Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவையற்ற பிரச்சினையை உருவாக்குகிறது சிறிலங்கா அரசாங்கம் – விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற பிரச்சினையை உருவாக்குகிறது சிறிலங்கா அரசாங்கம் – விக்னேஸ்வரன்
[ வெள்ளிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2013, 05:49 GMT ] [ தா.அருணாசலம் ]


கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தாம் கோரப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’ நாளிதழ் செய்தியாளர் எஸ்.கார்த்திக்கிற்கு, யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நான் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கக் கோரும் பணியில் ஈடுபடவில்லை.

கொமன்வெல்த் மாநாட்டில் இருந்து ஒதுங்கியிருப்பதை விட, சிறிலங்கா அரசுக்கு தவறைச் சுட்டிக்காட்டும் தைரியம் எமக்கு இருக்க வேண்டும்.

தேர்தலில் இருந்து ஒதுங்கி நின்றதால் தான், கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் இழந்தனர்.

நான் ஒரு அரசியல்வாதியல்ல. எல்லா அரசியல்வாதிகளையும் போல நான் இதைப் பார்க்கப் போவதில்லை.

எமக்கு தென்னிந்தியாவின் உதவி முக்கியமாகத் தேவைப்படுகிறது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும்.

பெரும்பான்மை பலத்தைப் பெறுவது எமக்குச் சிக்கலானது அல்ல. ஆனால் இராணுவத்தைச் சமாளிக்க வேண்டும்.

அரசாங்கத்துக்கு வாக்களிப்பார்கள் என்று தாம் நினைப்பவர்களை மட்டும் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடும். ஏனையவர்கள் தடுக்கப்படலாம்.

80 தொடக்கம் 90 சதவீதமான மக்கள் எம்முடன் இருக்கிறார்கள் என்று நாம் நம்புகிறோம்.

அதிகளவு வாக்காளர்கள் வாக்களிக்க வரவேண்டியது முக்கியமானது.

அதிகளவு வாக்களிப்பு மக்களின் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும். நாம் நல்ல வாக்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் குறித்து அரசாங்கம் மிகையான பரப்புரைகளை செய்து வருகிறது.

வீதிகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

ஆனால், இந்த வீதிகள், வெளிநாட்டு உதவிகள் நன்கொடைகளின் மூலமே போடப்பட்டன. சிறிலங்கா படையினரே அவற்றை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

கணவனை இழந்த பெண்கள், இடம்பெயர்ந்த மக்களின் வீடுகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக, ஆளும்கட்சி குற்றம்சாட்டுவது அவர்களின் தவறான புரிதல்.

சிறிலங்கா அரசாங்கம் தேவையற்ற பிரச்சினையை உருவாக்குகிறது.

நாம் சிறிலங்காவின் எல்லைக்குள் சமஸ்டி முறையிலான ஜனநாயக அலகு ஒன்றையே கோருகிறோம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரன்.

பிரித்தானியர்களால் கொடூரமான குற்றவாளியாக கருதப்பட்ட கெப்பிற்றிப்பொல திசாவேயின் பெயரில், இன்று வீதிகள் உள்ளன. அவருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரபாகரன் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். ஆனால் அவர் அரசாங்கத்துக்கு கொடூரமானவராக இருக்கலாம்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130920109091

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். ஆனால் அவர் அரசாங்கத்துக்கு கொடூரமானவராக இருக்கலாம்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அது.....சேகுவார விடுதலைப் போராட்ட வீரர் என்றால் ....பிரபாகரனும் விடுதலைப் போராட்ட வீரர்
  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் விக்கி ஐயா.. சரியான பேட்டி..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.