Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண முதலமைச்சராக சிவி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவுசெய்யப்படுள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Vigneswaran-TNA-150.jpg

வட மாகாண முதலமைச்சராக சிவி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு- யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்றுமாலை 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவுசெய்யபட்ட 28 உறுப்பினர்களும் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரு.சிவி.விக்னேஸ்வரன் அவர்களை வட மாகாண முதலமைச்சராக ஏகமனதாக தெரிவுசெய்தார்கள்.

  

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா சரவணபவன் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுரேஸ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் எம்.ஏ.சுமந்திரன் சிறீதரன் சிவசக்தி ஆனந்தன் விநோ நோகராலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93578&category=TamilNews&language=tamil

தமிழர்களின் தேசத்தின் முதல் அமைச்சருக்கு வாழ்த்துக்கள் ....................
 
நீங்கள் செய்ய வேண்டிய பணி நிறைய உள்ளது ...........அதை செய்ய பெரும் சவால்களை சந்திக்க வேண்டியும் ,வரும் இவற்றை எல்லாம் உங்கள் இராஜ தந்திர அணுகு முறையுடன் தமிழரின் வாழ்வை சிறப்படைய வைக்க வேண்டும் என்பதே எம் ஒவ்வொருவரதும் அவா ...............
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம வரதராஜபெருமாள் அங்கிளை மறந்திட்டீங்களே த.சூ.. :rolleyes::unsure:

நம்ம வரதராஜபெருமாள் அங்கிளை மறந்திட்டீங்களே த.சூ.. :rolleyes::unsure:

ஆமாம்..... இப்ப அவர் எட்டடுக்கு மாளிகையிலா ,அல்லது பரலோகத்திலா ........சிலமனை காணோம்  :D

நம்ம வரதராஜபெருமாள் அங்கிளை மறந்திட்டீங்களே த.சூ.. :rolleyes::unsure:

03_07_10_varathar_03_88418_445.jpg03_07_10_varathar_02_88414_445.jpg

M_Id_89891_perumal.jpg03_07_10_varathar_01_88410_445.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளால் வரதராஜ பெருமாள் உயிருக்கு ஆபத்து என்று கூறி அவரது இருப்பிடத்தை மிகவும் ரகசியமாக வைத்து வந்தது இந்திய அரசு. இந்தியாவில் ராஜஸ்தானில் வசிக்கிறார்... ஒடிஷா காடுகளில் வசிக்கிறார்... வடகிழக்கு மாகாணத்தில் வசிக்கிறார்.. என்றுதான் வரதராஜ பெருமாள் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டு வந்தன. ஆனால் இந்திய ரா மற்றும் ஐபியின் நேரடி பாதுகாப்பின் கீழ் இத்தனை ஆண்டுகாலமும் தலைநகர் டெல்லியில்தான் வரதராஜ பெருமாள் வசித்து வந்திருக்கிறார் என்ற தகவல் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது- ஒரு பொதுநலன் வழக்கு மூலம்! டெல்லி சர்வோதயா என்கிளேவ் என்ற குடியிருப்பில் வசித்து வருவோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தொடர்ந்துள்ளனர். அம்மனுவில், வரதராஜ பெருமாளுக்கு டெல்லி போலீசின் 25 பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்த பாதுகாவலர்கள் சர்வோதயா என்கிளேவ் குடியிருப்புக்கு முன்பாக உள்ள டெல்லி மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவை ஆக்கிரமித்து கூடாரம் அமைத்துள்ளதுடன் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்தவும் கெடுபிடி செய்து வருகின்றனர். இதனால் வரதராஜ பெருமாளை வேறு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சிக்ரி, இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். 

Read more at: http://tamil.oneindia.in/news/2012/08/10/india-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.