Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சப்தநாடியும் ஒடுங்கிய மிருகம்! புகழேந்தி தங்கராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சப்தநாடியும் ஒடுங்கிய மிருகம்! புகழேந்தி தங்கராஜ்

 

சாத்தான் வேதம் ஓதுமா? என்று கேட்கிறார் அப்புசாமி. கேள்வியே தவறு. இப்போதெல்லாம் சாத்தான்கள் தான் அதை ஓதுகின்றன.  இந்த வாரம் president_mahinda_rajapaksa.jpgஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்குப் பின்வாசல் வழியாகவே சென்று, பின்வாசல் வழியாகவே திரும்பிய மகிந்த மிருகம் அதை நிரூபித்திருக்கிறது. (முன் வாசல் வழியாகப் போகிற பழக்கமே இலங்கை மிருகங்களுக்கு இல்லையா?)

வேறுவிதமான கலாச்சாரங்கள் உள்ள நாடுகளில், ஒரு குறிப்பிட்ட விதமான ஜனநாயகத்தைத் திணிக்க முயல்வது பெருங்குழப்பத்தை ஏற்படுத்துமாம்.... ஐ.நா. கூட்டத்தில் மகிந்த மிருகம் இப்படிப் பேசியிருக்கிறது. அது என்ன வேறுவிதமான கலாச்சாரம்? ஐ.நா.வுக்குள் கூட பின் வாசல் வழியாக நுழைவதா?

ஈழத் தமிழ் இனத்துக்கென்று ஒரு மொழி இருக்கிறது, ஒரு பண்பாடு  இருக்கிறது. தென்மோடி, வடமோடி போன்ற காலங்காலமாக நிலைத்திருக்கின்ற நாட்டுக் கூத்துக் கலை வடிவங்கள் இருக்கின்றன. அந்த இனத்துக்கென்றே சில பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இப்படியெல்லாம், பௌத்த சிங்களத்துக்கு மாறான தனித்த அடையாளங்களைக் கொண்ட  ஒரு இனம் இலங்கையில் இருக்கவேகூடாது - என்று நினைப்பது யார்?  இலங்கைக்குக் கலப்பினம்தான் தேவை - என்று தெருப் பொறுக்கி மாதிரி பேசியது யார்? (இப்படிப்பட்ட பொறுக்கித்தனமான கருத்தையும் ஆங்கிலத்தில் அச்சிலேற்றிய அதிமேதாவிகள் யார் என்கிற கேள்விக்குப் பிறகு வருவோம்!

மகிந்த ராஜபக்சே என்கிற மிருகத்தைத் தவிர, 'என்னுடைய நாட்டுக்குக் கலப்பினம் தான் சரி' என்கிற மேன்மையான கருத்தை வேறு எவர் சொல்லியிருக்க முடியும்! அந்த மிருகம் ஒரு தேசத்துக்குத் தலைமை தாங்குகிறது, ஒரு தேசத்தை வழிநடத்துகிறது. உருப்படுமா அந்த நாடு?

உள்ளே வெளியே - என்பது, இயக்குநர் பார்த்திபனின் படம். படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்குமுன் அந்தப் படத்தின் கதையை இரண்டே வரியில் சுருக்கமாகச்  சொல்வார் பார்த்திபன். 'ஒரு பொறுக்கி போலீஸ்காரன் ஆயிடுறான், அதான் கதை' என்பார். அது கதை. இலங்கையிலோ, அது - கதையல்ல, நிஜம். ஒரு பொறுக்கி போலீஸ்காரனாகியிருக்கிறான்.

எங்கள் இனத்தின் தனித்த அடையாளங்களை அழித்து ஒழிக்க, சகல அடக்குமுறைகளையும் துணிந்து பயன்படுத்தும் அந்த மிருகம் தான் ஐ.நா.வில் போய்ப் பேசுகிறது - வேறு விதமான கலாச்சாரங்கள் இருக்கும் நாடுகளில், இன்னொன்றைத் திணிப்பது குழப்பத்தை ஏற்படுத்துமாம்! கலப்பினம் தான் தேவை - என்று அந்த மிருகம் சொன்னதைப் பெருமையோடு பிரசுரித்த பிரகஸ்பதிகள் நச்சுன்னு நாலு வார்த்தை எழுத வேண்டாமா?  வேறு எதற்கு வைத்திருக்கிறார்கள் எழுதுகோலை? வேர்க்கடலை தோண்டவா?

பிரபாகரன் என்கிற உண்மையான மனிதனின், உன்னதமான தலைவனின் உயர்ந்த நோக்கங்களில் ஒன்று, 'தமிழ்த் தேசிய அடையாளங்களைக் கட்டிக்காப்பது' என்பது. அதைச் சொல்வதற்கான தகுதியும் நேர்மையும் அவனுக்கு இருந்தது, இருக்கிறது. தமிழ்த் தேசிய அடையாளங்களைக் காப்பது - என்பது சிங்கள அடையாளங்களை அழிப்பதல்ல என்பதை அந்த மெய்யான போராளி உணர்ந்திருந்தான். போரில் வெல்வதென்பது அப்பாவிச் சிங்களர்களைக் கொல்வதல்ல என்கிற யுத்த தர்மம் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் அப்பாவிச் சிங்கள மக்கள் பாதுகாப்பாயிருந்தனர், அப்பாவிச் சிங்களப் பெண்கள் பத்திரமாயிருந்தனர்.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் - என்றோ, மிருகங்களோடு மிருகத்தனமாகத்தான் மோதவேண்டும் என்றோ தன் தோழர்களுக்கு பிரபாகரன் சொல்லித் தரவில்லை. 'நாட்டுக்காக அர்ப்பணிக்கத் தயாராயிருங்கள்' என்பதை மட்டும்தான் சொல்லித்தந்தான்.

எனக்கும் தமிழ்தான் மூச்சு...............

ஆனால், பிறர் மீது அதை விடமாட்டேன்

என்பது கல்லூரி நாட்களில் நான் ரசித்த கவிதை. அதை எழுதிய கவிஞனின் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் என்று அப்போதும் நினைத்தேன், இப்போதும் நினைக்கிறேன். பிரபாகரனுக்கும் இந்தக் கவிதை பிடித்திருக்க வேண்டும். தன் இனத்தின் மீது வைத்திருந்த பற்றை, அடுத்த இனத்தின் மீது உமிழவில்லை அவன்.

மகிந்தனின் தலைக்கு நேரே கத்தி தொங்குகிறது. அந்த அச்சத்துடனும் பீதியுடனும் தான் பேசியிருக்கிறான் ஐ.நா.வில்! உலக நாடுகளைக் கண்காணிக்க ஐ.நா. இருக்கும்போது, சில நாடுகள் சர்வதேச போலீஸ்காரன் மாதிரி நடந்துகொள்வது நியாயமில்லையாம்! (சாத்தானின் இன்னொரு வேதம்!) ஐ.நா.வுடன் இலங்கை இணக்கமாக இருக்கிறதாம்...... இப்படி இருக்கும்நிலையில் ஐ.நா.வின் பல்வேறு உறுப்புகளைப் பயன்படுத்தி, இலங்கையைக் குறிவைக்கிறார்களாம்! புலம்புகிறது மிருகம். பாக்குறதுக்குத் தான் பலசாலி மாதிரி இருப்பாரு........ சத்தமா சவுண்ட் கொடுத்தா செத்துடுவாரு - என்கிற சினிமா  வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளைப் பயன்படுத்தி இலங்கைக்குக் குறி வைக்கிறார்கள் - என்கிற மகிந்த மிருகத்தின் அழுவாச்சிக்கு நவநீதம் பிள்ளையைத் தவிர வேறு எவர் காரணம் என்று நினைக்கிறீர்கள்! கத்தி இறங்க இறங்க ஓநாயின் ஊளைச் சத்தம் இன்னும் அதிகமாகக் கேட்கும்... எழுதிவைத்துக் கொள்ளுங்கள்!

ஒட்டுமொத்த ஐ.நா.வையும் தவறாகப் பயன்படுத்தி மகிந்த மிருகத்தைக் காப்பாற்ற முயன்ற கதைதான் நமக்குத் தெரியும். விஜய் நம்பியாரிலிருந்து பான் கீ மூன் வரை அத்தனைப் பேரும் அதைத்தான்  செய்துகொண்டிருந்தார்கள். இன்றைக்கு, நடந்த இனப்படுகொலைக்கு ஏதோ ஒரு பெயரில் நீதி கேட்கத் துடிக்கும் நவநீதம் பிள்ளையால் மகிந்தனின் சப்தநாடியும் ஒடுங்குகிறது.  தவறிழைத்த ஐ.நா.வைச் சரியாகப் பயன்படுத்தப் பார்க்கிறார் பிள்ளை. அவர் குறிவைப்பது, தனி நபர்களுக்கு அல்ல.... இன அழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு! அதனால்தான் அஞ்சி அஞ்சிச் சாகிறார்கள் குற்றவாளிகள்.

"இலங்கை விவகாரத்துக்கு அளவுக்கதிகமான அழுத்தம் தரப்படுவது வியப்பளிக்கிறது..... மனித உரிமைகள் என்கிற போர்வையில் சில நாடுகள் மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது....." என்றெல்லாம் மகிந்தன் பேசுவதைப் பார்க்கும்போது மிருகம் ஒரேயடியாக மிரண்டுபோயிருப்பதாகப் படுகிறது.

மகிந்தன் சொல்வதில், .00001 சதவீதம் கூட உண்மையில்லை. எந்த இந்தியாவின் உதவியுடன் ஈழ மக்களின் அரசியல் உரிமைகளை மீட்கலாம் என்று சம்பந்தன் குழு நினைக்கிறதோ, அந்த இந்தியாவின் உதவியுடன்தான் இனப்படுகொலையை யாரும் தடுத்து நிறுத்திவிடாதபடி பார்த்துக்கொண்டது இலங்கை. வெளியிலிருந்து அழுத்தம் எதுவும் ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொண்டது. இந்தியாவின் தயவுடன்தான், இனப்படுகொலையைச் செய்தது, செய்துகொண்டிருக்கிறது.

சிரியாவில் ரசாயன ஆயுதம் - என்றால் மட்டும் அடுத்த நாளே போய் ஆராய்ச்சி செய்யும் ஐ.நா.வுக்கு, இலங்கை அரசு ஆனந்தபுரத்தில் எதைப் பயன்படுத்தியது என்பது தெரியாதா என்ன? தெரிந்தும், 4 ஆண்டுகளாக நாக்கு வழிப்பதற்கு மட்டுமே பயன்படும் தீர்மானங்களையே நிறைவேற்றிக் கொண்டிருந்தது. முன்னணியில் இந்தியாவும் பின்னணியில் ஐ.நா.வும் சர்வதேச அரங்கில் சத்தம் எழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள,  பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - என்கிற பொய்யான போர்வையில், ஒன்றரை லட்சம் பேரைக் கொன்று முடித்தது இலங்கை. பயங்கரவாதம் என்கிற போர்வையில் இனப்படுகொலை செய்த அந்த மிருகம் தான், மனித உரிமை என்கிற போர்வையில் மற்றவர்கள் தலையிடுவதாக புலம்புகிறது  இப்போது.

"இலங்கைப் பிரச்சினையில் ஐ.நா. அமைப்பு ரீதியாகத்  தோல்வியைத் தழுவியது. முழுமையாகவும் பொருத்தமாகவும் (உடனடியாகவும்) நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த ஆதரவு ஐ.நா.வுக்குக்  கிடைக்கவில்லை" என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார் 'அப்ரூவர்' பான் கீ மூன். என்ன செய்வது? ஐ.நா. என்பது ஒரு தீயணைப்பு வாகனம். ஈழம் எரித்து முடிக்கப்படும் வரை இந்தியாவின் கையில் அந்த வாகனத்தின் கீ இருந்தது. எரித்து முடிக்கப்பட்ட பிறகு, விமானத்திலிருந்து வேடிக்கை பார்த்ததைத் தவிர பான் கீயால் வேறென்ன கிழித்திருக்க முடியும்?

உறுப்பு நாடுகள் ஒத்துழைக்காததற்கு யார் காரணம் - என்பது பான் கீ மூனுக்குத் தெரியாதா? இலங்கையின் அண்டை நாடு ஒன்றுதான், நடந்துகொண்டிருந்த இனப்படுகொலை நின்றுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தது என்பதை அறியவே முடியாத அளவுக்கா அவர் அறியாமையால் இருந்தார்,  இருக்கிறார்?

இனப்படுகொலை முடிந்த நிலையில், அதைக் கண்டித்து  ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடித்தது யார்? அந்தத் தீர்மானத்தை அதன் போக்கில் விடாமல், பாராட்டுத் தீர்மானமாக அதை மாற்றி, மகிந்த மிருகத்துக்குப் பொன்னாடை போர்த்தி, நடந்து முடிந்த பிறகுகூட 'இனப்படுகொலை' என்பது அம்பலமாகிவிடாதபடி பார்த்துக் கொண்டது யார்?

எங்கள் இந்தியா... எங்கள் இந்தியா...

எங்கள் இந்தியாவைத் தவிர இதைச் செய்தது வேறு யார்?

இந்தியாவைத் தவிர வேறெவர் குற்றவாளி?

இந்த இந்தியா மூலமா ஈழத்துக்கான உரிமைகளைப் பெறப்போகிறார்கள் சம்பந்தன் ஐயாக்கள்! இந்த இந்தியா மூலமா டோடோ பறவைகளை உயிர்ப்பிக்கச் செய்து பறக்க வைக்கப்  போகிறார்கள்! உயிருடன் இருந்தபோதே பறக்க முடியாத பறவை அது என்பது தெரியாதா சம்பந்தன் ஐயாவுக்கு!

தமிழ் சினிமாவின் உன்னதப் படைப்புகளில் ஒன்றான 'மகாநதி'யில், கமலின் இளவயது மகள், தன் தந்தையின் வாழ்க்கையைத் தலைகீழாய்ப் புரட்டிப்போட்ட கொடியவனிடமே போய் வேலை கேட்பாள் பாருங்கள்....... தன்னுடைய வாழ்க்கையும் நாசமாகப் போகிறது என்பது தெரியாமல் நிற்பாள் பாருங்கள்...... அதைப் போல, தங்கள் இனத்தை நாசமாக்கிய இந்தியாவின் தயவில் உரிமை வாங்கப் போகிறார்களா விக்கியும் சம்பந்தனும்!

இலங்கை அரசு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டுமாம்... அப்படி முன்வைத்தால், சர்வதேசமும் சுமத்தும் பழியிலிருந்து அது தப்பிக்க முடியுமாம்......

சம்பந்தா சம்பந்தமில்லாமல் இப்படியெல்லாம் பேசுகிறார் சம்பந்தன். திலீபன் மாதிரி ஈடுஇணையற்ற ஒரு சாத்விகப்  போராளி உயிர்நீத்த தினத்தில் இப்படி உளறலாமா பெரியவர்

எந்தப் பழியிலிருந்து இலங்கை தப்பிக்க முடியுமாம்? ஒன்றரை லட்சம் உறவுகளைக் கொன்ற பழியிலிருந்தா? ஆயிரமாயிரம் சகோதரிகளைத் திட்டமிட்டுச் சீரழித்த பழியிலிருந்தா? இப்படியெல்லாம் பேரம் பேசி, இனப்படுகொலை செய்த கொலைகாரர்களுக்கு பெயில் கேட்காதீர்கள் சம்பந்தன் ஐயா! (பிரபாகரன் பிறந்த மண்ணில் பிறந்ததற்காக ஐயா என்று மரியாதையோடு அழைக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்... மன்னியுங்கள் ஆனந்தி!) சர்வதேச சட்டத்தின் படி மகிந்தனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் தண்டனை கிடைப்பது தானே முறை! அவர்களை பெயிலில் எடுக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? இந்தியாவா?

சட்டப்படியான தண்டனை நெருங்கி வரும் நிலையில்தானே மகிந்த மிருகம் ஐ.நா.வில் போய் உளறிக் கொட்டுகிறது. அதை அப்படியே விட்டு விடுங்கள் சம்பந்தன் ஐயா! ஈழத்து இளைஞர்கள் எவரையாவது கொலைக் குற்றவாளியாக மாற்றி விடாதீர்கள். அந்தப் பாவம் உங்களுக்கெதற்கு? கொலைக் குற்றவாளிகளை  பெயிலில் எடுக்கும் வேலையையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, எங்கள் இந்தியாவின் பெருமைக்குரிய இளைஞர்களில் ஒருவனான உத்தம் சிங்கின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். நான் சொல்வதைப் புரிந்துகொண்டு, வெட்டி வேலைகளில் இறங்குவதைத் தவிர்ப்பீர்கள்! சரியா?

இவர்களை விடுங்கள்....

இந்த இதழில் யாரைப் பற்றி எழுதியிருக்கவேண்டுமோ அந்த மாதரசி நவநீதம் பிள்ளையைப் பற்றி எழுதவில்லை இன்னும்!

நவ்விப் புயல் இலங்கையைத் தாக்கியபோதே தரைதட்டிவிட்டது  மகிந்தன் கோஷ்டி. இலங்கையிலிருந்து புறப்படும்போதே, கோதபாய கும்பலுக்கு சுளுக்கெடுத்துவிட்டுத்தான் கிளம்பினார் நவ்விப் பிள்ளை. இப்போது அதன் இரண்டாவது கட்டம். ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இலங்கை தொடர்பான பிள்ளையின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இலங்கை அரக்கனுக்கு மார்ச் மாதம் வரை கெடு விதித்துள்ளார் பிள்ளை. பான் கீ மூனுக்கு இல்லாத 'தில்' அந்தப் பெண்புயலின் மனதில் இருப்பதை உணர்த்தியிருக்கிறது அவரது அறிக்கை.

"2014 மார்ச் மாதத்துக்குள் மனித உரிமை மீறல்கள் - போர்க் குற்றங்கள் தொடர்பில் நியாயமான நம்பகத்தன்மை மிக்க  விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால், அந் நாடு சர்வதேச விசாரணையைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று திட்டவட்டமாகவும் தெளிவாகவும் எச்சரிக்கிறது பிள்ளையின் அறிக்கை. சூது கவ்வினாலும், அதையும் மீறி தர்மம்தானே வெல்லும்!

தனது இடைக்கால அறிக்கையிலும், ஈழத்துச் சகோதரிகள் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்வது குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் நவநீதம் பிள்ளை. அந்தக் கொடுமையைச் சகித்துக் கொள்வதற்கில்லை - என்கிறது அவரது  அறிக்கை தார்மீகக் கோபத்துடன்!

இங்கேயிருக்கிற நம்முடைய  ஊடகச் சகோதரர்களையும் சகோதரிகளையும் பார்த்துக் கேட்கிறேன். பாலியல் பலாத்காரம் குறித்த குற்றச்சாட்டை நவநீதம் பிள்ளை கடுமையாக முன்வைத்தும் ஊமைகளாகவே கிடக்கிறீர்களே, ஏன்? இதைப்பற்றியெல்லாம் எழுதவே கூடாது என்று உங்களை மிரட்டுவது யார்? இலங்கைத் தூதரகமா? இந்தியாவா?

இதற்கெல்லாம் பயந்து எங்கள் சகோதரிகள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதைப் பற்றி எழுதாமலிருந்தால், நீங்களெல்லாம் ஊடகத் துறையை விட்டுவிட்டு, எங்கேயாவது உண்ணாவிரதப் பந்தல் அருகில் தயிர்சாதம் விற்றுப் பிழைப்பு நடத்தலாமே? இப்போது நீங்கள் செய்கிற இந்த அயோக்கியத்தனத்தை விட அது யோக்கியமான பிழைப்பாக இருக்கும் என்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்?

 

நன்றி - பதிவு

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.