Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு அபிவிருத்திக்கு குழு நியமனம் – மாகாண அரசை ஓரம்கட்டும் சிறிலங்கா அரசின் சதி?

Featured Replies

வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான திட்டமிடல் குழுவொன்றை அவசர அவசரமாக உருவாக்கியுள்ளது.

வடக்கு மாகாணத்தின் நிர்வாக மையமாக மாங்குளத்தையும், கலாசார மையமாக யாழ்ப்பாணத்தையும், வர்த்தக மையமாக கிளிநொச்சியையும், துறைமுக நகராக மன்னாரையும் அபிவிருத்தி செய்யும் வகையில், திட்டங்களை வகுப்பதற்காகவே வடக்கு மாகாண தேசிய பௌதிக திட்டமிடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள நகரஅபிவிருத்தி அமைச்சின் செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, நடந்த கூட்டத்திலேயே இந்தக் குழு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறிலங்கா அமைச்சர் வீமல் வீரவன்ச, வடக்கு மாகாண ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறி, வீடமைப்பு அமைச்சின் செயலர் விமலசிறி, தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களப் பணிப்பாளர் ஜெயசேகர, வடக்கு மாகாணசபையின் செயலர் விஜயலக்சுமி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாணசபையின் பிரதம செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 46 பேர் கொண்ட இந்தக் குழு, வடக்கு மாகாணத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களை தயாரிக்கவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கலாசாரம், சமூக வாழ்வியல், மற்றும் முக்கிய இடங்களைப் பாதுகாக்கும் வகையில், அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து கலந்துரையாடவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமது கருத்துகளை தெரிவிப்பதற்காக குறிப்பிட்ட பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உபகுழுக்களையும் இந்தக் குழு அமைக்கவுள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடத்தப்படவுள்ள நிலையில், வடக்கு மாகாண அபிவிருத்திக்கான குழுவை சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ளது.

புதிதாக தெரிவு செய்யப்படும் வடக்கு மாகாணசபை நிர்வாகத்தை, இந்தக் குழுவில் இருந்து ஓரம்கட்டும் நோக்கிலும், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட மாகாணசபைகளின் வசமுள்ள அதிகாரங்களையும் கூட கட்டுப்படுத்தும் நோக்கிலும், அவசரமாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

வடக்கு மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாலேயே, அவசரமாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.http://goldtamil.com/?p=6903

புதிதாக தெரிவு செய்யப்படும் வடக்கு மாகாணசபை நிர்வாகத்தை, இந்தக் குழுவில் இருந்து ஓரம்கட்டும் நோக்கிலும், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட மாகாணசபைகளின் வசமுள்ள அதிகாரங்களையும் கூட கட்டுப்படுத்தும் நோக்கிலும், அவசரமாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது

 

பிள்ளையான், வரதராஜப்பெருமாள் இருவர் மட்டும்தான் தமிழ் மாகாணங்களில் முதல் அமைச்சர்களாக இருந்த தமிழர். இருவருமே அந்த மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.  இந்த அதிகாரங்கள் இருப்பதாகக் காட்ட முயல்வது ஒரு மாயையை உண்டாக்கும் முயற்சியே.

  • கருத்துக்கள உறவுகள்
அவசரமாக இந்த குழுவை அமைப்பதன் காரணமே தேர்தலின் பின் விக்கினேஸ்வரன் காணி பொலீஸ் அதிகாரங்களை கோரப்போகிறார் என்பதே.
 
எம்மினத்தின் எதிரிகளுக்கு விக்கினேஸ்வரனை நன்றாக அடையாளம் தெரிகிறது. பாவம் நம்மில் சிலருக்குத்தான் பார்வை மங்கிப்போய்விட்டது.  கீழே உள்ள கட்டுரையை படித்தால் ஏன் என்று புரியும்.
 
(நன்றி குளோபல் தமிழ் மற்றும் facebook.com/cvw4cm  இணையங்கள்).

 

 

 

 

பிர­பா­க­ரனின் மறு அவ­தா­ர­மா­கவே இன்று விக்­கி­னேஸ்­வரன் உரு­வெ­டுத்­துள்ளதாக சிங்கள எழுத்தாளர் சமில லிய­னகே தெரிவித்துள்ளார். பொதுபாலசேனாவின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

விக்கினேஸ்வரனின்  செய்­கை­களும் பேச்­சுக்­களும் திருப்தி தரு­வ­தாக இல்லை என்று கூறிப்பிட்ட சமில லிய­னகே இவரை ஆரம்­பத்­தி­லி­ருந்தே கட்­டுப்­ப­டுத்த ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்த பிக்­குகள் ஜனா­தி­ப­தி­யிடம் இது தொடர்­பாக கோரிக்கை விட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குரு­வைக்­கல்லு என்ற தமிழ்ப்­பெ­யரே இன்று குரு­ணாகல் என்று திரி­ப­டைந்­துள்­ளதாகக் குறிப்பிட்ட அவர் குரு­ணாகல் அத்­து­கல்­புர எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட வேண்டும் என்றார்.

2012 கணக்­கெ­டுப்­பின்­படி இலங்­கையில் எட்டு மாவட்­டங்­களில் பெளத்­தர்­களின் எண்­ணிக்கை வீழ்ச்சி அடைந்­துள்­ளதாகவும் வடமேல் மாகா­ணத்தில் இது அதி­க­மாக உள்­ளது என்றும் தெரிவித்தார். 

சிங்­க­ள­வர்­களை அழிக்க வேண்­டு­மானால் சிங்­களத் தன்­மையை இல்­லாமற் செய்ய வேண்டும் என்று இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பெளத்த பாரம்­ப­ரி­யத்­தையும் பழ­மை­யையும் ஏனை­ய­வ­ருக்கு விற்று வரு­கின்­றனர் எனவும் குற்றம் சுமத்தினார். 

இந்­தியா அல்ல யுத்­தத்தை வெற்றி கொள்ள உத­விய நாடு என்று தெரிவித்த லியனகே எமது இரா­ணுவ வீரர்­களின் முயற்­சியே வெற்றி பெற்றுத் தந்­தது எனவும் குறிப்பிட்டார். யுத்தப் பிர­தே­சத்தின் 39 அரச சார்­பற்ற அலு­வ­ல­கங்­களில் நவீன பங்­கர்கள் காணப்­பட்­டன எனவும் இவர்­களே இன்று ஜெனீவா சென்று தம்மைத் தூற்­று­கின்­றனர் எனவும் தெரிவித்த அவர் பாது­காப்புச் செய­லா­ளரைக் கொலை செய்ய இவர்­களே வடக்­கி­லி­ருந்து குண்டை தங்கள் வாக­னத்தில் கொண்டு வந்­தனர் என்றும் குறிப்பிட்டார். 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95234/categoryId/2/language/ta-IN/---.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.