் சிங். நாடு முழுவதும் 1964-ல் ஆய்வுசெய்த கோத்தாரி ஆணையம், இந்தியா கல்வித் துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்றால், அதற்கு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ஆறு சதவிகிதத் தொகையைக் கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டும் என்றது. ஆனால், தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசுகள் அதில் பாதி அளவை ஒதுக்கீடு செய்யவே யோசித்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றபோது, கல்வித் துறையின் தேவை 16 சதவிகித ஒதுக்கீட்டைக் கோரியது. நிச்சயம் இனிமேலாவது ஆறு சதவிகித ஒதுக்கீடு செய்வோம் என்றார் சிங். ஆனால், அவரது வார்த்தைகள் அவருடைய காதுகளுக்கே கேட்காமல்போயின. விளைவு, அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி! உலகில் கல்விக்குக் குறைந்த அளவே ஒதுக்கும் நாடுகள் தொடர்பான ‘யுனெஸ்கோ’வின் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறது இந்தியா. ஆனால், சிங் பொறுப்«பற்றதற்குப் பிறகான இந்த எட்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 18.84 சதவிகிதத்தில் இருந்து 26.09 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக, மணிப்பூர் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மூன்றில் இரு பள்ளிகள் என்ற அளவுக்குத் தனியார் ஆதிக்கம் பள்ளிக் கல்வியில் ஓங்கி இருக்கிறது.
கல்வித் தரத்திலும் இந்தியா ஜொலிக்கவில்லை. சர்வதேச அளவிலான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்ற அமைப்பு (ஓ.இ.சி.டி.) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு இந்தியக் கல்வித் துறைக்குக் கிடைத்த மிகப் பெரிய அடி. 15 வயதுக்கு உட்பட்ட இந்திய மாணவர்கள் பாடங்களை வாசிப்பதிலும் அறிவியல் பாடங்களி லும் கடைசி வரிசையில் இருப்பதை அந்த அமைப்பு நடத்திய சர்வதேச அளவிலான தேர்வு முடிவுகள் கூறின. அரசு சாரா நிறுவ னமான ‘பரதம்’ அமைப்பின் ஆய்வறிக்கையோ (அசெர்) இந்தியாவில் பெரும் பான்மையான ஐந்தாம் வகுப்பு மாணவர் களால் இரண்டாம் வகுப்புப் பாடங்களையே படிக்க முடியவில்லை என்கிறது.
பெண் கல்வியில் ஆப்பிரிக்கா நீங்கலாக ஆஃப்கன், பூடான், பாகிஸ்தான், பபுவா நியு கினியா ஆகிய ஐந்து நாடுகள்தான் இந்தியாவைவிடக் கீழ் நிலையில் இருக்கின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வி உரிமைச் சட்டம் என அரசின் எந்த நடவடிக்கையாலும் ஆரம்பக் கல்வியை மீட்டெடுக்க முடியவில்லை. உயர் கல்வியோ முழுக்க முழுக்கத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது!

சுகாதாரத்தைப் பீடித்த நோய்!

ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளை எடுத்துக்கொண்டால், இந்தியா உலகிலேயே அடிமட்ட நிலையில் இருக்கிறது. சிசு மரணத்தை எடுத்துக்கொண்டால், உலகில் ஆஃப்கன், கம்போடியா, மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மோசமான நிலையில் இந்தியாதான் இருக்கிறது. தொற்றா நோய்கள் எனப்படும் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் போன்றவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பத்தில் எட்டு மரணங்களுக்குக் காரணம். சுகாதாரத்துக்கு அரசு கிட்டத்தட்ட 600 மடங்கு தன்னுடைய ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டிய சூழல். ஆனால், அரசோ ஏற்கெனவே உள்ள அரசு மருத்துவமனைக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக தனியாரை ஊக்குவிக்கும் மருத்துவக் காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. சிங் ஆட்சியின் இந்த எட்டு ஆண்டு காலகட்டத்தில் மட்டும் வசதியின்மையால் சிகிச்சை பெற முடியாதவர் களின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 10 கோடியில் இருந்து 21 கோடியாகவும் கிராமப்புறங்களில் 15 கோடியில் இருந்து 24 கோடியாகவும் அதிகரித்து உள்ளது. 71 சதவிகிதம் பேர் தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்பட்டனர். உலக சுகாதார நிறுவனம், 70 சதவிகித இந்தியர்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை மருந்துக்காகச் செலவழிக்கும் நிலையை மாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுகாதாரத்துக்கு என 2.5 சதவிகிதம் தொகையை ஒதுக்கீடு செய்வோம் என்று கூறியது. ஆனால், இப்போது அதையும் 1.4 சதவிகிதமாக்கும் முயற்சியில் இருக்கிறது. பொது சுகாதாரத்துக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதற்கு 2010-ல் மட்டும் மலேரியாவுக்கு 46,800 இந்தியர்கள் பலியானது ஒரு சின்ன உதாரணம்!

காத்திருக்கும் வெடிகுண்டு!

உலகின் மிகப் பெரிய ஆயுத இறக்குமதி யாளராக இந்தியா உருவெடுத்தது சிங் ஆட்சிக் காலத்தில்தான். 2007-2011-க்கு இடையே உலகில் நடந்த ஆயுத ஏற்றுமதி யில் 10 சதவிகிதம் இந்தியாவின் பங்கு. ஆனால், ”ஒரு போர் வெடித்தால் இரண்டு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க வெடி பொருட்கள் நம்மிடத்தில் இல்லை” என்று நம் பாதுகாப்பு அமைப்பின் லட்சணத்தை நாட்டின் தரைப் படைத் தளபதியே போட்டு உடைத்ததும் சிங் ஆட்சிக் காலத்தில்தான். இந்தியாவின் மீது கிட்டத்தட்ட ஓர் அறிவிக்கப்படாத போர்த் தாக்குதலாக மும்பைத் தாக்குதல் நடந்தது. கடல் வழியே நடந்த அந்தத் தாக்குதலுக்குப் பிறகும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதை அடுத்த சில மாதங்களிலேயே பாதுகாப்புப் படையினர் யாருக்கும் தெரியாமல் வர்கோவில் தரை தட்டி நின்ற 1,000 டன் கப்பல் ‘எம்.வி.பாவிட்’ அம்பலமாக்கியது. பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்தியாவின் அதிபயங்கரக் குற்றவாளிகள் என்று பாகிஸ்தான் அரசுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பிய 50 பேர் பட்டியலில் மும்பை, தானேயில் வசிக்கும் உள்ளூர் வியாபாரியான வஜுல் கமர்கான் பெயர் இருந்ததைப் பார்த்து சர்வதேச உளவுத் துறைகள் நக்கல் அடித்தன. காமன்வெல்த் போட்டிகளின்போது நேரு மைதானத்துக் குள் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தைக் கடத்திச் சென்று ஆஸ்திரேலியத் தனியார் தொலைக்காட்சி படம் காட்டியபோது, நம்முடைய பாதுகாப்பு அமைப்புகளைப் பார்த்து உலகமே சிரித்தது!

அணு சக்தித் துறையில் சர்வதேசத்தின் போக்கை ஃபுகுஷிமாவுக்கு முன் – ஃபுகுஷி மாவுக்குப் பின் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஆக்கபூர்வ அணு சக்தி என் பதும் அணு சக்திப் பாதுகாப்பு என்பதும் வடிகட்டிய பொய் வாதங்கள் என்பதை நிரூபித்த இடம் ஃபுகுஷிமா. அணு சக்தி மின்சார உற்பத்தியில் உலகுக்கே முன்னோ டியாக இருந்த ஜப்பான், ஃபுகுஷிமாவுக்குப் பின் தன்னுடைய நாட்டில் உள்ள அத்தனை உலைகளையும் மூடியது. அணு சக்தி வேண்டுமா, வேண்டாமா என்று இத்தாலி நடத்திய பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி, அணு சக்திக்கு எதிரான முடிவை இத்தாலி எடுத்தது. ஜெர்மனி தன்னுடைய நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளையும் 2022-க்குள் மூடப்போவதாக அறிவித்தது. தன்னுடைய முதலாவது ஆட்சிக் காலத்தில் இந்திய அணு சக்தித் துறையைப் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிட்ட சிங்கின் அரசோ, ஃபுகுஷிமாவுக்குப் பிறகுதான் அணு சக்தித் துறையை வெறித்தனமாக உசுப்பிவிட ஆரம்பித்தது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அடித்தட்டு மக்களின் பெருந்திரள் அறவழிப் போராட்டத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக தேசத் துரோக வழக்குகளைப் பதிவுசெய்தது, இந்த அரசின் குரூர முகத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று. கொடுமை என்ன என்றால், அணு சக்தி நாடுகளில், பாதுகாப்பான கட்டமைப்புக்கான தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 32 நாடுகளில், இந்தியா இருப்பது 28-வது இடத்தில்!

வீங்கும் பொருளாதாரம்!

சிங் பொருளாதாரத்தில் பெரிய நிபுணராக இருக்கலாம். ஆனால், அவருடைய அரசுக்கு மரண அடி விழுந்திருப்பதே பொருளாதாரத் துறையில்தான். சர்வதேச அளவிலான பொருளாதாரத் தர மதிப்பீட்டு நிறுவனமான ‘ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’, இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் ‘நிலைத்த தன்மை’ என்ற நிலையில் இருந்து ‘எதிர்மறைத் தன்மை’ என்ற நிலைக்குப் போகிறது என்று கடந்த ஏப்ரல் மாதம் எச்சரிக்கை விடுத்தது. இந்த வாரம் ‘ஃபிட்ச்’ நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இப்படி எச்சரிக்கைக்கு உள்ளாகும் நாடுகள் எல்லாம் படிப்படியாகப் பொருளாதார மந்தநிலையை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த மதிப்பீடுகள் எல்லாம் இந்தியாவில் செல்லாது என்றார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஆனால், மத்தியப் புள்ளியியல் நிறுவனம் தந்துள்ள தகவல்களின்படி பார்த்தாலே, இந்த ஆண்டு நாட்டின் மொத்த வளர்ச்சி 6.5 சதவிகிதமாகத்தான் இருக்கும். கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வெறும் 5.3 சதவிகிதம்தான். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மிகக் குறைந்தபட்ச அளவு இது. அதாவது, தாங்கள் பொறுப்பேற்பதற்கு முன் இருந்த காலகட்டத்துக்குப் பொருளாதாரத்தைத் தள்ளி இருக்கின்றனர் சிங்கும் அவருடைய சகாக்களும்.

விலைவாசி, பணப்புழக்கம், பணவீக்கம் என்ற கணக்கை எல்லாம் விடுங்கள். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது ஒரு டீயின் விலை 2. இன்றைக்கு 6. மூன்று மடங்கு உயர்ந்து இருக்கிறது. சென்னை நகரில் கடந்த ஆண்டு 4,000 வாடகைக்குக் கிடைத்த 300 சதுர அடி வீட்டின் இன்றைய வாடகை 6,000. நம்முடைய வருமானம் எத்தனை மடங்கு உயர்ந்து இருக்கிறது?

உலகிலேயே பெட்ரோலியப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஒரு நாடு, அதுவும் தன்னுடைய பெட்ரோலி யத் தேவையில் 70 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கும் நாடு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் சூழலில் என்ன செய்ய வேண்டும்? நகைமுரணாக, இப்படி ஒரு காலகட்டத்தில்தான் இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்தது. பெட்ரோல் விற்கும் இரான்கூட ரேஷன் முறையைக் கொண்டுவந்தது. ஆனால், பொருளாதாரச் சூரர் சிங்கின் அரசு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதேபோல, விலைவாசி உயர்வைத் தடுக்க ஊகபேர வணிகத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்ற கோரிக்கைக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவி சாய்க்கவில்லை.

இந்திய விவசாயிகள் கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு இடம்பெயர்தல் என்பது காலம்காலமாகத் தொடரும் சாபக்கேடு. ஆனால், விவசாயிகளை மாநிலங்களுக்கு இடையே அகதிகளாக இடம்பெயரவைத்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கே உரிய தனித்துவ சாதனை. இன்றைக்கு உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மணிப்பூர், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையையும் பெங்களூரையும் திருவனந்தபுரத்தையும் நோக்கிப் படையெடுக்கிறார்கள் என்றால், என்ன காரணம்?

ஓர் இந்திய விவசாயி கடனாளியாகப் பிறக் கிறான், கடனாளியாகவே வாழ்கிறான், கடனாளி யாகவே சாகிறான். அலங்கார வாக்கியம் அல்ல இது. அரசின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு சொல்லும் உண்மை. நாட்டின் இரண்டு விவசாயிகளில் ஒருவர் கடனாளியாக இருக்கிறார். இன்னொருவர் கடன் வாங்கும் நிலையில் இருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயியின் உயிர் இந்த மண்ணைவிட்டுப் பிரிகிறது. உலகிலேயே மிகப் பெரிய தற்கொலைப் பிரதேசம்… மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலா வது ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் ௹ 60,000 கோடிக் கடன்களை ரத்துசெய்ததை வரலாற்றுச் சாதனையாகச் சொல்லிக்கொண்டார் சிங். ஆனால், அதே அரசு பெருநிறுவனங்களுக்கு மானியமாகவும் வரிச் சலுகையாகவும் கடந்த ஆண்டு மட்டும் வாரி வழங்கியது ௹ 4.87 லட்சம் கோடி. வறுமை ஒழிப்புக்காக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அளிக்கப்பட்ட மொத்த மானியத்துக்குச் சமமானது இது.
நாட்டுக்கு சிங் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கை நம்மை எவ்வளவு சுருட்டி இருக்கிறது என்பதை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி எளிமையாகச் சொல்லிவிடும். 1991-ல் ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21. இப்போது 57.00.

சர்வம் ஊழல்மயம்!

ஞாபகம் இருக்கிறதா? சிங் அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் காப்பாற்ற ஆளும் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக பா.ஜ.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிய காட்சி! இந்தியர்களுக்கு கோடி என்ற வார்த்தையின் போதாமையை உணர்த்திய ஆட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ௹ 1,76,379,00,00,000 முறைகேடு நடந்து இருக்கிறது என்ற செய்தி வெளியானபோது, பெரும்பான்மை இந்தியர் கள் அதை எப்படிப் படிப்பது என்றுதடுமாறிப் போனார்கள். ஏதோ… அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள்தான் ஊழல் செய்வார் கள் என்று இருந்த சூழலை உடைத்து எறிந்ததும் இந்த அரசின் சாதனைதான். சிங்கின் ஆட்சியில் ஊழல் நடக்காத, ஊழலில் ஈடுபடாத அரசுத் துறையினரே இல்லை. ”ராணுவக் கொள்முதலில் நடக் கும் ஊழலுக்கு ஒத்துழைக்க எனக்கே லஞ்சம் கொடுக்க முயன்றார்கள்!” என்றார் நாட்டின் தரைப் படைத் தளபதி யாக இருந்த வி.கே.சிங். முன்னாள்தளபதி ஜெனரல் கபூர் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பலர், ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேட்டிலும் நில ஒதுக்கீடு முறைகேடு களிலும் சிக்கினர். நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் முறைகேடு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சுதந்திர இந்தியாவின் முதல் பதவி நீக்க விசார ணையை நாடாளு மன்றத்தில் நீதிபதி சௌமித்ர சென் எதிர்கொண்டார். சுரங்கக் கொள்ளையர்கள் ரெட்டி சகோதரர்கள் மீதான வழக்குகளில் ஜனார்த்தன ரெட்டியை விடுவிக்க, 5 கோடி லஞ்சம் வாங்கிய ஆந்திர மாநில சி.பி.ஐ. நீதிபதி பட்டாபி ராமராவ் கைது செய்யப்பட்டார். பிரதமரின் கட்டுப் பாட்டில் இயங்கும் நாட்டின் அறிவியல் தலைமையகமான ‘இஸ்ரோ’ 4.5 லட்சம் கோடி அலைக்கற்றை முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானபோது, தேசமே அதிர்ந்தது. சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதற்குப் போட்டியாக, காமன்வெல்த் போட்டிகளை 40 ஆயிரம் கோடிகளைச் செலவிட்டு நடத்தினார் சிங். ஆனால், அது இந்தியாவுக்குப் புகழ் சேர்க்கவில்லை. சுரேஷ் கல்மாடி மூலம் இந்தியாவின் ஊழல் முகம் சர்வதேச அளவில் வெளிப்படத்தான் வழிவகுத்தது. கட்டிய பூச்சு காய்வதற்குள் நேரு மைதானம் முன் அமைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள டிரெட் மில் இயந்திரங்கள் ஒன்பது லட்ச ரூபாய் வாடகைக்கு எடுக்கப்பட்டதும் யாராலும் மறக்க முடியாத சம்பவங்கள். இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் 10 லட்சம் கோடி முறைகேடு இந்தியப் பிரதமரின் காலைப் பாம்பாகச் சுற்றிக்கொண்டு நிற்கிறது. இவ்வளவுக்குப் பிறகும், ‘திருவாளர் பரிசுத்தம்’ தோற்றத்தோடு சிங் உலவிக்கொண்டு இருப்பதுதான் அவருடைய சாதனைகளின் உச்சம்!

கறுப்புப் பூதம்!

ரேஷன் கடைக்கு 12.37-க்குக் கொடுக்கப் படும் மண்ணெண்ணெய், வெளிச் சந்தையில் 40-க்கு விற்கப்படுவது யாரால்? இந்திய ஆறுகளின் மடி வறளும் அளவுக்கு மணல் கொள்ளை அடிக்கப்படுவது யாரால்? இந்திய ரியல் எஸ்டேட் துறை யாருடைய கண் அசை வில் இயங்குகிறது? கள்ளச் சந்தை, சூதாட்டம், கடத்தல், ஹவாலா… அட, நாட்டின் பொருளாதாரக் கேந்திரமான மும்பை யார் கையில் இருக்கிறது? நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு மாஃபியாக்கள் கையில் போனது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கியமான சாதனைகளில் ஒன்று.

உலகிலேயே தரமான இரும்புத் தாது கிடைக்கும் பெல்லாரியை உலகமே பார்க்க… ரெட்டி சகோதரர்கள் சுரண்டித் தின்கிறார்கள். ஒரு காலத்தில் ஓட்டு போடச் சென்றாலே, போலீஸார் போட்டுத்தள்ளிவிடுவார்களோ என்று பயந்து பதுங்கிக்கிடந்த அருண் காவ்லி மகாராஷ்டிரத்தின் சட்டப்பேரவை உறுப்பின ராகப் பவனிவந்தார். ஜார்கண்டில் மட்டும் ஆண்டுக்கு 7 லட்சம் டன் நிலக்கரி சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. சுரங்கக் கொள்ளையில் தரகு பார்த்தே உலகெங்கும் உள்ள வங்கிகளில் 1,800 வங்கிக் கணக்குகளை மதுகோடா தொடங்கினார். அரசின் எதிர் வினை என்ன?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஒரு வரலாற்று வாய்ப்பைக் காலம் கொடுத்தது. இந்தியர்களின் பணம் 22.5 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதை அமெரிக்கா வைச் சேர்ந்த பொருளாதார அமைப்பு ஒன்று பட்டியலிட்டது. இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட சரி பாதித் தொகை இது. சிங்கும் பிரணாப்பும் சிதம்பர மும் நினைத்திருந்தால், கறுப்புப் புள்ளிகளைக் கட்டம் கட்டி அவர்கள் மூலமாகவே இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியும். ஆனால், இந்த விவரங்கள் வெளியானதையே அரசு ஒரு சங்கடமாகக் கருதியது.
கடந்த 2008-ல் ஜெர்மனி அரசு 50 இந்தியர் களைப் பற்றிய விவரங்களை இந்திய அரசிடம் கொடுத்தது. எல்லாம் கறுப்புப் புள்ளிகள். அரசு அலட்டிக்கொள்ளவே இல்லை. ”அந்தப் பட்டியலில் இருக்கும் விவரங்களை வெளியிடு வதில் அரசுக்கு என்ன சிரமம்?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசோ, சர்வதேச உடன்படிக்கைகளைக் காரணம் காட்டி சப்பைக் கட்டு கட்டியது.

2011-ல் சுவிஸ் வங்கி ஒன்றின் முன்னாள் ஊழியர் ஒருவர் கறுப்புப் புள்ளிகள் 2,000 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை ‘விக்கிலீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சேவிடம் அளித்தார். இதற்குப் பின், ‘சுவிஸ் வங்கிகளில் அதிகம் பணம் போட்டிருப்பவர்கள் இந்தியர்கள்தான்” என்று அசாஞ்சே சொன்னார். இந்தக் கறுப்புப் பணத்தில் கணிசமான பகுதி சட்ட விரோதமான முறையில் அந்நிய மூலதனமாகப் பங்குச் சந்தைக்குத் திரும்பி வருவதை நம்முடைய உளவு நிறுவனங்கள் அரசுக்குக் கூறின. எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அரசு.

இந்தியாவின் ஹவாலா மன்னன் ஹசன் அலி கானுக்கு சுவிஸ் வங்கியில் உள்ள ஒரு கணக்கில் மட்டும் 8 பில்லியன் டாலர் இருப்பு இருப்பது தெரியவந்தது. அலி 50 ஆயிரம் கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இத்தனைக்குப் பிறகும் அலியை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை! 

வெளியுறவு பொம்மலாட்டம்!

‘இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையே இந்தியா தனித்து இயங்குவதே – எல்லோ ருக்கும் நல்லவராக இயங்குவதே சரி’ என்று ஜவஹர்லால் நேரு முடிவெடுத்தது ராஜதந்திர ரீதியாக ஓர் எடுபடாத முடிவாக இருக்கலாம். ஆனால், அதில் ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்தது. முக்கியமாக, அந்தப் பார்வையில் அறம் இருந்தது. அணிசேரா நாடுகள் அமைப்பின் பின்னணியில், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஒரு மதிப்பை அது தந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியாவுக்கு உள்ள மதிப்பு என்ன? நம்முடைய நிலைப்பாடுதான் என்ன? முதலில் நமக்கு என்று இன்று தனியாக ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்கிறதா? நம்முடைய அண்டை நாடு ஏதாவது நமக்கு நண்பனாக இருக்கிறதா?

நேபாளத்தில் மக்கள் மாவோயிஸ்ட்டுகளைத் தேர்ந்தெடுத்தபோது, அங்கு ஆட்சிக் கவிழ்ப்பை சிங் அரசு நடத்தியது. இந்தியாதான் வங்க தேசம் என்ற தேசம் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால், இந்தியாவுக்குள் வரும் கள்ளத் துப்பாக்கிகள் தொடங்கி போதைச் சமாசாரங்கள் வரை சகலமும் வங்க தேசம் வழியாகத்தான் வருகின்றன. சீனாவுடனும் அமெரிக்காவுடனும் அளவுக்கு மீறிக் கொஞ்சிக்கொண்டு இருந்த இலங்கையை அடக்கிவைக்க தமிழ்ப் போராளிக் குழுக்களை இந்தியாதான் வளர்த்துவிட்டது. சிங் அரசோ, இறுதியில் எதிரிகளோடு சேர்ந்துகொண்டு அவர்களை அழித்தொழித்தது. ஆஃப்கன் அரசியலில் அடியெடுத்துவைத்த நாடுகள் அனைத்தும் இது வரை அழிவையே சந்தித்து இருக்கின்றன. இந்தியாவுக்கு அங்கு என்ன வேலை? ஆஃப்கனில் இந்தியத் தூதரகங்கள் சும்மாவா தாக்குதலுக்கு ஆளாகின்றன? மியான்மரில் மக்கள் ஆட்சியைக் கொண்டுவந்திருக்க வேண்டியது இந்தியாவின் பணி. ஆனால், சீனாவுக்கு நெருக்கமான ராணுவ ஆட்சியாளர்களுடன் அரசு கை கோத்திருந்தது. பாகிஸ்தானை இந்திய அரசால் அடக்கிவைக்கவே முடியவில்லை. சீனாவுடனோ இன்னொரு பனிப் போரை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. அரபு வசந்தத்தின்போது சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக இந்தியா வின் குரல் ஒலித்தது. நாளைக்கே அமெரிக்கா இரானுக்கு எதிராகப் போர் தொடுத்தால், மன்மோகன் படைகளை அனுப்பிவைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

பெருநிறுவனங்களின் பேயாட்டம்!

நீரா ராடியா உரையாடல் பதிவுகளை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா? இந்த நாடு யாருடையது, இந்த நாட்டை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதை உலகுக்குச் சொன்ன உரையாடல்கள் அவை. ரத்தன் டாடாவைப் பற்றி, அம்பானி சகோதரர்களைப் பற்றி, சுனில் மிட்டலைப் பற்றி, தருண் தாஸைப் பற்றி, கருணாநிதியைப் பற்றி, ராஜாத்தி அம்மாளைப் பற்றி, தயாநிதி மாறனைப் பற்றி, பிரபு சாவ்லாவைப் பற்றி, பர்கா தத்தைப் பற்றி… சிங் அரசாங்கத்தின் சூத்திரதாரிகளைப் பற்றி என்றென்றைக்குமான பதிவுகள் அவை. அலைக்கற்றை வழக்கு விசாரணையின்போது, வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினரிடம் நீரா அளித்த ஒரு வாக்குமூலம் போதும், சிங்கின் அரசு யாருடைய பிரதிநிதி என்று சொல்ல! நீராவின் அந்த வாக்குமூலம்: ”ஆமாம். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவுடன் பேசினேன். என்னுடைய வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அரசின் முடிவை மாற்றினேன். அதற்காக 60 கோடி பெற்றேன். அது என் சேவைக்கான கட்டணம்!”

எல்லாவற்றையும்விட சங்கடம் தரும் செய்தி இது. ஜனநாயகத்தின் மீதான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தாக்குதல். இந்தியப் படைகள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரிய எதிரிகள் யார் தெரியுமா? தன் சொந்த மக்கள். காஷ்மீரில் 10 பேருக்கு ஒருவர் என்னும் விகிதத்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் வீரர்களைக் குவித்து காஷ்மீரில் அமைதி நிலவுவதாக சிதம்பரம் நம்பச் சொல்கிறார். ஆனால், காஷ்மீரிகள் ‘இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்றே எழுதவும் பேசவும் செய்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களிலும் இதே நிலைமைதான். சுதந்திர நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்திய இயற்கை வளத்தை – பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 30 வகையான கனிமச் சுரங்கங்களைப் பெருநிறுவன முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காக சிதம்பரம் நடத்தும் ‘பச்சை வேட்டை’ வனங்களின் பூர்வகுடிகளை அரசுக்கு எதிரான போராட்டத்தில் தள்ளி இருக்கிறது. விளைவு… நாட்டின் 16 மாநிலங்கள், 222 மாவட்டங்கள் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கத்தில். அதாவது, மூன்றில் ஒரு பங்கு இந்தியா மாவோயிஸ்ட்டுகள் கையில் இருக்கிறது. தெலங்கானா, ஹரித்பிரதேசம், பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், மிதிலாஞ்சல், போடோலாந்து, கூர்காலாந்து, கட்ச், விதர்பா என்று ஒன்பது பிராந்தியங்கள் தனி மாநிலக் கோரிக்கையோடு நிற்கின்றன.
இத்தனையும் தாண்டி இந்தியா எப்படித் தாக்குப் பிடிக்கப்போகிறது? இந்தியர்களின் தனி மனித உழைப்பையும் இந்த நாட்டின் ஆன்மாவில் கலந்திருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வையும்தான் நம்ப வேண்டி இருக்கிறது!

 

http://mrpandy75.blogspot.ca/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.