Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையை மருத்துவப் படிப்பிற்கு அனுப்ப கேடிக்கணக்கில் பணம்வாங்கினார்:- மாநகர முதல்வர் யோகேஸ்வரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையை மருத்துவப் படிப்பிற்கு அனுப்ப கேடிக்கணக்கில் பணம்வாங்கினார்:- மாநகர முதல்வர் யோகேஸ்வரி

03 அக்டோபர் 2013

யாழ்.மாநகர முதல்வரின் ஊழல்களை ஊடகங்களுக்கு சொல்லப் போவதில்லை –

vij1_CI.jpg

 

 

"சிக்கலான காலத்தில் நாங்கள் வேலை செய்தோம் நாட்டை விட்டு தப்பியோடி தாயகம் திரும்பியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் மையமாக EPDP  மாறியுள்ளது:"

யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் தனது பிள்ளையினை இந்தியாவிற்கு மருத்துவம் கற்க அனுப்புவதற்கென கோடிக்கணக்கில் வாங்கிய பணம் பற்றி எனக்கு தெரியும். மாறி மாறி கட்சித்தலைமையிடம் நல்ல பேர் வாங்க பலரையும் சிக்க வைத்துவிட்டு தப்பித்துவிடுவதும் பலரும் அறிந்ததொன்றென தெரிவித்தார் விஜயகாந்த். 

முதலில் நிசாந்தன் பின்னர் மங்களநேசன் தற்போது நானென அவர் சிக்க வைத்துவருகின்றார். எம்மீது குற்றம் சுமத்துவதற்கு முன்னதாக முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் தான் செய்த ஊழல்கள் பற்றி சிந்திக்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

வெறுமையாக அரசியலிற்கு வந்த முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் தெற்கிலுள்ள அரச அமைச்சர்களினை விட ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இனி வரும் தேர்தலில் மக்கள் அவரை முற்றாக தோற்கடித்துவிடுவார் என்பதை புரிந்தே மாகாணசபை தேர்தலில் அவருக்கு ஆசனம் வழங்கப்படவில்லை. அதனால் பிரச்சாரத்தை தவிர்த்து ஏன் இந்தியா போனார் என்பது எமக்கு தெரியுமெனவும் தெரிவித்தார் யாழ்.மாநகரசபை உறுப்பினரும் மாநகரசபை சுகாதாரக் குழுத்தலைவருமான சுதர்சிங். இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகை மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தன் மீதான யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணத்தின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.

தாங்கள் முன்னெடுத்த போராட்டம் சக துப்புரவு தொழிலாளிகளை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கை எதிரானது மட்டுமே. முதல்வருக்கு எதிராகவோ ஈபிடிபிக்கு எதிராகவோ அல்ல. இந்நிலையில் எதற்காக தம்மீது முதல்வர் தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

அவரது ஊழல் மோசடிகள் பல கோடிகளை தாண்டியது. ஆனால் நான் அவற்றை ஊடகங்களிற்கு சொல்லப்போவதில்லை. அவ்வாறான கேவலமான அரசியல் தனக்கு தெரியாதெனவும் தெரிவித்த அவர் பொறியியலாளர் ஒருவரிடமிருந்து பணம் பெற்று ஏமாற்றியதான குற்றச்சாட்டையும் மறுதலித்தார். குறித்த நபர் தம்முடன் இணைந்து தொழில் முயற்சி ஒன்றை ஆரம்பித்திருந்ததாகவும் அது தோல்வியில் முடிவுற்ற போதும் அவரது பணம் மீளளிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்த விஜயகாந்த் ஈபிடிபி கட்சி நெருக்குவாராமான காலத்தில் செயற்பட்ட தம்மை போன்றவர்களை கைவிட்டு தற்போது கட்சியை விட்டு தப்பியோடிவிட்டு தாயகம் திரும்புகின்றவர்களிற்கு அடைக்கலம் வழங்கும் மையமாகியிருப்பதாகவும் தெரிவித்ததுடன் இனிவருங்காலங்களில் ஈபிடிபியுடன் இணைந்து செயற்படும் பேச்சிற்கே இடமில்லையெனவும் தெரிவித்தார்.

 

 புதிய அரசியற்கட்சி ஒன்றை அரம்பிக்கப் பொகிறாராம் சுதர்சிங் விஜயகாந்:-

புதிய அரசியற்கட்சி ஒன்றை அரம்பிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்த யாழ். மாநகர சபை சுகாதாரக் குழுத்தலைவர் சுதர்சிங் விஜயகாந் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இணைவதற்கு தான் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (03.10.13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

'ஈ.பி.டி.பி.யின் கட்சி உறுப்பினராக 14 வருடகாலமாக பணியாற்றி வந்திருந்தேன். ஆனால் அண்மையில் கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஈ.பி.டி.பி.யில் இணைந்து செயற்படுவற்குத் நான் தயாராக இல்லை. தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகவே இருப்பதுடன், தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதற்கு தீர்மானித்திருக்கின்றேன். பல்வேறு கட்சிகளிடமிருந்து எனக்கு அழைப்புக்கள் வந்திருந்தபோதும், எந்தக் கட்சியிலும் இணைந்து கொள்வதற்கு எனக்கு விருப்பமில்லை' என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் ஆலோசனை நடத்தி வருகின்றேன். விரைவில் இது தொடர்பில் அறிவிப்பு விடுக்கவுள்ளதோடு, எதிர்வரும் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடவும் இருக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97279/language/ta-IN/article.aspx

Edited by கிருபன்

டக்கிளஸ் தேவானந்தாவை அரச கூட்டணியில் இருந்தும்  அரசியலிலை இருந்தும் மகிந்த கூட்டணி களட்டி விடும் போல தான் இருக்கு... 

 

அரசாங்கத்தாலை தேவை இல்லை எண்டு களட்டி விடப்பட்ட அனாதரவான  அபலை அரசியல்  தமிழர்களுக்கு எல்லாம்   அடைக்கலம் கொடுக்க இருக்கவே இருக்கே எங்கட தேவனின் சபை  கூட்டமைப்பு...  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.