Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானென்பது யாதென்பேன்..?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலமெனும் குயவன்,

கடைந்தெடுத்த அற்புதமான,

மண்பானை நீ என்பேன்!

 

தண்ணீர் தேடி அலைபவர்கள்,

தாகம் தீர்க்கும் பானையாகலாம்,

 

தரிசு நிலத்துப் பயிர் விளைக்கும்,

தண்ணீர் தாங்கும் பானையாகலாம்,

 

பசியென்று அழுபவர் வீட்டில்,

உலை ஏற்றும் பானையாகலாம்,

 

கோவில் திருவிழாக்களில்,

கரகமாடும் பானையாகலாம்!

 

மோர் கடைந்து நெய் வடிக்கும்,

மணி வண்ணன் பானையுமாகலாம்!

 

செந்தணலில் கொள்ளி வைக்கும்,

அந்திமப் பானையுமாகலாம்!

 

கரும்பனை மீது தொங்கும்,

கள்ளுப்பானை கூட ஆகலாம்!

 

எந்தப் பானை நீ ஆவதென்பது,

உந்தன் பண்பு நிலை சார்ந்ததென்பேன்! :D

 

 

ஆகா.. அற்புதம்... புங்கை அண்ணா.. தத்துவ தேடல் விசாரணைகளில் முற்றிய கனி அல்லவா நீங்கள்...
 
நன்றி அண்ணா.. 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனை நீ உணர்... அழகான தேடல்...நன்று. இங்கும் ஒருவர் "நான்" க்கு பதில் கண்டுள்ளார்... :)

 

http://www.youtube.com/watch?v=ZOfTuEPq-3g&gl=SG&hl=en-GB

 

நன்றி வதா அண்ணா இணைப்புக்கு... :) அருமை..
 
 
நன்றி விசுகண்ணா...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முடிவாக... அறிவியல் சிந்தனையையோ அல்லது ஆன்மீக சிந்தனையயோ அல்லது தத்துவ சிந்தனையயோஓரளவுக்கு மேல் தொடர்ந்தால், வாழ்வில் எல்லாமே அர்த்தமற்றதாகிப்போய்விடும்...பிரபஞ்சமே வீண் என்றாகிவிடும்.. சேக்ஸ்பியரின் மகாபெத் சொல்வதுபோல்,
 
Life's but a walking shadow,a poor player
That struts and frets his hour upon the stage
And then is heard no more: it is a tale
Told by an idiot,full of sound and fury,
Signifying nothing.'
 
(வாழ்க்கை என்பது ஒரு நடமாடும் நிழல் மேடையில், தன் நேரத்தில் தடுக்கித்திணறிவிட்டு மறைந்துபோகும் மோசமான நடிகன் நடித்த,ஒரு முட்டாள் சொன்ன கதை; ஆரவாரமும் சீற்றமும் நிரம்பி எதையுமே நிரூபிக்காத கதை) என்றமுடிவுக்கு வரவேண்டியிருக்கும்..ஒரு எல்லைக்குமேல் கேள்விகேட்காமல் நம்பவேண்டி இருக்கிறது..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சே , என்ன சுபேஷ் , அன்று இருவரும் சந்தித்தபோது கேட்டிருக்கலாமே இந்தக் கேள்வியை. அந்த ரகசியத்தை உமது காதுக்குள் சொல்லியிருப்பேன் !

பரவாயில்லை , அடுத்த தடவை சந்திக்கும்  போது  மறக்காமல் கேட்கவும். அதுவரையில் தேடலை நிற்பாட்ட வேண்டாம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!! :D  :D  

 

(இது  எனக்கும் தெரிய வேணும் ).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

’நான்’ என்பது புரிந்துவிட்டால்...உங்களால் இன்று இந்தக்கவிதையை எழுதி இருக்க முடியாது.

 

கண்டவர் விண்டிலர்!!!!!!!...அதுதான் நிஜம்...................’கேள்வி......,,,,நல்ல தேடலுக்கான முயற்சி வாழ்க:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சே , என்ன சுபேஷ் , அன்று இருவரும் சந்தித்தபோது கேட்டிருக்கலாமே இந்தக் கேள்வியை. அந்த ரகசியத்தை உமது காதுக்குள் சொல்லியிருப்பேன் !

பரவாயில்லை , அடுத்த தடவை சந்திக்கும்  போது  மறக்காமல் கேட்கவும். அதுவரையில் தேடலை நிற்பாட்ட வேண்டாம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!! :D  :D  

 

(இது  எனக்கும் தெரிய வேணும் ).

நன்றி அண்ணா வாழ்த்துக்கு..
 
அண்ணா விடைதெரிஞ்சால் சொல்லுங்கோ.. உடனும் ரக்ஸிபிடிச்சாவது வாறன் சிஸ்யனாய் சேர அண்ணா.. :D

’நான்’ என்பது புரிந்துவிட்டால்...உங்களால் இன்று இந்தக்கவிதையை எழுதி இருக்க முடியாது.

 

கண்டவர் விண்டிலர்!!!!!!!...அதுதான் நிஜம்...................’கேள்வி......,,,,நல்ல தேடலுக்கான முயற்சி வாழ்க :)

முற்றிலும் உண்மை அக்கா... :)
 
நன்றி அக்கா..

என்ன செய்ய இங்காலைப் பக்கம் அரச மரம் இல்லை. இருந்திருந்தால் எங்களுக்கொரு சித்தார்த்தன் கிடைச்சிருப்பான்

 

 

அண்ணை கண்டப மனசைப் போட்டுக் குழப்பாதேங்கோ! அதது அப்படி அப்படித்தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா...
 
உண்மையான,நம்பிக்கையான அன்பை தவிர அழகியது ஒன்றுமில்லை.

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா. :)

 

வேளைக்கு ஒரு கல்யாணத்தை கட்டுங்கோ. :)

Spoiler
பிறகு "நிம்மதி என்பது யாதேன்பேன்" என்று யோசிக்க வெளிக்கிட்டிடாதையுங்கோ... :lol::)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்ய இங்காலைப் பக்கம் அரச மரம் இல்லை. இருந்திருந்தால் எங்களுக்கொரு சித்தார்த்தன் கிடைச்சிருப்பான்

 

 

அண்ணை கண்டப மனசைப் போட்டுக் குழப்பாதேங்கோ! அதது அப்படி அப்படித்தான்...

 

சரிங்கண்ணா... சம்சாரி சொன்னால் சரியத்தான் இருக்கும்.. :D

 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா...
 
உண்மையான,நம்பிக்கையான அன்பை தவிர அழகியது ஒன்றுமில்லை.

 

 

நன்றி..

 

 

உண்மையான,நம்பிக்கையான அன்பை தவிர அழகியது ஒன்றுமில்லை.

 

 

ம்ம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா. :)

 

 

 

 

நன்றி துளசி..

 

 

 

 

வேளைக்கு ஒரு கல்யாணத்தை கட்டுங்கோ.  :)

Spoiler
பிறகு "நிம்மதி என்பது யாதேன்பேன்" என்று யோசிக்க வெளிக்கிட்டிடாதையுங்கோ...  :lol:  :) 

:lol:

 

சம்சாரிகள் நிம்மதியா இருக்க ஒரு வழி..Ogden Nash என்பவர் கூறியது..

 

To keep your marriage brimming

with love in the loving cup

whenever you are wrong, admit it;

whenever you are right, shut up. 

 

 

சுஜாத தமிழில் இதையே இப்படி சொல்கிறார்...
 
'இல்லற இன்பத்துக்கு
இது மட்டும் கத்துக்கொள்
தப்பென்றால் ஒத்துக்கொள்
சரியென்றால் பொத்திக்கொள்! :D

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.