Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துக்களில் மாற்றங்கள் [2007]

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் புதினம் பகுதியில் " ஒட்டுக்குழு உறுப்பினர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி மீது தாக்குதல் - 6 பேர் பலி " என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

  • Replies 768
  • Views 88k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் உறவோசை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற தலைப்பு வாழிய வாழியவே பகுதியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி திரட்டி பகுதியில் இருந்த PROF RAVINDRANATH IS KILLED ??? என்ற தலைப்பு ஊர்புதினம் பகுதியில் துணைவேந்தர் ரவீந்திரநாத் கருணாவின் உத்தரவுடன் படுகொலை செய்யப்பட்டுள்ளார என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

கழிப்பறையில் பாரதி படம்: கர்நாடகத்தில் 'தேசிய கவி'க்கு அவமரியாதை கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதுடன் கருத்தும் மூடப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* யாழ் உறவோசை பகுதியில் மீண்டும் சாணக்கியன் என்ற தலைப்பிலிருந்து ஒருமையில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

* யாழ் போகிரி, இதை சாணக்கியன், நீ எங்கே என் நினைவுகள் எங்கே ,& தொழில்நுட்பப்பகுதி கதவையாவது திறந்து விடுங்களேன் என்ற தலைப்புகள் நிர்வாகத்துக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

* நான் யாழ்போக்கிரி வந்திருக்கிறேன்! என்ற தலைப்பு பூட்டப்பட்டுள்ளது.

*யாழ்போக்கிரி என்ற உறுப்பினர் தடைசெய்யப்பட்டுள்ளார்.

* ஊர்புதினம் பகுதியில் யாழ். குடாவை கைப்பற்ற புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும்: சரத் பொன்சேகா என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Edited by yarlpriya

"நிர்வாகத்திடம் ஒரு கேள்வி" என்ற தலைப்பில் குழப்பம் விளைவிக்கும் வகையில் எழுதப்பட்ட கருத்துக்கள், மறைமுகமாக பிறரைத் தாக்கி எழுதப்பட்ட கருத்துக்கள், கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணாக எழுதப்பட்ட கருத்துக்கள் யாவும் நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

நிர்வாகத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நிர்வாகம் பதிலளிக்கும்.

"வண்ணத்திரை" என்ற பிரிவில் "சிவாஜி" என்கிற திரைப்படம் தொடர்பாக எழுதப்பட்ட அனைத்து தலைப்புகளும் "சிவாஜி" என்றை தலைப்பின் கீழ் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

அறிவுறுத்தல்

ஒரே விடயம் சார்ந்த வெவ்வேறு செய்திகளை ஒரே தலைப்பின் கீழ் இணையுங்கள். தனித் தனித்தலைப்புகளாக இடும்போது அது தொடர்பான விவாதங்களும் சிதறிப்போகின்றன. ஏற்கனவே நாம் பல தடைவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறோம

ஏற்கனவே நாம் உரியவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறோம் - மதம்சார் பிரச்சார வடிவிலான எந்தப்பதிவுகளையும் இணைக்கவேண்டாம் என்று. விவாதங்களுக்கான களம் இது என்பதைக் கருத்தில்கொண்டு - விவாதத்தளத்துக்குள் மதங்களைக் கொண்டு செல்லும் விதமாக பதிவுகளை இடுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால், வெறுமனே எந்தவொரு மதம்சார்ந்த பதிவுகளையும் யாழ் கருத்துக்களத்தில் இணைப்பது தவிர்க்கப்படவேண்டும்.

சைவம் தொடர்பாக இணைத்த பெரும்பாலான பதிவுகள் ஏற்கனவே ஒரு இணையத்தளத்தில் இருப்பதால், அதற்கான இணைப்பை மட்டும் "யாழ் வழிகாட்டி" என்னும் பிரிவில் இணைத்துவிடலாம். புதிய புதிய தனித் தனித் தலைப்புகளில் சைவம் பற்றி இணைக்கப்பட்ட ஆக்கங்கள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டு, அத்தலைப்பு மூடப்பட்டுள்ளது. இணைப்பு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=22601

இனி மதம்சார்ந்து இணைக்கும் பரப்புரை வடிவிலான பதிவுகள் அனைத்தும் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்படும் என்பதை அறியத்தருகிறோம். "திருக்குறள் பொதுநூலா" போன்ற ஆக்கங்களில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவைபோன்ற விவாதத்திற்குரிய ஆக்கங்களை நாம் வரவேற்கிறோம். எனவே புரிந்துகொண்டு, கருத்துக்கள நிர்வாகத்தினரோடு ஒத்துழைக்குமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்வும் அகழ்வும் பிரிவில் இணைக்கப்பட்ட "உண்மையை உரைப்போம் - இந்தியத் தமிழர்களுக்கு" என்ற தலைப்பில் அதற்குத் தொடர்பில்லாமல் பெரியார் பற்றி எழுதப்பட்ட அனைத்துக் கருத்துக்களும் "பெரியார் பற்றிய சில கருத்துக்கள்" என்னும் தனித்தலைப்பின் கீழ் "மெய்யெனப் படுவது" எனும் பிரிவுள் இடப்பட்டுள்ளது. அத்தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்தலைப்பின் கீழ் கருத்துக்கள உறவுகளைச் சீண்டும் விதமாகவும், பண்பற்ற முறையிலும், ஒருமையிலும் எழுதப்பட்ட அனைத்துக் கருத்துக்களும் உரியவர்களால் உடனடியாக திருத்தப்படவேண்டும். அல்லாவிடில் அப்படியான அனைத்துக் கருத்துக்களும் நிர்வாகத்துக்குள் நகர்த்தப்படாமல் முற்றாக அழிக்கப்படும் என்பதை அறியத் தருகிறோம்.

நாம் பலமுறை அறிவுறுத்தியும் அவன், இவன், நீ, நீர் என்று ஒருமையிலும் எழுதுவது தொடர்கிறது. சக கருத்துக்கள உறுப்பினராக இருக்கட்டும் அல்லது (நீங்கள் ஏற்கிறீர்களோ, ஏற்கவில்லையோ) வரலாற்றில் இடம்பெற்றுள்ள ஒரு தலைவராக இருக்கட்டும் - அவர்களைக் குறிப்பிட்டு ஏகவசனத்தில் எழுதுவது கீழ்த்தரமான செயற்பாடாக இருக்கிறது. கருத்துச் சுதந்திரத்தை நீங்கள் பயன்படுத்தும் விதம் மிகவும் அருவருக்கத்தக்கதாகவே உள்ளது. நாம் எமது அன்றாட வேலைகளை விட்டுவிட்டு, நீங்கள் சமூகப்பொறுப்பற்று எழுதும் ஒவ்வொரு கருத்துக்களையும் திருத்திக்கொண்டிருக்க முடியாது. எனவே, மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தருகிறோம். நீங்களாகவே திருத்திக்கொள்ளுங்கள். (இந்தச் சந்தர்ப்பம் இம்முறை மட்டுமே).

இனிவரும் காலங்களில் ஒரு நாகரீகமற்ற முறையில், களவிதிமுறையை மீறும் ஒரு சொல் இருந்தாலும் - அது தணிக்கை செய்யப்படாமல், நிர்வாகத்துக்கு நகர்த்தப்படாமல் - முற்றுமுழுதாக நீக்கப்படும் என்பதை எச்சரிக்கையுடன் குறிப்பிடுகிறோம்.

நன்றி

"மெய்யெனப் படுவது" பிரிவில் இடப்பட்ட "பெரியார் பற்றிய சில கருத்துக்கள்" எனும் தலைப்பில் களவிதிமுறைகளை மீறி எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. நீங்களாகவே உங்கள் கருத்துக்களை திருத்துவதற்கு சந்தர்ப்பம் அளித்தோம். ஆனால், அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதேபோல், "யாழ் உறவோசை" பிரிவில் "களம் நோக்கி" எனும் தலைப்பில் எழுதப்பட்ட அத்தலைப்புக்கு தொடர்பில்லாத கருத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன.

எந்தத் தலைப்பாக இருப்பினும், அது தொடர்பான - அது சார்ந்த - அது பற்றிய கருத்தாடல்களைத் தொடருங்கள். கருத்துக்களைத் திசைதிருப்பும் வகையில் தலைப்போடு தொடர்பில்லாதத கருத்தாடல்களைத் தவிருங்கள். அப்படி எழுதப்படும் கருத்துக்களுக்கு பதிலளிப்பதைத் தவிருங்கள்.

பொருத்தமான பிரிவுகளில், பொருத்தமான தலைப்புகளில், பொருத்தமான கருத்துக்களை வையுங்கள். அவசியமற்ற - தொடர்பில்லாத கருத்துக்களை பொருத்தமில்லாத தலைப்புகளில் எழுதி உங்கள் நேரத்தையும், உங்கள் சக்தியையும் வீணாக்காதீர்கள் - ஏனென்றால் அப்படியான அனைத்துக் கருத்துக்களும் முடிந்தளவு உடனுக்குடன் அழிக்கப்படும்.

கவிதைப் பூங்காடு பிரிவில் இடப்பட்ட "பெரியார் ஓர் அணுகுண்டு" என்கிற தலைப்பு நிர்வாகத்துக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

யாழ் வழிகாட்டி பகுதியில் "தாயகப்பறவைகள் - இணைய மாத இதழ்" என்னும் தலைப்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்களையோ, கருத்துக்களையோ முன்வைக்காது - கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாகவும், சக உறுப்பினர்களைச் சீண்டும் வகையிலும் எழுதப்பட்டவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியத்தை பற்றுதல்: புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு முறைசாரா உரையாடல் எனும் தலைப்பு ஏற்கனவே நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதால், புதிதாக இணைக்கப்பட்ட தலைப்பு நீக்கப்படுகிறது.

Edited by yarlpaadi

வணக்கம் நண்பர்களே, யாழ் கள உறவுகளே.

கருத்துக் களத்தில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அடைகிறேன்.

'இன்று மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராட்சி ஆகிய இருவரும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தனர்.' என்ற செய்தி, 'மகிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் நாளை பலப்பரீட்சை.' என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டு தலைப்பின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

- இணையவன்

"தமிழ்நெட்" இணையத்தளத்தை சிறிலங்கா முடக்கியது தொடர்பாகப் பதியப்பட்ட தலைப்புகள் யாவும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களத்தில் படங்களை இணைக்கும்போது அதன் அகலம் 640px அளவிற்கு அதிகமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

-இணையவன்

"தமிழ்நெட்" இணையத்தள முடக்கம் தொடர்பான செய்திகள் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த கருத்துக்கள் அனைத்தும் "தமிழ்நெட்" இணையத்தளத்தை முடக்கியது சிறிலங்கா என்னும் தலைப்பின் கீழ் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

அரிச்சுவடியில் பதியப்பட்ட 'A perfect backstabbing !' என்ற தலைப்பு நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

'நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிவாஜி பட இணைப்பு' என்ற இணைப்பு சிவாஜி பற்றிய கருத்துக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

- இணையவன்

தேசியத் தலைவரின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை திரட்டுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தீவிரம் கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதான்டா தமிழ் நாட்டு போலீஸ்.. எனும் தலைப்பில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

யாழ் உறவோசை பகுதியில் இடப்பட்ட "மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டுமா?" என்ற தலைப்பிலிருந்து பல கருத்துக்கள் நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளன. கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையிலும், சக கள உறவுகளைச் சீண்டும் வகையிலும், கருத்தாடலுக்குத் தொடர்பில்லாத தனிப்பட்ட பிரச்சனைகள் சார்ந்தும், மேலும் முரண்பாடுகளை வளர்க்கும் வகையிலும் எழுதப்பட்டவைகள் நகர்த்தப்பட்டுள்ளன.

கருத்துக்கள நிர்வாகம் சார்ந்த தலைப்பாக இது இருப்பதால், இதற்கு கருத்துக்கள நிர்வாகம் பதிலளிக்கும். கருத்துக்கள உறவுகளின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும், கருத்துக்கள உறவுகள் குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கும், அவர்களுக்கு தேவைப்படும் கருத்துக்களம் சார் உதவிகளை வழங்குவதற்குமான பகுதிதான் யாழ் உறவோசை பகுதி.

எனவே, கருத்துக்கள நிர்வாகம் இதற்கான பதிலளிக்கும் வரைக்கும் இத்தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறிப்பு: இத்தலைப்பைப் பார்வையிட்டு, ஒவ்வொரு கருத்துக்களையும் வாசித்து இதனை மட்டுறுத்துவதற்கும், இந்த விளக்கத்தை எழுதவதற்கும் செலவிடப்பட்ட நேரம் = 45 - 60 நிமிடங்கள்

"ஆண்களுக்கான அழகு குறிப்பு" என்னும் தலைப்பின்கீழ் balapandithar எழுதிய கருத்து நீக்கப்பட்டுள்ளது.

பண்பற்ற முறையில் கருத்துக்களை முன்வைத்தமையாலும், சக கருத்துக்கள உறவுகளைச் சீண்டும் வகையில் எழுதியமையாலும் இவருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

'சம்பந்த பட்டவர்கள் பதில் கூறவும்' என்ற தலைப்பு உறுப்பினர்களிடையே மேலும் பிரச்சனைகளை வளர்க்கமலிருக்க நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுகிறது.

-இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.