Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவுக்கு சவால் விடுகிறார் கோத்தா

Featured Replies

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், காணாமற்போனதாகவும், சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச ஐ.நாவுக்கு சவால் விடுத்துள்ளார்.

சிறிலங்கா படையினர் மீது போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் ஐ.நாவும் ஏனைய தரப்பினரும் அதற்கான அடிப்படை ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தமாத இறுதியில் சிறிலங்காவுக்கு வரும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், சிறிலங்கா அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து  பிரச்சினை எழுப்பவுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதாரமாக அமைந்த தரவுகளை தாமதமின்றி வெளியிடுமாறும் அவர் கோரியுள்ளார்.

அறிக்கையின் மூலங்களின் பெயர்களை வெளியிட மறுப்பதால், நிபுணர்குழு அறிக்கை, நீதிமன்றத்தினாலோ அல்லது சிறப்பு விசாரணை பொறிமுறையினாலோ ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“வடக்கில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட கணிப்பீட்டின்படி, மோதலின் இறுதிக்கட்டத்தில், 7400 பேர் கொல்லப்பட்டதாகவும், 2600 பேர் காணாமற்போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட 7400 பேரில், விடுதலைப் புலிகளுக்காக சண்டையிட்டு மரணமானவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

காணாமற்போன 2600 பேரில், 1600 பேர் விடுதலைப் புலிகளுடன் இருந்தவர்கள்.

438 பேர் மட்டுமே, இராணுவக்கட்டுப்பாட்டில் காணாமற்போயுள்ளனர்.

இவற்றில் 28 காணாமற்போன சம்பவங்கள் குறித்தே சிறிலங்கா படையினர் மீது நேரடியாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.http://goldtamil.com/?p=6907

திருடர்கள், கொலைகாரர், கொள்ளைகாரர்கள் கைகளில் ஆதாரங்களைக் கொடுப்பதில்லை!

“வடக்கில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட கணிப்பீட்டின்படி, மோதலின் இறுதிக்கட்டத்தில், 7400 பேர் கொல்லப்பட்டதாகவும், 2600 பேர் காணாமற்போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

அரசு இவ்வளவு பேரின் விபரங்களையும் வெளிவிட்டு அவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று நவநீதம் பிள்ளை கேட்கவேண்டும்.  அதன் பின்னர் ஐ.நா விபரங்களை வெளிவிட்டு அவர்களுக்கு நட்ட ஈடு கேட்க வேண்டும். அரசு பயங்கரவாத சட்டத்தின் கீழ் யாரையும் பயங்கரவாதி என்று சுடத்தக்க ஷரத்துகளை வைத்திருந்தது. ஆனால் அது சர்வதேச, ஐ.நா நியமங்களுக்கு அமைய உறவினர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதை இல்லாமல் செய்யாது. 

 

கோபத்தபயா தான் சொன்ன 10,200 பேருக்குமான அவர்களின் குடும்பங்களிடம் நட்ட ஈட்டைக்கையளிக்க வேண்டும்.

ஐ.நாவுக்கு சவால் விடுகிறார் கோத்தா

1011487_635886173102999_217041774_n.jpg

எங்கங்க கேட்குறான்..... கண்டநாயெல்லாம் சவால் விடும் ஒழுங்க இருடான்னா கேட்கனுமுல்லா....

இதா... நீங்க சொல்லிட்டிங்கல்ல இப்ப....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.