Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷ அரசாங்கம் அழுகிவரும் கிழங்காக மாறியுள்ளது - பௌத்தத்திற்கு முரணாக முஸ்லீம்களுடன் மோதுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷ அரசாங்கம் அழுகிவரும் கிழங்காக மாறியுள்ளது - பௌத்த தர்மத்திற்கு முரணாக முஸ்லீம்களுடன் மோதலை உருவாக்குகிறது

 

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அழுகி வரும் கிழங்காக மாறியுள்ளது என மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

அரசாங்கம் தனது வங்குரோத்து நிலைமையை உணர்ந்துள்ளது. அரசாங்கத்தின் முட்டாள்தனமாக செயற்பாடுகள் காரணமாக மக்கள் அரசாங்கத்திடம் இருந்து வேகமாக விலகி வருகின்றனர்.

 

அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளதை உணர்ந்துள்ளது. பௌத்தர்கள் என தம்மை கூறிக்கொள்பவர்கள் மோதல்களை உருவாக்கி வருகின்றனர். பௌத்த தர்மத்திற்கு முரணான செயற்படுவர்களை பயன்படுத்தி அரசாங்கம் முஸ்லிம் மக்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்து கொண்டுள்ளது.

 

அரசாங்கத்தின் அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை என்பதால், பணத்தையும் சோற்று பார்சல்களையும் கொடுத்து பேருந்துகளில் மக்களை பலவந்தமாக ஏற்றி வர அரசாங்கம் முயற்சித்து வருகிறது. தமது பக்கம் மக்கள் இருக்கின்றனர் என்பதை காட்ட வேண்டும். அதுவே அரசாங்கத்தின் ஒரே நோக்கம்.

 

தேசத்திற்கு மகுடம் என்ற கண்காட்சி என்ற வேலைத்திட்டமும் அரசாங்கத்தின் இப்படியான தோல்வியான முயற்சிகளில் ஒன்று. தற்போது கொழும்பு தெற்கு துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது அதனை சென்று பாருங்கள் என கிராமிய மக்களுக்கு அரசாங்கம் கூறியுள்ளது. இதற்காக பெரும் தொகை பணம் செலவிடப்பட்டு மக்கள் பேருந்துகளில் அழைத்து வரப்படுகின்றனர் என ஹேமகுமார நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95308/language/ta-IN/article.aspx

தன் உறவுகள் தனது வீட்டுக்கு வரக்கூடாது என்று தன் வீட்டுப் பாதையில் நெருஞ்சி முள்ளைப் பயிரிட்ட சிங்களவன் இப்போ தான் போக பாதையில்லாமல் தவிக்கிறான். 

 

அவனது பட்டுபூச்சி ராஜதந்திரம் சுடுதண்ணிக்குள் போட்டு அவிக்கப்படும் போது அதில் இருக்கும் தப்பை உணர்ந்துகொள்வான்.

ada pongapa, intha ulagamay innum max 100 yrs than.

inga yarum yarukum enemy illa, ellorum atha muthala purinjikanum.

rapid growth of population - will destroy this whole world in another century.

சிங்கள பௌத்தர்களின் சுயரூபம் இதுதான்!
இதை தொடர்ந்து மறைக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.