Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிவேரிய சம்பவம்; இராணுவ அதிகாரிகள் நால்வர் பணியிலிருந்து விலக்கப்பட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Army-Commander-Daya-Rathnayake-60-60.jpg
வெலிவேரிய, ரத்துபஸ்வல கிராம மக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படும் இராணுவத்தின் உயர் பதவிநிலை வகிக்கும் நான்கு அதிகாரிகள் பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கவின் உத்தரவுக்கிணங்க இராணுவத்தில் பிரிகேடியர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரும் லெப்டினன் கேணல் பதவிநிலை வகிக்கும் அதிகாரிகள் மூவருமே இவ்வாறு பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். 

வெலிவேரிய தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், அவ்விசாரணைகள் முடிவடையும் வரையில் மேற்படி இராணுவ அதிகாரிகள் பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். 

சுத்தமான குடிநீர் கோரி கடந்த முதலாம் திகதி, ரத்துபஸ்வெல கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினருக்கும் அம்மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

நவீபிள்ளை போனபின்பு பதவி உயர்வு வழங்கப்படும்.........தமிழரை கொலைசெய்திருந்தால் வெளிநாட்டில் பதவி கிடைத்திருக்கும்.....

JR, பிரேமதாசா, சந்திரிக்கா, பொன்சேக்கா என்ற பலரின் வாலுகள் இன்னமும் நிறைய இருக்கும். 

தமிழர்களை கொலை செய்தவர்களுக்கு வெளிநாடுகளில் இராஜதந்திர பதவிகள் சிங்களவனை கொலை செய்தால் தண்டனையா?  நல்ல நியாயம். :(   

நாலு தமிழினக் கொலைகாரர்களின் பதவி மாற்றம் தற்காலிகமானதாக இருக்கலாம்.


நாலு தமிழினக் கொலைகாரர்களின் பதவி மாற்றம் தற்காலிகமானதாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.